அரும்புகள் மலரட்டும்: 2013

Tuesday 31 December 2013

சூமாக்கருக்கு நடந்தது என்ன? குணமடைய பிரார்த்திப்போம்!


பனிச்சறுக்கில் ஈடுபட்ட போது தலையில் பலத்த காயமடைந்த முன்னாள் ‘பார்முலா–1’ கார்பந்தய வீரர் மைக்கேல் சூமாக்கர், ஆபத்தான நிலையில் ‘கோமாவில்’ உள்ளார்.

ஜெர்மனியின் முன்னாள் ‘பார்முலா–1’ கார் பந்தய வீரர் சூமாக்கர், 44. மொத்தம் 7 முறை (1994, 1995, 2000 முதல் 2004 வரை) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். கடந்த 2006ல் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். 2010ல் மீண்டும் ‘பார்முலா–1’ போட்டிக்கு திரும்பினார்.

Thursday 26 December 2013

மழலை மாறாத வயதில் மன அழுத்தம் : ஏங்கும் பிஞ்சு குழந்தைகள்


"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாகவும் மன அழுத்ததிற்கு ஆளாவதாகவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Monday 23 December 2013

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டிக்கு 19 நாள்களே உள்ளன

தைப்பொங்கல் சிறப்புக் கட்டுரைப் போட்டி


வணக்கம் நண்பர்களே... இலங்கையில் திருகோணமலை மாவட்டத்தை தாய்வீடாக கொண்ட எனது இனிய நண்பர், தற்சமயம் மலேசியாவில் வசிக்கும் திரு. த.தவரூபன்(ரூபன்) அவர்களும், மணப்பாறையைச் சேர்ந்த தமிழாசிரியர் திரு. அ.பாண்டியன் என்கிற நானும் இணைந்து நடத்தும், தைப்பொங்கலை முன்னிட்டு மாபெரும் சிறப்புக் கட்டுரைப் போட்டியில் கலந்து கொள்ள அழைக்கிறேன் நட்பு உள்ளங்களே...

Friday 20 December 2013

செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்


செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்

தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம்.

Wednesday 18 December 2013

திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரி பாடல்!


நண்பர்களுக்கு வணக்கம்
பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பாரத சாரணர்- சாரணியர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு 8 நாள்கள் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கிடையில் திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடலைப் படித்தேன். அதை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடல் பற்றிய மாற்றுக் கருத்துகள் தங்களுக்கு இருந்தால் அன்போடு கருத்துரையில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..

Sunday 15 December 2013

அலட்சியமாகும் சாலை விதிகள்


வணக்கம் நண்பர்களே
இன்று மாலை நண்பரின் திருமணத்தில் கலந்து கொண்டு வீடு திரும்புகையில் விராலிமலையில் சாலையில் ஒரே கூட்டமாக இருந்தது. நானும் எனது நண்பர்கள் இருவரும் என்னவென்று சென்று பார்க்கையில் விபத்து நடந்துள்ளது விபத்தில் அடிபட்டவர் சுமார் 38 வயது மதிக்கத்தக்கவரும் எட்டாம் வகுப்பு படிக்கும் அவரது மகளும் விபத்துக்குள்ளாகி உள்ளனர். கூடி நின்ற கூட்டம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.

Friday 13 December 2013

படித்தவர்கள் தான் தவறு செய்கிறார்களா?


தவறு செய்யாத மனிதர்களே இன்றைய உலகில் இல்லை என்கிற சூழ்நிலையில்தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அப்படி என்றால், யார் நம்மை வழிநடத்த இருக்கிறார்கள்? தவறு செய்திருந்தாலும் திருந்தி வாழ்பவர்களை இந்த உலகம் மதிக்கிறது.

இன்றைய சூழலில் பெரும்பாலான நாச வேலைகளைச் செய்வது யாரென்று பார்த்தால் அது படித்தவர்கள் தான் என்னும் புள்ளிவிவரம் நம்மை அச்சுறுத்துகிறது. காரணம் இன்றைய கல்வி முறையும் சூழ்நிலையும் தான் அவனை இப்படி மாற்றுகிறது. பொதுவாக ஒரு சமூதாயம் வளர்ச்சியுற்றதாக இருக்க வேண்டும் என்றால் இரண்டு விடயங்கள் தான் காரணமாக அமைகின்றன 1.சமுதாயத்தை ஆளும் தலைவன்
2. இளைய சமூகத்தை உருவாக்கும் ஆசிரியர்கள்.

Tuesday 10 December 2013

புதியன படைத்திடுவோம்


வாழ்க்கையெனும் கடலில் சூழல்
நம்மை மூழ்கடிக்கலாம்-மூச்சடக்கி
முத்தெடுத்து மீண்டு(ம்) வருவோம்!

பயணிக்கும் பாதையின் தடங்கள்
படக்கென்று மறையலாம்- புதிய
தடம் நாம் பதிப்போம்!

Sunday 8 December 2013

முன்னேறு தோழா!நம்மால் முடியுமா என்று எண்ணாதே!
நம்மால் தான் நாளைய பொழுது
விடியுமென்று வீறுநடைபோடு!


எனக்கு மட்டுமேன் இப்படி நடக்கிறதென
துவண்டு போகாதே
உனக்கு மட்டுமே இந்த மாவுலகம்
உயிர் பெற்றதாய் எண்ணம் கொள்!

Monday 2 December 2013

பொங்கல் தினத்தை முன்னிட்டு ரூபன் & பாண்டியன் இணைந்து நடத்தும் மாபெரும் கட்டுரைப் போட்டி…


வணக்கம் நண்பர்களே!
பொங்கல் திருநாளை முன்னிட்டு ரூபன் அவர்களும் நானும் இணைந்து மாபெரும் கட்டுரைப்போட்டியை நடத்த இருக்கிறோம் என்பதை தங்களுக்கு அன்போடு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

Tuesday 26 November 2013

அரசியல் கண்ணாடி


தொண்டனின் தியாகமுகம் மறைத்து
தலைவன் முகம் காட்டும்
அதிசயக் கண்ணாடி..

கொண்ட கொள்கையை மறந்து
அடிக்கடி பிம்பம் மாற்றும்
மாயக் கண்ணாடி ..

Thursday 21 November 2013

கனிந்திடும் காதல்!


நம் விழிப்பார்வை
கொதிக்கும் எண்ணையில் விழுந்த
நீர்த்துளி போல் அல்லாமல்
நதியில் விழுந்தமழைத்துளியாய்
மவுனமாய் கலந்தது

என்று பிறந்தது
என்றுஅறியா
நம் காதல்
இரு மனங்களில்
மெல்லமலர்ந்து
மணம்வீசி மகிழ்ந்தது

Friday 15 November 2013

விழித்தெழு மனிதா!


எட்டி உதைத்தற்கு விருட்டென்று
கிளம்புகிறது இருசக்கர வாகனம்
தன்னையறியாது சீண்டி விட்டதற்கு
சீற்றம் காட்டுகிறது அரவம்

சின்னதாய் தொட்டதற்கே பச்சைத்
தேகத்தை சுறுக்குகிறது தொட்டாற்சிணுங்கி
மட்டையால் அடி வாங்கியதற்கு
எல்லைதாண்டி ஓடுகிறது பந்து

சூடு போதுமென ஆர்பரித்து
விசிலடித்து அழைக்கிறது குக்கர்
காசுக்காக காடுகளை அழித்ததனால்
பொழிய மறுக்கிறது மேகம்

Monday 11 November 2013

மரணம் என்பது ஒருமுறை தானா!


வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான்.

Saturday 9 November 2013

எத்தனை எத்தனை முகங்கள் நமக்கு!

                       (பேசாமா நாமளும் இவங்கள போல இருந்திருக்கலாமோ)

காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக தங்கள் அலுவலகங்களுக்கு கிளம்பும் நம்ம முகத்தை யாரும் கவனித்ததுண்டா! கவனித்தவர்கள் நம்மில் மிகக் குறைவு தான். அப்போது நமது முகம் பரபரப்பாக அலுவலகம் நோக்கிய மனத்துடன் பின்னிப்பிணைந்து அதிரடி காட்டுகிறது.

அவசரமாக நகரும் கடிகாரத்தின் முற்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றதாய் நினைத்து சரியான நேரத்திற்குள் அலுவலகம் வந்து அமர்ந்து இறுகிய முகத்திற்கு விடை கொடுத்து பெருமூச்சு விடும் போது ஒரு முகம்.

Friday 8 November 2013

அன்றாட செயல்களில் வன்முறை தவிர்ப்போம்


நண்பர்களுக்கு வணக்கம்.

வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம்,மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோஉடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்

வன்முறை என்றவுடன் ஆயுதம் ஏந்தி அச்சுறுத்தும் செயல்களைப் பற்றி நான் கூற வரவில்லை. இந்த வன்முறை எண்ணம் உதயமாகும் சில நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என்றே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். வாருங்கள்.

Monday 4 November 2013

வேண்டுகோள்


இரு கண்களில் நுழைந்து
இருதயம் பார்த்தவளே- உன்
நேசத்தையும் பாசத்தையும் உன்னதமாய்
நெஞ்சோடு பகிர்ந்த என்னவளே..

அனுதினமும் அன்பைப் பரிமாறி
அன்னையின் நகலாய் வந்தவளே
உன் சந்திப்பு நிகழாவிட்டால் நான்
சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி..

Thursday 31 October 2013

இனிக்கும் தீபாவளி


வீட்டின் தாழ்வாரத்தில் தலையை முட்டிக்
கொண்ட நம் வீட்டு விருந்தினர்
வலித்தாலும் காட்டாது வழியச் சிரிக்கும்
நமட்டு சிரிப்பைப் போல்

தலையில் தீ வைத்ததற்காக வருந்தாது
வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டு
சிரித்து குலுங்கும் மத்தாப்பு..

Monday 28 October 2013

வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் உவமைகள் - பகுதி 3

நண்பர்களுக்கு வணக்கம்.
வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசத்தில் இடம்பெற்ற உவமைகளைத் தங்களுக்கு கரும்பிலிருந்து பிரித்தெடுத்த சாறாய் 2 பகுதியில் தந்து விட்டு இதோ மூன்றாவது பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன். வாருங்கள் நண்பர்களே வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தின் சில துளிகளில் நனைந்து வருவோம்.

Sunday 27 October 2013

நாம் சிரிக்கும் நாளே திருநாள்

வணக்கம் நண்பர்களே...
 எனது அன்பிற்குரிய சகோதரர் திரு. ரூபன் அவர்கள் நடத்தும் தீபாவளியை முன்னிட்டு நடத்தும் கவிதைபோட்டியில் நானும் பங்கெடுக்கிறேன் என்பதை விடவும், அவரின் முயற்சியையும், எனது மற்றொரு அன்பு சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களின் முயற்சியையும் ஊக்குவிக்கும் நோக்கத்தில் கவிதை என்ற பெயரில் சில வரிகளைத் தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

Thursday 24 October 2013

ஒரு தும்மலுக்கா இவ்வளவு!

                                                                                                       

தும்மல் என்பது உடல் கிருமிகளிடம் இருந்து தப்பிக்க செய்யும் இயற்கையாக எழக்கூடிய தன்னிச்சையான செயல்.சுற்றுச்சூழலில் இருக்கும் கிருமி ஒன்று உடலுக்குள் நுழைய முற்படும் போது அதனை எச்சரிக்கும் கருவியாகவும் தும்மலைக் கூறலாம்.மூக்கு வழியாக ஏதேனும் கிருமியோ அல்லது தூசோ உள்ளே நுழைய முற்படும் போது அங்கிருக்கும் நரம்புகள் மூளையின் தகவலைப் பெறாமலேயே தன்னிச்சையான ஒரு செயலை செய்கிறது. அதுவே தும்மல். தன்னிச்சை என்பது மூளையிடமிருந்து  தகவல் பெறாமல் தானாக செய்யும் செயலாகும்.

Sunday 20 October 2013

கொலைக்களமாகும் கல்விக் கூடங்கள்தினகரன் செய்தித்தாளுக்கு திரு. ஆ.ஹரிதாஸ் அவர்கள் எழுதிய கட்டுரையை படிக்கும் போது நமது எதிர்கால தலைமுறை எங்கு சென்று கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கையில் சுவாசம் சூடேறியதை உணர முடிந்தது.

Friday 18 October 2013

வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் உவமைகள்- பகுதி 2

                                                     
 வணக்கம் நண்பர்களே!
வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் உவமைகள் பகுதி 1 எனும் எனது பதிவைப் படித்து வைரமுத்து அவர்களின் வைர வரிகளை அசைப்போட்டிருப்பீர்கள் என்று நம்பி இரண்டாம் பகுதியிலும் எனக்கு பிடித்த உவமைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த பதிவு உங்களுக்கு ஏதோ ஒரு வகையில் மகிழ்வைக் கொடுக்குமாயின் அதுவே எனது முயற்சிக்கான வெற்றியாகக் கருதுகிறேன். வாருங்கள் இரண்டாம் பகுதியைக் காண

அறிவாளி என்பதன் எதிர்பதம் என்ன?

நண்பர்களுக்கு வணக்கம். 
             ஒருவன் தான் செய்யும் செயலைத் தவறாக செய்தாலோ அல்லது சொல்லுவதை தவறாகச் சொன்னாலோ உடனே நாம் அவனை போடா முட்டாள் என்று திட்டுகிறோம். தவறாகச் செய்த அவரது செயலை முட்டால் தனமானது என்று விமர்சிக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அந்த ”முட்டாள்” என்ற சொல் எப்படி வழக்கிற்கு வந்தது என்பதை யோசித்தது உண்டா! வாருங்களேன் அதற்கான பதிலையும் முட்டாள் என்ற சொல்லுக்கான வரலாற்றையும் தெரிந்து கொள்வோம். 

Sunday 13 October 2013

வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில்-உவமைகள்


கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய தண்ணீர் தேசம் எனும் நாவல் 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர்  மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகளை எளிய நடையில் கூறியிருப்பார்
இக்கதையில்:கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே! இந்நாவலில் இடம் பெறும் உவமைகள் ஒவ்வொன்றும் என்னைக் கவர்ந்தன. உங்களையும் கவரும் எனும் நம்பிக்கையில் எந்தவித அலங்காரச் சொற்கள் இன்றி மூன்று பகுதிகளாக பதிவிட தீர்மானித்துள்ளேன்.

தண்ணீர் தேசம்  நாவலுக்கு உயிரூட்டியிருக்கும் உவமைகள் இதோ உங்கள் பார்வைக்கு 

Friday 11 October 2013

வெட்கம் விட்டுக் கேட்கிறேன்


என் துக்கத்தையும் தூக்கத்தையும் பல
நேரம் பகிர்ந்து கொண்டாய்
நித்திரையில் கனவு காண உன்
மடியில் இடம் கொடுத்தாய்

Tuesday 8 October 2013

புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கம்- என்ன செய்தது எனக்கு?

வலைப்பக்கத்தில் கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களோடு அரும்பிய நட்பு மலர்ந்து மணம் வீசியது இப்பயிற்சியில் தானே! முதன்மைக் கல்வி அலுவலர் அய்யா அவர்களின் கருவி நூல்கள் எனும் வகுப்பில் என்னை செதுக்கிக் கொண்டதும் இப்பயிற்சியில் தானே!

Saturday 28 September 2013

அரசியல் அரிதாரம்

                                                                             நண்பர்களிடம் நாம் பேசி மகிழும் நேரங்களில் நம்மை தகுதிக்கு மீறி புகழும் போதோ, இயல்புக்கு மாறாக கருத்துத் தெரிவிக்கும் போது சும்மா அரசியல் பண்ணாதேடா னு நாம செல்லமாகக் கடிந்து கொள்வது உண்டு. அப்போது அச்சொல்லின் ஆழம் நமக்கு தெரிவதில்லை இன்று நடக்கும் அரசியல் கேளி கூத்துக்களைக் காணும் போது நாம் கூறியது எவ்வளவு பொருத்தம்னு உணர வைக்கிறது.  இன்றைய அரசியலில் மத்தியில் ஆளும் காங்கிரசின் செயல்பாடு ரொம்ப வேதனை ஊட்டக்கூடியதாகவும், கேளிக்கூத்தாகவும் இருப்பதைக் காண முடிகிறது.                                                                                                

Monday 23 September 2013

குழந்தைகளைக் கண்ணாடியில் முகம் பார்க்கச் சொல்லலாமா?

நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்கள் எதற்காகக் கடைபிடிக்கிறோம், நம் முன்னோர்கள் எதற்காக இப்படிச் சொல்லியிருப்பார்கள் என்பதை எல்லாம் யோசிக்காமல் கண்மூடித்தனமாக கடைபிடிக்கத் தொடங்கி விடுகிறோம்.

Thursday 12 September 2013

கோபம் உறவுகளைப் பாதிக்கிறதா?

உண்மையான பலசாலி யாரெனில் தன் வலிமையால் மக்களை அடக்குபவன் அல்ல. மாறாக கோபம் வரும்போது தன்னை அடக்கிக் கொள்பவனே ஆகும்                                                                                           

Saturday 7 September 2013

தெரிந்த திருக்குறள்-தெரியாத தகவல்கள் ..!அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். இப்பதிவில் வரும் கருத்துக்கள் அனைத்தும் தான் ஆராய்ந்து கூறிய செய்திகள் அல்ல அனைத்தும் பிரபல நாளிதழில், பிற நூல்களில் படித்ததில் பிடித்ததே.                     தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..

Thursday 5 September 2013

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

”எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்.  அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் அறிவு மணம் வீசுவதாகத் தான் இருக்கும். அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

Monday 2 September 2013

விஜய் தொலைக்காட்சியின் மாற்றம் தேவை- மாறுதலான முயற்சி

திரைநட்சத்திரங்களின் பேட்டி, ரியாலிட்டி சோ, கேம் சோ என்று பார்த்த பழகிய நமக்கு விஜய் தொலைக்காட்சி கடந்த ஞாயிறு அன்று ஒலிபரப்பிய மாற்றம் தேவை நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட ஊடகத்துறையின் பார்வையாக இருந்தது.

Wednesday 28 August 2013

மெட்ராஸ் கஃபே - சொன்னதும் சொல்லாததும்

(இலங்கை வரைப்படத்திற்குள் கதாநாயகன் இருப்பதை படத்தில் காணலாம்)
                     ஜான் ஆபிரகாம் நடித்த பாலிவுட் படமான மெட்ராஸ் கஃபே பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிருப்பதும் ஆகஸ்ட் 23 ல் தமிழகத்தில் திரையிடுவதாக இருந்த படம் தமிழ் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் திரையிடப்படவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.

Sunday 25 August 2013

புதுக்கவிதையின் வடிவம்- ஓர் ஆய்வு

        புதுக்கவிதையின் வடிவம் அல்லது உருவம் தற்போது பல்வேறு நிலைகளில் உள்ளது. உருவம் என்பது ஒரு அடியில் ஒரு சீரையோ அல்லது இரண்டு மூன்று சீர்களை கொண்டு வரும் மேலும் எழுத்துக்களை பிரித்து எழுதியும் கவிதைகள் படைக்கப்படுகிறது. புதுக்கவிதைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.எனவே பல்வேறு வடிவங்களை கொண்டுள்ளது. அவற்றைக் காண்போம்.                                                                            

Saturday 24 August 2013

தாய்மார்களே தமிழ்ப் பால் ஊட்டுங்கள்

             தமிழுக்கு அமுதென்று பேர்- இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்று முழங்கிய இந்நாட்டில் தமிழ் எங்கே எங்கே என்று தேடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்றே தோன்றுகிறது. காரணம் பிறக்கும் குழந்தைக்கு இன்றைய தாய்மார்கள் தமிழைச் சொல்லி தருவதில்லை. 

Friday 9 August 2013

இந்திரவிழா இன்று

                                                   இந்திரவிழா தோற்றம்                                                                                                                                                               தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. 

Saturday 27 July 2013

நன்றிகள் ஆயிரம்

இந்த வலைப்பூ தயாரிக்க என்னுள்ளே உந்துதலாக இருந்த கவிஞர் திரு. முத்துநிலவன் அய்யா அவர்களுக்கும், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆசிரியர் புத்தாக்க பயிற்சிக்கு பயிற்றுனர்களாக வருகை புரிந்த தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் திரு. துரைக்குமரன் அவர்களுக்கும், திரு. மகாசுந்தர் அவர்களுக்கும், திரு. குருநாத சுந்தர் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.