அரும்புகள் மலரட்டும்: புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கம்- என்ன செய்தது எனக்கு?

Tuesday, 8 October 2013

புதுக்கோட்டை கணினித் தமிழ்ப் பயிலரங்கம்- என்ன செய்தது எனக்கு?

வலைப்பக்கத்தில் கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களோடு அரும்பிய நட்பு மலர்ந்து மணம் வீசியது இப்பயிற்சியில் தானே! முதன்மைக் கல்வி அலுவலர் அய்யா அவர்களின் கருவி நூல்கள் எனும் வகுப்பில் என்னை செதுக்கிக் கொண்டதும் இப்பயிற்சியில் தானே!


புதுக்கோட்டை மாவட்ட தமிழாசிரியர் கழக பொறுப்பாளர்கள் அனைவரின் மனதிலும் எனது பெயரை நிலைக்கச் செய்தது இப்பயிற்சி தானே! கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்கள் சான்றோர்களிடம் என்னை அறிமுகப் படுத்தியதும் இப்பயிற்சியில் தானே. குறிப்பாக என்னை அழைத்து எமது முதன்மைக் கல்வி அலுவலர் அய்யாவிடம் அறிமுகம் செய்த நிகழ்வை இங்கே பதியாமல் போக முடியாது தானே!

முதல் நாள் பயிற்சி முடிந்ததும் முதன்மைக் கல்வி அலுவலர் அய்யாவின் மகிழ்வுந்துலேயே பேருந்து நிலையம் வரை பயணம் செய்யும் வாய்ப்பை நல்கியது இப்பயிற்சி தானே! வலைப்பதிவர்களும் தம்பதியுமான தோழர் மது கஸ்தூரி ரெங்கன் - மைதிலி அவர்களின் அன்பையும் நட்பையும் பெற்றுத் தந்தது இப்பயிற்சி தானே! பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரிடமும் பாங்காய் பழகியது இப்பயிற்சியில் தானே!

புலவர். பொன்.கருப்பையா அவர்கள் என்னை முதுகில் வாஞ்சையோடு தட்டிக் கொடுத்தும் இப்பயிற்சியில் தானே! எல்லோரையும் போல ஒரு ஆசிரியனாக என்னை அடையாளப்படுத்த ஆயிரம் பயிற்சிகள் இனி வாய்க்கப்படலாம். ஆனால் என்னையும் ஒரு படைப்பாளியாய் அறிமுகப்படுத்தியது இப்பயிற்சி தானே!

சிறப்பு விருந்தினர்களிடம் கைக்கொடுத்தும், அவர்களின் பேச்சைக் கேட்டு புத்துணர்வு பெற்றதும் இப்பயிற்சியில் தானே! கல்வியியல் படிப்போடு காணாமல் போன எனது நண்பன் கற்பூர சுந்தர பாண்டியனைக் கண்டெடுத்ததும் இப்பயிற்சியில் தானே!

பதிவுலகில் சிறகடித்து பயணித்து வலம் வரும் திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களோடு நானும் பயணிக்க வாய்ப்பு தந்தது இப்பயிற்சி தானே! இரா,எட்வின் அய்யா அவர்களின் இடி முழக்கப் பேச்சில் இமைக்காமல் மெய் மறக்கச் செய்ததும் இப்பயிற்சி தானே!

கணினி அறிவில் பழம் தின்று கொட்டைப் போட்ட முனைவர். பழனியப்பன் அவர்களைக் கண்டதும் இப்பயிற்சியில் தானே! கரந்தை ஜெயக்குமார் அய்யா அவர்களின் அனுபவப் பேச்சை அசையாமல் அமர்ந்து கேட்டதும் இப்பயிற்சியில் தானே!

புதுகை நகரில் கணினித் தமிழ்ச் சங்கம் மலர வித்திட்டதும் இப்பயிற்சி தானே! 40 ஆசிரியர்களும் பயிற்சியின் விளைவாக புது உலகம் காண வீறுநடைப் போட்டதும் இப்பயிற்சியின் முடிவில் தானே! என்னடா இதையெல்லாம் ஒரு பயிற்சி செய்யுமா என யோசிக்கிறீங்க தானே!

நடந்த நிகழ்வுகளை நண்பர்கள் அன்றே தங்கள் பக்கங்களில் பகிர்ந்துட்டதால எதோ நான் பொளம்புறேன் தானே! கணினித் தமிழ் பயிலரங்கச் செய்திச் சுருக்கத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறீங்க தானே! இதோ சுட்டியைக் காட்டுறேன் நானே ! :-

வளரும்கவிதை

மலர்தரு
பாவலர்,பொன்.கருப்பையா அவர்களின் முகநூல்

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

14 comments:

  1. "Thane" puyal veechai vida ungal "pechu"arumai nanbare.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முத்துக்குமார் வணக்கம், உங்கள் வருகையைக் கண்டதும் அளவற்ற மகிழ்ச்சி. எனது நண்பனின் கருத்துரை மட்டும் கசக்குமா என்ன? கருத்திட்ட தங்களுக்கு அன்பான நன்றிகள்.

      Delete
  2. ரசனையான எழுத்து நடை..

    மேலும் சிறப்பாக செய்வோம்... வாழ்த்துக்கள்...

    துன்பத்திற்கு தீர்வு : http://dindiguldhanabalan.blogspot.com/2013/10/Pleasure-Misery-Part-1.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா. தங்கள் வருகை எப்போதும் என் மனதை மகிழ்விக்கும். தொடர்ந்து இணைந்திருப்போம். கண்டிப்பாக சிறப்பாக செய்வோம் அய்யா.

      Delete
  3. பயிற்சியின் சிறப்புக்களை உங்கள் மகிழ்ச்சியிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது வாழ்த்துக்கள்...!

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் சகோதரி பயிற்சி என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அதன் விளைவே இந்த மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி.

      Delete
  4. இவ்வளவு அழகாக இதை பதிவிட்டு விட்டீர்களே!உங்கள் நட்பு வட்டத்தில் எங்களை சேர்த்ததற்கு மிக்க நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் நீங்கள் எல்லாம் இல்லாம நட்பு வட்டமா? பாராட்டுக்கும் கருத்துக்கும் நன்றீங்க சகோதரி.

      Delete
  5. சிறப்பான பயிற்சி என்று உங்கள் பகிர்வின் மூலம் தெரிகிறது.
    . நல்லோர் நட்பு கிடைத்தது மேலும் மகிழ்ச்சி.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் அம்மா, நல்லோர்கள் நட்பு கிடைத்ததில் அளவற்ற மகிழ்ச்சி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க.

      Delete
  6. நிகழ்வின் தாக்கம் எனக்கு நன்கு தெரிகிறது... ரொம்ப மகிழ்ச்சி... நிறைய எழுதி உயரப் பறக்கும் வலைப்பூ வித்தகராக வாழ்த்துக்கள் சகோ

    ReplyDelete
  7. அன்பு சகோததரின் வருகைக்கும், கருத்துக்கும், உளப்பூர்வமான வாழ்த்துக்கும் நன்றிகள். ஆம் சகோததரே பயிற்சியின் தாக்கம் நன்றாகத் தெரிகிறது.

    ReplyDelete
  8. நண்பர்களின் வலைப்பக்க இணைப்புகள் உங்கள் வலைப்பக்கத்தில் நிலையாகத் தொடரும் என்று நினைத்தேன்... என்னாச்சு?
    சரியான காரணம் தெரிவித்தால் நானும் திருத்திக்கொள்வேன்

    ReplyDelete
    Replies
    1. இதுவரை தொடரவில்லை அய்யா. இதோ நண்பர்களின் வலைப்பக்கத்தையும் இணைத்து விடுகிறேன், தகவல் கேட்டு தொடங்க காரணமாக இருந்த தங்களுக்கு நன்றீங்க அய்யா.

      Delete