அரும்புகள் மலரட்டும்: காமெடி கலாட்டா

Friday 19 December 2014

காமெடி கலாட்டா

வலை உறவுகளுக்கு வணக்கம்
☑️டாக்டர்! எனக்கு பல் ஆடுது!
🔗எந்த பாட்டுக்கு?

🔘ஆஸ்பத்திரிக்கு எப்படி போகணும்?
🔗நோயோடதான்!

☑️தாத்தா! இனிமே கம்ப்யூட்டர் படிச்சாதான் வேலை கிடைக்கும்!
🔗அப்ப..... நீ படிச்சா கிடைக்காதா?

🔘டேய்! நாளைக்கு ஒரு பெண் பார்க்கப் போறேன்! நீயும் வந்துவிடு!
🔗கண்டிப்பா! உனக்கு ஒரு கஷ்டம் என்றால் நான் சும்மா இருப்பேனா?

☑️டாக்டர்! தினமும் ஒரு பச்சை முட்டை சாப்பிட சொன்னீங்க! ஆனால் எங்கள் கோழி வெள்ளை முட்டைதான் போடுது! என்ன செய்ய?

🔘என் பூட்டை உடைத்து 5 லட்சம் கொள்ளை அடித்து விட்டார்கள்!
🔗பூட்டுக்குள் எப்படிடா 5 லட்சம் வைத்திருந்தாய்?

☑️படிச்சி முடிச்சப்புறம் என்ன செய்ய போறே?
🔗புக்கை மூடிடுவேன்!

🔘காலில் என்ன காயம்?
🔗செருப்பு கடித்து விட்டது
🔗பின்ன அதை மிதிச்சா அது சும்மா இருக்குமா!

☑️குளிச்ச பிறகு எதுக்கு தலையை துவட்டுறோம்?
🔗தெரியல, குளிக்கும் போதே துவட்ட முடியாதே!

🔘இரண்டு இட்லியைக் கூட முழுசா சாப்பிட முடியல டாக்டர்..?
🔗என்னாலையும் முழுசா இரண்டு இட்லி சாப்பிட முடியாது, புட்டு புட்டுதான் சாப்பிடனும்!

☑️டேய்! ஒரு 10 ருபாய் இருந்தா கொடு
🔗என்னிடம் சுத்தமா இல்ல
🔗பரவாயில்லை கொடு, நான் சுத்தம் பண்ணிக்கிறேன்!

🔘இந்த ஊரில் தங்க வீடு கிடைக்குமா..?
🔗கிடைக்காது.. கூரை வீடு, ஓட்டு வீடு, மாடி வீடுதான் கிடைக்கும்!

☑️சர்தார்: தம்பி நீ என்ன படிச்சிருக்க?
பையன்: பி.எ.
சர்தார்: அடப்பாவி, படிச்சதே ரெண்டு எழுத்து அதையும் தலை கீழா படிச்சிருக்கே!

🔘இன்டெர்வியு, சேல்ஸ் மேனேஜர்: உங்களுக்கு எதாவது விற்பனை அனுபவம் இருக்கிறதா?
🔗 ஒ! நிறைய என் வீடு, கார் மற்றும் என்னுடைய
மனைவியின் அனைத்து நகைகளுமே விற்றிருக்கிறேன்!

☑️மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்
பார்த்த பெண் நல்லாவே இல்ல !
கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

18 comments:

 1. நல்ல நகைச்சுவை.. கலகலப்பான பதிவு!..

  ReplyDelete
 2. அவ்வ்வ்வ்:(((( பாதி கடியோ கடி!!
  அஹ்ஹ்ஹ்ஹஹா ஹஹாஹா மீதி சரவெடி:)))
  சூப்பர் சகோ:)))

  ReplyDelete
 3. நல்ல நகைச்சுவை. ரசித்தேன் நண்பரே

  ReplyDelete
 4. இந்த ஜோக்குகளைப் படித்து முன்பே சிரித்துள்ளேன் என்றாலும் ,மீண்டும் சிரிக்க வைத்ததற்கு நன்றி !
  த ம +1

  ReplyDelete
 5. அடிக்கடி,கடிக்கடி

  ReplyDelete
 6. வணக்கம்
  சகோதரன்
  இரசிக்கவைக்கும் நகைச்சுவை.. பகிர்வுக்கு நன்றி
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. ரசித்தேன். ஆசிரியர் மாணவர்களிடம் சொன்ன ஜோக்குகளா? இல்லை, மாணவர்கள் ஆசிரியரிடம் சொன்ன ஜோக்குகளா?
  த.ம.4

  ReplyDelete
 8. ☑️மனைவி: ஏங்க நீங்களாவது உங்கள் நண்பரிடம் சொல்லக் கூடாதா அவருக்குப்
  பார்த்த பெண் நல்லாவே இல்ல !
  கணவன்: நான் ஏன் சொல்ல வேண்டும்! பாவிப்பயல் எனக்கு அவன் சொன்னானா?
  அதென்ன தங்கத்திலயா வீடு கேட்கிறாங்க ம்..ம்..ம்....
  ரொம்பத் தான் குசும்பு ......இல்ல கல்யாணத்திற்கு அப்புறம் இப்படி தேறியிருக்காரு. விவரமா! சூப்பர் பாண்டியா ..........

  ReplyDelete
 9. இப்படியே தொடருங்கள். தமிழ்மணம் ஒன்றாவது ரேங்க்குக்கு வந்துடலாம். இப்ப அங்க இருக்கிற பகவான்ஜியைத் தோற்கடிக்கணும் நீங்க.

  ReplyDelete
 10. ஆக எப்போதிலிருந்து ...
  நன்றாக இருக்கிறது

  ReplyDelete
 11. அஹஹஹஹ்ஹ் சூப்பர்! தம்பி தாங்களும் களம் இறங்கி விட்டீர்களா!! நகைச்சுவையில்...அருமை! ரசித்தோம்....

  ReplyDelete
 12. ஹா..ஹா..ஹா..
  அய்யா..நம்ம "எண்ணப்பறவை"க்கு வாங்க.!

  ReplyDelete
 13. கலகலப்பான நகைச்சுவைகள்...
  அருமை சகோதரா...

  ReplyDelete
 14. முதலில் ஜோக்காளி பதிவிற்கு வந்துவிட்டோமோ என நினைத்தேன். மறுபடியும் உறுதிசெய்துகொண்டபின் படித்தேன். ரசித்தேன். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 15. எல்லாமே குபீர் சிரி(ற)ப்பு அருமை

  நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன் வருக... நன்றி

  ReplyDelete
 16. அன்புள்ள அய்யா,

  சிரிக்கும் படியாக அருமையாக இருக்கின்ற நகைச்சுவை.... நல்ல சுவை!

  ReplyDelete