நம்மால் முடியுமா என்று எண்ணாதே!
நம்மால் தான் நாளைய பொழுது
விடியுமென்று வீறுநடைபோடு!
எனக்கு மட்டுமேன் இப்படி நடக்கிறதென
துவண்டு போகாதே
உனக்கு மட்டுமே இந்த மாவுலகம்
உயிர் பெற்றதாய் எண்ணம் கொள்!
வாழ்க்கைப் பாதையில் கடினநடை போட்டால்
கசந்து விடும் தோழா!
ரசித்துக் கொண்டே பயணம் செல்
இன்ப வாழ்க்கை உன் வசப்படும்!
இலக்கு நோக்கிய பயணத்தில்
கால்கள் துவண்டு போகலாம் வருந்தாதே!
ஒவ்வொரு அடியாய் கவனமுடன் எடுத்து வை
ஒவ்வொரு படிகட்டும் வெற்றிப் படிகட்டு!
முடியுமா என்று மூலையில் முடங்குவது
மூடர்களின் முதிர்ச்சியற்ற எண்ணம்
முயன்று பார் நண்பா முடியும் உன்னால்
இதோ வெற்றி உன் முன்னால்!
வேதனையால் வெறுமை கொண்டு தவிக்கதே
சாதனைகள் படைக்க பிறந்தவன் நீ!
கடினங்களை விடாமுயற்சியால் முட்டறுத்து
புது தெம்போடு முன்னேறு தோழா
உன் வெற்றி கால்தடம் பதிய
நாளைய உலகம் காத்திருக்கிறது!
விடியுமென்று வீறுநடைபோடு!
எனக்கு மட்டுமேன் இப்படி நடக்கிறதென
துவண்டு போகாதே
உனக்கு மட்டுமே இந்த மாவுலகம்
உயிர் பெற்றதாய் எண்ணம் கொள்!
வாழ்க்கைப் பாதையில் கடினநடை போட்டால்
கசந்து விடும் தோழா!
ரசித்துக் கொண்டே பயணம் செல்
இன்ப வாழ்க்கை உன் வசப்படும்!
இலக்கு நோக்கிய பயணத்தில்
கால்கள் துவண்டு போகலாம் வருந்தாதே!
ஒவ்வொரு அடியாய் கவனமுடன் எடுத்து வை
ஒவ்வொரு படிகட்டும் வெற்றிப் படிகட்டு!
முடியுமா என்று மூலையில் முடங்குவது
மூடர்களின் முதிர்ச்சியற்ற எண்ணம்
முயன்று பார் நண்பா முடியும் உன்னால்
இதோ வெற்றி உன் முன்னால்!
வேதனையால் வெறுமை கொண்டு தவிக்கதே
சாதனைகள் படைக்க பிறந்தவன் நீ!
கடினங்களை விடாமுயற்சியால் முட்டறுத்து
புது தெம்போடு முன்னேறு தோழா
உன் வெற்றி கால்தடம் பதிய
நாளைய உலகம் காத்திருக்கிறது!
ரசித்துக் கொண்டே பயணம் செல்
ReplyDeleteஇன்ப வாழ்க்கை உன் வசப்படும்!
-- Super.
congrats.
பதிவிட்ட சில நிமிடங்களில் விரைந்து வருகை தந்து கருத்திட்ட தங்களுக்கு அன்பார்ந்த நன்றிகள்..
Delete//வேதனையால் வெறுமை கொண்டு தவிக்கதே
ReplyDeleteசாதனைகள் படைக்க பிறந்தவன் நீ!// ;)
தன்னம்பிக்கையூட்டும் தங்கமான வரிகள். அருமையான ஆக்கம். பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.
ஐயாவின் வருகைக்கும் வாழ்த்துக்கும் அழகான கருத்துக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்..
Deletemanam niraintha vaazhthukkal sako...
ReplyDeletearumai.!
வாழ்த்துக்கும் வருகைக்கும் என் அன்பார்ந்த நன்றிகள் சகோ.. தொடர்ந்து வருக..
Deleteவணக்கம் சகோதரா....!
ReplyDeleteஇப்பொழுது நலம் தானே காணவில்லை நலம் பெற வேண்டுகிறேன். என்று கவலையாகத் தான் இருந்தது. கவிதை சரியில்லை என்று கருத்திடவில்லையோ என்றல்லவா நினைத்தேன். இப்பொழுது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது. நன்றி....!
முடியுமா என்று மூலையில் முடங்குவது
மூடர்களின் முதிர்ச்சியற்ற எண்ணம்
முயன்று பார் நண்பா முடியும் உன்னால்
இதோ வெற்றி உன் முன்னால்!
திடமான நம்பிக்கையான வார்த்தைகள் நிச்சயம் உரம் கொடுக்கும் அனைவருக்கும். ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன்.
பெற்றோரரகிய நாமே சில சமயம் முட்டுக்கட்டை தான். குழந்தை ஓடும்போதே ஓடாதே விழுந்து மண்டை உடைந்து விடும் என்று தானே
சொல்கிறோம். மற்றவர்களின் வாயில் இருந்து தவறியும் விழாது இவ வார்த்தை இலகுவில் ஏனெனில் வென்று விடுவார்கள் என்று. தட்டிக் கொடுப்பதாலும் விட்டு கொடுப்பதாலும் ஊக்கம் கொடுப்பதாலும் எவ்வளவு திறமைகளை வெளிக் கொணரலாம் அல்லவா.
அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
அன்பு சகோதரிக்கு வணக்கம்
Deleteதங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. தங்களது தளத்திற்கு எனது உடல்நலமின்மையால் வர இயலவில்லை. அதற்காக கவிதை பிடிக்காமல் கருத்திட வில்லையோ என்று நினைத்தேன் என கூறலாம். தங்களின் கவிவரிகள் பிடிக்காதவர்கள் யாரும் இருப்பார்களா! காவியக்கவியல்லவா நீங்கள்! அழகான கருத்துக்கும் அன்பான வருகைக்கும் அன்பார்ந்த நன்றிகள் சகோதரி...
அருமையான ஆழமான கருத்துடன் கூடிய
ReplyDeleteஅற்புதக் கவிதை
பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ஐயா அவர்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Deletetha.ma 2
ReplyDeleteநன்றி ஐயா..
Deleteமனதிற்கு புதிய தெம்பு கொடுக்கும் சொற்கள் நண்பரே.
ReplyDeleteதென்பொதிகை தென்றல் தீண்டியபின் கிடைக்கும்
புத்துணர்ச்சி கிடைக்கிறது கவிபடித்த பின்னர்.
உளிதாங்கும் கற்கள் தான் சிலையாகும்
என மலையும்...
முட்டிக்குடித்தால் தான் மடியில் பால் சுரக்குமென
கன்றுக் குட்டியும் அறிந்திருக்கையில்...
முயற்சியும் தன்னம்பிக்கையும் இருந்தால் தான்
வாழ்வில் வெற்றியென நம்மில்
உறுதி உண்டாக வேண்டும் என
அறிவுறுத்தும் ஏற்றமிகு கவி வரிகள்.
வாழ்த்துக்கள் நண்பரே.
அன்பு சகோதரரின் வருகைக்கும் அழகான தன்னம்பிக்கை தர கூடிய வாழ்த்துக்கும் எனது அன்பார்ந்த நன்றிகள். நீண்ட காலம் கழித்து இணையத்தில் தங்களைப் பார்க்கும் போது மிகுந்த மகிழ்வளிக்கிறது. நன்றி சகோ..
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்...
கவிதையின் வரிகள் மனதை நெகிழவைத்தது... சூப்பர்.... மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்..சகோதரன்.. எனது புதிய வலைப்பு உங்களை அன்புடன் வரவேற்கிறது இதோமுகவரி-http://tamilkkavitaikalcom.blogspot.com
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி சகோதரர்..
Deleteதங்களின் அன்பிற்கும் அழகான நம்பிக்கையூட்டும் கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தொடர்ந்து இணைந்திருப்போம்.. நன்றி...
அருமை நண்பரே அருமை
ReplyDeleteநம்பிக்கைதானே வாழ்க்கை
ஐயா அவர்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Deleteஎதுகையும் ,மோனையுமாய்
ReplyDeleteஎடுப்பான நடையோடு
எழுச்சி வார்த்தைகளோடு
ஏற்றம் பற்றி ஒரு கவிதை
நன்று !நன்று!வாழ்த்துகள்!
அன்பு சகோதரியின் கருத்து எனக்கும் நம்பிக்கை தருகிறது. இது எல்லாமே எனது கன்னி முயற்சி தான். காலம் செல்ல செல்ல கவிதை எழுத தெளிவு பிறக்கும். வருகை தந்து கருத்திட்டமைக்கு அன்பான் நன்றிகள் சகோதரி..
Deleteதன்னம்பிக்கையூட்டும் வரிகள். அருமையான பகிர்வு . பாராட்டுக்கள் & வாழ்த்துகள்.
ReplyDeleteசகோதரர் அவர்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Deleteநாளைய உலகம் காத்திருக்கிறது
ReplyDeleteஉன் வெற்றி கால்தடம் பட! //ஆம் தங்களும் பல வெற்றித்தடங்களைப்பதிக்க வாழ்த்துகிறேன்
சகோதரர் அவர்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Deleteகவிதை நல்ல இருக்கு ...
ReplyDeleteஆனால்
இன்னும் செதுக்கி சிறப்பாய் ஒரு மீள் பதிவை தருக
ஒரு ஆறுமாதம் கழித்து படித்தீர்கள் என்றால் உங்களுக்கே புரியும் ....
தவறாக ஏதும் சொல்ல வில்லை என்று நினைக்கிறன் சகோ..
இந்தமாதிரி நம்பிக்கை தரும் உசுப்பேற்றும் கவிதைகள் உங்கள் தனித்த அடையாளமாக மாறினால் நல்லா இருக்கும் என்று எனக்கு ஒரு ஆசை அவ்வளவே.
சகோவிற்கு வணக்கம்
Deleteதங்கள் கருத்து மிகச் சரியானது. தாங்கள் கூறிய பிறகு சிறிது கவிதையில் மாற்றியும் இருக்கிறேன். இருப்பினும் இதெல்லாம் கவிதையென்று மயங்கிடவில்லை. கவி புனைய இன்னும் இன்னும் கற்று சிறப்பான ஆக்கத்தை விரைவில் தருகிறேன். இது போன்ற கருத்தை தொடர்ந்து தந்திடும் படி அன்போடு வேண்டுகிறேன். நன்றி சகோ..
நம்பிக்கை (க)விதை அருமை
ReplyDeleteசகோதரர் அவர்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Deleteஉன் வெற்றியின் தடம் பார்க்க
ReplyDeleteநாளைய உலகம் காத்திருக்கிறது!
நம்பிக்கை தானே வாழ்க்கை!
அருமை!..
ஐயா அவர்களின் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Deleteதன்னம்பிக்கை தரும் அருமையான வரிகள் சகோதரரே...
ReplyDeleteபாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...
சகோதரர் அவர்களின் வருகைக்கும் அன்பான தன்னம்பிக்கையூட்டும் வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Delete//முடியுமா என்று மூலையில் முடங்குவது
ReplyDeleteமூடர்களின் முதிர்ச்சியற்ற எண்ணம்
முயன்று பார் நண்பா முடியும் உன்னால்
இதோ வெற்றி உன் முன்னால்!//
எவ்வளவு நம்பிக்கையான வரிகள்... அருமை நண்பரே...
சகோதரர் அவர்களின் வருகைக்கும் அன்பான தன்னம்பிக்கையூட்டும் வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்.
Deleteவேதனையால் வெறுமை கொண்டு தவிக்காதே//
ReplyDeleteவேதனை நம்மை நம்முடைய பாதையிலிருந்து சற்றே முடக்குவது நிஜமே. ஆனால் அதுவே நிரந்தரமல்ல என்பதும் உண்மை. எழுச்சி மிகு கவிதை. வாழ்த்துக்கள்
சகோதரர் அவர்களின் வருகைக்கும் அன்பான தன்னம்பிக்கையூட்டும் வாழ்த்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்.
Deleteகருத்து நன்றாகத்தான் வந்திருக்கிறது.
ReplyDeleteமுதல் பத்தியில் 3வரி, கடைசிப்பத்தியில் 5வரி என்பதும், இடையில் உள்ளவை மற்றவை 4வரி என்பதும் கொஞ்சம் இடிக்கிறதே! “வெறும்கை என்பது மூடத்தனம் -உன்
விரல்கள் பத்தும் மூலதனம்
கருங்கல் பாறையும் நொறுங்கிவிழும் - உன்
கைகளில் உலகம் சுழன்றுவரும்” எனும் தாராபாரதியின் வெற்றிக்குக் காரணம் மிகச்சரியாக இணைந்த 4வரிஓசை அழகும், சொற்களின் சுருக்கத்தில் ஒளித்து வைத்த சூட்சுமப் பொருளழகும் என்பதை உணர்ந்தால் இன்னும் இன்னும் கவிதை சிறக்கும். முயற்சியும்-பயிற்சியும் கவிதையை வளர்க்கும்! வாழ்த்துகள்.
ஐயாவிற்கு வணக்கம். மிக சிறப்பான கருத்துரை தந்தமைக்கு நன்றி. தங்கள் கருத்தில் கொண்டு இனி கவிதை புனைகிறேன் அய்யா. நீங்கள் கூறியதும் போல் முயற்சியும் பயிற்சியும் எடுத்து வருங்காலங்களில் நல்ல கவிதை புனைவேன் எனும் நம்பிக்கை எனக்குள்ளது. முயல்கிறேன் பயிற்சியைத் தொடர்கிறேன். வாழ்த்தியமைக்கும் நன்றி ஐயா.
Deleteநம்பிக்கை தரும் அருமையான கருத்து நிறை கவிதை!
ReplyDeleteஎனக்காக எழுதியதோ என்றும் எண்ணத் தோன்றியது சகோ!..
துயரெனும் துகில் நீக்கத் தந்த அருமையான சிந்தனை..
ஆழ்ந்து ரசித்தேன்!
ஏற்கனவே தெரிந்திருந்தாலும் இன்னொருவர் கூறும்போது நமக்காகவே இதைக் கூறியதாகத் தோன்றுவதுண்டு! அவ்வகையில் எனக்கும் நல்ல உந்துதல் தந்தீர்கள்!
வாழ்த்துகிறேன் சகோ|!
தாமதமான என் வரவிற்கும் கருத்திடலுக்கும் பொறுத்தருள்க...
அன்பு சகோதரியின் வருகையும் கருத்தும் மகிழ்வாக உள்ளது. தாமதமான வருகையாக இருந்தால் என்ன சகோதரி தங்களது கருத்து என்னை மெருகேற்றவும் வழிகாட்ட உதவ வேண்டும். தாமதமாக இருந்தால் இதில் என்ன இருக்கிறது. தங்கள் அன்பு அது போதும் சகோதரி. நன்றீங்க சகோதரி..
Delete