அரும்புகள் மலரட்டும்: பிறந்த நாள் வாழ்த்து- கவிதை

Tuesday 26 July 2016

பிறந்த நாள் வாழ்த்து- கவிதை

எங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு
வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல
வரிசையில் நிற்கின்றார்கள்!

உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடுகிறோம் மொத்தத் தோட்டமும்
முண்டியடித்து வருகிறது!

அன்பைப் பெறுவதற்கும் தருவதற்கும் போட்டி வைத்தால் முதல் பரிசு நிச்சயம்
உனக்கே உனக்கே!

பெறுகின்ற அன்பை எல்லாம் வட்டியோடு
திரும்பத் தருவதில் உனக்கு
நிகர் நீயே!

உம்மைப் பெற்றதில் பெற்றோரும் அவர்களைப் பெற்றதில் நீயும் கொடுத்து வைத்தவர்கள்
என்பதே உண்மை!

மயிலினமே எங்கள் எங்கள் இல்லத்து இளவரசியின் அன்பு மழையில் நனைந்து ஆனந்தக் கூத்தாடி வாழ்த்தி மகிழுங்கள்!

புள்ளினமே உங்கள் செல்லக்குரலில்
ரீங்காரமிட்டு எங்கள் செல்லத்தை
வாழ்த்திச் செல்லுங்கள்!

பட்டாம்பூச்சிகளே உங்களின் மூத்தவள்
எங்கள் இல்லத்தில் இருக்கிறாள்
இறகசைத்து வாருங்கள்!

ஆண்டுகள் உருண்டோட அகவை ஒன்று கூடினாலும் எங்களுக்கு நீ என்றும் இன்று பிறந்த குழந்தை தான்!

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

8 comments:

 1. >>> பட்டாம்பூச்சிகளே உங்களின் மூத்தவள்
  எங்கள் இல்லத்தில் இருக்கிறாள்
  சிறகசைத்து வாருங்கள்!.. <<<

  வாழ்க நலம்!..

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்திய தங்களின் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் அய்யா. நலம் தானே!

   Delete
 2. அருமையாய் ஒரு வாழ்த்துப் பா... வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க சகோதரர்

   Delete
 3. குழந்தைக்கு அன்பும், ஆசிகளும்.

  ReplyDelete
  Replies
  1. ஆசிக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றிகள் அம்மா

   Delete
 4. பெரியவர்கள் ஆனாலும் தங்களது
  பிள்ளைகள் பெற்றோர்களுக்கு குழந்தைகளே,,/

  ReplyDelete
  Replies
  1. அழகான கருத்துரைக்கு நன்றிகள் சகோதரர். நலம் தானே?

   Delete