அரும்புகள் மலரட்டும்: April 2015

Tuesday 14 April 2015

டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்த தின சிறப்பு பகிர்வு....


விடுதலை இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராகவும், இந்திய அரசியல் சாசனத்தின் தந்தையாக விளங்கியவர்,‘பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்’. இவர் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக மட்டுமல்லாமல், மிகச்சிறந்த பொருளியல் அறிஞராகவும், அரசியல் தத்துவமேதையாகவும், சமூக சீர்திருத்தவாதியாகவும், பகுத்தறிவு சிந்தனையாளராகவும், சிறந்த எழுத்தாளர் மற்றும் பேச்சாளராகவும், வரலாற்று ஆசானாகவும் விளங்கியவர்.
தலித் இன மக்களுக்கு மட்டுமல்லாமல், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்விருளைப் போக்க, உதித்த சூரியன்.

Friday 10 April 2015

புதிய விடியல்


கருங்கூந்தல் விரித்து உலகை மறைத்த
இரவுப்பெண் அள்ளி முடிந்து கொண்டாள்
சமுத்திரத்தில் குளித்து மஞ்சலாடை  உடுத்தி 
மாப்பிள்ளை போல் மெல்லிய புன்னகையோடு
புறப்பட்டு விட்டான் கதிரவன்..

Wednesday 8 April 2015

இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டவர்கள். அதிகாரம் செய்ய அல்ல!

மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த பிரதிநிதி ஆளுகிறார் எனும் சொல் கொஞ்சமும் பொருத்தமானதாக தோன்றவில்லை எனக்கு. மக்களிடம் வாக்கு கேட்கும் போது எங்களுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என்று காலில் விழாத குறையாக கெஞ்சியும் (சில நேரங்களில் காலிலும் விழுகிறார்கள்).

Tuesday 7 April 2015

எங்கள் முதன்மைக்கல்வி அலுவலர் செய்த மற்றுமொரு சிறப்பு


வணக்கம் நண்பர்களே!
பெரியவர் முதல் சிறியவர் வரை யார் தன்னை நாடி வந்தாலும் அவர்களின் வேண்டுகோளுக்கு செவி கொடுத்து இன்முகத்தோடு வழி அனுப்பும் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நா.அருள்முருகன் அவர்களைப் பற்றி நான் கூறிவதை விட விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் சுட்டி விகடன் என்ன கூறுகிறது என்பதைப் பார்ப்போமா!

Monday 6 April 2015

ஆலமரத்து பேய்- ஓர் உண்மைக் கதை


அப்போதெல்லாம் பள்ளி விடுமுறை விட்டால் எங்கள் சொந்த ஊரான கிராமத்திற்கு செல்வது வழக்கம். நான் அரைக்கால் சட்டை அணிந்த காலம் அது. மூன்றாம் வகுப்பு படிக்கும் போதே தனியாக ஊருக்கு சென்று வந்து விடுவேன். தேர்வு சமயத்தில் என் தாத்தா இறந்து விட்டார் என்று செய்தி வந்தது. அம்மாவும் அப்பாவும் உடனே ஊருக்கு கிளம்பி விட்டார்கள். நானும் என் தம்பியும் தேர்வு எழுத வேண்டுமென்பதால் மதியத்திற்கு மேல் ஆள் விட்டு அழைத்து கொள்வதாக முடிவு. ஆனால் நாங்கள் முன்னரே தேர்வு எழுதி முடித்து விட்டு ஊருக்கு தனியாக கிளம்பி சென்று விட்டோம்.