Monday, 21 April 2014
Monday, 14 April 2014
தடம் மாறும் இளைஞர்கள் தடுமாறும் தமிழகம்
திருச்சியிலிருந்து மதுரை நோக்கி விரைந்து செல்லும் பேருந்து சற்று வேகம் குறைத்து சாலையிலிருந்து விலகி ஒரு கடையில் நிற்கிறது. பேருந்து பத்து நிமிடம் இங்கு நிற்கும் பயணிகள் விரைவாக மது அருந்தி விட்டு வந்து விடுங்கள் என்று அறிவிப்பை நடத்துநர் அறிவித்து விட்டு தனது இலவச மதுவை உண்டு மகிழ சென்று விடுகிறார்
Monday, 7 April 2014
Friday, 4 April 2014
அரசியல்வாதிகளுக்கு நாம் வழங்கும் சலுகைகள்!
ரேசன் கடைகளில் போடப்படும் விலையில்லா அரிசிக்கும், மண்ணெண்ணெய்க்கும் ஒரு நாள் வேலையை விட்டு விட்டு மணி கணக்கில் காத்திருந்து வாங்கும் மக்கள், மேல்தட்டு மக்கள் ஏளனமாக பார்க்கும் அந்த அரிசியை வைத்து நாட்களை நகர்த்தும் அன்றாடங்காய்ச்சிகள், மூன்று வேலை சாப்பாடு சாப்பிட முடியாத மனிதப்பிறவிகள், போதிய உணவின்றி மடியும் மக்கள், வறுமை காரணமாக எலும்பும் தோலுமாய் பிறக்கும் குழந்தைகள், 36 சதவீதத்தினர் வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் என நடக்கும் அவலங்கள் நிறைந்த இந்த பாரத திருநாட்டில் தான் ஒரு தரப்பினர் நமக்கு ஊழியம் செய்தவதாக கூறிக்கொண்டு சொகுசு வாழ்க்கை வாழ்கின்றனர், அவர்கள் தான் நமது அரசியல்வாதிகள். ஓட்டு வாங்க வரும் போது உங்கள் தொண்டன் என்று கூறி விட்டு மக்கள் பிரதிநிதி என்பதையே மறந்து விட்டு நிதிகளைச் சேர்ப்பதே கொள்கையாகக் கொண்ட, நம்மூர் அரசியல்வாதிகளுக்கு நாம் தரும் சலுகைகள் என்னென்ன என்பது தெரியுமா!
Thursday, 3 April 2014
ரூபன் மற்றும் பாண்டியன் நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் வெளியீடு
வணக்கம் நண்பர்களே! ரூபன் மற்றும் பாண்டியன் இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டியின் முடிவுகள் அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இதில் பங்கேற்று சிறப்பித்த அனைத்து உள்ளங்களுக்கும், பரிசு பெற்ற நண்பர்களுக்கும் எங்கள் உளப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு பணிகளுக்கு இடையிலும் நடுவர்களாக இருந்து நடுநிலையுடன் சிறப்பான முடிவுகளை அறிவித்த நடுவர்கள்
Tuesday, 1 April 2014
இந்தப் படத்தை மக்கள் ஏன் பேசல?
நண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. படத்தின் கருத்து என்னைக் கொஞ்சம் புருவம் உயர்த்தி பார்க்க வைத்தது. வழக்கமான படம் போல் இல்லாமல் மாறுபட்டதாய் இருந்தது. ப்டத்தின் கதையைச் சொல்லி விமர்சனம் செய்வதற்காக இல்லை இந்த பதிவு, நல்ல கருத்துக்களைச் சொன்னால் ஓடாத படங்கள் வரிசையில் இந்த படமும் இடம் பிடுத்து விட்டதோ என்ற ஆதங்கத்தில் படத்தின் கருத்தைப் பகிர்கிறேன். நல்ல படமா? இல்லையா? என்பதை நீங்களே சொல்லுங்கள்..
சிலையும் நீயே சிற்பியும் நீயே உன்னை நீ சரி செய்து கொள் உலகம் தானாக சரியாகி விடும்
Subscribe to:
Posts (Atom)