செல்போனால் உடலுக்கு ஏற்படும் ஆபத்துக்கள்
தற்போது செல்போன் இல்லாத கைகளை பார்க்கவே முடியாது. ஏனேனில் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரது கைகளிலும் செல்போன் இருப்பதை காணலாம்.
இத்தகைய செல்போன் ஆரம்பத்தில் வெறும் தகவல் தொடர்பு சாதனமாக மட்டும் பயன்பட்டுவந்தது. ஆனால் தற்போது செல்போன் வழியாகவே நேரத்தைக் கடத்தும் பல பொழுதுபோக்குகள் வந்துள்ளன. இத்தகைய பொழுது போக்குகளால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் முதல் அனைவரும் கைகளிலும் செல்போன்கள். அதுவும் தேவை இருக்கிறதோ இல்லையோ இரண்டு அல்லது மூன்று செல்போன்கள்.
இத்தகைய செல்போன் உயிரை வாங்கும் ஒரு எமன் என்று சொல்லலாம். ஏனெனில் இந்த செல்போனால், உடலுக்கு பல பிரச்சனைகள் வருகின்றன. ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்கள் மிகவும் ஆபத்தானவை. உடலுக்கு கொடிய தீங்கை விளைவிக்கக்கூடியவை. அவற்றில் ஒன்று தான் புற்றுநோய். அதுமட்டுமல்லாமல், சிலரால் செல்போனின்றி வேலை செய்யவே முடியாது. இதனால் இது அடிமைத்தனத்தையும் உண்டாக்கும் சக்தியுடையது.
சரி, இப்போது இந்த செல்போனை அதிகமாக உபயோகிப்பதால், உடலுக்கு ஏற்படும் ஆபத்து என்னவென்று பட்டியலிட்டுள்ளோம்.
1. தலைவலி
செல்போன் பயன்படுத்தும் சிலர், ஒற்றை தலைவலியால் நிறைய அவஸ்தைப்படுவார்கள். ஏனெனில் இதிலிருந்து வெளிவரும் கதிர்களின் கதிர்வீச்சு, காதுகளில் அடிக்கடி அதிகமான ஒலியை பாய்ச்சுவதால், அவை தலைவலியை தூண்டிவிடுகிறது.
2. சோர்வு
மொபைல் போன்களில் இருந்து வெளிவரும் கதிர்கள், மூளையில் உள்ள செல்களை பாதித்து, விரைவிலேயே சோர்வை உண்டாக்கிவிடும். இதனால் எந்த ஒரு செயலையும் சரியாக செய்ய முடியாமல் போய்விடும்.
3. தூக்கமின்மை
அளவுக்கு அதிகமாக செல்போன் பயன்படுத்தினால், மனதில் கவலை மற்றும் ஒருவித அழுத்தத்தை உண்டாக்கி, நிம்மதியான தூக்கத்தை கெடுத்துவிடும். மேலும் சில நேரங்களில் உளவியல் ரீதியான பிரச்சனையையும் உண்டாக்கிவிடும்.
4. ஞாபக மறதி
செல்போன்களில் அதிர்வுகள் மூளையில் தகவல்களை சேகரித்து வைக்கும் திறனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால் தான், அதிகமான அளவில் செல்போன் பயன்படுத்தினால், ஞாபக மறதி நோய் ஏற்படுகிறது.
5. மலட்டுத்தன்மை
நிறைய ஆண்கள் செல்போன்களை பேண்ட் பாக்கெட்டுகளில் வைப்பதால், செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் வெப்பம், விந்துக்களின் உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தி, அவற்றை அழித்துவிடும்.
6. நச்சு எதிர்வினை
செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சுக்கள் இரத்தணுக்களை உடைத்து, மூளைக்கு செல்லும் இரத்தத்தில் ஒருவித நச்சுத்தன்மையை உண்டாக்கிவிடும்.
7. காது கோளாறு
மொபைல் போனில் அளவுக்கு அதிகமான சப்தத்தில் வைத்து, நீண்ட நேரம் பாட்டு கேட்டாலோ அல்லது பேசினாலோ, அது செவிப்பறையில் அதிகமான அழுத்தத்தைக் கொடுத்து, காது வலி மற்றும் இதர பிரச்சனைகளை உண்டாக்கிவிடும்.
8. புற்றுநோய்
செல்போனிலிருந்து வெளிவரும் கதிர்வீச்சுக்கள், உடலில் கட்டிகள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். இது எந்த ஒரு ஆய்விலும் நிரூபிக்கப்படாவிட்டாலும், அது பற்றிய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. எனவே "வருமுன் காப்பதே நல்லது" என்பதற்கேற்ப, அதனை அதிகம் பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.
9. அடிமையாக்கும்
நோமோஃபோபியா என்னும் ஒருவிதமான நோயை இது உண்டாக்கிவிடும். அதுவும் இது ஒருவித நிலையற்ற மனநிலையை உண்டாக்கி, வித்தியாசமான உலகில் இருப்பது போல் மனநிலையை மாற்றிவிடும். மேலும் சில நேரங்களில் அது இல்லாமல் எதையும் செய்யமுடியாது என்பது போல் செய்துவிடும். 1 மணிநேரம் ஒருவனிடமிருந்து செல்போனைப் பிடிங்கி விட்டால் பைத்தியம் போல் நடந்து கொள்கிறான்.
எனவே தேவைக்கு மட்டும் செல்போன் பயன்படுத்தி நமது நலனில் அக்கறை கொள்வோம். நன்றி.
சகோதரரே... அவசியம் அனைவரும் அறிய வேண்டிய ஆபத்துகளின் பட்டியல்...
ReplyDeleteநிச்சயம் சகோதரரே அவசியத்தின் போது பயன்படுத்திக் கொண்டால் நன்றாக இருக்கும். கருத்துக்கு நன்றி
Deleteஇன்று போதை கொண்டவனின் நிலையாகிவிட்டது கைபேசி பழக்கம்!
ReplyDeleteவளருமே தவிர திருந்த வாய்ப்பில்லை!
சரியாக சொன்னீர்கள் ஐயா. பாதிப்புகளை உணர்ந்து கொண்டால் கொஞ்சம் குறையலாம் அல்லவா அதற்காகவே பகிர்ந்தேன். கருத்துக்கு நன்றீங்க ஐயா..
Deleteஇது நல்ல பதிவு! செல் ஃபோன் பற்றிய ஆராய்சிகள் இன்னும் குழப்பத்தில் இருப்பதாகத்தான் தெறிகின்றது. ஒரு சில ஆராய்சிகள் தாங்கள் குறிப்பிட்டதைப் போல சொல்கின்றன. ஒரு சில அப்படியெல்லாம் இல்லை என்று சொல்கின்றன. என்றாலும் நாம் நீங்கள் கொடுத்திருப்பது போல அளவாகப் பயன் படுத்தி நம்மைக் காத்துக் கொள்ளலாம் தான்! எனது தோழி கீதாவின் (இவரும் நானும்தான் இணைந்து எங்கள் வலைப்பூவில் எழுதுபவர்கள்) மகனின் நண்பன் கால்நடை மருத்துவர் இதை பற்றிய ஒரு ஆராய்ச்சி பறவைகளில் செய்து அது வெளியாகி உள்ளது. அதன் லிங்க் இதோ.
ReplyDeletehttp://nexusacademicpublishers.com/table_contents_detail/4/151
தலைப்பு In vitro Effect of Radiofrequency on hsp70 Gene Expression and Immune-effector Cells of Birds (துளசிராமன் பற்குணன்)
வாழ்த்துக்கள்!!
வணக்கம் சகோதரர்
Deleteஅருமையான கருத்துக்கும் ஆய்வு பற்றிய செய்தியைப் பகிர்ந்தமைக்கும் அன்பான நன்றிகள்.. அவசியம் இணைப்பைப் படித்துப் பார்க்கிறேன். நன்றி..
வணக்கம் சகோதரரே.
ReplyDeleteநல்ல விடயம் எடுத்து வந்தீர்கள்
மிகுந்த கவலை தரக் கூடிய விடயம் இளைஞர்களும் யுவதிகளும் அதற்கு அடிமைபட்டுதான் கிடக்கிறார்கள். எப்படி விடுவிக்கப் போகிறோம். தேவைகளும் அப்படி த் தானே வளர்ந்து கொண்டு போகிறது. காலத்தின் கோலமா கண்மூடித் தனமா எதை என்று சொல்வது. காலம் தான் பதில் சொல்லுமா?
பகிர்வுக்கு நன்றி வாழ்த்துக்கள்....!
செல் டவர் கதிர் வீச்சால் காக்கா ,குருவிகளும் காணாமல்போய்
ReplyDeleteவிட்டதும் உண்மைதானோ ?
செல்போன் அவசர அவசியத்திற்கு பயன்படும் நல்ல சாதனம். அதை வெட்டி பேச்சிற்கு பயன்படுத்துவதுதான் அதிகமாகிவிட்டது. ஒரு நாள் செல்போன் மறந்து வீட்டில் விட்டுவிட்டு அலுவலகத்திற்கு வந்து விட்டால் கூட என்னமோ கை இழந்த மாதிரி நிறைய பேர் இருப்பார்கள். செல்போன் இல்லாம ஒரு மணி நேரம் யாரும் இருக்க முடியாதுங்கற நிலமை உருவாகிடுச்சி எல்லாருக்கும்...! செல்போன் வேண்டாம் மெயில் அல்லது மெசேஜில் விஷயத்தை சொல்லுங்கள் என்று சொன்னாலும் நிறைய பேர் கேட்கறதில்லை... சும்மா போன் பண்ணிக்கிட்டே இருப்பாங்க. எனக்கு இந்த செல்போனால் ரொம்ப அவதி... ஈவ்னிங் ஆபிஸ் விட்டு வந்தா தொடர்ந்து மாத்தி மாத்தி யாராவது போன் பண்ணிக்கிட்டே இருப்பாங்க... என் வேலை மொத்தம் அதனால் தாமதமாகும்... ! பெரும்பாலும் சைலண்ட்டில் போட்டுவிடுவேன். குடும்பத்தார் அவசர விஷயம் என்றால் இன்னொரு நெம்பரில் வந்துவிடுவார்கள். செல்போன் விஷயத்தில் ஒவ்வொருவரும் திருந்தினால்தான்...! சும்மா வள வளவென்று பேசுபவர்கள்தான் அதிகம். இப்படி பதிவு எழுதி விழிப்புணர்வு கொடுக்கறதோட, செல்போன் பேசும்போது ஒவ்வொருவரிடமும் நலம் விசாரித்து விட்டு செல்போனில் பேசுவது உடல் நலத்திற்கு தீங்கானது... சுருக்கமாக பேசிக்கொள்ளலாம் என்று முதலிலேயே... ஒரு கோடிட்டுவிட்டு பேச ஆரம்பித்தால்.... பேச வந்தவர்களும் விஷயத்தை மட்டும் சுருக்கமாக பேச நினைப்பார்கள். இனிமே நானும் அப்படி கோடிட்டுத்தான் பேச ஆரம்பிக்க போறேன். நன்றி சகோ!
ReplyDeleteஅனைவரும் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய விழிப்புணர்வுப் பகிர்வு.
ReplyDeleteமிகவும் பயனுள்ளதோர் விழிப்புணர்வுப்பதிவு.
ReplyDeleteஇதிலிருந்து இனி யாரும் எந்த காலத்திலும் விலகப்போவது இல்லை என்பதே நிதர்சன உண்மை. ஏனென்றால் இதிலுள்ள தீமைகள் போலவே பல்வேறு நன்மைகளும் உள்ளன.
எனவே தேவைக்கு மட்டும் செல்போன் பயன்படுத்தி நமது நலனில் அக்கறை கொள்வோம்.
பயனுள்ள விழிப்புணர்வுப் பகிர்வுக்கு நன்றிகள்.
Nalla pakirvu...
ReplyDeleteசிறந்த தகவல்.விழித்து கொள்வோம்
ReplyDeleteதவிற்க முடியாத ஒன்றாகி விட்டது
ReplyDeleteபயனுள்ள தகவல் ,வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்தான். ஆனாலும் அதனை கீழே வைத்தால் அழுது ஆர்ப்பரிக்குதே..:)
ReplyDeleteஎனதல்ல.. என் தங்கையின் மகள் தூங்கும் வரை - நாங்கள் தூங்கும் வரை - அவள்கைகளிலும் அவள் ஜீன்ஸ் பாக்கெடிலும்தான்..
எந்த நேரமும் தகவல்களாயோ, போன் கால்களாயோ சிணுங்கிக் கொண்டிருக்கும்...:)
எப்போ இவர்களெல்லாம் திருந்துவார்களோ...
பகிர்விற்கு நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!
வணக்கம்
ReplyDeleteசகோதரன்.
சிறப்பாக எழுதியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள். கையடக்க தொலைபேசி இல்லாவிட்டால். எனக்கு ஒன்றுமே நடக்காது...பழகிவிட்டது உங்களுக்கு புரியும்தானே சகோதரன்... நன்மையும் உண்டு தீமையும் உண்டு வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம்
ReplyDeleteத.ம 6வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
ரொம்ப பயமுறுத்டிதிட்டீங்களே. என்ன பண்றது தவிர்க்க முடியலையே
ReplyDeleteநான் அடிமை ஆகவில்லை என்பதை நினைத்து சந்தோஷப்படுகிறேன்!
ReplyDeleteநல்லது
ReplyDeleteவிழிப்புணர்வுடன் பயன்படுத்துவோம்..
நன்றி சகோ..
நம்புவீரா சகோதரா நான் செல்போன் பாவிப்பதில்லை.
ReplyDeleteஅதாவது என்னிடமில்லை.
எங்கு போனாலும் தொலைபேசி வசதி உண்டு.
தொலை பேச முடியும் அதனால் தேவையில்லை என்று எண்ணுகிறேன்.
பதிவிற்கு மிக நன்றி.
வேதா. இலங்காதிலகம்.