அரும்புகள் மலரட்டும்: வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் உவமைகள் - பகுதி 3

Monday, 28 October 2013

வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில் உவமைகள் - பகுதி 3

நண்பர்களுக்கு வணக்கம்.
வைரமுத்து அவர்களின் தண்ணீர் தேசத்தில் இடம்பெற்ற உவமைகளைத் தங்களுக்கு கரும்பிலிருந்து பிரித்தெடுத்த சாறாய் 2 பகுதியில் தந்து விட்டு இதோ மூன்றாவது பகுதிக்கு அழைத்துச் செல்கிறேன். வாருங்கள் நண்பர்களே வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தின் சில துளிகளில் நனைந்து வருவோம்.

                                                        பகுதி-3

பரதன் பயம் தெளிந்த காட்சிக்கு:
தூங்குமுஞ்சி மரத்தின் இலைகள்
அதிகாலையில் மெல்ல மெல்ல
விரிவதுபோல், பரதன் மெல்ல
மெல்லப் பயம் தெளிந்தான்.
தீ பற்ற வைக்க எடுத்துக் கொண்ட கவனத்திற்கு:
ஒரு தாய் தன் குழந்தைக்கு
மைதீட்டும் கவனத்தோடும்,
ஒரு காதலன் தன் காதலிக்கு
முதல் கடிதம் எழுதும்
ஆர்வத்தோடும் அவர்கள்
அதைப் பத்திரமாகப்
பற்றவைக்க, பற்றிக்கொண்டது
தீப்பந்தம்.
வராத மழை வந்தமைக்கு:
ஒரு கஞ்சனின் பையிலிருந்து அவனுக்குத்
தெரியாமல் விழுந்துவிட்ட வெள்ளிக்
காசைப்போல, மேகத்திலிருந்து அவிழ்ந்து
விழுந்தது ஒரு துளி.
பாதுகாப்பிற்கு: 
ஒரு விதையைப் பூமி
பாதுகாப்பதைப் போல
உன்னை
உன் தாத்தா பாதுகாப்பார்
என்று நம்புகிறேன்.
தமிழ்ரோஜாவின் மோதிரத்தை கலட்ட கலைவண்ணன் அவசரம் காட்டியமைக்கு:
காணாமல்போன குழந்தையை
மீண்டும் கண்டெடுத்த ஒரு
தாயைப் போலப்
பரபரவென்று அவள் கைப்பற்றிய
கலைவண்ணன் கழற்று.
உடனே கழற்று என்றான்.
மீனவன் பரதன் பாட்டிற்கு
அவன் பாடியதில் பாவமில்லை.
ஆனால், உணர்ச்சி இருந்தது-
வெயிலில் சருகானாலும் வீரியம்
போகாத முலிகை மாதிரி.
தமிழ்ரோஜா தலைதூக்கிய காட்சிக்கு:
நீர்மட்டத்துக்கு மேலே
தலைதூக்கும்
தண்ணீர்ப்பாம்பாய்த் தளத்தில்
கவிழ்ந்து கிடந்த
தமிழ்ரோஜாகூட மெள்ளத்
தலை தூக்கினாள்.
கலைவண்ணன் பாடலுக்கு:
குஞ்சுகளைத் தன் அலகால்
கோதிவிடும் தாய்ப்பறவை
போல - கலைவண்ணன் பாடல்
அவர்கள் மனசு கோதியது.
ஒரு புட்டியில் கடிதம் எழுதி போட்டதற்கு:
எப்போதாவது ஒரு சிப்பிக்குள்
விழும் மழைத்துளியைப் போல
ஏதாவதொரு மனிதக்கரத்தில்
சேர்ந்து விடு.
சுயநல நீட்சிக்கு:
அந்தி வெயிலில் விழும்
நிழலைப்போல சுயநலம் நீண்டு
கொண்டே போகிறது.
போராட்டத்தில் ஈடுபட்ட குழந்தைகள் கலைந்தமைக்கு:
தாமரை மொட்டுக்கள்
மொத்தமாய் மலர்ந்து
குளத்தைக் கடந்து கரைக்குப்
போவது போல் அத்தனை
குழந்தைகளும் எழுந்து
அமைதியாய்க் கலைந்து
கூட்டத்தில் கரைந்தார்கள் 
கூட்டம் கலைந்தமைக்கு:
சற்று நேரத்தில் அந்தக்கூட்டம்
வழுக்கைத் தலையில் விழுந்த
மழைத்துளியாய் வழிந்து
போனது.
கலைவண்ணன் துயில் எழுந்தமைக்கு:
புணர்ந்து கிடக்கும்
காதலர்களை முயன்று பிரிப்பது
மாதிரி தூக்கத்திலிருந்து
இமைகளைத் துண்டித்துப்
பிரித்தான்.
தமிழ்ரோஜா பிணியால் குறுகியமைக்கு:
ஒரு புழுவைத் தொட்டவுடன்,
உடம்பின் இரு துருவங்களையும்
அது ஒன்றாகச் சுருட்டிக்
கொள்வது மாதிரி
குமரித்தாமரை ஏனிப்படிக்
குறுகிக்கிடக்கிறாள்.
மயங்கிய காதலியை மடியில் போட்டுக் கொண்டமைக்கு:
குலுங்கும் வாகனத்தில்
தாயைக்கட்டிக் கொள்ளும்
குழந்தைமாதிரி - அவனைச்
சேர்த்துக் கட்டி, அவன்
மடியில் புதைந்து போனாள்.
காதலரின் மடியில் காதலி சாவின் விளிம்பில் இருந்து கொண்டு:
பூ உதிர்ந்து
ஒரு புல்வெளியில் விழுவது
மாதிரி உங்கள் பாதுகாப்பான
மடியில் நான் பத்திரமாகச்
சாகிறேன்.
இறப்பதற்கு காதலி உதிர்த்த வார்த்தைகள்:
ஒருவெற்றியோடு போரை
நிறுத்திக்கொண்ட அசோகச்
சக்கரவர்த்தி மாதிரி காதலின்
இனிய நினைவுகளோடு என்
மூச்சை நிறுத்திக்
கொள்கிறேன்.
கடிதம் ஏந்திய புட்டி தக்கவர் கையில் கிடைத்தமைக்கு:
ராமனின் கால்களுக்காக காத்துகிடந்த
அகலிகைக் கல்லைப்போல தக்கவர்களின்
கைகளுக்காகத் தண்ணீர்த்தவம் புரிந்த புட்டி
கடைசியில் சேரவேண்டியவர்களின் கைகளில்
சேர்ந்துவிட்டது.
தமிழ்ரோஜாவை விட்டு நினைவுகள் நீங்கியமைக்கு:
செடிக்குத் தெரியாமல்
உதிர்ந்த சிறுமலரைப்போல
நினைவுகள் அவளைவிட்டு
நீங்கிவிட்டன.
 புயலின் கோரத்திற்கு:
புயலின் திசை என்பது
பைத்தியக்காரன் கையில் பந்து மாதிரி-
எங்கே வீசுமென்று எவருக்கும் தெரியாது
மழைக்கால வானத்திற்கு:
விதவையின் சிரிப்பைப் போல
எப்போதாவது வெயிலடித்தது வானம்

                                                       ..முற்றும்..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

30 comments:

 1. நீங்கள் தந்த கரும்புச்சாறு மிக சுவையாக இருந்தது

  ReplyDelete
  Replies
  1. விரைவான வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க சகோதரரே..

   Delete
 2. அழகிய சுவை.... அழகாய் தொகுத்திருக்கிறீர்கள்...

  ReplyDelete
  Replies
  1. வருக வணக்கம் சகோதரரே.
   சுவைத்தமைக்கும் கருத்திட்டமைக்கும் எனது அன்பு நன்றிகள். தொடர்வோம். நன்றி..

   Delete
 3. சுவையான உவமைகள். தொகுத்தளித்தது சிறப்பு. பாராட்டுக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா.
   உடனடி வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள் அய்யா. பாராட்டுக்கும் எனது சிறப்பு நன்றிகள்.

   Delete
 4. வணக்கம்
  சகோதரன்

  தண்ணீர் தேசத்தின் உவமை பற்றிய பதிவை அருமையாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே..
   வருகை கண்டு மகிழ்ச்சி. தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள். தொடர்வோம்.

   Delete
 5. கரும்புச்சாறு தேனாய் இனித்தது

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரரே.
   தங்கள் அன்பான வருகைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள். தொடர்வோம்.

   Delete
 6. ரசிக்க வைக்கும் உவமைகள்... நல்லதொரு தொகுப்பிற்கு பாராட்டுக்கள்...

  தொடர வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரருக்கு.
   தொடர் வருகை தந்து ஊக்கப்படுத்தும் தங்களுக்கு எனது அன்பான நன்றிகள்.

   Delete
 7. கரும்புச் சாற்றின் சுவையோ சுவை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் அய்யா,
   சுவைத்தமைக்கும் சுவைத்தது கருத்தாக தந்தமைக்கும் நன்றிகள் அய்யா. தொடர்வோம்.

   Delete
 8. ஆஹா அருமை...!
  கரும்புச்சாறு இனித்தது. இனிக்கத்தானே செய்யும்...!
  அழகான உவமைகள்....! ரசித்தேன்...!. தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...! என்று தொகுத்து தந்தமைக்கு ரொம்ப நன்றி....!
  தொடர வாழ்த்துக்கள்......!

  ReplyDelete
  Replies
  1. உற்சாகமூட்டும் சகோதரியின் கருத்துக்கும் தொடர் வருகைக்கும் எனது அன்பான நன்றிகள். வாழ்த்துக்கும் எனது நன்றி. தொடர்வோம்.

   Delete
 9. தேன் குடித்த வண்டென கிறங்கிப் போனது மனது
  இன்னும் இன்னும் என்று கேட்ட படி .....பிரமாதம் !

  ReplyDelete
  Replies
  1. சகோதரியின் வருகைக்கும் ரசனை மிகுந்த கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள். தொடர்வோம்.

   Delete
 10. எப்போதோ படித்தது. அதை மீன்டும் உங்கள் வாயிலாக படிக்க வைத்தமைக்கு அன்பு நன்றி! தண்ணீர் தேசத்தின் துளிகள் மழைச்சாரலாய் குளிர்வித்தது என்றாலும் " மழைக்கால வானம், வாராது வந்த மழை, மீனவன் பரதன் பாட்டிற்கு, பாதுகாப்பு இவையெல்லாம் கறும்பு சாற்றினும் இனிமை!!

  ReplyDelete
  Replies
  1. அன்பான
   சகோதரியின் வருகைக்கும் ரசனை மிகுந்த கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள். தொடர்வோம்.

   Delete
 11. எப்பொழுது கேட்டாலும் ஈடில்லாக் கவிவரிகள் அன்றோ!
  வைரமுத்து அவர்களின் வைரமென மின்னும் எழுத்தினை
  ரசிக்க இந்த ஒரு பிறவி போதுமோ சகோ!.

  அருமையான இனிய தொகுப்பு! மிகுந்த தேடல்!..

  நிறைய ரசிக்கின்றீர்கள்... :) முயற்சிக்கு வாழ்த்துக்கள்!

  த ம.4

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரியின் வருகைக்கும் ரசனை மிகுந்த கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள். தங்களது வாழ்த்துக்கள் ஊக்குவிக்கிறது. தொடர்வோம்.

   Delete
 12. எல்லா உவமைகளும் அழகான ரசனைகள்... அதுவும் வராத மழைக்கு.. என்னமாய் ..!

  ReplyDelete
  Replies
  1. வைரமுத்துவின் வைர எழுத்துக்களில் நனைந்த அன்பு சகோதரியின் வருகைக்கும் ரசனை மிகுந்த கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.

   Delete
 13. அருமை..
  //கரும்பிலிருந்துப் பிரித்தெடுத்தச் சாறு // உங்கள் உவமை மிக அருமை! பதிவு இனித்தது, நன்றி!

  ReplyDelete
  Replies
  1. சகோதரியின் வருகை கண்டு மகிழ்ச்சி. அன்பான வருகைக்கும் கருத்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 14. அவர் எழுதிய அழகை விட அவை ஒவ்வொன்றையும் தேடிப்பிடித்து பகிர்ந்த உங்கள் பாங்கும் மிக அழகு. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆஹா! ரசித்து படித்ததன் விளைவு தான் சகோதரரே.. அன்பான வருகைக்கும் கருத்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..

   Delete
 15. அருமையானதோர் பதிவு

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோதரரே. இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம்.

   Delete