தும்மல் என்பது உடல் கிருமிகளிடம் இருந்து தப்பிக்க செய்யும் இயற்கையாக எழக்கூடிய தன்னிச்சையான செயல்.சுற்றுச்சூழலில் இருக்கும் கிருமி ஒன்று உடலுக்குள் நுழைய முற்படும் போது அதனை எச்சரிக்கும் கருவியாகவும் தும்மலைக் கூறலாம்.மூக்கு வழியாக ஏதேனும் கிருமியோ அல்லது தூசோ உள்ளே நுழைய முற்படும் போது அங்கிருக்கும் நரம்புகள் மூளையின் தகவலைப் பெறாமலேயே தன்னிச்சையான ஒரு செயலை செய்கிறது. அதுவே தும்மல். தன்னிச்சை என்பது மூளையிடமிருந்து தகவல் பெறாமல் தானாக செய்யும் செயலாகும்.
அப்படிப்பட்ட தும்மலுக்கு நம்ம ஆளுங்க தும்மும்பொழுது ஏதேனும் ஒரு தெய்வத்தின் பெயரை உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி உள்ளிருந்து காற்று வெளியேறும் போது ராமா ராமா என்றோ சிவா என்றோ முருகா என்றோ இன்றும் பலர் உச்சரிப்பது பார்த்திருப்பீர்கள் ( திருவாரூர் தேரா புறப்பட்டு வருது கோவிந்தா, தியாகேச னு சொல்றதுக்கு).
குறைந்த பட்சம் அம்மா, அப்பா என்றாவது உச்சரித்து விடுவோம். இந்த உச்சரிப்பிற்கான காரணம் என்னவென்று கேட்டால் நம்மில் பலரும் விழித்துக் கொண்டு தான் இருப்போம். காரணம் அறியாமலேயே கடைபிடித்து வருகிறோம் என்பது தான் உண்மை.
தும்மலின் போது ஏற்படும் அதிர்வில் உடல் சமநிலையை இழக்கும். அப்போது நாம் தடுமாற்றம் அடைவதைக் காணலாம். அந்த நேரத்தில் நாம் கும்பிடும் அல்லது நமக்கு துணையாகவும், பாதுகாப்பாகவும் உள்ள ஒருவரின் பெயரை உச்சரித்து விடுகிறோம் அவ்வளவு தான். ஆனால் இதையே தன்னுடைய குழந்தை தும்மும் போது வெறுமன தும்மாதே முதல் தும்மலுக்கு அம்மா, இரண்டாவது அப்பா, மூன்றாவது தும்மலுக்கு அம்மம்மா என்று சொல்லித் தான் தும்ம வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். அது தவறான செயல் இல்லையா! (அப்படிச் சொல்லி தும்முவதில் தவறில்லை. அதற்கான காரணத்தை குழந்தையிடம் சொல்லாமல் செய்ய சொல்வது தான் தவறு)
அதோட விடாமல் ஏதாவது ஒரு காரியம் செய்து கொண்டிருக்கும் பொழுது பக்கத்தில் இருப்பவர் தும்மினால் உன்னுடைய தும்மல் நல்ல தும்மலா கெட்ட தும்மலா? என்று கேட்பது வழக்கம். தும்மல்ல என்னங்க சகுணம் பார்க்க வேண்டி இருக்கு.
இன்னும் ஒரு படி மேலே போய் குழந்தை பிறந்தவுடன் தும்மினால் அது பலன் தராது என்றும், பிறந்த குழந்தை கொஞ்ச நேரம் கழித்து தும்மினால் அது நல்ல தும்மல் என்றும், பிற்காலத்தில் நாம் நல்ல முயற்சி மேற்கொள்ளும் போது அந்த குழந்தை தும்மினால் அந்த தும்மல் கெட்ட தும்மல் என்றும் கிராமப் புறங்களில் இன்றும் சொல்வதைக் கேட்கலாம். ஒரே குழந்தை அதே தும்மலைத் தான் தும்முகிறது. ஆனால் நம்ம ஆளுங்க கண்ணோட்டம் விதவிதமா மாறுது.
தெரிந்தோ தெரியாமலோ நமது பழக்கவழக்கங்களில் மூடநம்பிக்கை முக்காடு போட்டுக் கொண்டு வந்து விடுகிறதே! அவற்றை இனம் கண்டு முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதே எனது எண்ணம்.
தும்மும் பொழுது தும்முபவர்கள் நோயுற்றவர்களாக இருந்தால், அதன் மூலம் பரவும் நோய் கிருமிகளால் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் என்பதால் தான் முகத்தை மறைத்துக் கொண்டு தும்ம வேண்டும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ( தும்மும் போது அதன் தாக்கம் ஒரு மீட்டருக்கு செல்லுமாம்)
பின்குறிப்பு:
தும்மும் போது கைக்குட்டை இல்லாத பொழுது நம்ம உள்ளங்கையில் வாயில் பொத்தி தும்முவோம். அவ்வாறு கூடாதாம். (மிருதுவான உள்ளங்கையில் மூலம் நோய்கிருமிகள் பாதிக்கக் கூடும் அல்லது உடனே கை கழுவ இடம் தேட வேண்டி வரும் என்பதால்)
முழங்கை முகத்திற்கு வருகிற மாதிரி கையை வைத்து தும்ம வேண்டுமாம் படத்தில் காண்பித்துள்ளது படி....நன்றி...
//முழங்கை முகத்திற்கு வருகிற மாதிரி கையை வைத்து தும்ம வேண்டுமாம் படத்தில் காண்பித்துள்ளது படி// ஆமாம், இல்லையென்றால் நாம் தொடும் பொருட்களிலோ நபரின் மேலோ கிருமிகளை ஒட்டிவிடுவோம்...பகிர்விற்கு நன்றி!
ReplyDeleteநல்ல பதிவு!
பதிவிட்ட சில நொடிகளில் முதல் ஆளாய் கருத்திட்ட தங்களுக்கு அன்பு நன்றிகள் சகோதரி..
Deleteஅப்படிச் சொல்லுங்க...! பாராட்டுக்கள்...
ReplyDeleteகுழந்தைகள் மனதில் மூடநம்பிக்கை வளர்க்காமல் இருந்தால் சரி...
மூடநம்பிக்கைகள் முடமாக வேண்டுமென்பதே நமது விருப்பம். விரைந்து வருகை தந்து சிறப்பான கருத்துரை வழங்கிய தங்களுக்கு அன்பு நன்றிகள் சகோததரே!
Deleteபாண்டியன் ஒரு கண்டுபிடிப்பாளன் வழு வழு தரையில் ஒரு சேரில் அமர்ந்து தும்மிய பொழுது இருக்கை இரண்டடி நகர .... நமக்கு ஜெட் எஞ்சின் கிடைத்தது... உண்மை பாஸ் ...
ReplyDeleteவாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் காரணங்களை ஆராய்பவனே ஆராய்ச்சியாளன் ஆகிறான்.. புதியதொரு தகவலை தந்தமைக்கும், விரைந்து வந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கும் நன்றிகள் சகோததரே...
Deleteஇதைப் படித்து முடிப்பதற்குள் பத்துத்தும்மல் தும்மி விட்டேன் ...... கையில் கைக்குட்டையுடன் தான். ;)))))
ReplyDeleteவிழிப்புணர்வும், தெளிந்த அறிவும் நம்மை அடுத்த தளத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உண்மை தானே அய்யா. மூடநம்பிக்கைகளை விரட்டியடிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும் முதலில் இனம் காண வேண்டுமென்பதே முக்கியம். வருகை புரிந்தமைக்கும் கருத்துரைக்கும் நன்றீங்க அய்யா...
Deleteநம் நாட்டில் தும்மும் போது ஆயுசு நூறு என்றும்,, வெளிநாட்டில் தும்மும் போது வாழ்த்துக்கள் என்றும் சொல்கிறார்கள்.
ReplyDeleteதும்மும்போதும், இருமும் போதும் இறை பக்தியை வளர்க்க அவ்வாறு முன்னோர்கள் சொல்லி இருப்பார்கள்.
//முழங்கை முகத்திற்கு வருகிற மாதிரி கையை வைத்து தும்ம வேண்டுமாம்//
வெளி நாட்டில் பள்ளிகளில் இப்படித்தான் சொல்லி தருகிறார்கள்.
குழந்தைகளுக்கு காரணம் சொல்லி வளர்த்தால் நல்லது தான்.
நல்ல பதிவு.
வணக்கம் அம்மா,
Deleteவிரைந்து கருத்திட்ட தங்கள் சுறுசுறுப்புக்கும், சிந்திக்க வைக்கும் சிறந்த கருத்துக்கும் நன்றீங்க அம்மா..
தும்மலைப் பற்றி இவ்வளவு சமாச்சாரமா...:)
ReplyDeleteஅருமை... உண்மைதான் சகோ!
தும்மல் வந்தால் அடக்குவோரும் உள்ளனர் அதுவும் நுரையீரல் பாதிப்பைத் தருமாம்.
எவர் பக்கதிலிருந்தா எனக்கென்ன என்று...
மை கார், மை ரோட், மை பெற்றோல் என்பது போல இடம் வலம் பாராமல் தும்முவோரும் உண்டுதான்...:)
பாதுகாப்பு மிக முக்கியம்!
நல்ல விழிப்புணர்வுப் பகிர்வு!
வாழ்த்துக்கள் சகோ!
த ம.4
அன்பின் சகோதரிக்கு எனது அன்பு வணக்கங்கள்..
Deleteதும்மல் அடக்குவோர்க்கு ஏற்படும் துன்பத்தையும் பகிர்ந்த கொண்ட தங்களது புலமை கண்டு மகிழ்ச்சியடைகிறேன். நான் எனும் எண்ணம் மாறி நாம் எனும் எண்ணம் எப்பொழுது மலர்கிறதோ அப்பொழுது உலகம் சிறக்கும். கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றீங்க சகோதரி....
அடேயப்பா...
ReplyDeleteதும்மலை வைத்து ஒரு தர்பாரே நடத்திவிட்டீர்கள் சகோதரரே...
காரணகாரியம் இல்லாமல் நாம் செய்யும் பல செயல்களில் இதுவும்
ஒன்று. ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்று.
அதற்கான மருத்துவ காரணம் மிக நன்று.
சகுனம் பார்க்கும் மூடநம்பிக்கையாக இனியேனும் குழந்தைகளுக்கு
காரணம் சொல்லி வளர்ப்போம்.
குழந்தைகளுக்கு சரியான காரணம் சொல்லி வளர்த்தாலே மூடநம்பிக்கையில் மூலையில் முடங்கி விடும் என்பதை நன்றாக உணர்ந்தவர் நீங்கள். நல்லதொரு கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க நண்பரே....
Deleteதும்மல் பற்றி இவ்வளவு எழுதமுடியுமா...? அச்! அச்! அச்சு அசலான சிந்தனையாக இருக்கிறதே! அருமையான எழுத்து வடிவம்! தொடருங்கள் “தும்மல்“என்னும் ருஷ்ய சிறுகதை ஒன்று படித்திருக்கிறேன்... அதில் அலுவலகக் கீழ்நிலை ஊழியர் ஒருவர் பெரிய அதிகாரி முன்னால் தும்மி விடுவார்... அதை அந்தஅதிகாரி் மரியாதைக் குறைவாக நினைத்து விடுவாரோ என்று பின்னாலேயே போய் மன்னிப்புக் கேட்டுகொண்டே இருப்பார்...அவர் கண்டுகொள்ளவே மாட்டார்... அதற்காக அந்தக் கடைநிலை ஊழியர் படும் பாடு மிகச்சிறந்த இலக்கியமானது... நீங்களும் நிலைத்த இலக்கியங்களைப படைக்க நிறையவும் படிக்க வேண்டுகிறேன். தொடர்ந்து எழுதிக்கொண்டே படிக்கலாம். வாழ்த்துகள் அய்யா.
ReplyDeleteவணக்கம் அய்யா,
Deleteதங்களது சிந்தனை மற்றவர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு இருக்கும், தங்கள் கருத்துரையிலும் அதை காண முடிகிற போது மகிழ்ச்சியாக இருக்கிறது அய்யா. நிறைய படித்து கொண்டே எழுதவும், எழுதி கொண்டே படிக்கவும் கற்றுக் கொள்கிறேன். தங்களின் அன்பு வேண்டுதலுக்கு உயிர்வடிவம் கொடுத்து விடுகிறேன். தங்களது இடைவிடாத இலக்கிய பணியிலும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றீங்க அய்யா. தங்கள் நட்பும், வழிகாட்டிதலும் என்றும் தொடர வேண்டுமென்பதே ஆசை. நன்றீங்க அய்யா.
நல்ல தகவல், நன்றி சகோ,
ReplyDelete24 மணிநேரமும் வேலைசெய்யும் நம் இதயம்,
நாம் தும்மும்போது ஒரு நொடி வேலைசெய்யாமல் இருக்குமாம்.
(அதனால்தான் ஆயுசு நூறு என்று சொல்லுகிறார்களோ தெரியாது.)
சகோதரருக்கு வணக்கம்.
Deleteமுதல் வருகை கண்டு மகிழ்ச்சி. நல்ல தகவலையும் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி சகோ. இணைந்த நட்பில் தொடர்ந்திருப்போம்.
வணக்கம் சகோதரா...!
ReplyDeleteநல்ல விடயம் எடுத்து வந்தீர்கள்.
சந்தோஷமாக இருக்கிறது இதை பற்றி பலருக்கு தெரிவதில்லை. இருமலும் சரி தும்மலும் சரி நீங்கள் சொன்னது போல் தான் செய்ய வேண்டும். உள்ளே சென்ற கிருமியையோ தூசையோ தூக்கி வெளியே வீசதானே இந்த நிகழ்வு. ஆனால் ரொம்ப சங்கடமாகவோ முகத்தை திருப்பும் படி அமையும் இந்நிலை. அதனால் தும்மும் போது வாயை திறக்காமலும் மூடாமலும் பற்களை கடித்தபடி சொண்டை சிறிது நீக்கி ஷ்ஷ் என்ற சத்தம் வருவது போல முழங்கையில் தும்ம வேண்டும். சிலர் உள்ளங் கையில் தும்மிவிட்டு சாதரணமாக அதை உபயோகிப்பது ரொம்ப கஷ்டமாக இருக்கும். அருமை நிச்சயம் பேச வேண்டியவை.
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
அன்பு சகோதரிக்கு வணக்கம்.
Deleteஆகா வழக்கம் போல் அழகான கருத்துக்களை அள்ளித் தெளித்திருக்கிறீர்கள். அனைத்தும் பயனுள்ள விடயங்கள். வருகைக்கும் கருத்துரைக்கும் எனது அன்பான நன்றிகள்..
மிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteமூட நம்பிக்கைகளில் ஊறித் திளைத்த சமூகம் அல்லவா நமது சமூகம்.
நன்றி நண்பரே
வருக வணக்கம் அய்யா..
Deleteமூடநம்பிக்கைகளை குறைந்த பட்சம் இனம் கண்டு கொள்ளவாவது முயற்சிக்க வேண்டும் என்பதே நமது கருத்து. வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றீங்க அய்யா...
நல்ல விழிப்புணர்வு பதிவு! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதும்மலைப்பற்றி புள்ளி வைத்தீர்கள்! எத்தனை பேர் விதம் விதமான கருத்துக்களை எழுதி அழகிய கோலங்களே போட்டு விட்டார்கள்!
தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சியாக இருக்கிறது சகோதரி.. கருத்துரைகளைக் காண நானும் ஆவலோடு இருக்கிறேன். நம் நண்பர்கள் ஒவ்வொருவரும் ஒரு புதிய தகவலைக் கூறி அசத்தி விடுகிறார்கள்.. வருகை தந்து கருத்து தெரிவித்தமைக்கு நன்றீங்க சகோதரி. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம்...
Deleteதும்மல் பற்றிய நல்லதொரு பதிவு.வாசிக்கும்போது சொல்லவந்த கருத்துக்கள் ஏற்கனவே வந்துவிட்டன.இப்படியான விழிப்புணர்வுகள்
ReplyDeleteநிச்சயம் நம்மிடம் தேவை.நன்றி,வாழ்த்துக்கள்.
வாங்க வணக்கம் சகோதரி. தங்களது வருகை மகிழ்வளிக்கிறது. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றீங்க.
Delete//முதல் தும்மலுக்கு அம்மா, இரண்டாவது அப்பா, மூன்றாவது தும்மலுக்கு அம்மம்மா என்று சொல்லித் தான் தும்ம வேண்டும் என்று சொல்லிக் கொடுக்கிறோம். அது தவறான செயல் இல்லையா! (// இப்படி எல்லாம் யாரும் எனக்கு சொல்லித் தரல நண்பா... ஆனா சில பேரு தும்முறத பார்த்து நானே கத்துகிட்டேன்...
ReplyDeleteஆனா கார்பரேட் கல்ச்சர்ன்னு ஒன்னு கொண்டு வந்து இருக்காங்க.. அது தான் எக்ஸ்க்யுஸ்மீ சொல்றது... என்னத்த சொல்ல :-))))))
நண்பருக்கு வணக்கம், நல்லதொரு தங்கள் கருத்தை கருத்துரையாய் பதிவிட்டமைக்கு நன்றீங்க, தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம்.
Deleteஓயாமல் துடித்துக் கொண்டிருக்கும் இதயம் - தும்மும் போது - கண்ணிமைக்கும் நேரம் நின்று - துடிப்பதாக படித்திருக்கின்றேன்.
ReplyDeleteதொடர் தும்மலை அனுபவிக்கும் போது இதயம் சிரமப்படுவதை உணரலாம்!.. அதனால் - சிறு குழந்தைகள் தும்மும் போது பெரியோர்கள் வாழ்த்துவது ஒரு நல்ல மரபாக வந்திருக்கக்கூடும்.
வழுத்தினாள் தும்மினேன் ஆக - என்பது திருவள்ளுவர் வாக்கு!..
தும்மும் பொழுது அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வது இஸ்லாமிய மரபு.
தும்மினால் - சகுனம் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.ஆயினும், சிலருடைய தும்மலினால் - சீராக நடைபெற்ற விஷயங்கள் - சிதறிப்போனதையும் கண்டிருக்கின்றேன்.
எனினும் நல்ல கருத்துகளைப் பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி!..
வருக வணக்கம் அய்யா..
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி.. பயனுள்ள கருத்துக்களைக் கருத்துரையில் பகிர்ந்து கொண்டது அனைவருக்கும் உதவும் அய்யா. தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா..
அருமையான பகிர்வு...
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே...
நண்பருக்கு வணக்கம்,.வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம்.
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்
தும்மல் பற்றிய ஆய்வு மிகமிக அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோததரே..
Deleteதும்மல் பற்றிய ஆய்வு எல்லாம் ஒன்றுமில்லை. மனதில் தோன்றியதை கூறிவிட்டேன். உண்மையில் நண்பர்களின் பின்னூட்டங்கள் தான் நிறைய தகவல்களைத் தருகின்றன. கருத்துரைக்கு நன்றீங்க சகோ..
தும்மல். தன்னிச்சை .....
ReplyDeleteநன்றாக எழுதினீர்கள் சகோதரா.
நல் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
சகோதரியின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பார்ந்த நன்றிகள்..
Deleteசமீபத்தில் ஒரு மருத்துவ நூலை படித்தேன். தும்மலுக்கான காரணத்தை நீங்கள் சொல்லியது நூறு சதவீத உண்மை! தும்மல் நம்முள் நுழைந்துவிட்ட தூசியை அகற்ற நுரையீரல் செயல்படும் ஒரு சிகிச்சைதான். தும்மலை அடக்கியும் அதை நிறுத்த மாத்திரைகள் எடுத்து கொள்ளும் போதுதான் அது அடுத்ததாய் சளியாக மாறி வெளியேற்றுமாம. சளியை நாம் மருந்து மூலம் நிறுத்தும் போது இருமல் வழியாக தூசியை வெளியேற்ற செயல்புரியுமாம்... ஆனால் நாம் இயற்கைக்கு மாறாக மருந்துகளின் வீரியத்தில் அதிகமாக்கி கொண்டு போகிறோம். எனவே தும்மல் வந்தால் நல்லா தும்மலாம்... அதில் என்ன வெட்கமோ.... மரியாதை குறைவோ அல்லது மூட நம்பிக்கையோ இருக்க வேண்டும்? நல்ல விஷயம்... அழகாக அறிவியலோடு முற்போக்கு சிந்தனைகளை சொல்லி கொண்டு வருகிறீர்கள்... நன்று! பாராட்டுக்கள்... தொடருங்க!
ReplyDeleteசகோதரிக்கு வணக்கங்கள்..
Deleteஆகா! நீண்டதொரு கருத்துரை தந்து அசத்தி விட்டீர்கள் சகோதரி. தும்மலுக்கான அறிவியல் காரணங்களையும் அலசியது அருமை. என் உடன்பிறந்த சகோதரி போல் என்னை ஊக்குவிக்கும் தங்களுக்கு என் நன்றிகள் போதாது. வருகை தந்து பயனுள்ள கருத்தைப் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரி..