அரும்புகள் மலரட்டும்: 2016

Sunday 27 November 2016

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016


உண்மையான வாசகன்,
வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்


வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து நடந்தவர்கள் எல்லாம் இன்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் அறிவார்ந்த சிந்தனைகளை உலகிற்கு வழங்குபவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை.

Saturday 22 October 2016

வாழ்க்கைப் பயணம்


வாழ்க்கையெனும் வனத்திலே
பயணத்தைத் தொடர்கிறேன்!
வழிதெரியா குழந்தை போல்
விழி பிதுங்கி நிற்கிறேன்!

Tuesday 26 July 2016

பிறந்த நாள் வாழ்த்து- கவிதை

எங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு
வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல
வரிசையில் நிற்கின்றார்கள்!

உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடுகிறோம் மொத்தத் தோட்டமும்
முண்டியடித்து வருகிறது!

Friday 8 April 2016

மூன்றாம் வகுப்பு படித்தவர்க்கு பத்மஸ்ரீ விருது- ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்

இனிப்பு கடை ஒன்றில் பாத்திரம் கழுவுபவர்க்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சாத்தியமானதா! மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் ஏராளமான கவிதைகளும் காவியங்களையும் படைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் முடியும் என்பதை நம்ப முடிகிறதா? இவரைப் பற்றி ஐந்து மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அவர் ஒடிசாவைச் சேர்ந்த பிரபலக் கவிஞர் ஹால்டர் நாக். ஒடிசா இலக்கியத்தில் இவரது பங்களிப்பு அதிகம்.

Sunday 13 March 2016

காதல் அலங்காரம்!

உனது நடுநிசி உளரல்கள்
எனது பெயரை உச்சரிக்கும் போதும்!
உன் தனிமை என் நினைவுகளால் தகிக்கின்ற போதும்!

Wednesday 2 March 2016

இதுவே இறுதி


அன்றாட வாழ்வில் பெரும்பாலான பணிகளை நாளைக்கு ஒத்தி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. நாளைக்காக இன்றைய சந்தோசத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களும் நாம் தான். எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தின் இன்பங்களைப் பருக மறுப்பதும்/ மறப்பதும் நாம் தான். வாழ்வில் நமக்கு கிடைக்கிற ஒவ்வொரு தருணங்களாக இருந்தாலும் சரி வாய்ப்புகளாக இருந்தாலும் சரி இதுவே நமக்கு கிடைத்த இறுதி தருணமாகவும் வாய்ப்பாகவும் நாம் பார்க்கத் தொடங்கினால் நிச்சயம் பயன் கிட்டும்.

Tuesday 1 March 2016

ஔவையாரின் புலமை விளையாட்டு - ஓர் இலக்கியப் பகிர்வு


ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

Thursday 18 February 2016

விவேகானந்தரின் பொன்மொழிகள் (பகுதி 2)


கண்ணுக்கு புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால், கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்?  இதுவே வேதாந்தம்.

தவறே செய்ததில்லை என்பவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.

Wednesday 17 February 2016

விவேகானந்தரின் பொன்மொழிகள்

நண்பர்களுக்கு வணக்கம். அனைவரின் நலமறிய ஆவல். நீண்ட நாள்களுக்கு எனது வருகை உங்களுக்கெல்லாம் உவகையளித்தால் அதுவே அடியேனின் பெரும்பேறு. ஒரு சிறிய புத்தகம் இன்று என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த புத்தகம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள். அதிலிருந்து சில சிந்தனைகள் இங்கே நண்பர்களின் சிந்தையை மகிழ்வூட்டும் எனும் நம்பிக்கையில்….+ நீ இன்னும் படிக்காத புத்தகத்தைப் படிக்காத புத்தகம் என்று சொல்லாதே! படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்.
+ பிரச்சனை ஒரு நாய், நாம் ஓடினால் அது துரத்தும்- எதிர்த்து நின்றால் அது ஓடும்.
+ பலவீனத்திற்கானப் பரிகாரம் ஓயாமல் பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.