நாம் மேற்கொள்ளும் பழக்கவழக்கங்கள் எதற்காகக் கடைபிடிக்கிறோம், நம் முன்னோர்கள் எதற்காக இப்படிச் சொல்லியிருப்பார்கள் என்பதை எல்லாம் யோசிக்காமல் கண்மூடித்தனமாக கடைபிடிக்கத் தொடங்கி விடுகிறோம்.
இதுவே மூடப்பழக்கத்திற்கு வித்திடுகிறது. குழந்தைகளுக்கு முகம் பார்க்கும் கண்ணாடியைக் காண்பிக்கக் கூடாது என்று முதியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நம்மில் எத்தனைப் பேர் அதற்கான காரணத்தைப் பற்றி சிந்தித்திருப்போம் என்பதைச் சிந்தித்துப் பார்த்தால் இந்த அவசர உலகில் படித்தவர்கள் கூட அதற்காக நேரம் ஒதுக்கவில்லை என்பது புலப்படுகிறது. தன் குழந்தை அதற்கானக் காரணத்தைக் கேட்டால் கூட கண்ணாடியைப் பார்க்கக் கூடாதுனா பார்க்கக் கூடாது தான் கேள்வியெல்லாம் கேட்டுட்டு இருக்கக் கூடாது என்று அவர்களை அதிகாரத் தொணியில் பேசி அதன் சிந்தனையை மலுங்கடிக்கச் செய்கிறோம். சீனாவில் இரண்டு வயதில் குழந்தைக்கு நீச்சல் சொல்லிக் கொடுக்கிறார்கள் ஆனால் இந்தியாவில் கண்ணாடிப் பார்த்தால் இருளடித்து விடும் என்று கூறி அக்குழந்தையின் செயல்படும் சுதந்திரத்தைப் பறித்துக் கொண்டிருக்கிறோம்.. குழந்தைகள் கண்ணாடியைப் பார்க்கக் கூடாது என்பதற்கான காரணத்தை என் சிற்றறிவுக்கு எட்டிய வரைக் கூறுகிறேன். குழந்தைகள் தன் சுய பிம்பத்தைப் பார்த்தால் அழகு செய்து கொள்வதிலேயே ஆர்வம் வரும் என்பதற்காக மட்டும் அல்ல, அழகில் குறையுடைய குழந்தைகள் கண்ணாடியில் தன் உருவத்தைக் கண்டால் மனக் குழப்பம் அடைய நேரிடும் என்று கருதியிருக்கலாம். எல்லாவற்றைக் காட்டிலும் முக்கியமான விசயம் குழந்தைகள் சூரிய ஒளி இருக்கும் இடத்தில் கண்ணாடியை வைத்துக் கொண்டு முகம் பார்த்தால் அது பிரதிபலித்துக் கண்களுக்கு ஆபத்தை உருவாக்கலாம். எனவே தான் கண்ணாடியை உபயோகப்படுத்தத் தெரிவதற்கு முன்னால் குழந்தைகளுக்குக் கண்ணாடி காண்பிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தக் கூடாது என்று சான்றோர்கள் கூறியிருக்கிறார்கள்.
இதே போல போட்டோ எடுத்தால் ஆயுள் குறைவு என்ற மூட நம்பிக்கைக்கும் விடைப் பெற்றுக் கொள்ள முடியும். போட்டோ எடுக்கும் போது அதிலிருந்து வரும் ப்ளாஸ் ஒளியினால் குழந்தைகளுக்கும், முதியோர்களுக்கும் கண்கள் கூசி அதனால் பார்வையில் குறை ஏற்படலாம் என்ற அச்சத்தினாலும், போட்டோ எடுக்கும் போது அதிலிருந்து எதாவது கதிர்வீச்சு ஏற்படலாம், அது கர்ப்பிணி பெண்களைப் பாதிக்கலாம் என்ற தவறுதலான புரிததாலும் இவ்வாறு கூறியிருக்கலாம் என்று ஊகிக்க முடிகிறது. இது போல் நிறைய நம்பிக்கைகள் நம்மிடைய ஊடுருவிக் கிடக்கின்றன. அவற்றில் மூட நம்பிக்கைகளை இனம் கண்டு நம் எதிர்காலச் சந்ததியினருக்கு அதற்கானச் சரியானக் காரணத்தை எடுத்துச் சொல்வது நமது கடமை என்பதையும் மனதில் வைப்போம். நன்றி,

நாம் முதலில் இனம் கண்டு கொள்ள வேண்டும் என்று சொன்னது சரி...
ReplyDeleteவாங்கய்யா, தங்களது வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு மிக்க நன்றீங்கய்யா.
Deleteஇப்படித்தான் கூடாது.. கூடாது என்ற எதிர்மறையான மூட நம்பிக்கைகளை ஆராயாமல் வழி வழியாக குழந்தைகளிடம் சொல்லி கொண்டிருக்கிறோம் நாம். ஆனால் இப்போதுள்ள குழந்தைளிடம் நாம் அப்படி சொல்லிவிட முடியாது. என் மகளிடம் இப்படி செய்யக்கூடாது என்று யாராவது சொன்னால்.. ஏன் அப்படி செஞ்சால் என்ன ஆகும் என்று கேட்டு அவர்கள் சரியான பதில் சொல்லும் வரை மறுபடியும் மறுபடியும் ஏன்.. ஏனென்று கேட்டு திணறவைத்துவிடுவாள்.
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு வணக்கம், தங்கள் கூறியது போல் இப்போதுள்ள குழந்தைகள் மிகவும் அறிவாளிகள். அவ்வளவு எளிதாக நாம் தப்பிக்க முடியாது. நம்மில் படர்ந்து கிடக்கும் மூட நம்பிக்கைகளைக் களைந்து விழிப்போடு செயல்படுவோம். தங்களது கருத்துக்கும், வருகைக்கும் நன்றி சகோதரி.
Deleteசிந்திக்க வைக்கும் சிறப்பான விடயமும் பதிவும்!
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ!
சகோதரியின் வருகைக்கு வணக்கத்துடன் கூடிய நன்றிகள் முதலில். தங்களது வ்ருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. வாழ்த்துக்கு நன்றீங்க சகோதரி.
Deleteசிந்திக்க வைக்கும் சிறப்பான பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம் அய்யா, தங்களது சுறுசுறுப்பு வியக்க வைக்கிறது. பதிவிட்ட உடனே வந்து கருத்தூட்டம் அளிக்கும் தங்களுக்கு எனது அன்பான நன்றிகள். தொடர்ந்து தங்கள்து மேலானக் கருத்துக்களைத் தாருங்கள். திஒடர்ந்து இணைந்திருப்போம்.
Deleteபடத்தேர்வுகள் இரண்டும் அருமை ;)
ReplyDeleteதங்களது ரசிப்புத் தன்மைக்கு ரொம்ப நன்றீங்க அய்யா. மகிழ்ச்சி.
Deleteசிந்திக்க வேண்டிய விஷயங்கள் தான்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
அம்மாவிற்கு வணக்கம், தங்களது வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்.
Deleteமூட நம்பிக்கைகள் இன்னும் நிறய கீது நைனா.. கொஞ்சம் பயம் கொஞ்சம் சுயநலம் என்று அவை இப்போதிக்கு சாவாது...
ReplyDeleteபி கு
அருள் கூர்ந்து கருப்பு வெள்ளை பின்புலத்தை மாற்றுங்கள்...
மனிதனின் நம்பிக்கைகளின் மத்தியில் மூடநம்பிக்கைகள் நிரம்ப உள்ளது, அதை இனம் காண வேண்டும் என்பதே இப்பதிவின் நோக்கம், தங்களது வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு நன்றி அய்யா. தொடந்திருப்போம்.
Deleteநம்பிக்கைகளும்,மூட நம்பிக்கைகளும் கைகோர்த்துக்கொள்ள விருப்பம் கொண்டு அலைகிறவர்களின் எண்ணிக்கை கூடிகொண்டே போகிறது என்பதுதான் இங்கே மிக கவலை கொள்ள வைப்பதாக/
ReplyDeleteவணக்கம் அய்யா, தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்.
Deleteஆசிரியார்கள் இத்தகைய சிந்தனயோடிருப்பது வரவேற்கத்தக்கது உங்கள் மாணவர்கள் கொடுத்துவைத்தவர்கள் சகோதரரே!
ReplyDeleteதங்களிடமிருந்து பாராட்டு பெற்றதில் மகிழ்ச்சி சகோதரி. தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து நல்ல சிந்தனைகளைப் பகிர்வோம். ந்ன்றி சகோதரி.
Deleteஇபோது ஓரளவுக்கு இவைஎல்லாம் மாறிவிட்டன என்றே நினைக்கிறேன நீங்கள் சொல்வது போல் பயன்படுத்தத் தெரியும் வரை தவிர்ப்பதற்காக சொல்லி இருக்கலாம்.
ReplyDeleteஅய்யாவின் வருகை மகிழ்வளிக்கிறது. மாற்றம் ஏற்பட்டிருப்பின் அது நமக்கு மகிழ்ச்சியே. முழுவதுமான மாற்றம் வேண்டும் என்பதே ஆசை. கருத்துக்கு நன்றீங்க அய்யா..
Deleteநல்ல யோசனை.வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க அய்யா.
Deleteசிந்திக்கலாம் நிறைய...
ReplyDeleteநல்லது...
எல்லாம் ஆராய்வு தானே!.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
வணக்கம் வாங்க சகோ! மூட நம்பிக்கைகளை இனம் கண்டு கொள்ள வேண்டிய புரிதல் இருந்தாலே போதுமானது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க.
ReplyDeleteசரியான காரணம் நாம் முதலில் அறிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நம் குழந்தைகள் கேட்கும்போது விளக்கம் சொல்லமுடியும். மூட நம்பிக்கைகளை குழந்தைகளிடத்தில் வளர்க்கக் கூடாது. நல்ல பதிவு, பாண்டியன். இதை எழுதி எல்லோரையும் சிந்திக்க வைத்துவிட்டீர்கள்.
ReplyDeleteவணக்கம் அம்மா தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. தங்கள் கருத்துரை நான் சரியான பாதையில் செல்வதாக உணர்த்துகிறது. கருத்துக்கு நன்றீங்க அம்மா.
Deleteவணக்கம் பாண்டியன் அவர்களே!
ReplyDeleteஇது என் முதல் வருகை பாரம்பரியமாக வரக்கூடிய நிறைய நல்ல விடயங்களை இன்னும் அறியாமலும் இருக்கிறோம் அவற்றுள் மூடநம்பிக்கையும் இருக்கத்தான் செய்கின்றன.அவற்றை அழியவிடாது ஆராய்வது நல்லது தான். நாம் அன்னம் போல் அதை பிரித்து எடுத்துக் கொள்வோம். மூட நம்பிக்கைகளை நாமே அறியாமல் பிறரிடமோ பிள்ளைகளிடமோ திணிப்பதும் தவறுதான். இப்படி நிறைய சிந்தியுங்கள். இவை உபயோகமான நல்லதகவல். நன்றி பகிர்வுக்கு.
தொடர வாழ்த்துக்கள்!
வணக்கம் சகோதரி. தங்களின் விரிவான கருத்து இன்னும் யோசித்து பயனுள்ளப் பதிவுகளைக் கொடுக்க வேண்டும் எனும் எண்ணத்தைத் தூண்டுகிறது. வருகையும் கருத்தும் மகிழ்வளிக்கிறது. தொடர்ந்து வருகை தந்து ஊக்கப் படுத்துங்கள். நன்றிங்க சகோதரி.
ReplyDelete