புதுக்கவிதையின் வடிவம் அல்லது உருவம் தற்போது பல்வேறு நிலைகளில் உள்ளது. உருவம் என்பது ஒரு அடியில் ஒரு சீரையோ அல்லது இரண்டு மூன்று சீர்களை கொண்டு வரும் மேலும் எழுத்துக்களை பிரித்து எழுதியும் கவிதைகள் படைக்கப்படுகிறது. புதுக்கவிதைகள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.எனவே பல்வேறு வடிவங்களை கொண்டுள்ளது. அவற்றைக் காண்போம்.
வினாவகை வடிவம் கேள்வி கேட்பதுபோல் ஒன்றை மனத்துள் எண்ணி வைத்து அதற்கு பதில் உரைப்பது போலவும் நம்மை விடைபெற வைப்பது எழுதுவது ”அது கூந்தலா? இல்லை ... இரவின் ஒரு பகுதி இன்னும் விடியாமலே இருக்கிறதா?” -(வைரமுத்து- திருத்தி எழுதிய தீர்ப்புகள்) பொருளடக்கு வடிவம் ஒரு சொல்லின் பொருளைப் பல்நிலைகளில் சுய வடிவில் முத்தாய்ப்பான பொருளின் விளக்கத்தைத் துல்லியமாகக் காட்டுவதாகும். ”பசி பசி என்கிறாள் பிச்சைக்காரி பழைய சோற்றைப் போடுகிறாள் வீட்டுக்க்காரி பசி பசி என்கிறது குழந்தை பாலுட்டுகிறாள் தாய் பசி பசி என்கிறான் கணவன் பக்கத்தில் வந்து படிக்கிறாள் மனைவி பசி பசி என்றது ஆன்மா அதை மட்டும் விரட்டிவிடுகிறான்” -தேவிப்பிரியா- ஞானரதம்- 1973 சொல்லடுக்கு நிலை இருமுறையோ பலமுறையோ சொற்கள் ஒரு ஓசைக்காகவும் மேலும் பொருளை விளக்குவதற்காகவும் கவிதைகளில் இடம் பெறுகின்றன ”முன்னொருநாள்-முன்னொருநாள் மூண்டெழுந்த கவிகனவில் ஜவாலைகளில் என் விழிகளில் சுவைத்திருக்க எழுத்துலகக் கோப்பைகளின் மதுவானாய் ” காலத்தடத்தில் நினைவுச்சரத்தைக் கவிஞர் எண்ணிப் பார்க்கிறார்என்பதனை இருமுறை முன்னொரு நாள் என அழைத்தமை புரியவைக்கிறது. மாற்றுப்பார்வை வடிவம் ”உளித்தராசுத் தட்டுகளைக் கொஞ்சம் கண் திறந்துபார் அங்கே புறாவின் மாமிசத்தைச் சிபிகள் உண்ணத் தொடங்கி விட்டார்கள்” புறாவிற்கு தன் தசையை அரிந்து கொடுத்த செய்தி மாற்றுப் பார்வையாக வந்துள்ளது. பழைய நோக்கில் புதிய சிந்தனை வடிவம் ”மோசிகீரா... அரசாங்கத்துக் கட்டடத்தில் தூக்கம் போட்ட முதல் மனிதன்....” அரசு முரசுக்கட்டிலில் துஞ்சிய புலவரை இன்றைய அரசாங்கக் கட்டடத்தில் தூங்குவோர்க்கு முன்னோடியாகக் காண்கிறார் கவிஞர். துணுக்குத் தோரணங்கள் வடிவம் ”எங்கள் வீட்டுக்கட்டில் குட்டி போட்டது தொட்டில்” இது விடுகதையின் சாயலைப் பெற்றுள்ள கவிதை. நாட்டுப்புறச் சாயல் வடிவம் நாட்டுப்புற வடிவங்கள்ப் பெற்றுள்ள சிந்தனையைத் தூண்ட வல்ல சொற்கோலங்களைப் புதுக் கவிதைகளில் பார்க்கிறோம். ’பூக்களிலே நானும் ஒரு பூவாய்ப் பிறப்பெடுத்தேன் பூவாகப் பிறந்தாலும் பொன்விரல்கள் தீண்டலையே பொன்விரல்கள் தீண்டலையே நான் பூமாலை ஆகலையே” -மு.மேத்தா (கண்ணீர் பூக்கள்).. ”காடெல்லாம் சுற்றிக் காராம்பசு கொண்டு வந்தோம் நாடெல்லாம் சுற்றி நல்லபசு கொண்டு வந்தோம்” -தமிழவன் ”ஆரோ வடம் பிடிச்சி அய்யன் தேரு நின்னுடுச்சி ”-ஞானக்கூத்தன் என்பதும் இவ்வகையில் அமைந்த கவிதை. ------------------------------------------------------------

நல்லது... நன்றி....
ReplyDeleteதங்கள் கருத்துக்கு நன்றி அய்யா.
ReplyDeleteகவிதை ஆய்வு சிறப்பு.
ReplyDeleteஅரளிப் பூ சொல்வதுபோல அமைந்த மு மேத்தாவின் கவிதை எனக்கும் பிடித்தமானது.
இதற்கு எதிர்கவிதை ஒன்றும் படிக்கும் காலத்தில் எழுதி இருந்தேன்,அதை பதிவாகவும் வெளியிட்டிருக்கிறேன்.
மு.மேத்தாவுக்கு எதிராக எழுதச் சொன்ன தமிழாசிரியர்
அய்யாவிற்கு நன்றிகள். தங்களின் கவிதை மிக அருமை.
Deleteஇத இத இதத்தான எதிரபாரத்தேன் பாண்டியன்!
ReplyDeleteஎழுதுங்கள். முதலில் எடுத்தே எழுதுங்கள், பிறகு தொகுத்தெழுதுங்கள், பிறகு ஆய்வு செய்து இலக்கியம் படையுங்கள், இந்தச் சமுதாய ஆய்வுகளையும் தொடர்ந்து எழுதுங்கள்... எழுதுகோல் தெய்வம் இந்த எழுத்தும் தெய்வம் என்னும் பாரதியை நினைவு கொள்ளுங்கள்... வாழ்த்துகள்.
புதுக்கவிதை வகைகளை அவ்வளவு எளிதாக முடித்து விட முடியாது, மரபுககவிதை போல அத்தனை கெட்டியானதும் அல்ல, முடிவுசெய்யப் பட்டதுமல்ல.. எனினும் தொடரட்டும் உஙக்ள் கவிப்பயணம்.
(நண்பர் முரளியின் மாணவக்கவிதையைப் படிக்க வாய்ப்புத் தந்ததற்குத் தனி நன்றி. இதனை அங்கேயே பின்னூட்டமாக இட்டிருக்கிறேன்.)
விரிவான கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா, தங்களது கருத்து எனக்கு இன்னும் எழுத வேண்டும் என்ற ஆர்வத்தை மிகுவிக்கிறது. தொடர்ந்து பயணிப்போம். நன்றி அய்யா.
Deleteவழ்த்துக்கள் நண்பா.. அருமை
ReplyDeleteதேர்ந்தெடுத்த கவதைகளை மிகவும் ரசித்தேன்
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி அய்யா.
Deleteஆய்வுகள் அருமை!
ReplyDeleteகருத்தூட்டத்திற்கு நன்றி சகோதரி.
Deleteபுதுக்கவிதையின் பல பரிமாணங்கள் - படித்து இன்புற்றேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி, வருகைக்கும், கருத்துக்கும் அன்பான நன்றிகள். தங்கள் வரவு என்னைப் போன்றோரை ஊக்குவிக்கும். தொடர்க.
Deleteவணக்கம்
ReplyDeleteஇன்று வலைச்சரப்பொறுப்பாசிரியராக இருந்து. மற்றவர்கள் அறிமுகம் செய்த தங்களின் படைப்புக்கள் அனைத்தும் நன்று வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாழ்த்துக்கள்,,, தொடர்ந்து பல சிறப்பான பதிவுகளை வலைச்சரத்திலும், உங்கள் பதிவிலும் எழுதுங்கள்..
ReplyDeleteபாப்புனைய விரும்புவோருக்கு
ReplyDeleteநல்ல பாடமாக இருக்குமென்றே எண்ணி
என் உள்ளம் நிறைவோடு
இப்பதிவை எனது தளத்திலும்
பகிர்ந்துள்ளேன்!
புதுக்கவிதை எழுத முன்...
http://paapunaya.blogspot.com/2014/06/blog-post_26.html
அருமை சகோதரரே..பகிர்விற்கு நன்றி
ReplyDelete