அரும்புகள் மலரட்டும்: ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

Thursday, 5 September 2013

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்

”எங்கே நடப்படுகிறாயோ அங்கே மலராகு" என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள்.  அவர்கள் எந்த இடத்தில் இருந்தாலும் அந்த இடம் அறிவு மணம் வீசுவதாகத் தான் இருக்கும். அத்தகைய ஆசிரியர் சமுதாயத்திற்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...


அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ எனும் குறளை திருக்குறளில் முதலாவதாக அமைத்துள்ளார் வள்ளுவர்.             ‘எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்’ என ஆத்திசூடியில் பாடுகின்றாள் ஔவைப் பாட்டி.   மாதா, பிதா, குரு, தெய்வம் என்று போற்றக்கூடிய சமுதாயத்தில் ஆசிரியர் என்பவர்கள் உயர்ந்த நிலையில் வைத்து போற்றப்படுவது ஆசிரியர்களுக்கு பெருமை.                                                                                                                                       பெற்றக்கல்வியை கருத்துடன் கற்பித்து, பெற்ற அறிவை பேணி வளர்க்கச் செய்து, நற்செயல் அனைத்தையும் நலமுறக் கற்பித்து மாணவர்களின் முன்னேற்றம் கண்டு உளம் மகிழும் ஒரு ஜீவன் ஆசிரியர்கள். அப்படிப்பட்ட ஜீவன்களுள் நானும் அடக்கம் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.                                                                                                                                 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம் நாள் திருத்தணிக்கு அருகில் சர்வபள்ளி எனும் ஊரில் பிறந்து ஆசிரியராக பணிபுரிந்து பின்னர் இந்திய திருநாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக உயர்ந்த  டாக்டர்  ராதாகிருஷ்ணன் அவர்களின் பிற்ந்த நாளை ஆசிரியர் தினமாக நாம் கொண்டாடுகிறோம்.                                                    தாய்லாந்து – ஜனவரி 16 : 1956 ஆம் வருடம் முதல் கொண்டாடப்படும் இத்தினம் பாடசாலை விடுமுறை தினமாகும்.                                                                       ஈரான் - மே 02 : 1980 மே மாதம் 02 ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்ட பன்னூல் ஆசிரியரும், ஓய்வில்லா ஆசானுமாகிய பேராசிரியர் ஆயதொல்லா மொர்தாஸா மொதாஹ்ஹரி அவர்களை நினைவு கூறும் முகமாகவே இத்தினத்தை ஈரானியர்கள் தமது ஆசிரியர் தினமாகக் கொண்டாடுகின்றனர்            இலங்கை உட்பட இன்னும் சில நாடுகள் அக்டோபர் 6 ஆம் தேதி ‘உலக ஆசிரியர் தினத்தை’ கொண்டாடுகின்றன.                                                                                ஐக்கிய அமெரிக்கா : மே மாதத்தின் முதலாவது வாரத்தின் செவ்வாய்கிழமை இத் தினம் கொண்டாடப்படும்                                                                            இந்தோனீசியா : 2012 ஆம் ஆண்டுக்குரிய உலக ஆசிரியர் தின கூற்றாக ‘எனது ஆசான் – எனது வீரன்’ (My Teacher, My Hero) எனப் பிரகடணப்படுத்தி, செப்டம்பர் 05 – அக்டோபர் 05 வரை ‘உலக ஆசிரியர் மாதம்’ என்றும் பிரகடனப்படுத்தியுள்ளது.                              ரஷ்யா : 1965 முதல் 1994 வரை அக்டோபர் மாதம் முதலாம் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினர். 1994 இன் பின் உலக ஆசிரியர் தினத்துடன் இணைந்து அக்டோபர் 05 ஆம் தேதி கொண்டாடுகின்றனர்..               துருக்கி – நவம்பர் 24   இவ்வாறெல்லாம் உலக நாடுகள் ஆசிரியர் தின நாளை கொண்டாடினாலும் மாணவர்களின் உணர்வை புரிந்து ஒவ்வொரு நாளும் கற்று மாணவர்கள் மத்தியில் மணம் பரப்பும் ஆசிரியர்களை மாணவர்கள் மனதில் வைத்து ஒவ்வொரு நாளும் கொண்டாடுவார்கள், மரியாதை செலுத்துவார்கள் என்பது நிதர்சனமான உண்மை.                                      
                                                                                     

10 comments:

  1. அருமை... அருமை...

    ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அய்யாவின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி. இணைய உலகில் பதிவுகளைப் படித்தும் கருத்தூட்டம் அளித்தும் சிட்டாய் சிறகடித்து பறக்கும் உங்களுக்கு பணிவான நன்றி.

    ReplyDelete
  3. அருமையான ,பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி சகோதரி. தங்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள். மலேசியாவில் மே 16 ல் ஆசிரியர் தினவிழா கொண்டாடப்படிகிறது. பதிவில் இட மறந்து விட்டேன். நன்றி சகோதரி. தொடர்ந்து பயணிப்போம்.

      Delete
  4. பயனுள்ள தகவல்கள். ஆசிரியர் தின இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யா அவர்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும், கருத்துக்கும் உவகையுடன் நன்றி சாற்றுகிறேன்.

      Delete
  5. ஆசிரியர் தின வாழ்த்துக்கள்! கடைசியாக சொன்னது அருமை! என் தந்தையும் ஒரு ஆசிரியர்தான்.(பணி ஓய்வு பெற்றவர்)அவரை பற்றி அவர் மாணவ, மாணவிகள் சொல்லும் போதெல்லாம் என் அப்பாவை நினைத்து பெருமையாக இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி. ஆசிரியர்கள் வாழ்ந்து மறைந்த பின்பும் மறையாது வாழ்வது மாணவர்களின் மனங்களில் தானே, விருதுகளில் அல்ல என்பதே என் கருத்து. ஒரு ஆசிரியரைப் பற்றி மாணவர்கள் கூறும் பெருமையே அவருக்கான நல்லாசிரியர் விருது..

      Delete
  6. என் வலைத்தளத்தில் இந்த கீழ்க்கண்ட பதிவுக்கு இன்று முதல் வருகை தந்துள்ளீர்கள். மிக்க நன்றி. சந்தோஷம்.

    http://gopu1949.blogspot.in/2013/09/45-6-6.html

    ஆனால் அது என் தொடரின் ஒரே பகுதியான பகுதி-45 என்பதை 45/1/6 முதல் 45/6/6 வரை,6 உபபகுதிகளாகப் பிரித்து ஒரே நாளில் வெளியிட்டுள்ளேன்.

    கடைசி 6வது பகுதிக்கு மட்டும் வருகை தந்துள்ளீர்கள்.

    45/1/6 முதல் படித்தால் மட்டுமே முழுமையாக இருக்கும். இணைப்பு இதோ:

    http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html

    விருப்பமும் நேர அவகாசமும் இருந்தால் பார்க்கவும்.

    அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. தகவலுக்கும் நன்றி அய்யா. கண்டிப்பாக இனி தங்களது வலைப்பக்கத்தில் என்னுடய (சு)வாசத்தைக் காண்பீர்கள்.

      Delete