Thursday, 30 January 2014
Tuesday, 28 January 2014
கொள்ளையடிக்கும் செல்போன் நிறுவனங்கள்
இன்றைய உலகில் அடிப்படை தேவையான உணவு, உடை, உறைவிடம் இவற்றோடு அலைபேசியும் சேர்ந்து கொண்டுள்ளது. செல்போன் இல்லாதவர்கள் செல்லாதவர்கள் என்றே சொல்லும் அளவிற்கு தற்போதைய நிலை உருவாகி வருகிறது. இதை பயன்படுத்தி செல்போன் நிறுவனங்கள் செய்யும் மோசடிகளைத் தான் இங்கு விழிப்புணர்வு கட்டுரையாக தரலாம் என்று எண்ணி எழுதியிருக்கிறேன். வலுவான காரணிகள் இருந்தாலும் அனைவரும் சந்தித்த சாதாரணமான காரணிகளையே எடுத்து எழுதியுள்ளேன்.
Wednesday, 22 January 2014
அரசு நடத்தும் அல்ட்ரா டீலக்ஸ் (சுந்தரா டிராவல்ஸ்)
நண்பர்களுக்கு வணக்கம். படத்தை நன்றாக பார்த்துக் கொள்ளுங்கள் நான் சொல்ல போகிற கதைக்கும் படத்திற்கு சம்மந்தம் உண்டு.
சிவகாசியில் வசிக்கும் எனது உடன்பிறவா அன்பு சகோதரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். அவருக்கு தொகுப்பு மதிப்பெண் சான்றிதழ் வாங்குவதற்காக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்திற்கு நானும் அக்காவின் கணவர் திரு. சீனீராஜ் அவர்களும் 21.01.2014 அன்று சென்று திரும்புகையில் நடந்த ஒரு பயணத்தைப் பற்றி தான் தங்களோடு பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
Monday, 20 January 2014
சினிமா விமர்சனம் அல்ல- சினிமா சார்ந்த விமர்சனம்
Wednesday, 15 January 2014
வலைப்பதிவு தம்பதியினரோடு ஓர் இனிய சந்திப்பு
நண்பர்களுக்கு வணக்கம்
பொங்கல் திருநாள் கொண்டாட்டங்கள் வழக்கமான பாணியில் வீட்டிற்குள்ளேயே தொலைக்காட்சி முன்பாகவும் கணினி முன்பாகவும் வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கிறது எனக்கு. உங்களுக்கு?
இரண்டடியில் உலக பொதுமறையைத் தந்த அய்யன் திருவள்ளுவர் தினமான இன்று இரண்டு முக்கிய விருந்தினர்கள் எங்கள் இல்லம் வந்து அலங்கரித்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகின்றது. இருவரும் புதுக்கோட்டை மாவட்டம் அரசு பள்ளியில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்கள் ஆனால் தமிழ் இலக்கியங்களில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். இருவருமே வலைப்பதிவர்கள்.தம்பதிகள்.
Monday, 13 January 2014
அரசு பள்ளியில் பட்டிமன்றம் - புதிய அனுபவம்
நண்பர்களுக்கு வணக்கம்
புதுக்கோட்டை மாவட்டம் மலம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரியும் திரு.சுரேஷ் அவர்களை வழக்கம் போல் சந்திக்கையில் எங்கள் பள்ளியில் ஆசிரியர்கள் பங்குபெறும் பொங்கல் சிறப்பு பட்டிமன்றம் நடத்த உள்ளோம் அதில் நீங்கள் நடுவராக வர வேண்டுமென்று கூறினார் அதைக் கேட்டதும் அதிர்ச்சியோடு முதலில் மறுத்தேன். பின்னர் அவரது அன்பும், அவரது மனைவி திருமதி. ஜான்சிகிளாரா (எங்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியர்) அவர்களின் அன்பும் என்னை ஏற்றுக்கொள்ளச் செய்தது.
Monday, 6 January 2014
இனிதாய் தொடங்கிய இலக்கியச் சந்திப்பு
நண்பர்களுக்கு வணக்கம்
சென்ற வாரம் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு. நா. அருள்முருகன் ஐயா, கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளரும், வலைப்பதிவருமான திரு. நா.முத்துநிலவன் ஐயா, மற்றொரு பட்டிமன்றப் பேச்சாளரும், தமிழாசிரியருமான திரு. மகாசுந்தர் ஐயா அவர்களோடு நானும் நாமக்கல் மாவட்டத்தின் சிறந்த இலக்கியவாதியும் பதிப்பாசிரியருமான திரு. பெருமாள்முருகன் ஐயா அவர்கள் முன்னெடுத்து நடத்தும் அவர் வீட்டு மொட்டை மாடியில் நடந்த கூடு எனும் இலக்கிய அமைப்பின் 50 ஆவது சந்திப்பு கூட்டத்திற்கு சென்றோம்.
Subscribe to:
Posts (Atom)