அரும்புகள் மலரட்டும்: புதியன படைத்திடுவோம்

Tuesday, 10 December 2013

புதியன படைத்திடுவோம்


வாழ்க்கையெனும் கடலில் சூழல்
நம்மை மூழ்கடிக்கலாம்-மூச்சடக்கி
முத்தெடுத்து மீண்டு(ம்) வருவோம்!

பயணிக்கும் பாதையின் தடங்கள்
படக்கென்று மறையலாம்- புதிய
தடம் நாம் பதிப்போம்!

இருக்கும் விதிகள் நாம்
இயங்க இடையூறகலாம்- இருப்பினும்
புதிய விதிகள் செய்வோம்!

காலம் கனிந்து வர
காத்திருக்க வேண்டாம்- கனியும்
காலத்தை நாமே பிரசவிப்போம்!

எதிர்மறை எண்ணங்களால் இச்சமூகம்
எதிராக போனாலும்- நேர்மறை
எண்ணத்தோடு நேசம் காப்போம்!

இருக்கும் வளங்கள் கொண்டே
இனிமையாய் வாழ- நாம்
புதியன படைத்திடு வோம்!


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

38 comments:

  1. //எதிர்மறை எண்ணங்களால் இச்சமூகம் எதிராக போனாலும்- நேர்மறை
    எண்ணத்தோடு நேசம் காப்போம்!//

    அழகாகச் சொல்லியுள்ளீர்கள். அதே! அதே !!

    //இருக்கும் வளங்கள் கொண்டே இனிமையாய் வாழ- நாம் புதியன படைத்திடுவோம்!//

    அருமையான படைப்பினைத் தாங்களும் புதுமையாகப்படைத்துள்ளீர்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் முத்தாய்ப்பான கருத்துரைக்கும் நன்றி ஐயா. பாராட்டி சிறப்பித்தமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  2. நேர்மறைச் சிந்தனைக்கு வலுவூட்டும்
    அற்புதமான கவிதை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அதிகாலையில் வந்து கருத்துரையும் தந்து கனிவோடு பாராட்டிய ஐயாவிற்கு அகம் கலந்த நன்றிகள்..

      Delete
  3. என் இனிய சகோதரனுக்கு நன்றிகள் பல...

    காலம் கனிந்து வர
    காத்திருக்க வேண்டாம்- கனியும்
    காலத்தை நாமே பிரசவிப்போம்!

    என்ன பாண்டியா இப்படி எல்லாமா அசத்துவீங்க. எப்படி தோன்றுகிறது இப்படி எல்லாம். அப்படியே பிரமித்து விட்டேன். அது சரி அப்போ கட்டுரைக்கு முழுக்கா? கவிதை கட்டிப் போட்டுவிட்டது அல்லவா உங்களோடு எங்களையும் தான். சரி சரி அசத்துங்கோ ....
    புதுமையும் அருமையும் பகிர்வுக்கு நன்றி....! தொடர வாழ்த்துக்கள்....!

    ReplyDelete
    Replies
    1. இனிய சகோதரிக்கு வணக்கம்
      தங்கள் பெயரைப் போலவே இனிமையான கருத்துகளையும் வாழ்த்துகளையும் இந்த அன்பு சகோதரனுக்கு வழங்கியமைக்கு நன்றி. கட்டுரைக்கு முழுக்கு எல்லாம் சகோதரி. அதுவும் தொடரும். வருகைக்கு மிக்க நன்றி சகோதரி. தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  4. வணக்கம்
    சகோதரன்

    காலம் கனிந்து வர
    காத்திருக்க வேண்டாம்- கனியும்
    காலத்தை நாமே பிரசவிப்போம்

    நீங்கள் சொல்வது உண்மைதான்.... மிக அருமை வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதருக்கு வணக்கம்
      பதிவிட்டவுடன் கருத்துத் தெரிவித்து ஊக்கப்படுத்தும் என் இனிய சகோதரருக்கு நன்றிகள் பல. தொடர்வோம் நட்பை. வாழ்த்துக்கும் நன்றிகள் சகோ.

      Delete
  5. மிகவும் அழகான கவிதை சகோதரரே...
    ஒவ்வொரு சொல்லும் ஊக்கத்தைக் கொடுக்கிறது.
    நம் முன்னேற்றத்துக்கான கிரியா ஊக்கிகள்
    வெளியிலிருந்து வேண்டாம் நமக்குள்ளேயே
    இருக்கிறது என்று உரைத்து தெளிய வைக்கும்
    அருமையான சொல்லாடல்.

    கனியாவோம் என்றெண்ணியா
    பூக்கள் மலர்கின்றன..
    குழலாவோம் என்றெண்ணியா
    மூங்கில் வளர்கிறது
    மனமாவோம் என்றெண்ணியா
    சநதனம் மரமாகிறது...
    போகிற போக்கில்
    கிடைப்பது கிடைக்கும்..
    ஆயினும் எனக்கான
    நிலைகளில் இருந்து
    ஒருபோதும் தவறேன்
    என்ற நம்பிக்கை தானே
    இவ்வருள் வாழ்க்கை..

    என்று ஓங்கி ஒலிக்கச் சொல்லும் கவிதை...

    ReplyDelete
    Replies
    1. சகோதரருக்கு வணக்கம்
      கவிதையால் கருத்துரை வழங்கி கற்பனையின் ஊற்றிடமாகும் அன்பு சகோதரரின் திறம் கண்டு வியக்கிறேன். வந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கும் நன்றீங்க சகோ..

      Delete

  6. காலத்திற்காகக் காத்திருக்கதே
    காலத்தைக் கனிய வை
    அருமை நண்பரே

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  7. ஓ!இந்த C.R.Cயின் பின்விளைவு போல !!!!!!!!!!!!
    மேலும் தொடர்க சகோதரரே !!!!!!!!!!!!!
    வாழ்த்துக்கள் !

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம்
      சரியாக சொன்னீர்கள் சகோ. அதன் தாக்கத்தால் நேர்மறை, எதிர்மறை எண்ணங்கள் பற்றி எடுத்துக் கொண்டேன். கவியின் கருத்து வேறு தானே! வருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு நன்றி சகோதரி. 50 ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்!.

      Delete
  8. காலத்தை நாமே பிரசவிப்போம்!///வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  9. நேர்மறை எண்ணங்கள் அனைத்தும் அருமை... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  10. காலம் கனிந்து வர
    காத்திருக்க வேண்டாம்- //

    அருமையான வரிகள். தோழர் மகேந்திரனின் கருத்துரையும் அருமை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  11. Arukai vatikal.
    Eniya vaalththu.
    http://kovaikkavi.wordpress.com/2013/12/09/63-%e0%ae%95%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%88-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8dphotopoem/
    Vetha.Elangathilakam.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  12. புதிய சிறகுகள் விரியட்டும் !
    த.ம 6

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  13. நாளும் மலரட்டும் நற்கவிதை பாண்டியரே! வாழ்க வளமுடன்!
    த.ம 7

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் ஐயா
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  14. நல்ல தன்னம்பிக்கை கவிதை!

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  15. அருமையான கவிதை.
    வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  16. //நேர்மறை
    எண்ணத்தோடு நேசம் காப்போம்!//
    எனக்கு பிடித்த வரிகள் கவிஞர் ....

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரர்
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  17. தன்னம்பிக்கையான வரிகள்.வாழ்த்துக்கள் சகோ.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி
      வருகை தந்து கருத்தும் தந்து வாழ்த்தியமைக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..

      Delete
  18. மற்றவர்கள் சரியாகச் சொன்னது போல அந்த -
    “காலம் கனிந்து வர
    காத்திருக்க வேண்டாம்- கனியும்
    காலத்தை நாமே பிரசவிப்போம்!“ மூன்று வரி முத்தாய்ப்பு பாண்டியன்! சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதிவிட்டீர்கள். தொடருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஐயாவிற்கு நன்றி. தங்களிடமிருந்து அழகான கருத்துரை கிடைத்திருப்பது என்னை இன்னும் கவி புனைய வேண்டும் ஆவலை மிகுவிக்கிறது மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து ஆலோசனைகளைத் தந்து ஊக்கப்படுத்துங்கள்.

      Delete