அன்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம். இப்பதிவில் வரும் கருத்துக்கள் அனைத்தும் தான் ஆராய்ந்து கூறிய செய்திகள் அல்ல அனைத்தும் பிரபல நாளிதழில், பிற நூல்களில் படித்ததில் பிடித்ததே. தமிழில் உள்ள நூல்களிலேயே சிறப்பிடம் பெற்ற நூல் திருக்குறள். இது மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மம், பொருள், இன்பம் அல்லது காமம் ஆகியவற்றைப்பற்றி விளக்கும் நூல்.இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர் என்றும் அனைவருக்கும் தெரியும். இந்த திருக்குறளைப்பற்றி சில அரிய தகவல்..
»»திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு-1812
»»திருக்குறளின் முதல் பெயர்- முப்பால்
»»திருக்குறளில் உள்ள அதிகாரங்கள்- 133
»»திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-380
»»திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள்-700
»»திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்-250
»»திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்-1330
»»திருக்குறள் அகரத்தில் தொடங்கி னகரத்தில் முடிகிறது.
»»திருக்குறளில் உள்ள சொற்கள்-14,000
»»திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துக்கள்- 42,194
»»திருக்குறளில் தமிழ் எழுத்துக்கள் 247-இல், 37 எழுத்துக்கள் மட்டும் இடம் பெறவில்லை
»»திருக்குறளில் இடம்பெறும் இருமலர்கள்-அனிச்சம், குவளை
»»திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம்- நெருஞ்சிப்பழம்
»»திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை- குன்றிமணி
»»திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து-ஒள
»»திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம்- குறிப்பறிதல்
»»திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள்- பனை, மூங்கில்
»»திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரெ எழுத்து-னி
»»திருக்குறளில் ஒரு முறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துக்கள்- ளீ,ங
»»திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்- தமிழ், கடவுள்
»»திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர்- தஞ்சை ஞானபிரகாசர்
»»திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர்-மணக்குடவர்
»»திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்- ஜி.யு,போப் »»திருக்குறளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்தவர்-கிரார் »»திருக்குறளை பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்த்தவர்-ஏரியல் »»திருக்குறளை ஹிந்தி மொழியில் மொழிபெயர்த்தவர்-பி.டி.ஜைன் »» திருக்குறளை தெலுங்கு மொழியில் மொழிபெயர்த்தவர்- வைத்தியநாதர் »»திருக்குறளை வடமொழியில் மொழிபெயர்த்தவர்-திரு அப்பார் தீட்சிதர் »»திருக்குறளை உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர்-பரிமேலழகர்
»»திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்- ஒன்பது.
»»திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.
»»எழுபது கோடி என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது.
»»ஏழு என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது.
»»திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர்
»»திருக்குறள் நரிக்குறவர் பேசும் வக்போலி மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. (நன்றி- தினமலர்)
நல்லதொரு சிறப்பான தொகுப்பு...
ReplyDeleteதொடர வாழ்த்துக்கள்...
வாழ்த்துக்கும் கருத்துக்கும் அன்பான நன்றி அய்யா. தங்களின் வாழ்த்தும் கருத்தும் உற்சாகமூட்டுகிறது.
Deleteஅறியாத அதிசயமான தகவல்கள் தான். தினமலரிலும் படித்தேன். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி அய்யா. தங்களது வருகையும் கருத்தும் என்னைப் போன்ற இளைஞர்களுக்கு தேவை.
Deleteதெரிந்தவை சிலவே!தெரியாதவை பல!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி பாண்டியன்
அய்யா அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல. த்ங்களது கருத்து இப்பக்கத்தை மெருகேற்றும். ஆம் அய்யா திருக்குறளையும் திருவள்ளுவரையும் பற்றி அறிய நிரம்ப இருக்கின்றன. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி அய்யா..
ReplyDeleteஎன் தொடரின் பகுதி-45 இல் உள்ள உட்பகுதிகள் மொத்தம் ஆறு.
ReplyDeleteஅதில் நான்கு பகுதிகளுக்கு வருகை தந்து கருத்தளித்துள்ளது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
விட்டுப்போன இரண்டுக்கான இணைப்பு இதோ:
வாருங்கள். படித்து மகிழுங்கள். இதனால் உங்களுக்கும் பலரின் அறிமுகங்கள் கிடைக்கலாம்.
http://gopu1949.blogspot.in/2013/09/45-1-6.html 45/1/6
http://gopu1949.blogspot.in/2013/09/45-4-6.html 45/4/6
அன்புடன் VGK
கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி அய்யா. இதோ வருகை புரிந்து படித்து விடுகிறேன். நன்றி அய்யா.
Deleteதங்கள் ஆர்வத்திற்கும் உழைப்புக்கும் இன்னும் உயர்வீர்கள் பாண்டியன் அய்யா, எனது வாழ்த்துகள்.
ReplyDeleteஅரிதான தகவல்கள், மற்றும் புள்ளிவிவரங்கள் அனேகமாகக் கணினி, வலைத்தளங்களில் கிடைக்கக் கூடும். எனவே அவற்றைத் தாண்டி, கணினி செய்யமுடியாத சிந்தனைகளை, புதிய முடிவுகளை, ஆய்வு நோக்கில் தரப் பழகிக்கொள்ளுங்கள். அதுவே உங்களின் இருப்பை உறுதிப்படுத்தவும், ஆழ-அகலப் படுத்தவும் உதவும். தொடர வாழ்த்துகள்.
இதற்கு தான் அய்யாவை அழைத்தேன். தங்களது கருத்தை மனதில் வைத்து ஆய்வு நோக்கில் எழுத முயல்கிறேன் அய்யா. தங்களின் கருத்துக்கும், வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள் அய்யா.
Deleteதிருக்குறள் பற்றி நல்ல சுவையான தகவல்கள்.தான், பயனுள்ளவையே.
ReplyDeleteவகுப்பறை அனுபவங்கள்,கற்பித்தல் உத்திகள், போன்றவற்றையும் எழுதலாம். திரை விமர்சனங்கள், நூல்விமர்சனங்களும் எழுதலாம்.
கண்டிப்பாக செய்கிறேன் அய்யா. தங்களது கருத்து மிகவும் பயனளிக்கும். தொடர்ந்து கருத்து கூறுங்கள் அய்யா. கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள்.
Deleteமிக மிக அருமை ! பகிர்விற்கு நன்றி.
ReplyDeleteஅவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக
சுயபதிவுகள் இடவும்.
சில நாட்களில் உத்திகள் புரிந்து விடும் .
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி சகோதரி. தங்களது கருத்து என்னுடைய எண்ணங்களை வளப்படுத்தும். கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteதிருக்குறள் பற்றி அருமையான தகவல்கள்..பாராட்டுக்கள்..!
ReplyDeleteவாங்க சகோதரி வாங்க! இணைய வானில் கொடிக்கட்டி பறக்கும் தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி
Deleteஆகா ரூம் போட்டு யோசிச்சிருப்பாரோ என்று நினைத்தேன்... கடைசியில் தினமலர் என்றவுடன் தான் புரிந்தது...
ReplyDeleteஅவசியமான சுவாரஸ்யமான தகவல்கள்
வணக்கம் அய்யா, ரூம் போட்டு யோசிக்கிற அளவுக்கு நான் இன்னும் வளரலைனு நினைக்கிறேன் ஹிஹி. கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க அய்யா.
Delete