அரும்புகள் மலரட்டும்: இந்திரவிழா இன்று

Friday 9 August 2013

இந்திரவிழா இன்று

                                                   



இந்திரவிழா தோற்றம்                                                                                                                                                               தமிழில் இரட்டைக் காப்பியங்கள் என்று புகழப்படும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் இந்திர விழா மிகவும் சிறப்பான இடத்தைப் பெறுகிறது. 


இந்திரன் விழாவில் முக்கிய அம்சம் கொடி ஏற்றம். அதற்கு முன் வள்ளுவன் பறை அறிவிப்பான். உடனே ஊர் முழுதும் அலங்கரிக்கப்படும். 28 நாட்களுக்கு நாடே விழாக்கோலம் பூணும். ஆடலும் பாடலும் புத்துயிர் பெறும். அதைக் கொண்டாடாவிடில் இயற்கையின் கோபத்துக்கு நாடு உள்ளாகும். இறுதி நாளில் இந்திரன் கொடிக்கம்பம் வீழ்த்தப்படும். மணி மேகலையும் சிலப்பதிகாரமும் இது பற்றி நிறைய தகவல் தருகின்றன. இதை அகத்திய முனிவரின் ஆலோசனையின் பேரில் தூங்கு எயில் எறிந்த தொடித்தோள் செம்பியன் துவக்கியதாக இரட்டைக் காப்பியங்கள் கூறும்.
                                       தொடித்தோட் செம்பியன் எடுத்த காதல் விழாவைக் காமன் விழா என்றும், இந்திர விழா என்றும் குறிப்பிடுகின்றனர். அவ்விழா, இருபத்தெட்டு நாள் 'நாளேழ் நாளினு நன்கறிந்தீர் எனக் குறிப்பிடுவர். அவ்விழா விருந்தாட்டு விழா என்றும் குறிப்பிடப்படுகிறது. ஆகையால் அதனை ஆண்டுதோறும் கொண்டாடப்படும் விழா என்று பொருள் கொள்ளலாம்.

காப்பியங்களில் இந்திரவிழா                                                                                                                                                                சிலப்பதிகாரம், மணிமேகலை காலங்களில் இவ்விழா அரசாங்க விழாவாகவே கொண்டாடப்பட்டது. கற்பகக் கோட்டத்தில் வெள்ளானைக்கொடி ஏற்றப்பட்டது. பல தெய்வங்களுக்கும் பூசையிடப்பட்டு, இசையும் கூத்தும் கலந்து மக்கட்கு இன்பமூட்டின. அறிஞர்கள் குழுமியிருந்து பட்டி மண்டபத்தில் வாதிட்டனர். பல்வேறு சமயத்தவரும் செற்றமும் கலகமும் செய்யாது ஒற்றுமையாய் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்விதத்தில் இவ்விழா சமய ஒற்றுமையை வலியுறுத்தும் விழாவாக இருந்தது என அறியலாம். மேலும் சின்னமனூர் செப்பேடுகள், ஐங்குறுநூறு ஆகியவையும் தெரிவிக்கிறது.

பூம்புகாரில் இந்திரவிழா                                                                                                                                                               நாகை மாவட்டம் பூம்புகார் கொற்றவை பந்தலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் பவுர்ணமி அன்று இந்திரவிழா துவங்கும். ஒரு வாரம் நடைபெற்று வந்த இவ்விழா காலப்போக்கில் மூன்று நாள் மட்டும் நடைபெற்று வந்தது. இந்த மூன்று நாட்கள் பட்டிமன்றம், பாட்டுமன்றம், இலக்கிய சொற்பொழிவு, சிலப்பதிகார நாடகம் மற்றும் இலக்கிய சொற்பொழிவுகளும் நடைபெறும். இது சுற்றுலாத்துறை மூலம் நடத்தப்படும் பவுர்ணமி அன்று துவங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவிற்கு பூம்புகார் சுற்றியுள்ள செம்பனார்கோவில், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன்கோவில், மணல்மேடு,குத்தாலம் மற்றும் வெளியூர்களிலிருந்தும் பூம்புகாருக்கு பயணிகள் அன்றைய தினம் வந்து தாங்கள் கொண்டு வந்த உணவை இரவு நிலாச்சோறு உண்டு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கும் வழங்கி மகிழ்ந்து வந்தனர்.                                           இந்திரவிழா இன்று                                                                                                                                                              இருபத்தெட்டு நாட்கள் கொண்டாடிய விழா ஏழு நாட்களாகி இன்று மூன்று நாட்கள் ஆனகதை ஒரு பக்கம் இருக்கட்டும். கடந்த இரு வருடங்களாக இவ்விழாவைக் கொண்டாடவே இல்லை என்பது தான் வருந்தக்கூடியசெய்தியாக உள்ளது. இதை காலத்தின் மாற்றம் என்பதா! அரசின் அலட்சியம் என்பதா! விழா என்பது மக்களை மகிழ்விக்கக் கூடிய உன்னதமான விசயமல்லவா? எனவே தமிழக அரசு முன்வந்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலமாக இவ்விழாவை தொடர்ந்து இனிவரும் காலங்களில் நடத்திட வேண்டும். இதுவே எல்லோருடைய ஆசையாக இருக்கும் என்று நம்புகிறேன்..                                                                                                                                                                                                                                                                                                 ( நன்றி- விக்கிபீடியா, தமிழ் நாளிதழ்கள்)

11 comments:

  1. வருக அய்யா வருக
    இணைய உலகில் இணையற்ற படைப்புகள் பல தருக
    தங்களின் முயற்சி வெல்க.
    இன்னும் யோசித்து,நம்காலத் தமிழ் உலகிற்குத் தேவையான கருத்துகளைப் படைப்பாக்கித் தருக(எனது வலைப்பக்கத்தில் தொடர்புகொள்ளும்) நண்பர்களைத் தேடிச் சென்று நட்புக் கொண்டு, தங்கள் வலைப்பக்கத்தை வளப்படுத்தத் தயங்காதீர்கள்... தொடர்ந்து முன்னேற வாழ்த்துகள். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அய்யா, தங்களின் இடைவிடாத பணியிலும் காலம் ஒதுக்கி கருத்துக்கள் வழங்கியமைக்கு. தங்களின் கருத்துக்கள் உடனடியாக செயல்பாட்டிற்கு வரும். தங்களின் வழிகாட்டுதலை தொடர்ந்து தாருங்கள். நன்றி அய்யா.

      Delete
  2. தமிழ் மணம் திரட்டி முதலான தமிழ்வலைத் தொகுப்புகளில் உங்கள் பக்கத்தை இணையுங்கள் உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்கள் கிடைப்பார்கள் .. http://www.tamilmanam.net/
    உங்களின் படைப்புகள் தமிழார்வலர்களைக் கவர்ந்து படிக்க வைப்பவையாக இருந்தால் படிப்பவர் எண்ணிக்கை வந்து குவியும். எழுதுங்கள்... பரப்புங்கள்... வளருங்கள் வாழ்த்துகள் - நா.முத்துநிலவன்,புதுக்கோட்டை
    http://valarumkavithai.blogspot.in/

    ReplyDelete
  3. அவசியம் செய்கிறேன் அய்யா, தங்களின் ஆலோசனைகளுக்கு நன்றி என்று ஒரு வார்த்தையில் கூறி விட முடியாது. என்றும் உங்கள் வாசகராக, நண்பராக, உங்களை பின்தொடர விரும்புகிறேன். நன்றி அய்யா.

    ReplyDelete
  4. தமிழார்வலர்களும்,அறிஞர்களும் இணையத்தின்பால் கவனம் செலுத்துவது வரவேற்கத் தகுந்தது. தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இது அமையும்
    என் பெட்டிகடைக்கும் வருகை தந்தமைக்கு நன்றி
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. கருத்திட தடையாக உள்ள Word verification ஐ நீக்கி விடுங்கள்

    ReplyDelete
    Replies
    1. முரளிதரன் அய்யாவிற்கு வணக்கம், தங்களின் வருகைக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து நட்பு பாராட்டுவோம். நன்றி அய்யா..

      Delete
  6. கவிஞரும் வலைப்பதிவருமான கவியாழி கண்ணதாசன் தனது முகநூலில் தங்கள் படைப்பைப் பகிர்ந்திருககிறார் பார்ததீரகளா பாண்டியன்? பார்க்க https://plus.google.com/113334735471823062346/posts

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறிய பின்பே பார்க்கிறேன். நன்றி அய்யா. தொடர்ந்து தங்களது ஆலோசனைகளையும் கருத்துகளையும் தாருங்கள் என்று அன்புடன் வேண்டுகிறேன்.

      Delete
  7. இந்த படைப்பை தனது முகநூலில் பகிர்ந்த கவிஞர் அய்யா கவியாழி கண்ணதாசன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

    ReplyDelete
  8. இந்திரா விழா என்றால் சித்திரை திருவிழா தானே !!!

    ReplyDelete