அரும்புகள் மலரட்டும்: October 2015

Sunday 11 October 2015

வலைப்பதிவர் திருவிழா பகுதி 2

  • கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

பதிவர் திருவிழா 2015 நேரலை கண்டு களித்தமைக்கு நன்றி...!

Sunday 4 October 2015

படிவம் நிரப்புங்க! பணத்தை அள்ளுங்கள்!

செய்ய வேண்டியது என்ன?

http://bloggersmeet2015.blogspot.com/ எனும் இணைய தளத்திலிருக்கும் “போட்டிக்கு வந்த படைப்புகளை“ படித்துவிட்டு, “இந்தப் போட்டியில் இவர்கள்தான் பரிசு பெறுவார்கள்” என ஐந்து போட்டிகளுக்கும், போட்டிக்கு மூவர் வீதம் 15பேரைத் தேர்வுசெய்யவேண்டும். முதல்பரிசு இவர், இரண்டாம் பரிசு இவர், மூன்றாம் பரிசு இவர்தான் என்று ஐந்து போட்டிகளுக்கும் கருத்துத் தெரிவித்தால் போதும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி bloggersmeet2015@gmail.com

Friday 2 October 2015

ஆஹா! அழைப்பிதழ் வந்தாச்சு! வருக வருக நண்பர்களே!

ஆஹா! மனம் ஆனந்தத்தில் கூத்தாடுகிறது, புதுக்கோட்டை நகரம் மட்டுமல்ல இணைய நண்பர்களின் இல்லங்கள் தோறும் விழாக் கோலம் பூண்டிருக்கிறது. இணையத்தில் சந்தித்து இதயத்தில் இடம் பிடித்த அத்தனை உறவுகளை ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் சந்திக்க இருக்கிறோம் என்றால் இல்லங்கள் மட்டுமல்ல உங்களின் உள்ளங்களும் எண்ணங்களும் புதுகையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதை நானறிவேன். இனி என்ன இதோ அழைப்பிதழ் வந்தாச்சு. இணைய வாயிலாகவும், அஞ்சல் வாயிலாகவும் அழைப்பிதழ் உங்களின் இல்லத்து வாசலை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. மின்னஞ்சல் எல்லாம் உங்களது மைக்ரோ சாப்ட் (விண்டோஸ்) சன்னலில் வழியே எகிறி குதித்து உங்களை இருகரம் கூப்பி அழைத்துக் கொண்டிருக்கிறது.

Thursday 1 October 2015

சுற்றுச்சூழலைக் காப்போம்! சுகமாய் வாழ்வோம்!


அறிவியல் யுகத்தில் காலச்சக்கரம் கடுமையாகச் சுழன்றுக் கொண்டிருக்கிறது, உலகம் உள்ளங்கையில் சுருங்கியிருக்கிறது. கூடவே நம் சூழலும் பாலாகியிருக்கிறது. நீர், நிலம், காற்று என அனைத்தையும் மாசடையச் செய்திருக்கிற பெருமை நம்மையே சாரும். உலகம் வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கிறது. கமழி அடுக்கு(ஓசோன் மண்டலம்)மெல்லியதாகிப் போகியிருக்கிறது, சுத்தமான காற்றுக்கு ஆக்ஸிஜன் செண்டருக்கு அலைந்து கொண்டிருக்கிறது ஒரு கூட்டம், துருவப்பணி பாறைகளெல்லாம் உருகி கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கிறது.நெகிழியைப் பயன்படுத்தி பற்பல நோய்களோடு இலவசமாக இணைந்திருக்கிறோம். இயற்கையைக் காக்க தவறியிருக்கிறோம். இனி மேலும் விழித்துக் கொள்ளா விட்டால் அடுத்த தலைமுறை தான் என்னவாகுவது?.