அரும்புகள் மலரட்டும்: மெட்ராஸ் கஃபே - சொன்னதும் சொல்லாததும்

Wednesday, 28 August 2013

மெட்ராஸ் கஃபே - சொன்னதும் சொல்லாததும்

(இலங்கை வரைப்படத்திற்குள் கதாநாயகன் இருப்பதை படத்தில் காணலாம்)
                     ஜான் ஆபிரகாம் நடித்த பாலிவுட் படமான மெட்ராஸ் கஃபே பெரும் சர்ச்சைக்கு உள்ளாகிருப்பதும் ஆகஸ்ட் 23 ல் தமிழகத்தில் திரையிடுவதாக இருந்த படம் தமிழ் அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பால் திரையிடப்படவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.


          படத்தின் கதை                                                                                                                                                    1987 களில் ஈழப் போர் பின்னணியையும் ராஜீவ் காந்தி படுகொலையையும் மையமாகக் கொண்டு இந்த படத்தின் கதை பின்னப்பட்டிருக்கிறது. எல்.டி.டி.ஈ. என்பதற்கு பதிலாக எல்.டி.எஃப், பிரபாகரனுக்கு பதிலாக பாஸ்கரன். இப்படி ஒவ்வொரு தளபதிகளுக்கும் வெவ்வேறு பெயர் இடப்பட்டுள்ளது. மெட்ராஸ் கஃபே என்பது ஓர் உணவு விடுதி. ராஜீவ்வை கொல்ல சதியில் ஈடுபடுபவர்கள் அங்கே சந்தித்துக் கொள்கிறார்கள். இலங்கை பெரும்பான்மையாக சிங்களர் வாழும் ஒரு நாடு. அதில் சிறுபான்மையாக உள்ள தமிழர்கள் தங்களுக்கு தனி நாடு கேட்டு போராடுவதிலிருந்துதான் சிக்கல் பெரிதாகிற்று என்ற பின்னணி குரல் கதை சொல்கிறது.                                            இந்தியாவை பாதிக்கும் ஒரு ரகசிய திட்டத்தை கண்டறிவதற்காக யாழ்ப்பாணம் செல்லும் ஒரு இந்திய அரசாங்கத்தின் உளவாளியின் கதைதான் மெட்ராஸ் கஃபே.                                                                                               விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாகவும் இந்திய அமைதிப்படையை ஈழத்து மக்களை காக்க வந்தவர்களாகவும் இந்தப் படம் சித்தரிப்பதாகச் சொல்லப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கும் அவர்களது போட்டி அமைப்புகளுக்குமான முரண்பாடுகள், ராஜீவ்-ஜெயவர்த்தனே ஒப்பந்தம், ராஜீவ் காந்தியை விடுதலைப் புலிகள் திட்டமிட்டு கொலை செய்வது என பயணம் செய்யும் இந்தப் படத்தின் கதை முழுக்க முழுக்க இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் பார்வையில் ஈழப் பிரச்சினையை சித்தரிப்பதாக பலரும் சுட்டிக்காட்டுகின்றனர்..                                                                   யாழ்ப்பாணம் செல்லும் கதாநாயகன் அங்கே யுத்த முனையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த பெண் செய்தியாளர் ஒருவரை சந்திக்கிறார். அவர் மூலமாக ஈழ விடுதலை யுத்தத்தின் பல பின்னணிகளை தெரிந்து கொள்கிறார் என்று போகிறதாம் கதை.
பெண் செய்தியாளரின் கதாபாத்திரம் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை முன்பு பேட்டி கண்ட இந்திய பெண் செய்தியாளர் அனிதா பிரதாப்பை மாதிரியாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது.         படத்திற்கான பின்னணி                                                         தமிழகத்தில் முத்துக்குமரன் முதலான 18 இளைஞர்கள் தீக்குளித்து இறந்த நிலையில், இலங்கை வாழ் தமிழர்களுக்கு ஆதரவாக  மாணவர்கள் நடத்திய போராட்டத்தின் சுவடுகள் மறையாத இத்தருணத்தில், உலக நாடுகளே இனப்படுகொலையை கண்டிக்கும் இவ்வேளையில்  இந்தியாவிற்கு இப்படி ஒரு படம் தேவைதானா?. அதுவும் மெட்ராஸ் கஃபே என்ற பெயரில்.ஆரம்பத்தில் ஜாப்னா அதாவது யாழ்ப்பாணம் என்று பெயர் வைக்கப்பட்டதாம் அது சிக்கலை ஏற்படுத்தும் என எண்ணி   மெட்ராஸ் கஃபே என்று பெயர் மாற்றப்பட்டதாம் ( தமிழர்கள் எதுவும் செய்ய மாட்டர்கள் என்ற எண்ணம் தான், அடடா தமிழர்களின் மீது என்ன ஒரு நம்பிக்கை).                                                                                    கதை சொல்வது கருத்து சுதந்திரம் என்று வைத்துக்கொண்டாலும் ஒரு வரலாற்றை தவறாக எப்படி திரித்துக் கூறுவதை ஏற்க முடியும். இது உண்மையில் ஈழத்தில் என்ன தான் நடந்தது என்று தெரியாமல் இருக்கும் வட மாநிலத்தவர்களுக்கு தவறான செய்திகளை கொண்டு சேர்த்து விடுமே.             1987 அக்டோபரில், பிரபாகரனைக் கொலை செய்ய, இந்திய இராணுவ கமாண்டோக்களை ஏவியதும். புலிகளின் செய்தித்தாள் அலுவலகங்கள், தொலைக்காட்சி அலுவலகத்தை, இந்திய இராணுவம் தாக்கி அழித்ததும். எண்ணற்ற தமிழ்ப் பெண்களைக் கற்பழித்ததும். யாழ்ப்பாண மருத்துவமனையின் மீது குண்டுகளை வீசியதும். ஆயிரக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த செய்தியும் இடம் பெறவில்லையாம்,.                                                 “தமிழர்களின் சடலங்கள், சாலை ஓரங்களில் கிடக்கின்றன; நாய் நரிகளும், காக்கை கழுகுகளும் தின்னுகின்றன' என்று, லண்டனில் இருந்து வெளியாகின்ற கார்டியன் பத்திரிகை தெரிவித்தது. இந்திய இராணுவத்தின் இக்கோரத் தாண்டவத்தைப் பற்றி, ஒரு வினாடி காட்சி கூட இத்திரைப்படத்தில் கிடையாதாம்.                                   படப்பிடிப்பு மலேசியா, தாய்லாந்து, சென்னை, இலங்கை ஆகிய இடங்களில் எடுக்கப்பட்டதாம்.         ஜான் ஆப்ரஹாம் இலங்கை அதிபரை இருமுறை சந்தித்ததாக பல செய்திகள் கூறுகின்றன.                                                                                                                                   இந்த இடத்தில் ராஜபக்சேவின் பிரச்சார யுக்தியைப் பற்றி நாம் குறிப்பிட வேண்டும். ராஜ பக்சே 2000-ஆண்டின் பிற்பகுதியில் பெரும் நிதிச்செலவில் ஊடகப் பிரச்சாரங்களுக்கான திட்டங்களை உருவாக்கினார். அதில் ஒன்று, இந்தியாவில் தனது அரசாங்கத்திற்கு சார்பான, ஈழப்போராட்டத்திற்கெதிரான பிரச்சார வேலைகளைச் செய்வது. இறுதிப் போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் இலங்கை தூதரகத்தின் வழியாகவும் இடைத் தரகர்கள் வழியாகவும் ஏராளமான பணம் ஊடகத்துறைக்குள் பட்டுவாடா செய்யப்பட்டது.  சில பிரபலமான ஆங்கில, தமிழ் பத்திரிகைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரத்தை இங்கு வெகு தீவிரமாக நடத்தியதற்கு பின்புலத்தில் இந்தப் பணம் இருந்தது. இன்னொருபுறம் இந்திய உளவுத் துறையும் புலிகளுக்கு எதிரான இந்தப் பிரச்சாரத்திற்கு பெரும் ஊக்கம் அளித்தது. தமிழகத்தில் பணம் பெற்ற சிலர் அந்தப் பத்திரிகை நிர்வாகத்தால் வேலை நீக்கம் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தன. ஒன்று பத்திரிகை முதலாளிகளையே விலைக்கு வாங்குவது, அல்லது வேலை செய்யும் பத்திரிகையாளரை விலைக்கு வாங்குவது என்கிற ரீதியில் இலங்கை அரசு வெகு தீவிரமாகச் செயல்பட்டது என்று கூறப்பட்டு வ்ருகிறது. அதே வேலை தான் இப்பட விவகாரத்திலும் நடந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது.                                                                                                                                                                                    ஈழத்தில் நடத்திய படுகொலைகளை மறைப்பதற்காக சிங்கள அரசும், செய்த துரோகத்தைத் தொடர்ந்து கொண்டு இருக்கும் இந்திய அரசும் திட்டமிட்டு, இந்தியாவில் உள்ள திரைப்பட நிறுவனத்தைப் பயன்படுத்தித் தயாரித்த படம் தான் மெட்ராஸ் கஃபே- என்று திரு.வைகோ அவர்கள் கூறிய வரிகள் தான் நமக்கும் நினைவுக்கு வருகிறது.

13 comments:

  1. இது ஒரு ராஜீவ் புரமோஷனல் படம்.
    விளம்பரம் என்று சின்ன எழுத்தில் போட்டு ஒரு செய்தி போல வார்ந்திரிகளில் வரம் விளம்பரம் போல இதுவும். சோனியா தலைமை ஆட்சியில் பிரபாகரனை கதாநாயகனாக கட்டிய படத்தை வெளியிருவார்கள்?
    ஈழத்தமிழனம் மே 2009 அழிக்கப்ப்ட்ட்டபோது நாம் (மக்கள்) ஐபிஎல் கிரிகெட் பார்த்துக் கொண்டிருந்தோம், தலைவரோ 150 நயனிட உண்ணாவிரதமும், யாருக்கு, எந்த மந்திரி என்ற (நிரடியா டேப்) எண்ணத்திலும் இருந்தார். இப்போது தேர்தல் வருகிறது. தமிழக்த்தில் எப்படியானாலும் வாக்கு இல்லை, மற்ற மாநிலங்களில் கொஞ்சம் அனுதாப அலையை ஏற்படுத்த இப்படி ஒரு படத்தை காட்டுகிறார்கள். தமிழத்தில் ஒரு திரையரங்கும் இதை வெளியிடாமல் (அரசு தடை விதிக்கிறதோ இல்லையோ) இருக்க வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. நண்பர் வாசன் அவர்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. இது தேர்தலுக்கான படமே. நன்றி நண்பரே.

      Delete
  2. ஒரே இனத்தில் (ஆசிரியர் )மற்றொரு சகோதரர் கிடைத்திருப்பது மகிழ்ச்சி .தங்களைப்போல் கனமா எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் வாசிக்கிறார்கள் என்ற கவனம் இனி எனக்கு வேண்டும் என்றே கருதுகிறேன்.நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகைக்கு நன்றி. நமக்கு தெரிந்த மொழியில் நமக்கு தெரிந்த நடையில் எழுதுகிறோம். இது ஏதோ ஒருவகையில் படிப்பவர்களின் மனதைக் கவர்ந்தாலும், பாதித்தாலும் அதன் பெருமை தமிழுக்கே. நமக்கில்லை.. கருத்துக்கு நன்றி சகோதரி.

      Delete
  3. இதை எல்லாம் கண்டு கொள்ளத் தேவை இல்லை. இதைப் பார்த்து யாரும் ஈழம் பற்றிய கருத்தை மாற்றிக்கொள்வார்கள் என்று நான் நினைக்கவில்லை.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி அய்யா.தங்களது கருத்துக்கு நானும் உடன்படுகிறேன்..

      Delete
  4. ஒரு வரலாற்றை தவறாக திரித்து கூறுவதை ஏற்க முடியாதுதான்.ஆனால் இந்த படத்தால எந்த மாநிலத்திலயும்அனுதாப அலை வீச போவதில்லை..

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி.. தங்களைப் போன்ற இலக்கியவாதிகளின் வருகை மகிழ்வளிக்கிறது.

      Delete
  5. மெட்ராஸ் கஃபே என் று ஒரு படமா.?கேள்விப் படவில்லையே. என்னைப் போல் சாதாரணர்கள் கேள்விப் படாத படத்துக்கு இது ஒரு விளம்பரம் போல் ஆகாதா.?’ எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப் பொருள் காண்பதறிவு.’ உண்மை தெரிந்தவர்களை யாரும் ஏமாற்ற முடியாது.

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி அய்யா. உண்மையை உலகிற்கு நம்மால் முடிந்த வரை உணர்த்தும் நோக்கத்திற்காகவே எழுதினேன். இப்படத்தைப் பற்றி அதிகம் பேச வேண்டியதில்லை என்றே எனக்கும் இப்பொழுது தோன்றுகிறது. நன்றி அய்யா.

      Delete
  6. hello brother can i post this issue in my blog, with your permission.

    ReplyDelete
  7. hello brother can i post this issue in my blog, with your permission.

    ReplyDelete
  8. நண்பரின் வருகைக்கு நன்றி. தாராளமாய் பகிர்ந்து கொள்ளுங்கள்.

    ReplyDelete