அரும்புகள் மலரட்டும்: வெட்கம் விட்டுக் கேட்கிறேன்

Friday, 11 October 2013

வெட்கம் விட்டுக் கேட்கிறேன்


என் துக்கத்தையும் தூக்கத்தையும் பல
நேரம் பகிர்ந்து கொண்டாய்
நித்திரையில் கனவு காண உன்
மடியில் இடம் கொடுத்தாய்

என் மூச்சுக் காற்றின் மூர்க்கத்தையும்
முழுதாய் ஏற்றுக் கொண்டாய்
நான் முகம் பதித்தே மூப்படைந்தாய்
உன் பஞ்சு மேனியை
எனக்கே தியாகம் செய்தாய்
என் யாமத்து உளரல்களை நீ
யாசித்து ஏற்றுக் கொண்டாய்
என் இதழோரம் வழிந்த எச்சிலை
பலநேரம் துடைத்து விட்டாய்
ஆதவன் ஆர்ப்பரித்தும் நீ அசராமல்
எனக்கோர் சுகம் தந்தாய்
வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன்
என்னவள் வந்த பின்னும்
என்னருகில் நீ வேண்டும் என்
இனிய தலையணையே!
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

34 comments:

  1. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/10/blog-post_11.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா, தங்களிம் மூலமே தகவல் தெரிந்து கொண்டேன். மிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றீங்க அய்யா.

      Delete
  2. ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா. தங்களுக்கு நிறைய நன்றிகள் சொல்ல கடமைப் பட்டிருக்கிறேன். தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  3. வணக்கம்! இன்றைய வலைச்சர அறிமுகத்தில் உங்களை அறிமுகம் செய்துள்ளார்கள் சகோ!

    எழும்புங்கள் தூக்கம் போதும்.,,:) வருவாள் இவளும் உங்களுடன் எப்பவும் உங்கள் விருப்பப்படியே...
    அட!... நான் தலையணையைச் சொன்னேன்...:)))

    அருமை! நல்ல சிந்தனை!
    மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. ஒவ்வோர் பதிவுக்கும் தவறாமல் வருகை தந்து கருத்திடும் சகோதரிக்கு அன்பான நன்றிகள். வாழ்த்துக்கு நன்றீங்க சகோதரி.

      Delete
  4. அடேங்கப்பா... தலையணைக்குள்ள இத்தனை க(வி)தையை வச்சிருக்கிங்களோ ... சகோவிற்கு பொண்ணு பார்த்தாச்சுன்னு நினைக்கிறேன்... உங்களவங்களுக்கு வாழ்த்துக்கள்!
    முதல் கவிதை நன்று தொடருங்க.. நிறைய எழுதுங்க !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி, ஒரு பரிசோதனை முயற்சி தான் இந்த கவிதை. இனி வரும் காலங்களில் பாருங்க. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றீங்க சகோதரி.

      Delete
  5. //வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன்
    என்னவள் வந்த பின்னும்
    என்னருகில் நீ வேண்டும் என்
    இனிய தலையணையே! //

    அருமை அருமை ... அருமையான வேண்டுதல்.

    என்னவள் வந்தபின்தான் ஏராளமான இனிய தலையணிகள் தேவைப்படக்கூடும். ;))))))

    பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்கய்யா! வணக்கமய்யா! //என்னவள் வந்தபின்தான் ஏராளமான இனிய தலையணிகள் தேவைப்படக்கூடும்// ம்ம் தலையணையோட பொயிட்டா பரவாயில்லேயே அய்யா. பூரிக்கட்டை, உருட்டுக்கட்டைனு இறங்கிட்டா தான் சமாளிக்கிறது கடினம். பார்த்துக்கலாம் ஒரு கை. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா.

      Delete
  6. தலையணைக்கு ஒரு கவிதை!
    ரசிக்கும்படி இருக்கிறது. பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சியளிக்கிறது அம்மா. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க அம்மா.

      Delete
  7. அட தலையணைக்கும் கவியா? அழகாய் உள்ளது! உஷாவின் கருத்துரை பார்த்தேன், நிச்சயமாகிவிட்டதோ? வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியெல்லாம் இல்லைங்க அய்யா. நடக்கும் போது நானே தெரிவிக்கிறேன். இருந்தாலும் வாழ்த்துக்கு நன்றி. வருகைக்கும் ரசித்து கருத்திட்டமைக்கும் நன்றிங்க அய்யா.

      Delete
  8. வணக்கம்
    வெட்கத்தை விட்டுக் கேட்கிறேன்
    என்னவள் வந்த பின்னும்
    என்னருகில் நீ வேண்டும் என்
    இனிய தலையணையே!

    கவிதையின் வரிகள் அருமை வாழ்த்துக்கள்..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க சகோதரரே. தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  9. ''..என்னவள் வந்த பின்னும்
    என்னருகில் நீ வேண்டும் ...'''
    இது என்னடா இந்த ஆள் சரியில்லாத ஆள் போல உள்ளதே என்று நினைத்து வாசித்தேன்!
    அட! தலையணையா!....
    அசத்தல் தான்.!!!
    இனிய வாழ்த்து.
    வேதா. இலங்காதிலகம்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி தங்கள் வருகை நல்வரவாகட்டும். கடல் கடந்து வருகை தந்து கருத்துரைக்கும் வாழ்த்துத்தும் நன்றீங்க.

      Delete
  10. வலைச்சரத்தில் ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லியமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க. நேற்று எங்கள் பகுதியில் சரியாக மின்சாரம் இல்லை. அதனால் வர இயலவில்லை.

    என்னவள் வந்த பின்னும்....
    நான் உங்களை வயதில் முதிர்ந்தவர் என நினைத்தேன். மன்னிக்கவும்.
    நேரம் இருக்கும் போது தென்றலுக்கும் வருகை தரவும்.

    http://veesuthendral.blogspot.in/2013/10/blog-post_9.html

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் வாங்க சகோதரி. வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களின் தளத்தை வெகுநாளாய் தேடியிருக்கிறேன். இன்று தங்கள் மூலம் அறிந்ததில் அளவற்ற மகிழ்ச்சி. கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி. வலைச்சரத்தில் அறிமுகம் செய்ததற்கு சிறப்பு நன்றிகள்.

      Delete
  11. மிக்க மகிழ்ச்சிங்க.நன்றியும்.

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றீங்க சகோதரி. தங்களின் நட்பு கிடைத்ததில் பெருமகிழ்ச்சி.

      Delete
  12. ஆஹா !நான் தாயை பற்றி சொல்லவருகிறீர்கள் என்றல்லவா நினைத்தேன் .அருமை !அருமை!

    ReplyDelete
    Replies
    1. சும்மா கிறுக்கல் அவ்ளோ தான் சகோதரி. இதைக் கவிதைனு எல்லாம் சொல்ல மாட்டேன். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க சகோதரி.

      Delete
  13. Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க சகோதரி. .தங்கள் வருகை மகிழ்வளிக்கிறது தொடரட்டும் தங்கள் வருகை.

      Delete
  14. கடைசியில் ஒரு ட்விஸ்ட் வைத்துக் கதையை முடிப்பது புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளர் ஓகென்றி கதைபாணி என்று சொல்வார்கள். சரியோ தவறோ சொல்வதைச் சுவாரசியமாகச் சொல்வதில் நம் துக்ளக் சோ பெயர் பெற்றவர். அவர் ஒரு முறை குமுதததில் எழுதிய கட்டுரையை முடிக்கும்போது, எனக்கு எப்பவுமே ஜம்முன்னு என் கட்டுரையை முடிக்கணும்னு ரொம்பநாளா ஆசை அது இப்பத்தான் நிறைவேறுது. இந்தக் கட்டுரை இத்துடன் முடிகிறது ஜம். என்று முடித்திருப்பார். அது சுவாரசியமான முடிவு ரொம்பநாள் நினைவில் இருக்கும். உங்கள் தலையணையும் இந்தவகைதான். படிக்க சுவாரசியமாக எழுதக் கற்றுக் கொண்டதற்கு வாழ்த்துகள். இதனாலெல்லாம் இது கவிதை என்று ஏமாந்துவிடாமல் தொடர்ந்து எழுதிக் கவிதையைக் கண்டு தொடர்ந்து எழுத வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யாவிற்கு வணக்கம், நீங்க வந்து கருத்திட்ட அப்புறம் தான் ஒரு மன நிறைவு கிடைக்கிறது. தங்கள் வாழ்த்து மகிழ்வளிக்கிறது. கவிதை என்பது எப்படி இருக்க வேண்டுமென்பதை அறிவேன். ஆதலால் இதை கிறுக்கல் என்றே சொல்வேன். தொடர்ந்து முயற்சித்து பா புனைகிறேன் அய்யா. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றீங்க அய்யா.

      Delete
  15. பார்த்து சகோ !
    நீங்கள் தலையணையே கதி என்று இருந்தால்
    உங்களவள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்.
    கன்னி முயற்சியின் கருப்பொருள் புதிது.
    மேலும் விரைவில் பல பாக்கள் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சகோதரி வருகைக்கு நன்றி. // நீங்கள் தலையணையே கதி என்று இருந்தால்
      உங்களவள் கோபித்துக் கொள்ளப் போகிறார்கள்// கவிதைங்கிற பெயர்ல நான் எழுதிய வரிகள் அனைத்தும் கற்பனையே. வரப்போகும் என்னவள் தவறாக எடுத்தக் கொள்ள மாட்டார் என்ற நம்பிக்கை உண்டு. பார்க்கலாம். சகோதரியின் கருத்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றி.

      Delete
  16. நானும் கடைசியில் ஏமாந்துட்டேன்.தலையணைக்கு ஒருகவி மிக நன்றாக
    இருக்கு சகோ. முதல் கவியா?. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருக சகோதரி. வணக்கம். முதல் கவிதை தான் அதற்கும் எனக்கும் தூரம் என்பதால் விலகியே இருந்தேன். வித்தியாசமா எழுதுவோம்னு முயற்சி செய்தேன். சகோதரியின் வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி..

      Delete
  17. #என்னவள் வந்த பின்னும்
    என்னருகில் நீ வேண்டும் என்
    இனிய தலையணையே! #

    இப்போ தேவைப் படும் ,அப்போ தேவைப் படாது பாண்டியன் !

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா
      தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. தேவை என்பது காலத்திற்கேற்ப மாறிக் கொண்டே தானே இருக்கும். பார்க்கலாம் அய்யா. கருத்துரைக்கும் வருகைக்கும் நன்றீங்க அய்யா.

      Delete