அரும்புகள் மலரட்டும்: வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில்-உவமைகள்

Sunday, 13 October 2013

வைரமுத்துவின் தண்ணீர் தேசத்தில்-உவமைகள்


கவிஞர் வைரமுத்து அவர்கள் எழுதிய தண்ணீர் தேசம் எனும் நாவல் 1996ல் தமிழ் வார இதழ் ஆனந்த விகடனில் 24 தொகுதிகளாக வெளிவந்தது. கடல், தண்ணீர்  மற்றும் உலகம் பற்றிய பல அறிவியல் உண்மைகளை எளிய நடையில் கூறியிருப்பார்
இக்கதையில்:கதாநாயகன் கலைவண்ணன், நாயகி தமிழ்ரோஜா. கலைவண்ணன் ஒரு புரட்சிகரமான பத்திரிகை நிருபராகவும், தமிழ்ரோஜா ஒரு பணக்கார குடும்பத்து பெண்ணாகவும், இவர்களின் காதலையும், ஊடலையும் சொல்லும்போது கடல், தண்ணீர் பற்றிய அறிவியல் விவரங்களும் எடுத்துரைக்கப் பட்டுள்ளன. மீனவர்கள் வாழ்வியல் பற்றியும் பல விவரங்கள் தொகுக்கப்பட்டுள்ளன.
நண்பர்களே! இந்நாவலில் இடம் பெறும் உவமைகள் ஒவ்வொன்றும் என்னைக் கவர்ந்தன. உங்களையும் கவரும் எனும் நம்பிக்கையில் எந்தவித அலங்காரச் சொற்கள் இன்றி மூன்று பகுதிகளாக பதிவிட தீர்மானித்துள்ளேன்.

தண்ணீர் தேசம்  நாவலுக்கு உயிரூட்டியிருக்கும் உவமைகள் இதோ உங்கள் பார்வைக்கு 

                                                         பகுதி 1
மருத்துவமனையில் இருக்கும் தமிழ்ரோஜாவை அப்பா அகத்தியர் தொட்டு பார்க்கும் காட்சிக்கு:
பாரிஜாதப் பூவில்
பட்டாம்பூச்சி
உட்காருவதுபோல் படுக்கையில்
பைய அமர்ந்து அன்புமகள்
நெற்றிதொட்டார் அகத்தியர்.
தன் காதலியின் நிலையை எண்ணிக் கொண்டு பூந்தொட்டியின் இலைகளை கலைவண்ணன் பார்க்கும் காட்சிக்கு
தன் பக்கத்திலிருந்த
பூந்தொட்டியில் தன்
இதயம்போல் துடிதுடிக்கும்
இலைகளுக்குத் தாவினான்.
பணத்திற்கு:
பணம் ஒரு விசித்திரமான
மாயமான். அது தன்னைத்
துரத்துபவனுக்குக்
குட்டி போட்டுவிட்டு
ஓடிக்கொண்டேயிருக்கிறது.
குட்டிகளில் திருப்தி அடையாத
மனிதன் தாய்மானைப் பிடிக்கும்
வேட்டையில் தவிக்கத் தவிக்க
ஓடிச் செத்துப் போகிறான்.
 காதல் கடிதத்திற்கு:
நிலாவில் ரத்தம் கசிவதுபோல்
மீசையோடு பிறந்த
குழந்தைபோல்-
கவனம் ஈர்ப்பவை.
ஆனால் எதார்த்தம் மீறியவை.
பயன்படுத்தாத  மூளைக்கு:
ஒவ்வொரு மனிதனும் தனது
சொந்த
மூளையைக்கூட அடுத்தவன்
மனைவிமாதிரி
பாவிப்பதற்குப்
பயப்படுகிறான்.
காதலியின் அச்சத்திற்கு:
 நான் என் புலன்கள் திறந்து
பிரபஞ்ச எல்லைவரை பறக்கப்
பிரியப்படுகிறேன்.
நீ மழையில் நனைந்த
கிளிக்குஞ்சாய்
மறுகிநின்றால் எப்படி?
காதலர்களின் கூடலுக்கு:
 இரண்டு ஒட்டுமாஞ்செடிகளைக்
கட்டுவதுபோல்
அவளைத் தன் மார்போடு
பதித்து முத்தப்பசையிட்டு
ஒட்டிக் கொண்டான்.
காதலியிடம் கொஞ்சு தமிழில் பேச்சிற்கு:
புல்லாங்குழலின் காதில்
உதடு ஊதுவதைப் போல
அவன் அவள் காதில்
குறைந்த குரலில்
குனிந்து பேசினான்
 இருவருக்குமுண்டான காதலுக்கு:
சூரிய வெப்பத்தை உடனே
உள்வாங்கி
உடனே வெளிவிடுகிறது பூமி.
உடனே கொதித்து
உடனே குளிர்ந்துவிடும்
என்னைப் போல.
சூரிய வெப்பத்தை
மெல்லமெல்ல உள்வாங்கி
மெல்லமெல்ல வெளிவிடுகிறது
கடல் - அணு
அணுவாக அன்புவயப்பட்டு
உயிர்நிறையக்
காதலிக்கும் உன்னைப்
போல.
காதலியை கடலுக்குள் அழைக்கும் போது அவள் ஓடி மறைவதற்கு:
அவள் சுடுமணலில் விழுந்த ஒற்றை
மழைத்துளியாய் ஓடி மறையப்பார்த்தாள்.
காதலரின் மடியில் காதலி:
தாய்க்குரங்கின் பிடியிலிருக்கும்
குட்டியைப்போல்
நீ என் மடியில்
பத்திரமாயிருக்கிறாய்.
காதலர்களின் மொழியான புன்னகைக்கு:
புலவர்க்கு மட்டுமே புரியும்
சில தமிழ்ச்சொற்கள் மாதிரி
அவனுக்கு மட்டுமே
புரியும்படி ஒரு புன்னகை
புரிந்தாள்.


மீனுக்கும் பணத்திற்கும்:
வலையில்
மாட்டிய மீனும்
அரசியல்வாதியிடம் மாட்டிய
பணமும் ஒன்றுதான். சிக்கினால்
மீளாது.
படகிலிருந்து காதலி கடலைப் பார்ப்பதற்கு:
தாயின் முதுகைக் கட்டிக்
கொண்டு முதன்முதலாய்
யானைபார்க்கும் ஒரு
குழந்தையைப் போல்
கலைவண்ணன் முதுகைக்
கவசமாய்க் கொண்டு அவள்
கடல்பார்த்தாள்.
வெறுமைக்கு :
அரசனை யாசித்து
வெள்ளைவேட்டியோடு போன
புலவன் அழுக்குவேட்டியோடு
திரும்பி வந்ததைப்போல
மீன்பிடிக்கப் போன வலை
பாசி பிடித்தல்லவா
வந்திருக்கிறது.
வலையில் சிக்கிய சிறு மீன்களுக்கு :
ஏழைக்கிழவியின் சுருக்குப்பையில்
மூலையில் அங்கங்கே முடங்கிக்
கிடக்கும் சில்லறைகளைப்போல
வலையின் ஆழத்தில் சில
சில்லறை மீன்கள்
சேர்ந்திருந்தன.

படகு பயணத்தின் துன்பத்திற்கு:
தீக்குச்சி கொளுத்தி விளையாடும்
குழந்தைகள் முங்கில் காட்டுக்குள் சிக்கிக்
கொண்டது மாதிரி இந்த விளையாட்டுப்
பயணம் வினையாகவல்லவா முடிந்துவிட்டது.
இரவின் கடல் அலைக்கு:
நீலவானத்தில் ஜெட்விமானம் விட்டுப்போன
புகை திட்டுத்திட்டாய்த் தெரிவது மாதிரி,
இருள் கவியும் கடல்மீது அங்கங்கே
வெள்ளலைகள்...
துன்பத்திலும் கற்றலுக்கு:
தங்கத்தின் துருவல்களைச் சேகரித்தே ஒரு
நகை செய்து விடுவதுபோல், கஷடங்களைச்
சேகரித்தே நாம் கலைசெய்யக் கற்றுக்கொள்ள
வேண்டும்.
தமிழ்ரோஜாவின் கண்ணசைவுக்கு:
இரவில் அணைந்தணைந்து எரிந்தவிளக்குகளைப் போலவே அவள்
விழிகளை மூடிமூடித் திறந்தாள். 
                                               தொடரும் நண்பர்களே



கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

28 comments:

  1. ரசிக்க வைக்கும் உவமைகள்... தொகுத்து வழங்கியமைக்கு பாராட்டுக்கள்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா, முதலில் வந்து கருத்திடும் தங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களது பாராட்டு மற்றும் கருத்து மகிழ்வைத் தருகிறது. நன்றீங்க அய்யா.

      Delete
  2. அருமையான உவமைகள்..தொகுத்துப் பகிர்ந்தமைக்கு நன்றி பாண்டியன்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  3. அருமையான தொகுப்பு சகோ!

    எத்தனை நுணுக்கமாய் ரசிக்கின்றீர்கள்.. அத்தனையும் சிறப்பு!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அன்பு சகோதரிக்கு வணக்கம்,
      கடல் தாண்டி இருந்தாலும் ஒவ்வொரு பதிவுக்கும் ஓடோடி வந்து கருத்திடும் தங்களது சுறுசுறுப்புக்கு ஒரு சிறப்பு நன்றி. தங்களது நட்பு கிடைத்ததுக்கும், அன்பிற்கும் இறைவனுக்கு நன்றி.

      Delete
  4. ஆனந்தவிகடனில் தொடராக வந்தபோது படித்ததை - மீண்டும் நினைவு படுத்தி விட்டீர்கள். நன்றி.. பாண்டியன்!..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா, முதல் வருகைக்கும் முத்த்தான கருத்துக்கும் நன்றி. தொடர்ந்து இணைந்திருப்போம்.

      Delete
  5. ரசித்து படித்திருக்கிறீர்கள். நல்ல எடுத்துக் காட்டுகளை கூறி இருக்கிறார்கள். வைரமுத்துவின் கவி வள்ளம புலப்படும் கவிதைகள். அடுத்த் பகுதியைய்ம் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அய்யாவிற்கு அன்பு வணக்கங்கள். தங்களது வருகைக்கு மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி, வைரமுத்துவின் வைரவரிகள் கொண்ட அடுத்த பாகம் விரைவில். நன்றீங்க அய்யா.

      Delete
  6. அருமையான வேலை சகோ...

    ஆகா சகோ அருமை... வடிமைப்பு திண்டுக்கல் அய்யா என்று பார்த்தவுடன் தெரிகிறது... ரொம்ப மகிழ்ச்சி ....

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா! தங்களது வருகையில் உள்ளம் உவகை கொள்கிறது. ஆமாம் அண்ணா திண்டுக்கல் தனபாலன் அய்யா அவர்களின் கைவண்ணமே. அவருக்கு எனது நன்றிகள். வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றீங்க சகோததரே.

      Delete
  7. சுவையானத் தொகுப்பு.
    ரசித்து மகிழ்ந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரிக்கு வணக்கம், தங்களது வருகைக்கும் ரசிப்புக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. சிறப்பான உவமைகள்! ரசித்து தொகுத்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் அன்பின் சகோததரருக்கு அன்பான நன்றிகள்.

      Delete
  9. தொகுப்பு அருமை. பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. அய்யாவிற்கு வணக்கம், கருத்திட்டு மகிழ்ந்த தங்களது அன்பு உள்ளத்திற்கு நன்றிகள்.

      Delete
  10. ரசிக்க முடிந்த தொகுப்பை தந்தமைக்கு நன்றிங்க பாண்டியன்

    ReplyDelete
    Replies
    1. ரசித்து மகிழ்ந்திட்ட அய்யாவிற்கு அன்பு வணக்கத்துடன் கூடிய நன்றிகள்.

      Delete


  11. இளவலுன் வலையை தேடி
    இன்றுநான் வந்த வேளை
    பொங்கிடும் கடல்போல் புலமை
    பொய்கையின் மலராய் கவிகள்
    தந்திடும் கறுப்பு தங்கம்
    சிந்தையில் தெறித்த உவமை
    கொண்டு நீ கொட்டும் பதிவில்
    கொள்ளை இன்பம் கண்டேனடா...!

    வைரமவன் வரிகளிலே
    வாய்பிளக்கும் உவமைகளை
    வகுத்திட்ட திறமைக்கு
    வார்த்தையில்லை சகோதரா ..!

    அத்தனையும் அருமை நான் வைரமுத்துவின் கவிதைகள் அதிகம் படிக்கவில்லை முயற்ச்சிக்கின்றேன் ..!

    வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

    ReplyDelete
    Replies
    1. கருத்துரையில் கவிமழை பெய்த அய்யாவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள். தங்களது கவிப்பயணத்திற்கு இந்த அன்பு சகோதரனின் வாழ்த்துக்கள்.

      Delete
  12. தண்ணீர் தேசத்தில் ரசித்தவைகளை அழகாக தொகுத்து இருக்கிங்க சகோ.. கவிதையின் ஒவ்வொரு விஷயங்களும் கண்முன்னே காட்சிகளாக விரியும் படி செய்துவிடுவது வைரமுத்துவின் பாணி.. தண்ணீர் தேசமும், மூன்றாம் உலகப்போரும் ஒவ்வொரு வரிகளும் மனதுக்குள் சப்பணமிட்டு உட்கார்ந்திருக்கிறது...!

    ReplyDelete
    Replies
    1. அன்பின் சகோதரிக்கு
      வணக்கங்கள். தங்களது நட்பு கிடைத்தது உண்மையில் பெருமையாக கருதுகிறேன். பதிவிடும் போதேல்லாம் தவறாமல் வருகை தந்து இந்த சகோதரனின் ஏற்றத்திற்கு உதவிடும் தங்களுக்கு இதயப்பூர்வமான நன்றிகள்.

      Delete
  13. ரசனையான பதிவு சார்.தீவிர வாசிப்பின் எதிரொலி போல் இருக்கிறது .ஒரேஒரு ட்ரம் தண்ணீர் மட்டும் இருக்க ,அதில் ரோஜா குளித்துவிட்டு வரும் காட்சியை இரண்டாம் பகுதியில் எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகைக்கு கருத்துக்கும் நன்றி. ஆங்கில ஆசிரியையாக இருக்கும் தங்களின் தமிழ் மீதானப் பற்று வியக்க வைக்கிறது. இரண்டாம் பகுதி விரைவில். சகோதரிக்கு நன்றி.

      Delete
  14. வைரமுத்துவின் கவிதை தொகுப்பு அருமை.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அம்மா
      தங்களின் வருகை மகிழ்வளிக்கிறது. கருத்துக்கு நன்றீங்க அம்மா.

      Delete