வீட்டின் தாழ்வாரத்தில் தலையை முட்டிக்
கொண்ட நம் வீட்டு விருந்தினர்
வலித்தாலும் காட்டாது வழியச் சிரிக்கும்
நமட்டு சிரிப்பைப் போல்
தலையில் தீ வைத்ததற்காக வருந்தாது
வாஞ்சையோடு ஏற்றுக் கொண்டு
சிரித்து குலுங்கும் மத்தாப்பு..
தாயிடம் அடி வாங்கினாலும் அவளையே
சுற்றிச் சுற்றி வந்து மடியமரும்
சிறு குழந்தை போல்
சூடு போட்டாலும் சுதந்திரமாய்
தரையில் தவழ்ந்து சுற்றி
விளையாடும் சங்குசக்கரங்கள்..
அப்பாவின் தண்டித்தலுக்கு கோபித்துக் கொண்டு
செல்லும் மகன் நண்பர்களிடம் நடந்ததை
சொல்லி மகிழ்வதைப் போல்
அடி வயிற்றில் பற்ற வைத்ததற்கு
அண்டம் வரை கோபித்துச் சென்று
நடந்ததை எண்ணி அந்தரசாகசம் செய்து
குலுங்க சிரிக்கும் வானவேடிக்கைகள்..
இவர்களே நாம் விரும்பும் விருந்தினர்களாய்
இனியநாளில் அழைத்து விளையாடி மகிழ்வோம்..
சின்னதாய் சுட்டிக் காட்டியதற்கே தனது
முழுப்பலத்தைக் காட்டி அகிலம் அஞ்ச
கத்தி அதிரடி காட்டும் மனிதர்களைப்போல்
டெசிபல் அளவை பலமடங்கு உயர்த்தி
செவிகளுக்கு தற்காலிக மற்றும் நிரந்திர
மலடு தரும் அதிரடி காட்டும்
ஒலிமாசை ஈனும் பட்டாசுகளைத் தவிர்த்து
துன்பம் எனும் இருள் அகற்றி
மகிழ்ச்சி எனும் ஓளியைக் காட்டும்
மத்தாப்புகளோடு விளையாடி நாமும் மகிழ்வோம்..
---------------
நண்பர்கள் அனைவருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த இனிய தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள். பாதுகாப்பாகத் தீப ஒளித் திருநாளைக் கொண்டாடி மகிழ்வோம்
அருமை...
ReplyDeleteஇனிய தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
வணக்கம் சகோதரரே.
Deleteவருக தங்கள் வாழ்த்துக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இந்த உண்மையான தீபாவளியை ரூபனின் கவிதைப் போட்டிக்கு அனுப்பி விட்டீர்களா ,பாண்டியன் ?
ReplyDeleteத.ம 3
வருக வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துக்கும் அன்பான நன்றிகள்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
வணக்கம்
ReplyDeleteசகோதரன்
கவிதையின் வரிகள் நன்று...வாழ்த்துக்கள் சகோதரன்....
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரருக்கு வணக்கம்,
Deleteஎங்கள் சொந்தம் அன்னிய தேசத்தில் பணி நிமிர்த்தமாய். இருப்பினும் விழாவுக்காக போட்டி வைத்த தங்கள் செயலுக்கு பாராட்டுக்கள். வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துக்கும் நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ரசித்த்து கொண்டே பிளஸ் +1 மொய் வைத்தேன்;
ReplyDeleteமறு மொய் எனக்கு வைக்கவேண்டும் என்று உங்களுக்கு சொல்லவும் வேண்டுமா என்ன?
வணக்கம் சகோதரரே.
Deleteமொய் என்று சொன்ன பிறகு திருப்பி தராமலா? கண்டிப்பாக திருப்பி அளிக்கப்படும். தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்...
வைரமுத்துவின் உவமைகளைப் போலவே அத்தனையும் அருமை. அவருடைய தண்ணீர் தேசம் உங்களில் ஏற்படுத்திய தாக்கத்தை உணர் முடிகின்றது. இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் சகோ..
Deleteகண்டிப்பாக தாக்கம் இருக்கத்தானே செய்யும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பு நன்றிகள்..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
உவமைகள் அனைத்தும் அருமை! பட்டாசு தவிர்த்து ஒளியேற்றிக் கொண்டாடும் இனிய தீபாவளி வழ்த்துக்கள்!
ReplyDeleteத.ம.5
சகோதரியின் வருகை கண்டு மகிழ்ச்சி. வருகை தந்து கருத்துரை வழங்கியமைக்கு நன்றிகள்..
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ஆஹா...........அற்புதம். தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
தித்திக்கும் தீபாவளிக் கவிதை! எனது உளங் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅய்யாவின் வருகை கண்டு ஆனந்தமாய் உள்ளது. தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்.
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
//அடி வயிற்றில் பற்ற வைத்ததற்கு
ReplyDeleteஅண்டம் வரை கோபித்துச் சென்று
நடந்ததை எண்ணி அந்தரசாகசம் செய்து
குலுங்க சிரிக்கும் வானவேடிக்கைகள்..// - கவிதை உங்கள் வசமாகிவிட்டது ....சகோ புதுசா எழுத தொடங்கியது மாதிரியே இல்லை... நல்லா எழுதறிங்க...!
உடன்பிறவா சகோதரிக்கு.
Deleteதங்கள் வருகையும் கருத்தும் என்னை மேலும் மேலும் உற்சாகப்படுத்துகிறது. கவிதை புனைவதில் வல்லவர் நீங்கள். தங்களிடமிருந்து நல்ல கருத்துரை பெற்றிருப்பது மகிழ்வளிக்கிறது.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இனிக்கும் சிந்தனைகள் !
ReplyDeleteமத்தாப்புகளோடு மட்டும் விளையாடி மகிழ
என் இனிய தீபாவளி வாழ்த்துக்கள் !
சகோதரியின் தொடர் வருகைக்கும் ரசிக்கும் குணத்திற்கும் அன்பான நன்றிகள். வாழ்த்துக்கும் கருத்துக்கும் அன்பு நன்றிகள்.
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
பொதுவுடமை நலம் மனதில்
ReplyDeleteபொங்கிவந்து ஆர்ப்பரிக்க
உவமைகளுடன் ஒருமித்து
ஒப்பற்ற ஒரு கவிதை!
கடமை இதுவென்று
காட்டிய நல்லறிவுரை!
மடமைப் பழமைகளை
மாய்த்திட மகிழ்வு மேலே!
உங்கள் கற்பனையும் கவிதையும் அருமை சகோ!
மிகவே ரசித்தேன்!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
தித்திக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
த ம.7
சகோதரிக்கு வணக்கம்.
Deleteஜெர்மனியில் தீபாவளி உண்டா சகோதரி! கருத்துரையைக் கவியாய் தந்து சிறப்பித்தமைக்கு எனது அன்பான நன்றிகள். தங்கள் ரசனைக் குணத்திற்கும் கருத்துக்கும் எனது சிறப்பு நன்றிகள்..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
வாழ்வின் சம்பவங்களை
ReplyDeleteவெடிகளுடனும் மத்தாப்பூக்களுடனும்
ஒப்பிட்டு புனையப்பட்ட கவிதை
மிகவும் நன்று நண்பரே....
பரவட்டும் புத்தொளி
சுடர்விரித்த ஒளிச்சுடரால் ...
நன்மை விளங்கட்டும்
தீயன ஒழியட்டும்...
நிறை மங்களம் பரவட்டும்...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வணக்கம் வருக சகோதரரே.
Deleteகருத்துரையாய் கவியாய் வடித்த தங்களுக்கு அன்பான நன்றிகள்.
கவியில் கைதேர்ந்த கவிஞரிடமிருந்து இப்படியொரு கருத்து பெற்றது மகிழ்ச்சியாய் உள்ளது..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
பட்டாசு பற்றிய விவரிப்புக் கரு மிகச் சிறப்பு!. இது தான் கவிஞன்!
ReplyDeleteஇனிய தீபாவளி நல் வாழ்த்து!
Vetha.Elangathilakam.
வணக்கம் சகோதரி.
Delete//இது தான் கவிஞன்!// என்னையா சொல்றீங்க சகோ! இந்த வார்த்தைக்காகவே தங்களுக்கு சிறப்பான நன்றிகளும் வாழ்த்துக்களும்..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
அழகு,
ReplyDeleteமிக அழகாக வாழ்வியலை மத்தாப்புக்களுடன் பொருத்திய விதம் அருமை, எனது வணக்கங்களும் பாராட்டுக்களும்
வணக்கம் சகோதரரே..
Deleteதங்களின் முதல் வருகையும் கருத்துரையும் மகிழ்வாய் மனதுக்குள் மத்தாப்பு பூக்கச் செய்கிறது.. ரொம்ப நன்றீங்க. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம்.
ஒளி, ஒலி மாசு தவிர்க்க சொல்லும் தீபாவளி கவிதை சிறப்பு! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteவருகை தந்து தங்கள் கருத்தால் எனது கிறுக்கல்களைச் சிறப்பித்தமைக்கு அன்பான நன்றிகள்..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ஒவ்வொரு பட்டாசையும் நம் நட்போடும் ,உறகளோடும் பொருத்திப்பார்த்த விதம் அட்டகாசம் சகோதரரே !நீங்கள் போட்டிக்கு அனுப்பலாம் அவ்வளவு அருமை.தங்களுக்கும் ,குடும்பத்தார்க்கும் என் இனிய தீபாவளி நல வாழ்த்ததுக்கள்
ReplyDeleteஅன்பு சகோதரிக்கு வணக்கம்.
Deleteதங்களின் வருகை கண்டு மகிழ்ச்சி. அழகான கருத்துரை மூலம் சிறப்பித்தமைக்கு நன்றி..
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
அடடா.... அருமை. அருமை.
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ.
சகோதரியின் முதல் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் கருத்தும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள். தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம்..
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ஆகா அருமை பாண்டியன்... வாழ்த்துக்கள் படிமங்கள் அருமை..
ReplyDeleteஅன்பு சகோவிற்கு வணக்கம்.
Deleteதங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றிகள்.. மணப்பாறை வந்தால் அவசியம் வீட்டிற்கு வரவும்.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இனிக்கும் தீபாவளி பற்றி இனிமையான கவிதை.
ReplyDeleteசப்தமின்றி பூத்துக்குலுங்கும் மத்தாப்பூ போன்று ஒளிர்கிறது.
பாராட்டுக்கள். இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்பு அய்யாவிற்கு வணக்கம். தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக்க மகிழ்ச்சி. கருத்து என்னை ஊக்குவிக்கிறது. பாராட்டுக்கும் நன்றி அய்யா..
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இனுக்கும் தீபாஅவளி நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteசகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள்.
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
நான் இனிப்பை விரும்பிச் சாப்பிடுவதில்லை (சக்கரை!) ஆனாலும் உங்கள் கவிதை இனிப்பை அளவோடு சுவைத்தேன்-- கவிதையின் உள்ளடக்கம் (முடிவில் மட்டுமல்ல... உள்ளீடாகவே தீபாவளி வாழ்த்து) எனக்கு உடன்பாடில்லை என்றாலும். தொடர்ந்து எழுதுங்கள் உஷாஅன்பரசு சொன்னமாதிரி புதிய கவிஞர் போலவே தெரியல.. நன்றி, வாழ்த்துகள்.
ReplyDeleteஅய்யாவிற்கு வணக்கம்.
Deleteதங்கள் வருகை கண்டும் கருத்தும் கண்டும் மனம் மகிழ்வில் துள்ளுகிறது (அப்புறம் துள்ளாத என்ன!). பெரியாரின் வழி வந்தவர்கள் தாங்கள் என்பதைக் கருத்துரை குறிப்பிட தவறவில்லை. எனது ”நாம் சிரிக்கும் நாளே திருநாள்” கவிதையைப் படித்து பாருங்கள் அய்யா தங்களுக்கு கண்டிப்பாக பிடிக்கும் என நம்புகிறேன். வருகை தந்து கருத்திட்டமைக்கும் வாழ்த்துக்கும் எனது அன்பான நன்றிகள் அய்யா.
கவிதை அருமை.
ReplyDeleteஉங்களுக்கும், உங்கள் குடும்பத்தினர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
அம்மாவிற்கு வணக்கம். தங்களின் வருகைக்கும் கருத்துரைக்கும் அன்பு நன்றிகள்.
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். இனிய பண்டங்களோடு.. பூறிஸ் கொழுத்திக் கொண்ட்டடுங்கோ:).
ReplyDeleteவாங்கோ வணக்கம் சகோதரி.
Deleteவருகை கண்டும் கருத்து கண்டும் ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது. நன்றி.
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ஒரு காட்சிக்கு பல்வேறு உவமைகள். அருமை பாண்டியன்.கவிதை நன்கு வருகிறது உங்களுக்கு.
ReplyDeleteதீபாவளி சமயத்தில் பொருத்தமான கவிதை. வாழ்த்துக்கள்
வணக்கம் அய்யா. தங்களிடமிருந்து இப்படியொரு கருத்துரையைக் காணும் போது உற்சாகமாகிறது மனம். தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.
Deleteதங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
என்ன தீபாவளியை கண்டதும் ஒரே குதூகலம் போல, ஒரே கவிதை பொங்கிப் பிரவாகிக்கிறதே. எத்தனை உவமைகள் வைரமுத்துவின் சாயல் தெறிக்கிறதே. அருமையாக வருகிறது உங்களுக்கு தொடர வாழ்த்துக்கள்....! ஆஹா நல்ல எழுத்தாளர் என்று பார்த்தால் கவிஞரும் கூடவா ரொம்ப சந்தோஷம்
ReplyDeleteஅன்புச் சகோதரனுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.......!
வருக வணக்கம் சகோதரி.
Deleteவழக்கம் போல் ஊக்கப்படுத்தும் உற்சாகமான வார்த்தைகள் தங்கள் கருத்துரையில் காணும் போது மகிழ்ச்சி பல மடங்கு மிகுகிறது. கவிதை எல்லாம் சோதனை முயற்சி தான் சகோதரி. நிறையக் கற்றுக் கொண்டு நிறைவானக் கவி படைக்கவே விருப்பம். விரைவில் நடக்கும்.
அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இதயம் கனிந்த தீபத் திருநாள் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக அய்யா வணக்கம்.
Deleteவருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி.அன்பு சகோதரருக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
//துன்பம் எனும் இருள் அகற்றி
ReplyDeleteமகிழ்ச்சி எனும் ஓளியைக் காட்டும்
மத்தாப்புகளோடு விளையாடி நாமும் மகிழ்வோம்.//
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அய்யாவிற்கு வணக்கம்.
Deleteதங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துக்கு நன்றி.
தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteவாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
மலர்ந்திருக்கும் கவிதை போல
ReplyDeleteமகிழ்வான நாட்கள் பொங்க
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய
தீபாவளி வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !
வணக்கம் சகோதரி. வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் நல்வரவுக்கு அன்பு நன்றிகள்..
Deleteவாழ்த்துக்கு மிக்க நன்றி.
அன்பு சகோதரிக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் எனது அன்பு கலந்த தித்திக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருக வணக்கம் அய்யா.
Deleteதங்களது வருகை கண்டு உண்மையில் உவகை கொள்கிறேன்.
கவியால் வாழ்த்திய கம்பன் கழக கவிஞருக்கும் எனது அன்பான நன்றிகள். தங்கள் தமிழ்ப்பணி சிறக்கட்டும். நன்றி..
வணக்கம் சகோ,அருமை .உறவுகளுடன் பிணைந்த வெடிகளும் மத்தாப்புகளும் .வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரி வருக..
Deleteவருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியும் சென்றுள்ள தங்களுக்கு எனது அன்பு நன்றிகள்.