அரும்புகள் மலரட்டும்: November 2013

Tuesday, 26 November 2013

அரசியல் கண்ணாடி


தொண்டனின் தியாகமுகம் மறைத்து
தலைவன் முகம் காட்டும்
அதிசயக் கண்ணாடி..

கொண்ட கொள்கையை மறந்து
அடிக்கடி பிம்பம் மாற்றும்
மாயக் கண்ணாடி ..

Thursday, 21 November 2013

கனிந்திடும் காதல்!


நம் விழிப்பார்வை
கொதிக்கும் எண்ணையில் விழுந்த
நீர்த்துளி போல் அல்லாமல்
நதியில் விழுந்தமழைத்துளியாய்
மவுனமாய் கலந்தது

என்று பிறந்தது
என்றுஅறியா
நம் காதல்
இரு மனங்களில்
மெல்லமலர்ந்து
மணம்வீசி மகிழ்ந்தது

Friday, 15 November 2013

விழித்தெழு மனிதா!


எட்டி உதைத்தற்கு விருட்டென்று
கிளம்புகிறது இருசக்கர வாகனம்
தன்னையறியாது சீண்டி விட்டதற்கு
சீற்றம் காட்டுகிறது அரவம்

சின்னதாய் தொட்டதற்கே பச்சைத்
தேகத்தை சுறுக்குகிறது தொட்டாற்சிணுங்கி
மட்டையால் அடி வாங்கியதற்கு
எல்லைதாண்டி ஓடுகிறது பந்து

சூடு போதுமென ஆர்பரித்து
விசிலடித்து அழைக்கிறது குக்கர்
காசுக்காக காடுகளை அழித்ததனால்
பொழிய மறுக்கிறது மேகம்

Monday, 11 November 2013

மரணம் என்பது ஒருமுறை தானா!


வாழ்க்கையில் நிச்சயக்கப்பட்ட இரு தருணங்கள் ஒன்று பிறப்பு. மற்றொன்று இறப்பு. எப்பொழுது பிறப்பு என்று நிகழ்கிறதோ அப்பொழுதே இறப்பு என்ற ஒன்று நிகழப் போவது உறுதியாகிறது.

பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் நமக்கு எவ்வளவு மரண போராட்டங்கள். எனது உயிர் எனது கடமைகளைச் செய்து முடிப்பதற்குள் போய்விடுமோ! ஏதோ ஒரு விதத்தில் காலன் நமது உயிரைப் பறித்து விடுவானோ! என்ற பயம் நமக்குள் வருவது இயல்பு தான்.

Saturday, 9 November 2013

எத்தனை எத்தனை முகங்கள் நமக்கு!

                       (பேசாமா நாமளும் இவங்கள போல இருந்திருக்கலாமோ)

காலையில் எழுந்தவுடன் அவசர அவசரமாக தங்கள் அலுவலகங்களுக்கு கிளம்பும் நம்ம முகத்தை யாரும் கவனித்ததுண்டா! கவனித்தவர்கள் நம்மில் மிகக் குறைவு தான். அப்போது நமது முகம் பரபரப்பாக அலுவலகம் நோக்கிய மனத்துடன் பின்னிப்பிணைந்து அதிரடி காட்டுகிறது.

அவசரமாக நகரும் கடிகாரத்தின் முற்களோடு போட்டியிட்டு வெற்றி பெற்றதாய் நினைத்து சரியான நேரத்திற்குள் அலுவலகம் வந்து அமர்ந்து இறுகிய முகத்திற்கு விடை கொடுத்து பெருமூச்சு விடும் போது ஒரு முகம்.

Friday, 8 November 2013

அன்றாட செயல்களில் வன்முறை தவிர்ப்போம்


நண்பர்களுக்கு வணக்கம்.

வன்முறை (Violence) என்பதை உலக சுகாதார அமைப்பு கீழ்வருமாறு வரையறை செய்துள்ளது: ஒரு நபர், குழு அல்லது சமூகத்திற்கெதிராக காயம்,மரணம், உளவியல் தீங்கு, வளர்ச்சியின்மை அல்லது இழப்பு ஆகியவற்றை ஏற்படுத்தும்படியாக அல்லது இவை நிகழ அதிகம் வாய்ப்புகளை உருவாக்கும்படியாக, உண்மையாகவோ அல்லது அச்சுறுத்தும்படியாகவோஉடல் வலிமை, அதிகாரத்தை வேண்டுமென்றே பயன்படுத்துவது வன்முறையாகும்

வன்முறை என்றவுடன் ஆயுதம் ஏந்தி அச்சுறுத்தும் செயல்களைப் பற்றி நான் கூற வரவில்லை. இந்த வன்முறை எண்ணம் உதயமாகும் சில நடவடிக்கைகளைத் தவிர்க்கலாம் என்றே உங்கள் அனைவரையும் அழைக்கிறேன். வாருங்கள்.

Monday, 4 November 2013

வேண்டுகோள்


இரு கண்களில் நுழைந்து
இருதயம் பார்த்தவளே- உன்
நேசத்தையும் பாசத்தையும் உன்னதமாய்
நெஞ்சோடு பகிர்ந்த என்னவளே..

அனுதினமும் அன்பைப் பரிமாறி
அன்னையின் நகலாய் வந்தவளே
உன் சந்திப்பு நிகழாவிட்டால் நான்
சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி..