அரும்புகள் மலரட்டும்: நன்றி சொல்லும் நேரமிது

Sunday 20 July 2014

நன்றி சொல்லும் நேரமிது

வலைச்சொந்தங்களுக்கு வணக்கம்
நான் மேல குறிப்பிட்டபடி வலை நண்பர்கள் சொந்தங்கள் என்பதை நிருபித்து இருக்கிறார்கள். என் திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்தியும் தொலைபேசியில் வாழ்த்தியும், மின்னஞ்சல் மூலம் வாழ்த்தியும்,கருத்துரையில் வாழ்த்தியும் என்னை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கிறார்கள். நேரமின்மை மற்றும் பணிச்சுமை காரணமாக பல நண்பர்களுக்கு நான் நேரில் சென்று அழைப்பு விடுக்க முடியவில்லை.
அழைப்பு விடுக்கிறேன் என்று தெரிவித்த முரளிதரன் ஐயா, கரந்தை ஜெயக்குமார் ஐயா, ஜம்புலிங்கம் ஐயா போன்றோர்கள் என்னை முதலில் மன்னிக்க வேண்டும். புதுக்கோட்டை நண்பர்களுக்கு மட்டும் நான் நேரில் சென்று திருமண அழைப்பிதழ் வைத்தேன். அவர்கள் அனைவரும் வருகை தந்தது எனக்கு அளவில்லா மகிழ்ச்சியைத் தந்தது. அத்தோடு எனக்கு இன்ப அதிர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா அவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் நேரில் வந்து வாழ்த்தியதை என்னும் போது என்னை நான் இன்னும் கிள்ளிப் பார்த்துக் கொண்டிருக்கிறேன் இது எல்லாம் உண்மை தானா! என்று. இதற்கு என் புதுக்கோட்டை நண்பர்கள் தான் காரணம்.

என் திருமணத்திற்கே வர வேண்டும் என்று ஆவலோடு இருந்த திரு.கவிஞர் முத்துநிலவன் ஐயா தவிர்க்க முடியாத காரணத்தால் வரவேற்பு நிகழ்ச்சிக்கு முன்னதாகவே வருகை தந்து சிறப்பித்தார். புதுக்கோட்டை மாவட்ட தமிழாசிரியர் கழக பொறுப்பாளர்கள் அனைவரும் வருகை தந்து வாழ்த்தி மகிழ்ந்தனர். வலைப்பதிவு தம்பதியினர் திரு. கஸ்தூரிரெங்கன் - திருமதி. மைதிலிகஸ்தூரிரெங்கன் அவர்கள் நேரில் வந்து வாழ்த்தியும் வருகை தந்த அனைவரையும் வரவேற்ற காட்சியும் என் கண்ணை விட்டு மறையவில்லை.

வலைச்சித்தர் சகோதரர் திரு.திண்டுக்கல் தனபாலன் அவர்கள் நேரில் வந்து வாழ்த்தி அன்பு பரிசும் வழங்கிய அன்புள்ளம் கண்டு நெகிழ்ந்து போகிறேன். நான் சற்றும் எதிர்பாராத வகையில் வருகை தந்து தன் மூன்றாம் கண்ணாம் கேமராவை எடுத்து படம் பிடித்த ஐயா தமிழ் இளங்கோ அவர்களைப் பார்க்கும் போது நான் சற்றுக் கண்ணை கசக்கித் தான் பார்த்துக் கொண்டேன். மனிதர் சிறுகுழந்தை போல சிரித்தார். ஆனால் எனக்கு தான் தர்மசங்கடமாக இருந்தது காரணம் அவர் எனக்கு அருகாமையில் இருந்தும் (திருச்சியில்) நேரில் சென்று நான் அழைக்கவில்லை. அவரிடம் இந்த பதிவின் மூலம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

திருமணத்திற்கு முதல் நாளே தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய இலங்கை யாழ்பாவாணர் (காசி ஜீவலிங்கம்) அவர்களுக்கும், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் சொக்கன் சுப்பிரமணியன் சகோ அவர்களுக்கும், மலேசியா ரூபன் சகோதரர் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பாக தனது வலைப்பக்கத்தில் பதிவாக வெளியிட்டு தான் வாழ்த்தியதோடு மட்டுமல்லாமல் அனைவரையும் வாழ்த்த வாய்ப்பு தந்த மதுரைத் தமிழன் சகோதரர் அவர்களுக்கும் என் உளப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பாஸ் நீங்க சொன்ன மாதிரி ஆடி மாதத்தில் பதிவிட முடிந்தது. காரணம் இணையம் வேலை செய்யவில்லை. பி.எஸ்.என்.எல் பணம் கட்ட மறந்து விட்டது தான் காரணம் மற்றபடி வேறொன்றுமில்லை நண்பர்களே! இனி வருகை தொடரும். வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் மீண்டும் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி..

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

34 comments:

 1. வாழ்த்தியவர்களுக்கு வாழ்த்துச் சொன்ன விதம் நன்று...
  வாழ்த்துக்கள் சகோதரா.

  ReplyDelete
  Replies
  1. மனசுல இருந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் சகோதரர்

   Delete
 2. அன்பின் பாண்டியன் ..
  இளந்தம்பதியர் தமக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்..
  எல்லா நன்மைகளுக்கும் இறைவன் துணை.. வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் குழந்தை மனதிலிருந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள் ஐயா

   Delete
 3. வாழ்க வளமுடன் பாண்டியன்.....உங்கள் குணத்தால் நீங்கள் இங்கு உயர்ந்து நிற்கிறீர்கள் அதுமட்டுமல்ல அனைவரின் ஆசிர்வதத்தையும் பெற்று கொண்டு இருக்கிறீர்கள் நன்றி

  ReplyDelete
  Replies
  1. தங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும், என் மீதான உங்கள் அபிராயத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள் சகோதரர்

   Delete
 4. வணக்கம்
  சகோதரன்.

  திருமணம் இனிதாக நிறைவேறியதை இட்டு மிக்க மகிழ்ச்சியாக உள்ளது... எம்மை கடலும் துாரம் பிரித்து வைத்துள்ளது எமது நட்பு எப்போதும் தொடரும்... சகோ... தங்களுடைய திருமண நிகழ்வுக்கு வரமுடிய வில்லை என்றாலும் என்னுடைய அண்ணா தனபாலனிடம் என்னுடைய அன்புபரிசுவழங்கி விட்டேன்... என்னுடைய ஞபகமாக.. வந்து கிடைத்திருக்கும் என்று நினைக்கிறேன்..... அந்த பரிசு அழியாமல் எப்போது தங்களின் பூசை அறையில் இருக்க கூடியதாக உள்ள பரிசு சகோ...நிகழ்வுக்கு வந்த உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி கூறிய விதம் கண்டு மகிழ்நதேன்.. வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பாக சகோதரர். தங்களின் அன்பளிப்பு மிகவும் மதிப்பு வாய்ந்தது. பூஜை அறைக்கு அன்றே சென்று விட்டது. நாங்கள் பார்த்து வியந்தோம். தங்கள் அன்பிற்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்

   Delete
 5. வணக்கம்
  த.ம 2வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 6. நன்றிகளுக்கு நன்றி.
  இல்லறம் நல்லறமாகத் தொடர
  வாழ்த்துகள்!
  தங்கள் வலைப்பணி தொடர
  வாழ்த்துகள்!

  ReplyDelete
  Replies
  1. அலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தியமைக்கு என் மனமார்ந்த நன்றிகள் ஐயா. நல்ல உள்ளங்களின் வாழ்த்துகளுக்கு மதிப்பு அதிகம்..

   Delete
 7. அழைப்பு தராவிட்டால் என்ன நண்பரே, எங்கள் இதயம் தங்களை என்றும் வாழ்த்திக் கொண்டே இருக்கும்.
  மணவாழ்வு மணக்க, சிறக்க மனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
  தம 3

  ReplyDelete
  Replies
  1. இது போதும் ஐயா உங்கள் பெருந்தன்மைக்கும் அன்பான வாழ்த்துக்கும் நன்றிகள் பல,,

   Delete
 8. அன்பான வாழ்த்துக்கள் சகோதரா...

  ReplyDelete
  Replies
  1. தங்களின் அன்பில் பல நேரம் செய்வதறியாது திகைத்து நின்றிருக்கிறேன் சகோதரர். தொடரட்டும் நம் நட்பு. நேரில் வந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்..

   Delete
 9. வருக, வருக புதுமாப்பிள்ளை அவர்களே வருக..
  தருக, தருக புதுப்பதிவுகளை இருவருமே தருக..

  ReplyDelete
  Replies
  1. வந்தோட்டோம்ல சகோ. புதுப்பதிவுகள் இருவருமே தர முயற்சிக்கிறோம். வாழ்த்துக்கு நன்றிகள் சகோ...

   Delete
 10. வாருங்கள் புது மாப்பிள்ளை அவர்களே! எங்கள் இனிய வணக்கம்! எங்களினிய நண்பர், நல்ல உள்ளம் படைத்த ஆசிரியர் தம்பி பாண்டியன் அவர்களுக்கு தங்கள் மண வாழ்க்கைச் சிறக்க எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்! நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம்.......ஏற்கனவே நீங்கள் இருவரும் பல்கலைக் கழகங்கள் தானே (ஆசிரியர்கள்)...எனவே தங்கள் குடும்பத்தையும் அன்பும், அறிவும் செறிந்த பல்கலைக்கழகமாக்கிட எங்கள் வாழ்த்துக்கள்!

  அன்புடன்
  துளசிதரன், கீதா

  ReplyDelete
  Replies
  1. நல்லவர்களின் உள்ளங்களிலிருந்து வரும் வாழ்த்துக்கும் வார்த்தைகளுக்கும் மிகவும் மதிப்பவன் அளிப்பவன் நான். அன்போடு நீங்கள் குறிப்பிட்ட வார்த்தைகளைப் படித்து அகம் மகிழ்ந்தேன். ரொம்ப நன்றீங்க நண்பர்களே..

   Delete
 11. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் மீண்டும் சகோதரரே!

  நன்றியெல்லாம் எதற்கு?
  நன்கே நாமறிந்த பிறகு!
  நெஞ்சில் நினைவுளதே
  இது போதும்!

  வாழ்க வளமுடன்!

  ReplyDelete
  Replies
  1. கவி வரிகளின் அன்பைப் பகிர்ந்த தங்கள் பாங்கு கண்டு மிக்க மகிழ்ச்சி சகோதரி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல..

   Delete
  2. கவி வரிகளின் அன்பைப் பகிர்ந்த தங்கள் பாங்கு கண்டு மிக்க மகிழ்ச்சி சகோதரி. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிகள் பல..

   Delete
 12. வாழ்த்துக்கள் நண்பரே! மணவாழ்வு இனிதே தொடர வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றிகள் சகோதரர் தங்களின் அன்புக்கும் வாழ்த்துக்கும்//

   Delete
 13. குடும்பஸ்தனாக பதவி உயர்வு பெற்றமைக்கு வாழ்த்துக்கள் (யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வாயகம்!!!) சும்மா தாங்க கலாய்ச்சேன்.

  விரைவில் மற்றுமொரு பதவி உயர்வு பெற வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   அலைபேசியில் அழைத்து வாழ்த்தியமைக்கும் இங்கே அடுத்த பதவி உயர்வு பெற வாழ்த்தியமைக்கும் என் அன்பான நன்றிகள்

   Delete
  2. வணக்கம் சகோ.
   அலைபேசியில் அழைத்து வாழ்த்தியமைக்கும் இங்கே அடுத்த பதவி உயர்வு பெற வாழ்த்தியமைக்கும் என் அன்பான நன்றிகள்

   Delete
 14. அன்புத் தம்பி மணவை அ.பாண்டியன் அவர்களுக்கு நன்றி! மீண்டும் வாழ்த்துக்கள்! மணப்பாறையில் நடந்த வரவேற்பின் போது படம் எடுத்த வலைப்பதிவாளர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் மட்டுமே.
  த.ம.6

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   அப்படீங்களா! புகைப்படம் நீங்கள் எடுக்கவில்லையா! ஏன் எடுக்கவில்லை ஐயா!! புகைப்படம் எடுத்தது போன்ற நினைவு. நேரில் வந்து வாழ்த்திய தங்கள் பெரிய மனதிற்கு நன்றிகள் மட்டுமல்ல என்றும் நான் மறவேன் ஐயா. நன்றி,.,

   Delete
 15. நல்லதொரு நன்றிப் பதிவு ..
  வாழ்த்துக்கள்
  நிகழ்வுகளின் மகிழ்வு எனக்கு இன்னமும் இருக்கிறது...
  பதிவர் சங்கமம் மாதிரித்தான் இருந்தது..
  http://www.malartharu.org/2012/12/blog-post_5724.html

  ReplyDelete
 16. திருமணமாகி
  இருமனம் கூடி
  இல்லறம் சிறக்க
  இனிய வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. நேரில் வர இயலவில்லை சகோ.விழா சிறப்புடன் இருந்ததை கேட்டறிந்தேன்.வர இயலாமைக்கு மன்னிக்கவும்.எப்போதும் என் வாழ்த்துகள் இனிய இல்லறத்திற்கு!

  ReplyDelete
 18. வணக்கம்..
  வாழ்த்துகள் சகோதரரே..என்றும் மகிழ்வுடன் இறைவன் ஆசியுடன் வாழ்க!

  ReplyDelete