தொண்டனின் தியாகமுகம் மறைத்து
தலைவன் முகம் காட்டும்
அதிசயக் கண்ணாடி..
கொண்ட கொள்கையை மறந்து
அடிக்கடி பிம்பம் மாற்றும்
மாயக் கண்ணாடி ..
வாக்கு வாங்க மட்டும்
வாசல் வந்து - பின்
மெல்ல பிம்பம் மறையும்
மோசக் கண்ணாடி..
எதிரே இருக்கும் முகம்பாரா
தன்முகம் மட்டும் பார்க்கும்
சுயநலக் கண்ணாடி..
ஐந்தாண்டுக்கு ஒருமுறை நாம்
வடிவமைத்தும் நமது பிம்பமே
உடையும் அரசியல் கண்ணாடி..
அரசியல் கண்ணாடி யில் ’பளிச்’சென்று நல்ல தெளிவு உள்ளது. பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநன்றி அய்யா முதல் வருகைக்கும் தெளிந்த கருத்துக்கும். தொடருவோம் பயணத்தை.
Deletesu...per sako..!
ReplyDeletenallaa sollideenga...
நன்றி சகோதரரே விரைந்து கருத்திட்டமைக்கும் தொடர் வருகைக்கும். இணைந்திருப்போம்.
Deleteமிக அருமைங்க.....பாராட்டுக்கள் tha.ma 2
ReplyDeleteவருகை தந்து படித்து கருத்திட்டமைக்கு நன்றிகள் சகோதரரே..
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்
அரசியல் ஒரு கண்ணாடி என்ற தலைப்பில் மிக அருமையாக கருத்தாழம் மிக்கவகையில் கவிதையில் சொல்லிய விதம் நன்று... தொடருங்கள் எனது வாழ்த்துக்கள்..சகோதரன்
படம்-மிக அருமை
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரருக்கு எனது நன்றி. தொடர்ந்து வருகை தந்து கருத்துப் பரிமாற்றம் தந்து ஊக்கப்படுத்தும் தங்கள் அன்புக்கு எனது அன்பு நன்றிகள்..
Deleteமிக அருமையான கண்ணாடி நண்பரே. இந்தியாவில் மட்டும்தான் தயாராகும் என்று நினைக்கின்றேன்
ReplyDeleteசகோதரருக்கு அன்பான நன்றிகள்.
Deleteஎதுக்கும் தொண்டன் ஒருதரம் முகத்தைக் கழுவி விட்டு - பின்னர் கண்ணாடியைப் பார்க்கலாம்.. கண்ணாடியைத் துடைக்க வேண்டிய தருணமும் நெருங்கி விட்டது.
ReplyDeleteநிச்சயம் துடைத்து விட வேண்டிய நேரம் அருகில் வந்து விட்டது சகோதரர். கருத்துக்கு நன்றி.
Deleteஉண்மை! அருமை! அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்..வாழ்த்துகள் சகோதரரே!
ReplyDeleteத.ம.4
Deleteசகோதரியின் வருகைக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.
Deleteஅட..! நம்ம ஊர் கண்ணாடி...!
ReplyDeleteநன்றி சகோதரர், தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள்..
Deleteஅரசியலையும் அரசியல்வாதிகளையும் சரியாக காட்டிவிட்டது உங்கள் கண்ணாடி.
ReplyDeleteசகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteஇனிமேலாவது நல்ல கண்ணாடி உற்பத்தி பண்ணுவது நம்மிடம்தான் இருக்கு....கவிதை அருமை!
ReplyDeleteநாம் மனது வைத்தால் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் சகோதரி..
Deleteஅரசியல் கண்ணாடி அழகாய் பிரதிபலித்தது! அருமை! நன்றி!
ReplyDeleteசகோதரரின் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteஅகோரமாய்க் காட்டும் அரசியல் கண்ணாடி...
ReplyDeleteபயமுறுத்துகிறது சகோ!
அருமை! வாழ்த்துக்கள்!
த ம.5
கண்ணாடிக்கு பயந்து கருத்து சுதந்திரத்தை அடக்கியது போதும். வீறு கொண்டு புறப்பட்டு அகிம்சையால் மாற்றங்களை உருவாக்கிடுவோம். அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் சகோதரி..
Deleteஅரசியல் கண்ணாடி சூப்பராகத்தான் இருக்கு.
ReplyDeleteஅன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள் சகோதரி..
Deleteசகோ வழியை சரியா பிடுசுட்டீங்க...
ReplyDeleteரொம்ப நல்ல கவிதை
கலக்குங்க..
ரொம்ப மகிழ்ச்சியாய் உள்ளது தங்கள் கருத்துரையைப் பார்த்து, தங்கள் அன்பாலும் வழிகாட்டுதலாலும் இன்னும் பயணிக்க ஆசை,
Deleteஅன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் நன்றிகள்
கண்ணாடியை மாற்ற உங்களைப் போன்ற இளைஞர்களால் மட்டுமே முடியும் .வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி சகோதரி. இளைஞர்களால் கண்டிப்பாக மாற்றம் ஏற்படும்.
Deleteநீங்கள் குறிப்பிட்ட கண்ணாடி எல்லாமே நொருங்க கூடியவை தானே அதனால் தானோ என்னவோ எம் இதயங்களும் அவ்வப்போது நொறுங்கி போய் விடுகிறது. அரசியல் கண்ணாடி மாற்றங்களால். அருமையான உவமானமும் சிந்தனையும். நன்றி வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாருங்கள் சகோதரி. வணக்கம். தங்கள் ரசித்து கருத்துரை வழங்கி பாராட்டியமைக்கு அன்பான நன்றிகள்..
Deleteஅரசியல் கண்ணாடி அட்டகாசம் .
ReplyDeleteசகோதரியின் கருத்துரைக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள்.
Deleteதன்முகம் மட்டும் பார்க்கும்
ReplyDeleteசுயநலக் கண்ணாடி....//உண்மைதான்
சகோதரரின் கருத்துக்கும் அன்பான வருகைக்கும் நன்றிகள்.
Deleteகவிதை நல்லா வந்திருக்கு. பாராட்டுகள்.
ReplyDeleteஆனா... அரசியல் மொத்தமும் சாக்கடைதான் என்னும் “பொதுப்புத்தி“ சரிதானா? அதில் போராடிக்கொண்டிருக்கும் நல்லவர்களே கிடையாதா? இந்த வாக்களித்துத் தேர்வு செய்யும் நடைமுறை இருக்கும்வரை இதை எப்படித்தான் பயன்படுத்துவது? இது
“புறத்திணைச் சுயம்வர மண்டபத்தில் போலி நளன்களின் கூட்டம், கையில் மாலையோடு குருட்டுத் தமயந்தி“ என்னும் கவிக்கோவின் கவிதை போலவே பெரும்பான்மைக் கருத்தைப் பிரதிபலித்தாலும், இன்னும் போராடிக்கொண்டிருக்கும் “ஒருசில“ நல்லவர்களை நாமும் உதாசீனம் செய்தால், அவர்கள் யாரைத்தான் நம்பிப் போராடுவது?
நன்றி அய்யா. அரசியல் சாக்கடை என்று பொதுவாக இளைஞர்கள் எல்லாம் ஒதுங்கிக் கொள்வதும் தவறு தான். நல்லவர்களும் அரசியலில் இருக்கிறார்கள் அவர்கள் நமக்காக நாளும் போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை என் புத்திக்கு உரைக்கும்படி கூறிய தங்களுக்கு நன்றிகள் அய்யா. பொதுவாகவே குறைகள் மட்டுமே பார்ப்பது தவறான கண்ணோட்டம் என்பதை அவ்வப்போது நினைப்பேன் ஆனால் கடைபிடிப்பது இல்லை. இனி எல்லாவற்றிலும் கவனம் செலுத்தி தங்களைப் போன்றோரின் அடிச்சுவட்டில் தொடர்ந்து வர ஆசை. சிறப்பான கருத்துரைக்கு நன்றீங்க அய்யா.
Deleteசரியாகச் சொன்னீர்கள். பாராட்டுக்கள்
ReplyDeleteநன்றி சகோதரி வருகை தந்து கருத்துரையில் பாராட்டியமைக்கு.
Deleteஅரசியல் கண்ணாடியை நாம் சரியாக பார்க்க மறந்து போகிறோம் என்பதாகவே நினைக்கிறேன்.
ReplyDeleteநன்றி சகோதரர். அரசியல் பற்றிய நமது பார்வையும் மாற வேண்டும் எனும் தங்களது கருத்துக்கு நானும் உடன்படுகிறேன். இப்பதிவை தங்கள் முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றிகள் சகோதரரே..
Deleteஐந்தாண்டுக்கு ஒருமுறை நாம்
ReplyDeleteவடிவமைத்தும் நமது பிம்பமே
உடையும் அரசியல் கண்ணாடி..
மாயக்கன்ணாடியோ..!
நன்றி அம்மா. தங்கள் வருகைக்கும் அழகான கருத்துக்கும்..
Delete