அரும்புகள் மலரட்டும்: விஜய் தொலைக்காட்சியின் மாற்றம் தேவை- மாறுதலான முயற்சி

Monday, 2 September 2013

விஜய் தொலைக்காட்சியின் மாற்றம் தேவை- மாறுதலான முயற்சி

திரைநட்சத்திரங்களின் பேட்டி, ரியாலிட்டி சோ, கேம் சோ என்று பார்த்த பழகிய நமக்கு விஜய் தொலைக்காட்சி கடந்த ஞாயிறு அன்று ஒலிபரப்பிய மாற்றம் தேவை நிகழ்ச்சி முற்றிலும் மாறுபட்ட ஊடகத்துறையின் பார்வையாக இருந்தது.


                                                  மக்களோடு மக்களாக கலந்து வாழும் பல்வேறு துறைகளில் சாதனைப் படைத்துக் கொண்டிருக்கும் நிஜ வாழ்க்கையின் கதாநாயகர்களை கண்டறிந்து விருது வழங்கி கவுரப்படுத்தியது.                                                                      நிகழ்ச்சியினை திரு.கோபிநாத் தொகுத்து வழங்கினார். நடிகர்கள் சிவக்குமார், லாரன்ஸ் மற்றும் நடிகை ரோகினி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர் ( என்ன செய்வது திரை நட்சத்திரங்களின் வருகையை குறிப்பிட்டால் தானே பதிவுக்கு ஒரு விலையில்லா விளம்பரம் கிடைக்குது)                                               விருதுகளில் சில: விளையாட்டுத் துறைக்கான விருது:   விளையாட்டுத் துறையில் சாதனை செய்து வரும் தடகள பயிற்சியாளர் திரு. நாகராஜன்                                                                           மழைநீர் சேகரிப்பு விருது:  திரு.வரதராஜன் (திருவாரூர்)                                                தொல்பொருள் பாதுகாவலர் விருது;  ஆதிச்சநல்லூர் திரு சிதம்பரம்                   போன்ற சாமானிய மக்களுடன் கலந்து வாழும் சாதனையாளர்களை இனம் கண்டு அவர்கள் ஆற்றிய அரும் செயலுக்கு அங்கிகாரம் அளித்தது.                                                                                                                               இதில் ஆச்சர்யமான விசயம் என்னவென்றால்                                                             மனிதநேய விருது:  சத்தமில்லாமல் ஆதவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து வரும் திரை நட்சத்திரம் ஹன்சிகா மோத்வானிக்கு..                                                       விருது வழங்க தேர்ந்தெடுக்கப் பட்டவர்களும் பல்வேறு துறைகளில் சாதனையாளர்கள்  மற்றும் சாதனையாளர்களை உருவாக்கியர்களே.                 நிகழ்ச்சிக்கான விளம்பரதாரர்கள் கிடைப்பார்களா, இது போன்ற நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்ப்பார்களா என்பதையெல்லாம் எதிர்பார்க்காமல் இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி வழங்கியது பாராட்டுக்குரியது.                                                                                                    இந்நிகழ்ச்சி மூலம் மாற்றம் தேவை மற்ற ஊடங்களுக்கும்..

6 comments:

  1. விஜய் டிவி நிகழ்ச்சிகளை நடத்தும் முறை விமர்சனத்துக் குரியது என்றாலும் வித்தியசமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் அதுவே முன்னிலையில் இருக்கிறது. மற்ற டிவிக்கள் அதன் நிகழ்ச்சிகளை காப்பி அடிக்கவும் செய்கின்றன

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் அய்யா, வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி . பதிவர் திருவிழா வெற்றிகரமாக அமைந்தமைக்கு வாழ்த்துக்கள் அய்யா.

      Delete
  2. இப்போதெல்லாம் தொலைக்காட்சிப் பக்கம்
    செல்ல நேரம் இருப்பதில்லை . புதிய தகவல்.
    ஹன்ஷிகாவிற்கு விருது - மிக்க மகிழ்ச்சி.
    ஒளிபரப்பு நாள் நேரம் தேவை.

    ReplyDelete
    Replies
    1. சகோதரியின் வருகைக்கு மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி. தற்போது யூ ட்யூப் ல் பார்க்கலாம். பார்க்க: . https://www.youtube.com/watch?v=DtlwQwQO2hI

      Delete
  3. யூ ட்யூப் பகிர்வுக்கு நன்றிகள்...!

    ReplyDelete
    Replies
    1. நல்ல முயற்சி நல்ல நிகழ்ச்சி என்பதால் அதைப் பற்றி பகிர்ந்து கொண்டேன். தங்களின் நன்றிகளுக்கு நன்றிங்க. வருகைக்கு சிறப்பு நன்றி.

      Delete