"மழலை மறக்காத வயதில், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதால், பெற்றோர்களின் ஆதரவு கிடைக்காமல், மனதளவில் வன்முறை வலைக்குள் குழந்தைகள் சிக்குவதாகவும் மன அழுத்ததிற்கு ஆளாவதாகவும் குழந்தைகள் நல ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இன்றைய பரபரப்பான உலகில், நடமாடும் இயந்திரங்களாக மனிதர்கள் மாறிவிட்டார்கள். குடும்ப வரையறைக்குள் நுழையும், கணவன், மனைவிக்கு குழந்தைகளை அக்கறையாக பார்த்துக் கொள்ள போதிய நேரம் கிடைப்பதில்லை. இதனால், மூன்று வயது கூட ஆகாத குழந்தைக்காக, பலமணி நேரம் காத்திருந்து "அட்மிஷன் வாங்கி பள்ளியில் சேர்க்க, பெரும்பாலான பெற்றோர்கள் முன்வருகின்றனர்.
எதற்காக இந்த அவசரம் என்று பார்த்தால் பெற்றோர்களின் சுமையைக் குறைப்பதற்காக ஏதும் அறியாத பிஞ்சுக் குழந்தையின் பிடரியைப் பிடித்து பள்ளிக்குள் தள்ளி விடுகின்றனர். கூட்டுக்குடும்பம் உடைந்து தனிக்குடும்பம் உருவான பிறகு, கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்வதால், குழந்தையை பார்த்துக் கொள்ள ஆட்கள் இன்றி, "பிளே ஸ்கூல்' எனும் அறிமுகமில்லாத இடத்துக்கு, குழந்தைகளை படிக்க அனுப்புகின்றனர்.
மழலை மனம் மாறாத வயதில், இதுவரை அறிமுகமில்லா நபர்களின் பாதுகாப்பில், குழந்தைகளை விட்டு செல்வதால், பெற்றோர்களின் அரவணைப்புக்கும், அன்புக்கும் வாய்ப்பு கிடைக்காமல், தனிமையில் ஏங்க வாய்ப்புள்ளது.
பள்ளியில் குழந்தைகள் வாய் மூடி கைகட்டி தனது உணர்வுகளை அடக்குகின்றனர். இது தான் ஒரு கல்வி செய்யும் செயலா!
இன்னும் ஒரு படி மேல் போய் மதியம் சாப்பிட்டதும் தூங்க வைத்து விடுகின்றனர். குழந்தைகளுக்கு தூக்கம் வருகிறதோ இல்லையோ தூங்குவது போல் பாவனை செய்ய வேண்டும். தூங்க வைத்து வீட்டிற்கு அனுப்பும் பள்ளிகளுக்கு அதிக படியான கட்டணங்களைக் கொடுத்து சேர்த்து விடுவது தான் ஏனென்று தெரியவில்லை.
இதனைத் தான் புதுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் முத்துநிலவன் அவர்கள் 1990 இல் எழுதிய தனது புதிய மரபுகள் எனும் கவிதை தொகுப்பில் நர்சரிப்பூக்கள் எனும் தலைப்பில் எழுதிய கவிதையில் சில வரிகள்
பட்டன் போடத்தெரியாத
பருவத்தில்
சீருடையா அவை?
கட்டம் போடாத
கைதிச் சட்டைகள்!
அவரின் தளத்தில் முழுக்கவிதையும் படிக்க
http://valarumkavithai.blogspot.in/2013/11/blog-post_4.html
இதில் அடையாள அட்டை வேறு. இப்படி, சிறிய வயதிலே அதிக நேரம் பெற்றோர்களை விட்டு பிரியும் குழந்தைகளுக்கு, எதையும் வெளிப்படையாக பேசத்தெரியாத மனநிலை உருவாக வாய்ப்பிருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும், பெற்றோர்களை விட்டு பிரியும் குழந்தைகள், மனதளவில் வெறுமையையும், வன்முறை குணாதிசயங்களோடும் இருப்பதாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் தெரிவித்தனர். தனிமை, வெறுப்பு போன்ற குணநலன்கள் அதிகம் வளருவதால், குறிப்பிட்ட வயதை அடையும் போது, சுயமாக முடிவெடுத்தல்,பெற்றோரின் ஆதரவை நாடாமல் இருத்தல், மழலையாக பேச வேண்டிய வயதில், வயதுக்கு மீறிய செயல்களில் ஈடுபடுதல் போன்றவற்றுக்கு வாய்ப்புள்ளதாக, குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும், "பிளே ஸ்கூலில்', நாகரிகம், படிப்பு, விளையாட்டு என பல நல்ல விஷயங்கள் கற்று கொடுக்கின்றனர். ஆனால், அதை புரிந்துகொள்ளும் பக்குவம், நான்கு வயதிற்கு மேல்தான் வருகிறது. அந்த வயதிற்கு முன்னால் கற்றுகொடுக்கப்படும் விஷயங்களால் குழந்தைகளின் மனதில், பள்ளியில் இருக்கும் நேரம் பெற்றோரை பிரிந்திருக்கிறோம் என்னும் எண்ணமே ஆழமாக பதிந்திருக்கும் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர்.
குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் பதியும் எண்ணங்களே, பிற்காலத்தில் வேர் விட்டு படர்கின்றன. இந்த பருவத்தில் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் குறிப்பாக தாய்மார்களின் கண்காணிப்பும், அன்பும் அரவணைப்பும் அவசியம். குழந்தைகள் பெற்றோர்களை சார்ந்தே உள்ளனர். அவர்களாகவே எதையும் கேட்டுப் பெறாத நிலையில் உள்ளதால், புதிதாக ஒரு இடத்துக்கு அனுப்பப்படும் போது பயம், வெறுப்பு, பிரிவுக்கு ஆளாகின்றனர்.
இதனால், ஐந்து வயதுக்கு மேல்தான், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். கல்வியை காட்டிலும், சுற்றுப்புற அறிவே, குழந்தைகளை அறிவுள்ளவராக மாற்றும். கல்வியில் சிறந்த மாணவராக குழந்தைகளை உருவாக்குவதை காட்டிலும், சிறந்த மனிதராக குழந்தையை ஆளாக்க வேண்டியது பெற்றோர்களின் கடமை. இதை புரிந்து கொண்டு, குழந்தைகளின் மழலை உலகத்துக்கு சென்று, அவர்களோடு மனம் விட்டு பேசவும் நேரம் ஒதுக்குவது அவசியம்.
நன்றி: வளரும் கவிதை வலைப்பூ, டி.என்.கல்வி இணையதளம்
|
தற்காலச் சூழலை மிகச் சரியாகச்
ReplyDeleteசொல்லிப்போகும் அற்புதமான பகிர்வு
அவசியமானப் பகிர்வும் கூட
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் ஐயா
Deleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க ஐயா..
tha.ma 2
ReplyDeleteநன்றீங்க ஐயா..
Deleteவணக்கம்
ReplyDeleteசகேதாரன்
மிகஅருமையாக படம்பிடித்து காட்டியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் சகோதரன்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்பு சகோதரரின் வருகையும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றீங்க சகோதரர்..
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம 3வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றீங்க சகோதரர். அசத்துங்கள்..
Deleteஉண்மைதான் சிறு வயதிலேயே இப்படி பள்ளிக்கு துரத்துவதால் பிள்ளைகளின் மனம் பாதிப்பது உண்மைதான்! எத்தனையோ பேர் சொல்லியும் என் குழந்தையை இன்னும் பள்ளிக்கு அனுப்பவில்லை! ஐந்துவயது முடிந்தவுடன் அரசுப் பள்ளியில் சேர்க்க உள்ளேன்! எல்லோரும் கேலி செய்தாலும் என் பிள்ளையின் மழலையை நான் ரசிக்கிறேன்! நன்றி!
ReplyDeleteநன்கு படித்து கருத்திட்டமைக்கும் அடுத்தவர்கள் சொல்வதைப் பற்றி கவலை படாமல் பள்ளி பருவம் வந்த பின்பு தான் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவேன், அரசு பள்ளியில் சேர்ப்பேன் எனும் தங்கள் மனப்பான்மைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரரே. மிக சரியான முடிவு. வருகை மற்றும் கருத்துக்கு நன்றி..
Delete//மழலை மனம் மாறாத வயதில், இதுவரை அறிமுகமில்லா நபர்களின் பாதுகாப்பில், குழந்தைகளை விட்டு செல்வதால், பெற்றோர்களின் அரவணைப்புக்கும், அன்புக்கும் வாய்ப்பு கிடைக்காமல், தனிமையில் ஏங்க வாய்ப்புள்ளது.//
ReplyDeleteஇது 100% உண்மை தான்.
மிகவும் யோசிக்க வேண்டிய பயனுள்ள பதிவு. பாராட்டுக்கள்.
வணக்கம் ஐயா
Deleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க ஐயா..
அற்புதமான அவசியமான பகிர்வு நண்பரே...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க.
Deleteமிகவும் பயனுள்ள பதிவு நண்பரே
ReplyDeleteகுழந்தையாய் பெற்று இயந்திரமாய் வளர்க்கிறோம்
இந்நிலை என்று மாறுமோ
//பட்டன் போடத்தெரியாத
பருவத்தில்
சீருடையா அவை?
கட்டம் போடாத
கைதிச் சட்டைகள்!//
ஐயாவின் கவிதை
இன்றைய யதார்த்தம்
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். கவிஞர் திரு. நா. முத்துநிலவன் ஐயாவின் கவிதையை ரசித்தமைக்கும் நன்றீங்க ஐயா..
Deleteவணக்கம் சகோதரா
ReplyDeleteஇன்றைய நிலையை எவ்வளவு தத்ரூபமாக கூறியிருக்கிறீர்கள்.
இது மிகவும் கவலைக்குரியதும் கவனிக்கப் படவேண்டியதுமே.
வெளி நாடுகளில் இது இன்னும் மோசமாக இருக்கிறது. குழந்தைகள் காப்பகத்தில் குழந்தைகளை கொடுமைப்படுவதும் உண்டு என்று கேட்க
இன்னும் கவலை யாக இருக்கிறது. நாகரீகம் வளர வளர வளரும் குழந்தைகளின் வாழ்வை எப்படி எல்லாம் சீரழிக்கிறது.
வழமை போல் நல்ல விடயம் எடுத்து வந்திருகிறீர்கள்.
நன்றி இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்......!
இப்படியெல்லாம் நடக்கும் என்றுதான் வள்ளுவர் அன்றே சொல்லிவிட்டாரே ...குழல் இனிது யாழ் இனிது என்பர் ,தம் மழலைச் சொல் கேளாதவர் என்று !
Delete+1
அன்பு சகோதரிக்கு அசராமல் தொடர்ந்து வருகை தந்து உற்சாகமூட்டும் வார்த்தைகளால் ஊக்கப்படுத்தும் தங்கள் அன்புக்கு நன்றீங்க சகோதரி. வாழ்த்துங்கள் வளருங்கள். தங்கள் அன்பும் வாழ்த்தும் என்றும் என்னை நல்வழி படுத்தட்டும். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்..
Deleteபகவான் ஜீ சகோதரருக்கு
Deleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க..
ல், ஐந்து வயதுக்கு மேல்தான், குழந்தைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். கல்வியை காட்டிலும், சுற்றுப்புற அறிவே, குழந்தைகளை அறிவுள்ளவராக மாற்றும்.
ReplyDeleteசிறப்பான சிந்தனை..!
வணக்கம் அம்மா
Deleteதங்கள் கருத்தோடு எனது கருத்தும் ஒத்து வந்தமை கண்டு மிகுந்த மகிழ்ச்சியாய் உள்ளது. மிக்க நன்றி..
நல்ல பதிவு சகோ
ReplyDeleteஎல்லாம் தெரிந்தும் நான் செய்த தவறுகளில் இதுவம் ஒன்று
ரொம்ப விளக்கமான பதிவு
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க சகோ..
Deleteமிகவும் உண்மையான கருத்துத்தான் சகோ!.
ReplyDeleteஇயந்திரமாக வாழும் மனிதனின்
இயந்திரச் செயல்களில் இதுவும்!..
தான் தனது பருவகாலத்தில் எப்படி இருந்தேன் என்பதைச்
சற்று எண்ணிப்பார்க்க மறுத்து - மறக்கிறான்...
பாவம் அந்தப் பிஞ்சுகள்!
இங்கும் நான் வாழும் நாட்டில் இதே அல்லது இதைவிட மேலான யந்திரத்தனம் உண்டெனினும் பிள்ளைகளைச் சேர்க்குமிடம் இப்பிராயத்துப் பிள்ளைகளுக்கு முதலில் அவர் போக்கில் விளையாட்டு மட்டுமே...
அப்படியே தூங்கினாலும்கூட அவர்களைப் படுக்கவைத்து பராமரித்துவிடுவார்கள்!
தானாக எதையும் கற்கும் ஆர்வம் தோன்றுமிடத்து வெறும் பட வரைதல் - விளையாட்டுகளுடன் மட்டுமே சிறிது சிறிதாக தேன் கலந்த மருந்தாதாகக் கல்வி புகட்டப்படுகிறது.
எங்கு எதுவெனினும் அந்தப் பிஞ்சுப் பருவத்தில் பெற்றாரின் பேரன் பேத்தியின் அரவணைப்பும் பாசமும் இன்றி ஏங்கும் மனநிலை என்பது கொடூரமானதே!
நல்ல பதிவும் பகிர்வும் சகோ! வாழ்த்துக்கள்!
முத்துநிலவன் ஐயாவுக்கும் எனது வாழ்த்துக்கள்!
த ம.5
ஆழ்ந்து படித்து தங்களது கருத்தையும் பலருக்கு உதவும் வண்ணம் பகிர்ந்த தங்களுக்கு நன்றீகள் சகோதரி
Deleteகவிஞர் திரு. நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் முழு கவிதையையும் படித்து பாருங்கள் சகோதரி. மிக நன்றாக இருக்கும். நான்கு வரிகளை மட்டும் அவரது அனுமதி பெறாமலே பயன்படுத்திக் கொண்டேன். வருகை மற்றும் கருத்துக்கு நன்றிங்க.
குழந்தைகளுக்கு இளம் பருவத்தில் பதியும் எண்ணங்களே, பிற்காலத்தில் வேர் விட்டு படர்கின்றன. இந்த பருவத்தில் குழந்தைகளுக்குப் பெற்றோர்களின் குறிப்பாக தாய்மார்களின் கண்காணிப்பும், அன்பும் அரவணைப்பும் அவசியம்//
ReplyDeleteஉண்மைதான்
தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி. தங்கள் வாழ்த்து நான் இன்னும் வளர உதவும். நன்றீங்க சகோதரர்..
Deleteஎதில் எல்லாமோ மாற்றம் வருகிறது .
ReplyDeleteஇன்னும் இதில் மாற்றம் வரவில்லையே
மிகுந்த குற்ற உணர்ச்சியை தூண்டிவிட்டது உங்கள் பதிவு
விரிவான ,தெளிவான நடை ,அண்ணனின் கவிதையை எடுத்தாண்ட விதம் அருமை .
எழுத்துகள் மேலும் கூர் பெற்றுள்ளதை உணர்கிறீர்களா சகோ கலக்குங்கள் !
சகோதரிக்கு நன்றி. என் எழுத்தை ஆரம்ப நிலையிலிருந்து கண்டு கருத்துகளால் ஊக்கப்படுத்தி வருகிறீர்கள். தங்களுக்கு அன்பான நன்றிகள். எழுத்துகள் மேலும் கூர்மை பெற்றிருந்தால் ரொம்ப மகிழ்ச்சி சகோதரி.
Deleteமிகவும் அருமையான, இந்தக் காலகட்டத்திற்கேற்ற ஒரு நல்ல பதிவு! திரு முத்து நிலவனின் கவிதை அற்புதம்! உண்மையின் வெளிச்சம்!
ReplyDeleteபசுமரத்தாணி போல் என்பது போல் குழந்தைகளின் சிறு வயதில் -ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது (இதை எல்லடி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்)- மனதில் பதிவதுதான் அவர்கள் பின்னாளில் நல்ல ஒரு மனிதனாக உருவாவதற்கு காரணம். பெற்றோரின் அவனிப்பு மிக மிக அவசியம். தங்களின் கருத்து மிகச் சரியே!
த.ம. +
நன்றி சகோதரர். தங்கள் வருகையும் பதிவை நன்கு படித்து அதற்கான கருத்தும் ரசிக்க வைக்கிறது. கவிஞர். திரு.நா.முத்துநிலவன் ஐயா அவர்களின் கவிதை ரசித்தமைக்கும் நன்றிகள். தொடர்வோம்..
Deleteநன்றி நண்பர் பாண்டியன் அவர்களே, சகோ.இனியா அவர்களின் பின்னூட்டத்தின் பிறகே நானும் உங்கள் கட்டுரையைப் படித்தேன். என்பெயரையும் சேர்த்து எழுதும்போது இதற்கெல்லாம் அனுமதி கேட்க வேண்டியதி்ல்லை. நான்தான் நன்றி சொலல வேண்டும். கட்டுரையும் தங்கை மைதிலி சொன்னது போலதங்களின் எழுத்து, கூர்மை யாகி வருவதைக் காட்டுவதாகவே உள்ளது. தொடருங்கள்!
ReplyDeleteஐயாவிற்கு வணக்கம்
Deleteதங்களிடம் அனுமதி பெறுவதை நீங்கள் விரும்ப மாட்டீர்கள் என்பது எனக்கு தெரியும் இருப்பினும் முறையாக தகவலாவது பதிவிட்ட உடனே தெரிவித்திருக்க வேண்டும். பல்வேறு பணிகளால் வலைப்பக்கம் முன்பு வர முடிவதில்லை. நண்பர்களின் பதிவிற்கு கருத்தூட்டம் வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. தங்களின் பெருந்தன்மைக்கும் எழுத்து கூர்மை பெறுவதை உணர்த்தியமைக்கும் அன்பான நன்றிகள் ஐயா.
முனைவர் வா.நேரு அவர்களின் தளத்திற்கு சென்று கருத்திட்டும் வந்தாச்சு. நண்பர்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன். தகவலுக்கு மிக்க நன்றி ஐயா..
Delete