நண்பர்களுக்கு வணக்கம்
பள்ளி மாணவர்களுக்கு கற்பிப்பதற்காக பாரத சாரணர்- சாரணியர் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு 8 நாள்கள் பயிற்சி எடுத்து வருகிறேன். அதற்கிடையில் திருவள்ளுவர் எழுதிய ஒரே நான்கு வரிபாடலைப் படித்தேன். அதை தங்களோடு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாடல் பற்றிய மாற்றுக் கருத்துகள் தங்களுக்கு இருந்தால் அன்போடு கருத்துரையில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்..
உலகத்திலுள்ள அத்தனை ஜீவன்களுக்காகவும் ஒன்றரை அடியில் குறள் எழுதிய திருவள்ளுவர், ஒரே ஒரு ஜீவனுக்காக மட்டும் நான்கடியில் ஒரு பாட்டு எழுதியுள்ளார் தெரியுமா?
யார் அந்த பெருமைக்குரிய ஜீவன்?
அவரது மனைவி வாசுகி தான். அந்த அம்மையார் தனது கணவரின் செயல்பாடுகள் குறித்து வாழ்நாள் முழுவதும் விமர்சித்ததே இல்லை. அவர் செய்தால் எல்லாம் சரியாகத்தான் இருக்கும் என்று நினைத்தவர். தன் கணவர் சாப்பிடும் போது, கையில் ஒரு ஊசி வைத்திருப்பார். கீழே விழும் சோறை எடுத்து தண்ணீர் உள்ள ஒரு கிண்ணத்தில் போடுவார். தண்ணீரை வடித்து விட்டு, மீண்டும் அந்த சோறைப் சாப்பாட்டுடன் கலந்து கொள்வார். இதற்கான காரணத்தை அந்த அம்மையார் இறக்கும் தருவாயில் தான் கணவரிடம் கேட்டாராம்.
வள்ளுவரின் இல்லத்துக்கு துறவி ஒருவர் வந்தார். அவர்கள், இருவரும் பழைய சாதம் சாப்பிட்டனர். அப்போது வள்ளுவர் வாசுகியிடம், சோறு சூடாக இருக்கிறது. விசிறு, என்றார்.
பழைய சோறு எப்படி சுடும்?அந்த அம்மையார் கேள்வியே கேட்கவில்லை. விசிற ஆரம்பித்து விட்டார். இப்படி, கணவருடன் வாதம் செய்யாமல் விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவம் கொண்டிருந்தார். அந்த கற்புக்கரசி ஒருமுறை கிணற்றில் தண்ணீர் இறைத்துக் கொண்டிருந்தார். வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.இப்படி ஒரு மனைவி கிடைத்தால், அந்தக் கணவன் கொடுத்து வைத்தவன் தானே!
அந்த அன்பு மனைவி ஒருநாள் இறந்து போனார்.
'நெருநல் உளனொருவன் இன்றில்லை எனும்
பெருமை படைத்து இவ்வுலகு' என்று ஊருக்கே புத்தி சொன்ன அந்தத் தெய்வப்புலவரே, மனைவியின் பிரிவைத் தாங்காமல் கலங்கி விட்டார். நேற்றிருந்தவர் இன்றைக்கு இல்லை என்பது தான் இந்த உலகத்திற்கே பெருமை என்பது இந்தக் குறளின் பொருள். ஆக, தனது கருத்துப்படி, அந்த அம்மையாரின் மறைவுக்காக பெருமைப்பட்டிருக்க வேண்டிய அவர், மனைவியின் பிரிவைத் தாளாமல்,
"அடியிற்கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழும்பும் பேதாய்-
இனிதா(அ)ய் என் தூங்கும் என்கண் இரவு"
என்று ஒரு நாலு வரி பாட்டெழுதினார்.அடியவனுக்கு இனியவளே! அன்புடையவளே! என் சொல்படி நடக்கத் தவறாத பெண்ணே! என் பாதங்களை வருடி தூங்கச் செய்தவளே! பின் தூங்கி முன் எழுபவளே! பேதையே! என் கண்கள் இனி எப்படித்தான் இரவில் தூங்கப் போகிறதோ! என்பது பாட்டின் உருக்கமான பொருள்.
நன்றி: கல்விச்செய்தி இணையதளம்
சகோதரா!
ReplyDeleteஅறியாத தகவல்.அறியவைத்தமைக்கு மிக்க நன்றி!!
கேள்விப்பட்டுள்ள அருமையான தகவல்கள் தான் இவை. எளிமையாக எல்லோருக்கும் தெரியும்படி பதிவிட்டுள்ளது நல்லது.
ReplyDeleteசாப்பிடும்போதும், பரிமாறும் போதும் கீழே விழும் பருக்கைகளை எடுக்க அவர் வைத்துக்கொண்ட ஓர் ஊசி + ஓர் கோப்பை நீர் ஆகியவை எதற்கு என்றே அந்த வாசுகி அம்மாளுக்குக் கடைசிவரை தெரியவில்லை என்றும் நான் கேள்விப்பட்டுள்ளேன்.
பிறகு தான் இறப்பதற்கு முன்பு ஒரு நாள் திருவள்ளுவரிடமே கேட்டு தெரிந்து கொள்கிறாள். அந்த அளவுக்கு கீழே சிந்தாமல் சிதறாமல் பெளவ்யமாக பரிமாறியுள்ளார்கள் என்பதே இதில் உள்ள சிறப்பு.
>>>>>
// வள்ளுவர் அவரை அழைக்கவே, கயிறை அப்படியே விட்டு விட்டு வந்தார். குடத்துடன் கூடிய அந்தக் கயிறு அப்படியே நின்றதாம்.//
ReplyDeleteஇந்தப் பதிவிரதை பற்றிய இந்தக்கதை மேலும் தொடர்கிறது. அவை மிகவும் சுவையாக இருக்கும். எனக்கு இங்கு இப்போது அவற்றை முழுவதுமாகச் சொல்ல நேரமில்லை. பகிர்வுக்கு நன்றிகள்.
பாராட்டுக்கள், வாழ்த்துகள்.
வணக்கம்
ReplyDeleteசகோதரன்
அறியமுடியாத விடயத்தை மிக அருமையான விளக்கம் கொடுத்து அனைவரும் அறியும்படி பதிவாக வெளியிட்ட விதம் அருமை வாழ்த்துக்கள்.சகோதரன்.
புதியபதிவாக.-என்பக்கம் http://tamilkkavitaikalcom.blogspot.com/2013/12/blog-post_3387.html
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அன்புச் சகோதரா அருமை...!
ReplyDeleteஏற்கனவே அறிந்த விடயம் ஆனாலும் நாலு வரி பாடலைப்பற்றி அறியவில்லை. இருந்தாலும் இவற்றை நினைவு படுத்தியதற்கு மிக்க நன்றி. அறியாதவர்களும் அறிந்து கொள்ளட்டுமே. ஆனால் இப்படி மனைவி அமைய வேண்டும் என்று கேட்கா விட்டால் சரி தான். இன்னிக்கு பல வீடுகளில பூகம்பம் வெடிக்கலாம். எச்சரிக்கை தேவை.
பாண்டியா இப்படி ஆசையை வளர்க்காதப்பா நல்லதல்ல, அக்கா சொன்னா கேட்கணும் சரியா.
பகிர்வுக்கு நன்றி தொடர வாழ்த்துக்கள்....!
இதுவரை அறியாத பாடல்
ReplyDeleteபல விஷயங்க்களை ஒருங்கிணைத்து
அற்புதமாகச் சொல்லிப்போனவிதம்
மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
tha.ma 2
ReplyDeleteஓ...அப்படியா? மனைவிக்கு அப்போதே மரியாதைத் தந்த வள்ளுவர்?
ReplyDeleteநல்லதொரு பாடலைப்[ பதிவிட்டமைக்கு மகிழ்ச்சி..
ReplyDeleteசிறப்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
வாழ்வியலை வகுத்தவரல்லவா.....! சிறப்பான செய்தி...!
ReplyDeleteஇதுவரை அறிந்திராத ஒரு தகவலுக்கு மிக்க நன்றி!! அருமையான செய்தி!!
ReplyDeleteஈரடியால் குறளை அமைத்தவருக்கு இணைந்த
ReplyDeleteஇனிய வாழ்க்கைத்துணைநலம் பற்றி
அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
நல்ல பதிவு வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteவாழ்வியல் எங்களுக்கு வார்த்த பெருந்தகை
ReplyDeleteஆழ்துயர் கண்டாரோ ஆ!
வள்ளுவப் பெருந்தகையின் இந்த நான்கு வரிப் பாவினை அறிந்திருந்தும் அதன் பொருளை இத்தனை சிறப்பாய் இப்பொழுதான்
இங்கு உங்கள் மூலம் அறிகிறேன்..
நல்ல பதிவும் பகிர்வும்!...
வாழ்த்துக்கள் சகோ!
த ம.5
This comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteமுந்திய பின்னூட்டத்தில் ஒரு பிழை நேர்ந்ததால் நான்தான் நீக்கினேன்... தவறாக எண்ண வேண்டாம் நண்பா!) இதோ ...
ReplyDeleteவள்ளுவரைப் பற்றிய புனைகதைகளுள் இதுவும் ஒன்று.
தமிழர்கள் கற்பனை மிகுந்தவர்கள். தம் ஆசையைத் தாம் விரும்பும் தலைவர்கள் மீதும், சான்றோர்கள் மீதும் ஏற்றுவதைத் தவறாகவே நினைக்காமல் ஏற்றிய கதைகள் ஏராளம். பாரதிதாசன் எழுதாத சில கவிதைகள் அவர் பெயரில் புழங்குவது போல...குறுந்தொகையில் வரும் “இறையனார்“ எனும் புலவரின் பெயரை வைத்துக்கொண்டு, சிவாஜி-நாகேஷ் எனும் மாபெரும் கலைஞர்களோடு ஒரு கற்பனைக் காவியத்தையே படைத்தாரல்லவா ஏ.பி.நாகராஜன்? என்ன நடிப்பு! வன்ன வசனம்! இது அழகிய கற்பனை என்று சொன்னால் தமிழர் பலரும் என்னை அடிக்க வருவது உறுதி... அதுபோலத்தான் இதுவும்!
அத்தோடு நேரிசை வெண்பாச் சொற்களும் அமைப்பும் மாறி....
"அடிசிற் கினியாளே அன்புடை யாளே
படிசொல் தவறாத பாவாய்- அடிவருடி
பின்தூங்கி முன்னெழுஉம் பேதாய், இனியெந்தாய்,
என்தூங்கும் என்கண் இரா?" – என்றே நான் பார்த்தாக நினைவு
(இதில்தான் வெண்பா இலக்கணமும் பொருந்தி வருகிறது என்பதாலும்...அடிசில்-உணவு, எங்ஙன் – எவ்வாறு, இரா-இரவு)
எனினும் தங்களின் பதிவுக்கு நன்றியும் வாழ்த்துகளும் நண்பா!
தொடரட்டும் தங்களின் தமிழ்ச்சுவையும் தேடலும்... (மீண்டும் எழுஉம் எனும் இடத்தில் ழு நெடில் வரமறுக்கிறதே! மன்னிக்க வேண்டுகிறேன் நண்பா அதை மட்டும் நெடிலாக்கிக் கொள்க) ழு வை அப்படியே விட்டிருக்கிறேன்...
நிலவன் அண்ணாவின் கருத்தையும் சேர்த்து படித்ததால்
ReplyDeleteவள்ளுவர் மீது கோபம் குறைந்திருக்கிறது
வாரத்துக்கு ஒரு குறளாவது மனனம் செய்வேன்
என்ற போதும் 91வது அதிகாரம் (பெண்வழிச் சேறல் )முழுமையும்
மனைவி சொல் கேட்பது முட்டாள்த்தனம் என்பதாய் நீளும்
அதனால் எனக்கும் வள்ளுவருக்கும் கொஞ்சம் பிணக்கு ,யாராவது
தீர்த்து வையுங்கள்.மேலும் பழைய சோறு சுடுகிறது என்றெலாம்
கூறுவது பெண்ணடிமைத்தனத்தை வளர்க்கும் போக்கு ,நிலவன் அண்ணனால் வள்ளுவர் பிழைத்தார் என்னிடம் இருந்தது .சுவையான பதிவு சகோ ஆனால் தெய்வம் தொளால் என்ற வள்ளுவர் குறளை தவிர அவரிடம் கற்பதற்கு ஆயிரம் உண்டு என்பதை சுட்டிக்காட்டி ,ஏற்றும் கொள்கிறேன்
பயிற்சி நலமாக நடக்கிறதா..? சிவராஜ் கலக்குவாரே?
ReplyDeleteவள்ளுவர் குறித்த கவி ரசிகர்களின் கற்பனைகள் இவை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்...
மற்றபடி சொல்ல கேட்க நல்லா இருக்கும்..
கிணற்றில் வாளி நிற்க வேண்டும் என்றால் ஒன்று அந்த அம்மாவிற்கு நிறைய அறிவியல் தெரிந்திருக்கவேண்டும். அல்லது ஒரு சைக்கீயாக இருக்கவேண்டும்...
இதுவும் பெண்னடிமைதனமே...
வள்ளுவர் ஒரு ஆசிவகத் துறவி என்று சிலர் சொல்வதைப் பற்றி என்ன நினைகிறீர்கள் பாண்டியன்..
தெரியாத விஷயம், பாடலும் இப்போதுதான் பார்க்கிறேன். முத்துநிலவன் அவர்கள் சொல்லியிருப்பதும் ரசிக்க வைக்கிறது. பகிர்தலுக்கு நன்றி.
ReplyDeleteதிரு Mathu S ஆசிவகத் துறவி என்று எழுதியிருக்கிறாரே, அப்படியென்றால் என்ன?
ReplyDeleteஆசிவகம் என்பது பழந்தமிழர் சமய வழிபாட்டு முறை .சைவம் ,வைனவத்திற்கெல்லாம் முந்தியது என ஆய்வுகள் கூறுகின்றன .குன்றிருக்கும் இடமெலாம் குமரன் வருவதற்கு முன்பே அய்யானரும் கல்லால் அமைக்கபெற்ற யானை சிலையும் வைத்து வழிப்பட்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு .இன்றும் நீங்கள் யானை உருவம் கல்லாலும் குதிரை மண்ணாலும் அமையபெற்றிருப்பதை கோயில்களில் காணலாம் .
Deleteஅருமையான தெளிவான விளக்கத்திற்கு நன்றி திருமதி மைதிலி.
Deleteபுதிய சுவாரசியமான பதிவு. பின்னூட்டங்களில் இருந்தும் பல செய்திகளை அறிந்து கொள்ள முடிந்தது. நன்றி பாண்டியன்
ReplyDeleteதஞாளுடைய பழைய பதிவுகளையெல்லாம் படிக்கலாம் என்று நினைத்து, உங்களது வலைப்பூவை திறந்தவுடன், கண்ணில் இந்த பதிவு தான் பட்டு, என்னைத்தான் நீ முதலில் படிக்க வேண்டும் என்று கட்டளை போட்டதற்கிணங்க, இந்த பதிவை படித்தேன்.
ReplyDeleteமுற்றிலுமான ஒரு புதிய செய்தியை பகிர்ந்துக்கொண்டதற்கு மிக்க நன்றி நண்பரே.
நான்கு வரிக் கவிதை பற்றிய தகவல் எனக்குப் புதிது. கருத்துக்கள் படித்ததன் மூலமும் புதிதாகச் சிலவற்றை அறிந்துகொண்டேன்.
ReplyDeleteநன்றி.