இரு கண்களில் நுழைந்து
இருதயம் பார்த்தவளே- உன்
நேசத்தையும் பாசத்தையும் உன்னதமாய்
நெஞ்சோடு பகிர்ந்த என்னவளே..
அனுதினமும் அன்பைப் பரிமாறி
அன்னையின் நகலாய் வந்தவளே
உன் சந்திப்பு நிகழாவிட்டால் நான்
சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி..
உன் கடைவிழி பார்வை
பட்டதற்கே பட்டமரம் போல்
இருந்த நான் இன்று
பாலில் விழுந்த தேன்துளி..
உன் முழுமுகம் காண
நிலவைத் தொலைத்த அமாவாசை
இரவைப் போல் கேள்விகளால்
வேள்விகள் செய்து காத்து
இருக்கிறேன் காலம் கனிந்துவர..
என் வாழ்க்கை பாதையில்
இருளகற்ற களங்கரை விளக்காய்
என்னோடு வந்துவிடு காலம்
முழுதும் கலங்காது நானிருக்க..
அவளுக்கான அழகான விண்ணப்பம். அப்பம் போல தித்திப்பாக. பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம் அய்யா.
Deleteவிரைந்து வருகை தந்தமைக்கும் கருத்துக்கும் எனது அன்பான நன்றிகள்.
அருமையான கவிதை.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உடன் வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துக்கும் எனது அன்பான நன்றிகள் சகோதரரே.
Delete"விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலந்த உறவே"
ReplyDeleteகவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வைர வரிகளை ஒத்து இருக்கிறது உங்களது கவிதை வரிகள் வாழ்த்துக்கள்
வணக்கம் நண்பரே.
Deleteஆமாம் ல. வைரமுத்து அவர்களின் கவிவரிகளின் தாக்கம் எனக்குள் இருப்பது உண்மை. இந்த வரிகள் கண்ணை மூடிட்டு நானா கிறுக்கினது. தங்கள் வருகைக்கும், கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி..
ஆஹா காதலில் விழுந்தாச்சா வாழ்த்துக்கள் வெற்றி பெற....! கவிதை நன்றாக இருக்கிறது.
ReplyDeleteஅனுதினமும் அன்பைப் பரிமாறி
அன்னையின் நகலாய் வந்தவளே
உன் சந்திப்பு நிகழாவிட்டால் நான்
சமுத்திரத்தில் விழுந்த மழைத்துளி..
காதல் வந்தவுடன் கவிதையும் அப்படி வருகிறதே ......ம்..ம் நடக்கட்டும்....நடக்கட்டும்.
தொடர வாழ்த்துக்கள்.
வணக்கம் சகோதரி வருக.
Deleteகாதலில் விழாத்வர் இருக்க முடியுமா சகோதரி! ஆனால் இது மணநாளுக்கு காத்திருக்கும் ஒரு காதலனின் வேண்டுகோள் எனது கற்பனையில். நம்ப மாட்டேனு சொல்ற மாதிரி கேட்குதே சகோதரி. இருப்பினும் தங்கள் வாழ்த்துக்கும் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிகள்..
கவிதை அழகு. அதிலும் உவமை மிக நன்று.
ReplyDeleteவணக்கம் சகோதரரே.
Deleteவருகை தந்து கவிதையை ரசித்து கருத்துரை வழங்கிய தங்கள் ரசனை குணத்திற்கு எனது அன்பான நன்றிகள்..
உவமைகளும் ஒப்பீடும் அற்புதம்
ReplyDeleteஒரு அருமையான கவிஞரை
உருவாக்கியவருக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
வணக்கம் அய்யா வருக.
Deleteவருகை தந்து கருத்திட்டதோடு அல்லாமல் வாழ்த்தியமைக்கு எனது அன்பான நன்றிகள்.
tha.ma 2
ReplyDeleteநன்றீங்க அய்யா.
Deleteஅவளுக்கு நன்றி சொல்லுங்கள்.ஆம் கவிஞர்ஆக்கியமைக்காய்
ReplyDeleteசகோதரருக்கு வணக்கம்.
Deleteஇதை விட வேறு என்ன வேலை! நன்றி சொல்லிட வேண்டியது தான். வருகை தந்து கருத்துரையும் தந்தமைக்கு நன்றி சகோதரரே..
இப்படி கவிதையில் ஆளாளுக்கு கலக்கினால் நான் என்னசெய்வேன் ?போகிறது கவிதை அருமை !சகோதரர் ,நம்ம ஊர்காரர்,என சந்தோஷபட்டு கொள்கிறேன் !வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் சகோதரி..
Deleteஉங்க கூட போட்டி போட முடியுமா சகோதரி. இது என் கன்னி முயற்சி தானே! பிழை இருந்தாலும் போன போகுதுனு மன்னிச்சு விட்டுடுங்க. சரீங்களா சகோதரி! தங்கள் வருகைக்கும் கலக்கலான கருத்துக்கும் நன்றி..
கவிதை எழுத ஆரம்பிச்சாவே எளிதாய் புறப்படுவது காதல்தான்...! இனி மெல்ல சமூகம் உங்கள் வசப்படும் சகோ!
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteதங்களிம் ஊக்குவிப்பே என்னைக் கவிதை எழுத வைத்தது என்பது உண்மை. தங்களுக்கு எனது நன்றிகள். வருகை தந்து கருத்திட்டு ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி சகோதரி.
இதை ஒரு அழகான உவமேயக் கவிதை என்றும் சொல்லலாம். அத்தனை உவமைகளும் அழகோ அழகு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருக வணக்கம் சகோதரரே.
Deleteவருகை தந்து உற்சாக வார்த்தைகளைக் கருத்துரையாக வழங்கியமைக்கு நன்றி.
//சமுத்திரத்தில் மழைத்துளி, பாலில் தேன் துளி// அட அட மிக அருமை பாண்டியன்!
ReplyDeleteபிற உவமைகளும் அருமை! பௌர்ணமியாய் உங்கள் இரவுகள் ஒளிரச் செய்து நீங்கள் கலங்காமல் இருக்க அவள் வந்துவிடட்டும் இந்த வேண்டுகோள் கேட்டு! மிகவும் ரசிக்கும்படி இருக்கிறது உங்கள் கவிதை!
வணக்கம் சகோதரி.
Deleteதொடர் வருகை தந்து ரசித்து கருத்திடும் தங்கள் ரசனை குணத்திற்கு நன்றிகள்.
அழகான காதலை வெளிப்படுத்திய விதம் அருமை.இதமான வெளிப்பாடு.வாழ்த்துக்கள் சகோ
ReplyDeleteவருக வணக்கம் சகோதரி
Deleteவருகை தந்து கருத்திட்டு வாழ்த்தியமைக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரி.
என் வாழ்க்கை பாதையில்
ReplyDeleteஇருளகற்ற களங்கரை விளக்காய்
என்னோடு வந்துவிடு காலம்
முழுதும் கலங்காது நானிருக்க..
அருமையான படைப்பு! அழகான வரிகள்! வாழ்த்துக்கள்!
வாருங்கள் சகோதரரே வணக்கம்.
Deleteதங்கள் ரசனை கண்டு மிக்க மகிழ்ச்சி. உற்சாக வார்த்தைகளில் கருத்திட்டமைக்கு நன்றிகள் அய்யா.
உன் கடைவிழி பார்வை
ReplyDeleteபட்டதற்கே பட்டமரம் போல்
இருந்த நான் இன்று
பாலில் விழுந்த தேன்துளி..
ரசித்த உவமை! அழகு! வாழ்த்துக்கள்!
ஆஹா! ரசித்து படித்தமைக்கு எனது அன்பான நன்றிகள் சகோதரரே. உங்கள் வாழ்த்துக்கள் கவிதை எழுத தயங்கிய எனக்கு தன்னம்பிக்கை தருகிறது. மிக்க நன்றி..
Deleteதகவலுக்கு நன்றி.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்
கவிதையில் உவமை. கற்பனை . நயம். நிறைந்தது...படிக்கும் போது மனம் குளிர்ந்தது அருமை வாழ்த்துக்கள் சகோதரான்....
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வணக்கம் சகோதரரே.
Deleteதங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்து வருகை தந்து தங்களது சகோதரனை ஊக்கப்படுத்துவதற்கு நன்றி. . தங்களது ரசனையான கருத்துக்கு நன்றிகள்.