நண்பர்களுக்கு வணக்கம்.
ஒருவன் தான் செய்யும் செயலைத் தவறாக செய்தாலோ அல்லது சொல்லுவதை தவறாகச் சொன்னாலோ உடனே நாம் அவனை போடா முட்டாள் என்று திட்டுகிறோம். தவறாகச் செய்த அவரது செயலை முட்டால் தனமானது என்று விமர்சிக்கிறோம். நாம் அன்றாடம் பயன்படுத்தும் அந்த ”முட்டாள்” என்ற சொல் எப்படி வழக்கிற்கு வந்தது என்பதை யோசித்தது உண்டா! வாருங்களேன் அதற்கான பதிலையும் முட்டாள் என்ற சொல்லுக்கான வரலாற்றையும் தெரிந்து கொள்வோம்.
அறிவாளி என்பதற்கு எதிர்பதம் என்ன?
உடனே நம்மவர்கள் "முட்டாள்" என்பர். ஆனால், முட்டாள் என்பதற்கு வேறு அர்த்தம் உண்டு. அதுவும் காரணப் பெயர் சொல்.
சரி முட்டாள் என்பதன் பெயர்க்காரணம் தான் என்ன...?
அந்த காலத்தில் கோவில்களில் சப்பரம் தூக்குவதற்கு என்று சில பேர் இருப்பார்கள். அவர்களுக்கு கோவில்களிலேயே சாப்பாடும் உண்டு, தங்க இடமும் உண்டு. திருவிழா காலங்களில் சப்பரம் தூக்கி கொண்டு, போகும் போது மக்கள் தரிசனம் செய்வதற்கு வேண்டி நடுவில் சப்பரம் சற்று நேரம் நிற்கும். அந்த சமயம் சப்பரம் தூக்கிகள் ஓய்வு எடுப்பதற்காக, சில பேர் முட்டு எடுத்துக் கொண்டு கூடவே வருவார்கள். அவர்கள் சப்பரம் நின்ற உடன் முட்டு கொடுத்து சப்பரத்தை நிப்பாட்டுவார்கள். அதனால் அவர்களை "முட்டு ஆள்" என்பர்.
சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.
எனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.
கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!
|
சரியாகச் சொன்னீர்கள்... பாராட்டுக்கள்...
ReplyDelete”கருத்துரை சக்கரவர்த்திக்கு” அன்பு வணக்கம். தங்களது வருகை மற்றும் கருத்துக்கு நன்றி. பாராட்டுக்கு சிறப்பான நன்றி அய்யா.
Deleteஆமாம் 'அறிவிலி' என்பது சரியான எதிர்ப்பதம். 'முட்டாள்' காரணமும் அறியத்தந்தமைக்கு நன்றி!
ReplyDeleteசகோததரருக்கு அன்பான வணக்கம், தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துக்கும் நன்றீங்க சகோததரே!.
Deleteஉண்மைதான் சகோ! முட்டாள் என்று சொல்லிப் பழகிவிட்டதால் அவ்வார்த்தையை நாம் பயன்படுத்துகின்றோம்...
ReplyDeleteமிகச் சரியான சொல்லை அறிந்தும் அதனை உணர்ந்ததில்லை...:)
பதிவிற்கும் பகிர்விற்கும் மிக்க நன்றியும் வாழ்த்துக்களும் சகோ!...
சகோதரிக்கு வணக்கம்,
Delete//மிகச் சரியான சொல்லை அறிந்தும் அதனை உணர்ந்ததில்லை...// இந்த பதிவு அதனை உணர்த்துமானால் மகிழ்ச்சி. பதிவிட்ட சில நிமிடங்களிலேயே கருத்திட்டமைக்கு நன்றீங்க சகோதரி.:
எவ்வளவு சாதாரணமாக நாம் அந்த வார்த்தையை பயன் படுத்தி விடுகிறோம்.ஆனால் வேர் சொல் ஆராய்ச்சி அருமை சார்.
ReplyDeleteசகோதரியின் வருகைக்கும் நட்புக்கு நன்றிகள். சரியான பொருள் அறிந்தும் வழக்கத்தினால் மாற்றிக் கொள்ள மறுக்கிறது மனது. மாற்றம் ஏற்படட்டும். கருத்துரைக்கு நன்றீங்க சகோதரி.
Deleteமுட்டாளுக்கு அருமையான விளக்கம். முட்டு+ஆள் !
ReplyDeleteஇவ்வளவு நாட்கள் இதுகூடத் தெரியாமல் முட்டாள் தனமாக .... இல்லை இல்லை ..... அறிவிலியாக இருந்துள்ளோமே என எண்ணி வெட்கினேன்.
பகிர்வுக்குப் பாராட்டுக்கள், நன்றிகள்.
எல்லோரும் அப்படி தான் அய்யா. பழக்கம் காரணமாக அறிவிலி என்று மாற்றிக் கொள்ள முடிவதில்லை. இனி மாற்றத்தை ஏற்படுத்துவோம் நம்மிலிருந்தே. கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க அய்யா.
Deleteபடத்தில் அந்தக்காதும் மூக்கும் அருமையாக ...... தேறிய பச்சை நிலக்கடலையை உடைத்ததும் ரோஸ் கலரில் இருக்குமே பருப்பு ... அதுபோல ஜோராக உள்ளது. படத்தேர்வுக்கும் என் பாராட்டுக்கள்.
ReplyDeleteஅய்யோ! தங்களின் ரசிப்புக்கு நன்றி அய்யா. தங்களின் ரசனையான மனத்திற்கு வயது 16 என்றே நினைக்கிறேன். சிறந்த குணத்தே தன்னகத்தே கொண்ட தங்களுக்கு நன்றிகள்.
Deleteமிக அருமையான விளக்கம்! நல்லதொரு தகவல்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteவணக்கம் அண்ணா. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. தங்களது தளத்தில் நான் படிக்க இருக்கிறது. நேரம் கிடைக்கும் போது தவறாமல் வருகிறேன். நன்றி அண்ணா.
Deleteநல்ல தகவல்... 35 ஆண்டுகளுக்கு முன் எங்கள் தமிழ் ஐயா சொல்லியதை அப்படியே சொல்லுகின்றீர்கள்.. தவிர, இந்த தலைமுறை முட்டாளைக் கண்டிருக்குமோ?.. ஏனென்றால் தற்காலத்தில் சாமி ஊர்வலத்தில் தீவட்டி சேவை கூட பார்க்க முடிவதில்லை!.
ReplyDeleteஅய்யாவிற்கு வணக்கம், பாரம்பரிய பழக்கவழக்கங்கள் நாகரிகம் என்ற பெயரில் மறைந்து கொண்டிருக்கின்றன. பாரம்பரியம் காக்க மாற்றம் வேண்டும் மக்கள் மனதில். தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க.
Deleteஎனவே! அறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.
ReplyDeleteபதமான சொல்லின் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..!
சகோதரிக்கு அன்பு வணக்கம், தங்கள் வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துக்கும் நன்றீங்க அம்மா.
Deleteம்ம்ம் ... எங்களை எல்லாம் அறிவிலி ஆக்கி விட்டீர்கள்.
ReplyDeleteநல்லதொரு தகவல் அறிந்த மகிழ்ச்சியோடு வாழ்த்துக்கள்.
சகோதரியின் வருகையும் கருத்தும் மகிழ்வைத் தருகிறது. தொடர்ந்து தங்களது வருகையைத் தாருங்கள். நன்றீங்க சகோதரி.
Deleteவணக்கம்
ReplyDeleteபாண்டியன்(அண்ணா)
முட்டாள் என்பதற்கு மிக திறமையான விளக்கம்...... பாடசாலையில் படிக்கும் போது தமிழ் ஆசிரியர் தமிழ்ப்பாடம் விளங்கப்படுத்தியது போல் உள்ளது......பதிவு அருமை வாழ்த்துக்கள் அண்ணா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வருக அண்ணா! வருகையும் கருத்தும் ஆனந்தத்தைத் தருகிறது. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க சகோததரே.
Deleteசகோதரி இனியா அவர்கள் கூறியது..
ReplyDelete///வணக்கம் சகோதரா....!
இதைத்தான் நான் எதிர்பார்த்தேன். இப்படி விடயங்களை எங்கள் காதில் போடுவதற்கு நன்றி.
அறிவாளிக்கு எதிர்பதம் அறிவிலிதான் அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் முட்டாள் முட்டு கொடுகின்ற வேலையை மூளையை உபயோகிக்காமல் ஒரே செயற்பாட்டை திரும்ப திரும்ப செய்து கொண்டிருப்பார் அல்லவா?
ஒரு வேளை முட்டாள் வேலைக்கு மூளையை உபயோக்கிக்காததால், நீயும் முட்டாள் வேலையையே செய்கிறாய் மூளையை உபயோகிக்காமல் என்ற அர்த்தத்தில் சொல்லி இருக்கலாமோ என்று தோன்றுகிறது.
தயவு செய்து குழம்பாதீர்கள் ஒரு சின்ன யோசனை தான் சகோதரா. தவறாக எண்ண வேண்டாம். இப்படி நிறைய விடயங்களை எடுத்து வாருங்கள்.(பாரம்பரியம்,பழக்க வழக்கங்களை) அறிய ஆவலாக உள்ளேன். நல்ல விடயங்களை இதன் மூலம் எல்லோரும் கற்றுக் கொள்வோம்.
பகிர்வுக்கு நன்றியும் பாராட்டும்....!
வாழ்க வளமுடன்...! ///
எனும் சகோதரியின் கருத்தூட்டத்தை தெரியாமல் அலைத்து விட்டேன்.அதற்கு முதலில் மன்னிக்க வேண்டும். கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றீங்க சகோதரி.
அறிவுள்ளவர் வேறு, அறிவை ஆள்பவர் வேறு. 'அறிவிலி' க்கு எதிர்ச்சொல் 'அறிவுள்ளவர்'; 'அறிவாளி' யாக இருக்க முடியாது.
ReplyDeleteநல்ல சிந்தனை தான் அய்யா. அறிவிலி என்றே நான் உட்பட சொல்லிப் பழகி விட்டோம் என்றே நினைக்கிறேன். தொடர்ந்து நண்பர்களின் கருத்துக்கு விடுவோம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா.
Deleteஅறிவிலி எனும் சொல் உபயோகத்தில் இருப்பினும் சட்டென்று நினைவிற்கு வருவது முட்டாள் தான். காரணம் பழக்க தோஷம். அதற்காக முட்டாள் தான் சரியான சொல் என்று சொல்ல நான் முட்டாள் இல்லை மன்னிக்கவும் அறிவிலி இல்லை. உங்களின் விள்க்கம் அருமை.
ReplyDeleteமுதல் வருகைக்கு நன்றீங்க அய்யா. நீங்க அறிவாளி என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்தில்லை அய்யா. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தங்களது தளம் பார்த்தேன். விரைவில் தங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்து விடுகிறேன். தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றி.
Deleteஅறிவாளி என்ற சொல்லை 'அறிவுடையோன்' என்ற பொருளில் தான் பயன்படுத்துகிறோம். அறிவை ஆளுபவன் என்றெல்லாம் யாரும் கொள்வதில்லை. எனவே, 'அறிவாளி'யின் சரியான எதிர்ச்சொல், 'அறிவிலி' என்பதே ஆகும். - கவிஞர் இராய செல்லப்பா (இமயத்தலைவன்), சென்னை
ReplyDeleteஅய்யாவுடைய வருகை இன்ப அதிர்ச்சியாக உள்ளது. தங்களின் கருத்தே இந்த விவாதத்திற்கு விடை தந்தது. மகிழ்ச்சி. தொடர்ந்து கருத்துரைத்து வ்ழிகாட்டுங்கள். தங்களது தளத்திற்கு ஒரு முறை வந்த ஞாபகம். இனி தொடர்வேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா.
Deleteஉங்கள் விளக்கம் மிகச் சரியானது.
ReplyDeleteவருக வணக்கம் அய்யா. தங்களைப் போன்றோரின் வருகையைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. கருத்துக்கும் வருகைக்கும் நன்றி அய்யா. தொடர்ந்து இணைந்திருப்போம். தொடரும் நண்பர்கள் பட்டியலில் (FOLLOWERS) இணைந்தமைக்கும் நன்றி அய்யா.
Deleteகருத்தும் பதமும் நன்று இனிமை. இனிய வாழ்த்து.
ReplyDeleteநமது ஊரில் மேசன் வேலை செய்பவர் தனக்கு உதவிக்குக் கூட்டி வரும் ஆளையும் முட்டாள் என்று கூறுவார்கள்.
வேதா. இலங்காதிலகம்.
சகோதரியின் வருகை கண்டு மகிழ்ச்சி. மேசன் துணைக்கு கூட்டி வரும் நபரை சித்தாள் என்று இந்த்ப் பக்கம் கூறிக் கேட்டிருக்கிறேன். முட்டாள் என்றும் அழைப்பார்கள் என்ற புதிய செய்தியை உங்கள் மூலமே அறிந்து கொண்டேன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க சகோதரி.
Deleteஅறிவாளிக்கு எதிர்பதம் "முட்டாள்" இல்லை "அறிவிலி" என்பதாகும்.//
ReplyDeleteஅருமையாக சொன்னீர்கள்.
வணக்கம் அம்மா
Deleteதவறாமல் ஒவ்வொரு பதிவுக்கும் வருகை தரும் தங்களுக்கு அன்பான நன்றிகள். தங்களின் கருத்துரை உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க அம்மா.
நல்ல பதிவு, பாண்டியன். அறிவிலி என்று யாரும் இல்லை என்பது என் கருத்து. ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு இல்லாதவர், இன்னொரு விஷயத்தை அறிந்தவராக இருப்பார், இல்லையா? உதாரணமாக கணணி தொழில்நுட்பத்தில் நான் அறிவிலி!
ReplyDeleteகோவைக்கவி சொல்லியிருப்பது புதிதாக இருக்கிறது. பாருங்கள் இந்த விஷயத்திலும் நான் அறிவிலி!
என்னைப் பொறுத்தவரை யாருமே அறிவிலி இல்லை.
நீங்கள் போட்டிருக்கும் படம் மனதை உறுத்துகிறது. குழந்தையின் காதில் 'முட்டாள்' என்பது போல - குழந்தை இல்லையென்றால் வேறு யாரோ - மாற்றிவிடுங்கள், ப்ளீஸ்!
அதிகம் பேசிவிட்டேன் மன்னிக்கவும்.
தங்கள் கருத்தே என்னுடையதும் அம்மா.
Delete//ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவு இல்லாதவர், இன்னொரு விஷயத்தை அறிந்தவராக இருப்பார், இல்லையா? // கண்டிப்பாக அறிவிலி என்று யாரும் இல்லை.. படத்திற்கு மன்னிக்கவும் அம்மா. தாங்கள் கூறிய பின்பே தவற்றை உணர்ந்தேன். முட்டாள் சொல்லை எடுத்து விடுகிறேன் அம்மா. இது போன்று கருத்திட்டு தொடர்ந்து வழிகாட்டுங்கள். நன்றி அம்மா.
முட்டாள்==== முட்டு ஆள்
ReplyDeleteவினைப்பெயர் கொண்டு அழகாக சொன்னவிதம்
மனதை நிறைத்தது.....
வருக அய்யா. தங்களது வருகை கண்டு மகிழ்ச்சி. கருத்துக்கும் நன்றீங்க. தொடர்ந்து இணைந்திருப்போம்.
Deleteதிருவிழாக் காலங்களில் முட்டு ஆள்களைப் பார்த்திருக்கிறேன் .அருமையான பதிவு. வாழ்த்துக்கள். தங்கள் தளத்தில் இணைந்துள்ளேன் நண்பரே இனி தொடர்வேன். நன்றி
ReplyDeleteவணக்கம் அய்யா.
Deleteவருக அய்யா உங்களின் வருகை என்னுள்ளே ஒருவிதமான மகிழ்வைத் தருகிறது. கருத்திட்டமைக்கும் இணைந்தமைக்கும் நன்றீங்க அய்யா. இனி தொடர்ந்தே பயணிப்போம்.
ரஞ்சனி அம்மா சொன்னது போல் அறிவிலி என்று யாரும் கிடையாது என்பது என் கருத்தும். அந்த அறிவில் நல் அறிவும் இருக்கும், தீயறிவும் இருக்கும்.
ReplyDeleteமுட்டு+ ஆள் நல்ல விளக்கம்!
வணக்கம் அன்பு சகோதரிக்கு,
Deleteதங்களது கருத்தே எனதும். முட்டாள் என்பதற்கு விளக்கம் தர வேண்டுமென்பதே பதிவின் நோக்கம். யாரையும் அறிவிலி என்று காண்பிக்க அல்ல. நல்லதொரு கருத்துக்கும் வருகைக்கும் நன்றீங்க சகோதரி.
பாண்டியன்,
ReplyDelete//சப்பரதிர்க்கு முட்டு கொடுப்பதை தவிர அவர்களுக்கு வேறு வேலை ஒன்றும் தெரியாது. அதிலிருந்து யோசிக்க தெரியாமல் ஒரே வேலையை செய்து கொண்டு இருப்பவர்களை "முட்டாள்" என்று அழைப்பது பழக்கமாக ஆகிவிட்டது.//
இது சும்மா கிளப்பிவிட்டக்கதையா இருக்கும், கோயில் சப்பரம் தூக்கும் வேலை,முட்டுக்கொடுக்கும் வேலையை எல்லாம் கோயில் காரியங்களில் பரம்பரை பாத்தியதை உடையவர்கள் பெருமையாக செய்வது, பெரும்பாலும் ஊரில் விவசாயக்குடும்பத்தை சேர்ந்த மேட்டுக்குடி (உயர் குடி வகை) இதுல ஏகப்பட்ட ஜாதியக்காரணங்களும், இருக்கு சும்மா ஊரில் இருக்கவங்களை எல்லாம் அவ்வேலைக்கு சேர்க்க மாட்டாங்க, எனவே முட்டுக்கொடுக்கும் ஆள் ஒன்னும் தெரியாத ஆள் அல்ல,
காலில் முள் குத்தியிருந்தால் அவரும் முட்டாள் தான் என முள்+ தாள் = முட்டாள் எனவும் விளக்கம் கொடுக்கலாம் :–))
முடம், முடக்கு =செயலிழப்பு என்றப்பொருளீல் சொல்லப்படுவது. மூளை செயலிழந்த –முடமான ஆள் முட்டாள் , மூடம் என்றால் அறிவற்ற என்ற பொருள் உண்டு, அறிவாளிக்கு எதிர்ச்சொல் மூடர்/மூடன், இப்போக்கூட மூடர்கூடம்னு ஒரு படம் கூட வந்திருக்கு.
மடம் என்றாலும் அறீயாமை எனவே மடையன்/ மடையர் எனவும் சொல்லலாம். இன்னும் அசடன், கேணையன், என்றெல்லாம் இருக்கு.
முட்டாஹ் என்ற பாரசீக/உருது சொல்லுக்கு தற்காலிகம் எனப்பொருள் உண்டூ, முட்டாஹ் நிக்கா என அரேபியர்களிடம் ஒரு பழக்கம் கூட உண்டு, ஒரு பெண்னிடம் உடலுறவு வைத்துக்கொள்ள மட்டும் திருமணம் செய்துக்கொள்வது, ஒரு நாளோ, ஒரு மணி நேரமோ தான் தம்பதியாக இருப்பார்கள்! காரியம் முடிஞ்சதும் தலாக்...தலாக்...தலாக் :–))
எனவே தற்காலிக வேலை செய்பவர்களையும் முட்டாள் அல்லது முட்டாஹ் என்பார்கள்,தினக்கூலி வேல செய்பவர்கள் இஸ்லாமிய ஆட்சியின் போது முட்டாஹ்/ முட்டாள் எனப்பட்டார்கள், அது உருது கலப்பில் நம்ம ஊருக்கு வந்திருக்கலாம்.
முட்டா மேஸ்திரினு ஒரு தெலுங்குப்படம் கூட இருக்கு, சிரஞ்சீவி தினக்கூலிகளின் மேஸ்திரி =தலைவர்.
எப்படியோ திரு வவ்வால் அவர்களே முட்டாள் குறித்து இவ்வளவு நீண்ட விளக்கம் ரொம்ப அருமை...
Deleteமுட்டாள் பொதுவாக பெரிய தனவந்தர்களின் பல்லக்கை தூக்குபவர்கள், என்றே கருத வேண்டியிருகிறது.
ஆமாம் சகோததரே. திரு வவ்வால் அவர்களின் வருகையை சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நல்ல கருத்துக்களை தந்துள்ளார் என்பதில் மகிழ்ச்சியாக உள்ளது. வருகைக்கு நன்றீங்க சகோதரே.
Deleteவணக்கம் வவ்வால் அய்யா,
Deleteதங்கள் வருகைக்கு முதலில் நன்றி. தங்களது கருத்துரையின் மூலம் உங்களின் ஆழ்ந்த சிந்தனையும், கருத்துச் செறிவும் புலப்படுகிறது. நிறைய தகவல்களைக் கூறியிருக்கிறீர்கள். இதற்கான இப்படி ஒரு பதிவு இட்டதன் நோக்கமே. நண்பர்கள் அனைவருக்கும் தங்களது கருத்து சிந்தனையைத் தூண்டும். தங்களது வருகை இனியும் தொடர வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். வருகைக்கும் கருத்துக்கும் நன்றீங்க அய்யா.
நல்லதொரு பகிர்வும் அதனை தொடர்ந்த பின்னூட்டங்களையும் படித்து மகிழ்ந்தேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteவருகை கண்டதும் மகிழ்ச்சி. ஆம் சகோதரி பதிவை விட பின்னூட்டங்கள் நிறைய பேசுகிறது. வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றீங்க சகோதரி.