அரும்புகள் மலரட்டும்: May 2014

Thursday, 29 May 2014

உண்மையில் உலகம் மட்டும் தான் சுருங்கி விட்டதா?


இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு கற்பிணி பெண்ணுக்கு இடுப்புவலி வந்து விட்டால் வண்டியைக் கட்டுங்கடா பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லனும் எனும் குரலை கேட்டிருக்கலாம். மாட்டு வண்டி கட்டிகிட்டு நெடுதூரம் பயணம் செய்து தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி திரும்பும் கிராமத்துவாசிகளைப் பார்த்திருக்கிலாம். ஆனால் இன்று தெருவின் அடுத்த முனைக்கு செல்வதனாலும் இருசக்கர வாகனம் இல்லாமல் எழுந்திருப்பது இல்லை.

Tuesday, 27 May 2014

ஒரு கதை சொல்லும் பாடம்


நண்பர்களுக்கு வணக்கம். இன்று நாம் ஒரு கதையின் மூலம் ஒரு படிப்பினையை உணர்ந்து கொள்ளப்போகிறோம். கதை என்றால் சொந்தமாக சிந்தித்து எழுதிய கதை இல்லை அப்படி நான் சொந்தமாக சிந்தித்து எழுதினாலும் அதை நீங்கள் கதையாக ஏற்றுக் கொண்டாலே பெரிது. இதில் படிப்பினையை எங்கிருந்து பெறுவது. சரி கதைக்கு வருவோம் அந்த கதை அக்பர் பீர்பால் கதை தான்.

Sunday, 25 May 2014

தொலைந்து போன நதிகள்

இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நதிகள் இன்று இல்லை. மணல் கொள்ளை, தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகள், நிலச் சுரண்டல்கள் இப்படி நதிகளை அழித்தவிட்ட நிலையில் நதிகள் தொலைந்து போனதும் மட்டுமல்லாமல் இருந்த சுவடுகள் கூட தெரியாமல் போனது வேதனை.

ஹலோ எங்கே தேடுறீங்க? நான் இங்கே இருக்கிறேன்வணக்கம் நண்பர்களே இன்றைய உலகில் நாம் தொலைத்து விட்டு தேடுவது நிறைய அதில் ஒன்று தான் நமது சந்தோசம். இவற்றை நாம் அடைய யார் யாரிடமோ சென்று நிற்கிறோம். கோவிலில் தேடுகிறோம். கடற்கரை மணலில் சென்று தேடுகிறோம்.  திரைப்பட அரங்கில் தேடுகிறோம். இப்படி எத்தனையோ வழிமுறைகளைக் கையாளுகிறோம். புரியவில்லையா நண்பர்களே! விரிவாகவே கூறுகிறேன்.

Saturday, 24 May 2014

எமது அரசுப்பள்ளியும் தேர்ச்சி விகிதமும்

அரசு உயர்நிலைப்பள்ளி கல்குடி. புதுக்கோட்டை மாவட்டம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சிகல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய நாற்பதெட்டு மாணவர்களில் நாற்பத்தாறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Thursday, 22 May 2014

துன்பத்திற்கு காரணம் ஆசையா?


ஆசை தான் துன்பத்திற்கு காரணமென்று புத்தர் கூறி பல ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனால் இந்த ஆசை உலக மக்களை விட்டு வெளியேறி விட்டதா! அப்படி வெளியேற எண்ணுபவன் ஆசையே இல்லாமல் நான் வாழ வேண்டும் என்று எண்ணுவதாக எடுத்துக் கொள்வோம். ஆசையை ஒழித்து விட ஆசைப்படுவதாக தானே அர்த்தம். எல்லாம் துறந்த முனிவரிடம் உங்களுக்கு என்ன ஆசை இருக்கிறது என்று கேட்டால் பெரிதாக எனக்கு ஆசை ஒன்றும் இல்லை நான் கண் மூடுவதற்குள் கடவுளை கண்டு விட வேண்டும் என்று கூறுவதாக எடுத்துக் கொண்டால் இது எவ்வளவு பெரிய பேராசை தெரியுமா!

Monday, 19 May 2014

இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறையும் பதிவர்கள் சந்திப்பும்

                               
                           (பயிற்சியில் முதன்மைக்கல்வி அலுவலர் ஐயா)

புதுக்கோட்டை கைக்குறிச்சி வெங்கடேஸ்வரா பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழாசிரியர் கழகம் சார்பாக இணையத்தமிழ்ப் பயிற்சிப் பட்டறை 17,18.05.2014 (சனி, ஞாயிறு) இரு தினங்களும் நடைபெற்றதை நண்பர்கள் நன்கறிவீர்கள்.


முதல் நாள் நிகழ்வு

திரு. முனைவர் நா.அருள்முருகன் அவர்கள் (முதன்மைக் கல்வி அலுவலர்- புதுக்கோட்டை)தலைமையேற்று தொடங்கி வைத்து துவக்கவுரை ஆற்றினார்.
பின்னர் கலந்து கொண்டவர்கள் அறிமுகம் செய்து கொண்டனர். நண்பர்களின் பெயரை சொடுக்கினாலே அவரவர் வலைப்பக்கங்களுக்கு செல்லும் வண்ணம் அமைத்துள்ளேன்.

Friday, 16 May 2014

விதவிதமாக எண்ணெய் தேய்த்து குளிக்கணுமா! இதைப் படிங்க!


தீபாவளிக்கு தீபாவளிதான் பலரும் தலையில் எண்ணெய் வைத்து குளிக்கிறார்கள். ஆனால், வாரந்தோறும் சனிக்கிழமை எண்ணெய் குளியல் போட்டால் உடம்புக்கு எவ்வளவு நல்லது தெரியுமா? அதனால்தான், ‘சனி நீராடு’ என்று அந்த காலத்திலேயே சொன்னார்கள். நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து குளிப்பது மட்டுமே எண்ணெய் குளியல் அல்ல.

இது தான் உலகம் இவ்வளவு தான் வாழ்க்கை


வணக்கம் நண்பர்களே! தேர்தல்களத்தில் ஓட்டு எண்ணிக்கை சூடி பிடித்து இருக்கிறது. எல்லாம் தேர்தல் முடிவுகள் பற்றி பேசி கொண்டு இருக்கும் போது வாருங்கள் நாம் வேறு சில விசயங்களை ரீலாக்ஸா அதே சமயம் தீவிரமா யோசிப்போம்!!

1.என்னதான் மனுசனுக்கு வீடு , வாசல் , காடு, கரைன்னு எல்லாம் இருந்தாலும் ,ரயிலேறனும்னா ஃப்ளாட்பாரத்துக்கு வந்துதான்ஆகணும்- இதுதான் வாழ்க்கை.

Wednesday, 14 May 2014

தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு- ஒரு பார்வை


குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களிலேயே (சி.இ.ஓ.) விண்ணப்பிக்கலாம் என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்த ஒதுக்கீடு குறித்து பெற்றோர்கள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் கல்வித் துறை அதிகாரிகள் அளித்த சில விளக்கங்கள்:

Monday, 12 May 2014

வீதி கலை இலக்கிய களம்- மே மாத கூட்டம்


புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் முனைவர் திரு. அருள்முருகன் அவர்களின் ஆலோசனையாலும் கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களின் சீரிய முயற்சியாலும் இயங்கி வரும் வீதி கலை இலக்கிய களம் பற்றி நண்பர்களின் முந்தைய பதிவுகள் மூலம் அறிந்திருப்பீர்கள். 11.05.2014 அன்று நடந்த மே மாத கூட்ட ஒருங்கிணைப்பாளர்களாக நானும் திரு. கவிஞர் மகாசுந்தர் அவர்களும் இருந்தோம். கூட்டம் புதுக்கோட்டை ஆக்ஸ்போர்டு சமையற்கலை கல்லூரியில் நடைபெற்றது.

Friday, 9 May 2014

நெஞ்சை நெகிழ வைத்த தொலைக்காட்சி நிகழ்ச்சிமுன்பு ஒரு நாள் திருச்செந்தூரில் விழிப்பார்வை இழந்த சிறுவன் ஒருவனை பிறந்தவுடனே பெற்றோர்கள் கடற்கரையிலே தூக்கி எறிந்து விட்டு சென்றுள்ளனர். அவனை ஒரு மனிதர் எடுத்து வளர்த்துள்ளார். அச்சிறுவன் இயல்பிலேயே மனநிலை சரியில்லாதவன். அவனை ஒரு இடத்தில் இருக்க வைப்பது என்பது சாதாரண விசயமில்லை.

Monday, 5 May 2014

தன்னம்பிக்கையை விதைக்கும் நிகழ்வு


நிகழ்வு:

அமெரிக்க கால்பந்து வரலாற்றில் பிரவுன் என்பவர் கொடிகட்டி பறந்து கொண்டிருந்தார். அவர் ஒரு நாள் களத்திலிருந்து தனது வெற்றிக்கோப்பைகளுடன் வந்து கொண்டிருந்தார். அப்பொழுது அவரது முழங்கால் அளவிற்கே இருந்த சிறுவன் அவர் கால்களைச் சுரண்டினான்.

Saturday, 3 May 2014

திண்டுக்கல் லியோனி அவர்களும் நானும் ஒரே மேடையில்


வணக்கம் வலை உறவுகளே!
நீண்ட நாட்கள் அரும்புகள் மலரவில்லை. அடுத்தடுத்த வேலைப்பளுவே காரணம். இப்போது மீண்டும் அரும்புகள் மலர ஆரம்பித்து விட்டது. மலரும் அரும்புகள் உங்கள் மனம் கவரும் மணம் வீசும் நம்பிக்கை இருக்கிறது. என் நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய அன்பான நன்றிகள்.