அரும்புகள் மலரட்டும்: September 2015

Wednesday, 30 September 2015

பழசாகும் பண்பாட்டைக் காக்கணுங்க!


உலகம் தான் வளர்ந்திருக்கு மனசனுங்க
மனசெல்லாம் சுருங்கிருக்கு – முதியோர்
இல்லமெல்லாம் நிரம்பி வழிந்திருச்சு!

Tuesday, 29 September 2015

பெண்மையே படி தாண்டு!


தாய் தந்தைக்கு நல்ல மகளாய், உடன் பிறந்தோர்க்கு பாசமுள்ள சகோதரியாய், நண்பர்களுக்கு நல்லதொரு தோழியாய், கணவனுக்கு அன்பு மனைவியாய், தம் பிள்ளைகளுக்கு பாலூட்டி, சீராட்டி வளர்க்கும் அன்பே உருவான தாயாக, புகுந்த வீட்டிற்கு பொறுப்புள்ள மருமகளாக, பேரக்குழந்தைகளுக்கு வழிகாட்டும் பாட்டியாய் தனது வாழ்க்கையில் பல பரிமானங்களைப் பெறும் பெண்மையை மென்மையாக நடத்தி போற்ற வேண்டியது மட்டுமல்ல காக்க வேண்டியதும் இச்சமூகத்தின் கடமை.

Sunday, 27 September 2015

நரேந்திர மோடி ஏன் உலகை கவர்கிறார்... தெரியாத சில ரகசியங்கள்!

உலகளவில் அமெரிக்க அதிபர் ஒபமாவுக்கு பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் பேர் பின்தொடரும் நபராக இந்திய பிரதமர் நரேந்திர மோடி இருக்கிறார். தகவல் தொடர்பு நிறுவனங்களின் உலகத் தலைநகராக கருதப்படும் சிலிக்கான் வேலியே அவரது வருகையால் சிலிர்த்துக் கொண்டது என்றுதான் சொல்ல வேண்டும். உலக நாடுகளில் மோடிக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு இருக்கிறது என்றால் அதில் சில ரகசியங்களும் அடங்கியிருக்கிறது.

Thursday, 24 September 2015

தமிழக அரசின் கவனத்தை ஈர்ப்போம்! வாருங்கள் புதுக்கோட்டைக்கு!

`அப்பப்பா என்னா என்னா வெயிலு வீட்டை விட்டு நாலு எட்டு வைத்தாலே வாட்டி வதைக்குதடா மனிசனே! மண்டையெல்லாம் கிறுகிறுனு சுத்துதடா எப்பதான் இந்த வெயிலு குறையப் போகுது`  என்று புலம்பித் தீர்ப்பவர்களிடம் அடே ஞானசூனியங்களா மரத்தையெல்லாம் வெட்டிப்புட்டு இப்படி புலம்புறதுல என்னடா நியாயம் இருக்குனு அவங்க நடு மண்டைல நச்சுனு உரைக்கிற மாதிரி நீங்க சொல்லனும்னு ஆசைப் படுகிறீர்களா!

Tuesday, 22 September 2015

தமிழால் இணைந்திடுவோம்! புதுக்கோட்டை வாரீர்!


பாண்டியரும் களப்பிரரும்
களம் கண்ட கோட்டை
பல்லவர்களோடு முத்திரையர்கள்
வெற்றி முகம் பதித்த கோட்டை


Saturday, 19 September 2015

வைகோ நல்ல தலைவர் தான்.ஆனால்? - விகடனின் ஓர் அலசல் ரிப்போர்ட்!

அரசியல் கட்சி உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால், கட்சி உடைவதற்கு ஒரு சில காரணங்கள் போதும். பெரும்பாலான சமயங்களில் ஒரே ஒரு காரணமே கட்சி உடைவதற்கு காரணமாக இருந்து விடுகிறது. எதிலும், சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற தலைவர்களின் முனைப்புதான் கட்சிகள் பிளவை சந்திக்க காரணமாக அமைகிறது. தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கினால் இதனை நாம் உறுதி செய்துகொள்ள முடியும்.

Sunday, 13 September 2015

புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் திருவிழா 2015 - கையேடு வழங்கும் திட்டம் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான அச்சாரம்.


வலை உறவுகளுக்கான வணக்கம். அனைவரும் நலம் தானே? அதான் நேரிலே சந்திக்க இருக்கோமே அதுக்குள்ள என்ன நலம் விசாரிப்பு என்று தானே கேட்கிறீர்கள்? அதுவும் சரி தான். இன்னும் 27 நாட்களில் நாமெல்லாம் புதுக்கோட்டையில் சங்கமிக்க இருக்கிறோம். அந்த நாளை நினைக்கையில் இதுவரைக் காணாத தூரத்துச் சொந்தங்களை எல்லாம் ஒரே இடத்திம் ஒரே நாளில் சந்திக்க இருக்கிறோம் எனும் உவகை மரத்தில் கட்டிய தொட்டிலென அங்கும் இங்கும் மனதில் ஊஞ்சலாடுகிறது. அனைவரும் வர வேண்டுமென்பதே என் அவா.

புதுக்கோட்டை நண்பர்கள் விழா சிறப்பாக நடைபெற கவிஞர். முத்துநிலவன் அவர்களின் தலைமையில் அனைத்து ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டு காலில் சக்கரம் கட்டியது போல சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். விழாவின் சிறப்பம்சமாக பதிவர் கையேடு தர இருப்பது கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் சிந்தையில் தோன்றிய சிறப்புமிக்க திட்டம். முதலில் அவருக்கு நமது நன்றிகள்.

Saturday, 12 September 2015

தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்


வணக்கம் நண்பர்களே! அனைவரின் நலம் அறிய ஆவல். பத்தாம் வகுப்பு தமிழ்ப் பாடம் தமிழில் அறிவியல் சிந்தனைகள் எனும் பாடத்திற்காக புத்தகத்தில் இல்லாத வேறு தகவல்களைச் சொல்லலாம் என்பதற்காக இணையத்தில் உலாவி சேகரித்த தகவல்கள் உங்களுக்கும் உதவும் எனும் நம்பிக்கையில் பதிவிடுகிறேன்.

Saturday, 5 September 2015

சபாஷ்! குஷ்பு அவர்களே! சபாஷ்!


தம்மை பெரியாரிஸ்ட் என்று பிரகடனப்படுத்தி வரும் நடிகை குஷ்பு டுபாக்கூர் கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார். நக்கீரன் வாரமிருறை இதழில் நடிகை குஷ்பு 'லாபம் கொழிக்கும் காவி உடை' என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது: