Tuesday, 31 March 2015
Monday, 30 March 2015
இந்திய விளையாட்டு ரசிகர்கள் மாற வேண்டும்
இந்திய அணி உலக கோப்பை இறுதிப் போட்டிக்கு தகுதி பெறவில்லை என்ற கவலை எனக்கும் ஏற்பட்டது தான். இருந்தாலும் விளையாட்டில் வெற்றி என்பதும் தோல்வி என்பதும் இரு துருவங்கள். வெற்றி பெறும் போது தலையில் தூக்கி கொண்டாடிய ரசிகர்கள் தோல்வி அடைந்தவுடன் அவர்களின் கொடும்பாவிகளை எரிப்பது, வீடுகளைத் தாக்குவது என்று வன்முறையில் இறங்குவது எவ்வளவு கேலிக்கூத்தான செயலாக இருக்கிறது. தோல்வி அடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டியது ஒவ்வொருவரின் ரசிகனின் கடமை அல்லவா! உண்மையில் இந்திய அணி இந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் யாரும் எதிர்பார்க்காத எழுச்சியைப் பெற்றது (இறுதிப் போட்டியைத் தவிர)
Sunday, 29 March 2015
வியக்க வைக்கும் சோழர்களின் தேர்தலும், ஆட்சி முறையும்!
“உத்திரமேரூர்” இது பிற்காலச் சோழர் காலத்தில் ஒரு சிறிய ஊராக விளங்கியது. இவ்வூரில் உள்ள வைகுந்தப் பெருமாள் கோவிலின் கற்சுவரில் ஒரு பெரிய கல்வெட்டுக் காணப்படுகின்றது. இது உத்திரமேரூர்க் கல்வெட்டு எனப்படுகிறது.
Wednesday, 25 March 2015
உங்கள் நடவடிக்கை இங்கு கண்காணிக்கப்படுகிறது!
நம்மை யாரும் கவனிக்கவில்லை என்றால் நமது நடவடிக்கை இயல்பாக இருக்கும். உதாரணமாக தெருவில் நடந்து வரும் போது இயல்பாக கையை வீசிக் கொண்டு நடந்து வருவோம். அதுவே யாராவது நம்மைக் கவனிக்கிறார்கள் என்று நமக்கு தெரிந்து விட்டால் அடக்கமாக அமைதியான முகத்தோடு அவர்களைக் கடந்து விடுவோம். இது இயல்பு தான். இதில் ஒன்றும் தவறில்லை.
Tuesday, 24 March 2015
நீங்கள் எப்படிப் பட்டவர்கள் - ஒரு பொழுதுபோக்கு
A என்பது குறிப்பிடத்தக்க எழுத்தாகும். உங்கள் பெயர் A என்ற எழுத்தில் தொடங்கினால், நீங்கள் உறுதியான ஒரு நபராக இருப்பீர்கள். அதிகார தோரணையுடன் பிறரை வழி நடத்துவீர்கள். மேலும் தீரச்செயல் புரிந்திட தொடர்ந்து முயற்சிப்பீர்கள். வாழ்க்கையின் மீது வலுவான ஈடுபாடு இருக்கும். அதே போல் யாரையும் சாராமல் இருப்பீர்கள். உங்களின் துணிவு, நேர்மை மற்றும் உடல் அம்சம் ஈர்க்கும் வகையில் அமையும்.
Monday, 9 March 2015
நான் ஒரு பெண்! - சிந்திக்க சில நிமிடங்கள்... பிரியா தம்பியின் விகடன் கட்டுரை
நான்... நான் ஒரு பெண்; நான் ஒரு மகள்; நான் ஒரு தாய்; நான் ஒரு தங்கை; நான் ஒரு மனைவி; நண்பர்களுக்கு நான் ஒரு தோழி; வேலை செய்யும் இடத்தில் நான் மேலதிகாரி. 30 ஆண்டுகளுக்கு முன் இருந்ததுபோல் இன்று என் வாழ்க்கை இல்லை. பொருளாதாரத்தில் நான் தனித்து நிற்கிறேன். விரும்பிய உடைகளை அணிகிறேன். ஆனால், எங்கேனும் ஒப்பனைகள் இன்றி நான், நானாக இருக்க முடிகிறதா?
Sunday, 8 March 2015
நெகிழ வைக்கும் கதை - நிஜத்திலும் நிகழ்கிறது
Saturday, 7 March 2015
முகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி...?
நிர்பயா வழக்கில், ‘பாலியல் பலாத்காரத்துக்குப் பெண்கள்தான் பொறுப்பு. பெண்கள் கண்ணியமான ஆடை அணிய வேண்டும். இரவு ஒன்பது மணிக்கு மேல் வெளியில் செல்லும் பெண் ஒழுக்கமானவள் அல்ல' என குற்றவாளி முகேஷ் சிங் தெரிவித்துள்ள கருத்துகள் கடும் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது. கடந்த 2012ம் ஆண்டு தனது நண்பருடன் சினிமாவுக்கு சென்றுவிட்டு, இரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த மருத்துவ மாணவி நிர்பயா, ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாகப் பலாத்காரம் செய்யப்பட்டார். 13 நாட்கள் சிகிச்சைக்குப் பின் பரிதாபமாக உயிரிழந்தார் நிர்பயா.
Subscribe to:
Posts (Atom)