அரும்புகள் மலரட்டும்

Friday, 8 January 2021

பத்தாம் வகுப்பு- தமிழ் - இணையவழித் தேர்வு (சான்றிதழோடு)


    அனைவருக்கும் வணக்கம், தீநுண் பெருந்தொற்று காலத்தில் மாணவர்களின் கல்வி பாதிக்காத வண்ணம் தமிழக அரசு கல்வித் தொலைக்காட்சி மூலம் பாடங்களை மாணவர்களின் இல்லங்களுக்கே எடுத்துச் சென்றிருப்பதை நாம் அறிவோம். அதைத் தொடர்ந்தும் தனியார் பள்ளிகள் இணைய வழி வகுப்புகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். தன்னார்வ ஆசிரியர்கள் தங்களின் பங்களிப்பைப் பல்வேறு வழிகளில் மாணவர்களுக்குக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தவகையில்

Wednesday, 19 August 2020

பத்தாம் வகுப்பு - தமிழ்- இயல் 3 ஒரு மதிப்பெண் வினாக்கள்

வணக்கம், 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்வகையில் இப்பக்கத்தில் சில பயிற்சி சார்ந்த பதிவுகளின் தொடர்ச்சியாக தமிழ்ப்பாடம் இயல் 3- க்கான ஒரு மதிப்பெண் வினாக்கள் (25 வினாக்கள்) விளையாட்டுமுறையில் பகிர்ந்திருக்கிறேன் .  நண்பர்கள் இந்தப் பக்கத்தை மாணவர்களோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன். குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்கும்வகையிலும் வடிவமைத்து ஆன்லைன் தேர்வாகவும் நடத்தலாம். PDF முறையில் பதிவிறக்கம் செய்து வினாத்தாளாகவும் மாணவர்களுக்குக் கொடுக்கலாம். வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும். நன்றி.

Tuesday, 4 August 2020

பத்தாம் வகுப்பு -தமிழ் - பயிற்சிப் பக்கம்

 வணக்கம், 
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கும்வகையில் இப்பக்கத்தில் சில பயிற்சி சார்ந்த பதிவுகளைத் தொடர்ந்து பதிவிடுகிறேன். இந்தக் கடினமான கொரோனா சூழலில் மாணவர்களுக்குப் பயன்தரும் என்னும் நம்பிக்கையோடு பகிர்கிறேன். நண்பர்கள் இந்தப் பக்கத்தை மாணவர்களோடு பகிர்ந்துக்கொள்ள வேண்டுகிறேன்.

Saturday, 23 November 2019

யாதுமானவள்


விழியில் வைத்துக்கொண்டு
வழியெல்லாம் தேடுகிறேன் உன்னை !
அழுது விடாதே கரைந்து
விடுவேனென ஆறுதல் சொல்கிறாய்!

உன் நினைவுகளில் மூழ்கி
மூச்சடைத்து போகிறேன்!
உன் சுவாசக்காற்று
என்னை மீட்டெடுக்கிறது!

Monday, 18 November 2019

பெருந்தமிழர் தியாகி சங்கரலிங்கனார்

1956 அக்டோபர் 10 ஆம் தேதி மதுரை எர்ஸ்கின் மருத்துவமனை வழக்கத்துக்கு மாறாக பரபரப்பில் மூழ்கியிருந்தது. ஒரு நாள் அல்ல இரண்டு நாள்கள் அல்ல 76 நாள்கள் உண்ணவிரதம் இருந்து மோசமான உடல்நிலையில் ஒருவர் அனுமதிக்கப்பட்டதே அந்தப் பரபரப்புக்குக் காரணம். தொடர்ந்து மூன்று நாள்களாக போராடிய மருத்துவர்களின் போராட்டத்திற்குப் பலன் இல்லாமல் அந்த உயிர் 1956 அக்டோபர் 13 ஆம் தேதி பிரிந்தது.

அறிஞர் அண்ணா, காமராசர், ம.பொ.சிவஞானம், ஜீவானந்தம் உட்பட பல தலைவர்கள் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டும் உண்ணாவிரத்தைக் கைவிடாது தீரத்தோடு போராடி தன் இன்னுயிரைத் துறந்து, இன்றுவரை சாகும்வரை உண்ணாவிரதம் என்னும் சொல்லுக்கு உதாரணமாய், கொண்ட கொள்கையில் துளியளவுகூட சமரசம் செய்து கொள்ளாமல் போராடிய அந்த போராளிதான் தியாகி சங்கரலிங்கனார்.

Tuesday, 22 October 2019

விழிமின்

Wakeup
நன்றி: கூகுள்
வனம் அழித்து வான்மழை இழந்தாச்சு
புல் பூண்டையெல்லாம் காயும்
வெயிலுக்குக் காவு கொடுத்தாச்சு!

ஆறு ஏரி குளம் குட்டைகளையெல்லாம்
ஆரறிவு அலப்பறையால் அழித்தாச்சு
கொஞ்சமிருந்த நீரையும் குடுவைக்குள் அடைத்து விலைபேசி வித்தாச்சு!

Thursday, 17 October 2019

புதுக்கோட்டை இணையப் பயிற்சி முகாம்- 2019


புதுக்கோட்டை கணினித் தமிழ்ச்சங்கம், வீதி இலக்கிய களம் நடத்திய இணையத் தமிழ்ப் பயிற்சி முகாம் புதுக்கோட்டை ஜே.ஜே கல்லூரியில் அக்டோபர் 12,13 ஆகிய 2 தேதிகளில் நடைபெற்று முடிந்திருக்கிறது. அப்பயிற்சியில் நானும் கலந்து கொண்டேன் என்பதில் பெரு மகிழ்வு.மணப்பாறையில் இருந்து புதுக்கோட்டைக்கு நானும் அண்ணா ரவி ஐயா அவர்களும் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்துக் கல்லூரியைச் சென்றடைந்தோம். வளாகத்திற்குள் நுழைந்ததும் பயிற்சி நடைபெறும் இடத்திற்கு அம்புக் குறியிட்ட பதாகை நம் விரல் பிடித்து அழைத்துச் செல்லும் வண்ணம் ஒட்டப்பட்டிருந்தது.

Tuesday, 27 August 2019

புதிய மனிதன்


சான்றோர் அருகில் வந்து நில் என்றார்கள்
தன் தகுதி அறிந்து
கால்களிரண்டும் தந்தி அடித்தது!

பொதுமேடை பேசு என்றார்கள்
உனக்கேன் இந்த வேலையென்று
ஒலிவாங்கி ஓங்கி அறைந்தது!

Sunday, 27 November 2016

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016


உண்மையான வாசகன்,
வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்


வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து நடந்தவர்கள் எல்லாம் இன்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் அறிவார்ந்த சிந்தனைகளை உலகிற்கு வழங்குபவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை.

Saturday, 22 October 2016

வாழ்க்கைப் பயணம்


வாழ்க்கையெனும் வனத்திலே
பயணத்தைத் தொடர்கிறேன்!
வழிதெரியா குழந்தை போல்
விழி பிதுங்கி நிற்கிறேன்!

Tuesday, 26 July 2016

பிறந்த நாள் வாழ்த்து- கவிதை

எங்கள் இல்லத்தின் தேவதையே உனக்கு
வானத்து தேவதைகள் வாழ்த்து சொல்ல
வரிசையில் நிற்கின்றார்கள்!

உனக்கு வாழ்த்து சொல்ல ஒற்றை ரோஜாவைத் தேடுகிறோம் மொத்தத் தோட்டமும்
முண்டியடித்து வருகிறது!

Friday, 8 April 2016

மூன்றாம் வகுப்பு படித்தவர்க்கு பத்மஸ்ரீ விருது- ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்





இனிப்பு கடை ஒன்றில் பாத்திரம் கழுவுபவர்க்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சாத்தியமானதா! மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் ஏராளமான கவிதைகளும் காவியங்களையும் படைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் முடியும் என்பதை நம்ப முடிகிறதா? இவரைப் பற்றி ஐந்து மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அவர் ஒடிசாவைச் சேர்ந்த பிரபலக் கவிஞர் ஹால்டர் நாக். ஒடிசா இலக்கியத்தில் இவரது பங்களிப்பு அதிகம்.

Sunday, 13 March 2016

காதல் அலங்காரம்!

உனது நடுநிசி உளரல்கள்
எனது பெயரை உச்சரிக்கும் போதும்!
உன் தனிமை என் நினைவுகளால் தகிக்கின்ற போதும்!

Wednesday, 2 March 2016

இதுவே இறுதி


அன்றாட வாழ்வில் பெரும்பாலான பணிகளை நாளைக்கு ஒத்தி வைக்கும் பழக்கம் நம்மில் பலருக்கு உண்டு. நாளைக்காக இன்றைய சந்தோசத்தைத் தொலைத்துக் கொண்டிருப்பவர்களும் நாம் தான். எதிர்காலத்தைப் பற்றிய கவலையில் நிகழ்காலத்தின் இன்பங்களைப் பருக மறுப்பதும்/ மறப்பதும் நாம் தான். வாழ்வில் நமக்கு கிடைக்கிற ஒவ்வொரு தருணங்களாக இருந்தாலும் சரி வாய்ப்புகளாக இருந்தாலும் சரி இதுவே நமக்கு கிடைத்த இறுதி தருணமாகவும் வாய்ப்பாகவும் நாம் பார்க்கத் தொடங்கினால் நிச்சயம் பயன் கிட்டும்.

Tuesday, 1 March 2016

ஔவையாரின் புலமை விளையாட்டு - ஓர் இலக்கியப் பகிர்வு


ஔவையார் ஒரு நாள் சோழ நாட்டிலிருந்த "அம்பர்" என்ற ஒரு ஊரின் ஒரு தெரு வழியே நடந்து சென்றுகொண்டிருந்தார். களைப்பு மிகுதியால் அந்தத் தெருவிலிருந்த ஒரு வீட்டின் திண்ணையில் சற்றே அமர்ந்தார்.

Thursday, 18 February 2016

விவேகானந்தரின் பொன்மொழிகள் (பகுதி 2)


கண்ணுக்கு புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால், கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்?  இதுவே வேதாந்தம்.

தவறே செய்ததில்லை என்பவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.

Wednesday, 17 February 2016

விவேகானந்தரின் பொன்மொழிகள்

நண்பர்களுக்கு வணக்கம். அனைவரின் நலமறிய ஆவல். நீண்ட நாள்களுக்கு எனது வருகை உங்களுக்கெல்லாம் உவகையளித்தால் அதுவே அடியேனின் பெரும்பேறு. ஒரு சிறிய புத்தகம் இன்று என்னை இங்கு அழைத்து வந்திருக்கிறது என்றால் அது மிகையல்ல. அந்த புத்தகம் சுவாமி விவேகானந்தரின் சிந்தனைத் துளிகள். அதிலிருந்து சில சிந்தனைகள் இங்கே நண்பர்களின் சிந்தையை மகிழ்வூட்டும் எனும் நம்பிக்கையில்….



+ நீ இன்னும் படிக்காத புத்தகத்தைப் படிக்காத புத்தகம் என்று சொல்லாதே! படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்.
+ பிரச்சனை ஒரு நாய், நாம் ஓடினால் அது துரத்தும்- எதிர்த்து நின்றால் அது ஓடும்.
+ பலவீனத்திற்கானப் பரிகாரம் ஓயாமல் பலவீனத்தைக் குறித்து சிந்திப்பதல்ல, மாறாக வலிமையைக் குறித்து சிந்திப்பது தான்.

Friday, 11 December 2015

போராடிய திருச்சி சிவா அவர்களுக்கு பாராட்டுகள்

வரலாறு காணாத மழையால் பாதித்துள்ள தமிழகத்தை கருத்தில் கொண்டு, அகில இந்திய சிவில் சர்வீஸ் தேர்வை தள்ளி வைக்க மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார். இந்த கோரிக்கையை பிரதமரிடம் வைக்க கடுமையாக போராடியுள்ளார் திருச்சி சிவா.

Friday, 4 December 2015

இயல்பு நிலை திரும்பட்டும்.

வணக்கம் நண்பர்களே!
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா 2015 முடிந்தவுடன் சகோதரர் திரு. திண்டுக்கல் தனபாலன் அவர்களும் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு வந்து மழையில் மாட்டிக் கொண்டு அவரை மட்டும் பேருந்தில் அனுப்பி விட்டு நான் சுமார் 1.30 மணி நேரம் காத்திருந்தும் மழை நிற்காததால் நனைந்து கொண்டே வீடு சென்ற தருணமே எனக்கும் வலைப்பதிவர்களுக்குமான கடைசி சந்திப்பாக வெகு நாட்களாக இருந்து வந்தது.

Sunday, 11 October 2015

வலைப்பதிவர் திருவிழா பகுதி 2

  • கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!