அரும்புகள் மலரட்டும்: யாதுமானவள்

Saturday 23 November 2019

யாதுமானவள்


விழியில் வைத்துக்கொண்டு
வழியெல்லாம் தேடுகிறேன் உன்னை !
அழுது விடாதே கரைந்து
விடுவேனென ஆறுதல் சொல்கிறாய்!

உன் நினைவுகளில் மூழ்கி
மூச்சடைத்து போகிறேன்!
உன் சுவாசக்காற்று
என்னை மீட்டெடுக்கிறது!


உன் பிரிவின் வலி நெஞ்சை
உளி கொண்டு தாக்கும்போது
எங்கிருந்தோ ஓடி வந்து
நீ பாசமாய் பகிர்ந்த சொற்கள்
மயிலிறகால் வருடுகிறது!

நீயில்லா துயரில் திக்கற்ற காட்டில்
விக்கி நிற்கிறேன்!
வழித்துணைக்கு வருவதென்னவோ
நீயும் உன் நினைவுகளும்தான்!

விலகிப் போகும் போதெல்லாம் 

குருதி சூடேறி இதயத்தைச் 
சேரும் முன்னே நாம் பழகிய நாட்கள்
பன்னீர் சாரல் கொண்டு தணிக்கிறது!

அறையை மூடிக்கொண்டு
தனிமையைத் தேடுகின்றேன்
தாழ்ப்பாளைத் தகர்த்துக் கொண்டு
உன் உருவம் எனக்குள்ளே புகுகிறது!

என் நோயும் மருந்தும் நீயென
இக்கணம் அறிந்து கொண்டேன்!
எக்கணமும் என்னோடு இருந்துவிடு நான் மனதால் மரணிக்கும் போதெல்லாம் உயிர்த்தெழுவேன்!கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

7 comments:

 1. Replies
  1. நன்றி நண்பரே தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கும்.

   Delete
  2. நன்றிங்க ஐயா.நலமறிய ஆவல். எத்தனையோ ஆண்டுகளுக்குப்பின் கருத்துரையில் தங்களைக் காண்பதில் மகிழ்ச்சி.

   Delete
 2. Replies
  1. சக ஆசிரியரின் வரிகளை ஊக்கப்படுத்தும் நோக்கில் வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றிங்க ஆசிரியரே.

   Delete