அரும்புகள் மலரட்டும்: புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016

Sunday, 27 November 2016

புதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016


உண்மையான வாசகன்,
வாசிப்பதை முடிப்பதே இல்லை!
– ஆஸ்கார் வைல்ட்


வாசிப்பு எதிர்கால வெற்றிக்கான திறவுகோல். சிறுவயதிலிருந்தே புத்தக நண்பனின் விரல்பிடித்து நடந்தவர்கள் எல்லாம் இன்று மற்றவர்களுக்கு வழிகாட்டியாகவும் அறிவார்ந்த சிந்தனைகளை உலகிற்கு வழங்குபவர்களாக இருக்கிறார்கள் என்பது உண்மை.

பள்ளி பருவத்தில் விடுமுறை தினங்களில் நூலகத்திற்கு சென்று புத்தகம் வாசிக்கும் பழக்கத்தையும், ஒரு முறை அடுத்த விடுமுறை தினம் என்பதால் என்னை உள்ளேயே வைத்து பூட்டி விட்டு செல்லுங்கள் நீங்கள் வந்து திறக்கும் வரை நான் இங்கேயே புத்தகங்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று தனது புத்தகத் தாகத்தைக் கவிஞர் முத்துநிலவன் அய்யா ஒரு பதிவில் சொன்னதாக நினைவு.

புதுக்கோட்டையில் புத்தகத் திருவிழா நடத்திட வேண்டுமென்பது அவரின் நீண்ட கால கனவு இன்று அது நனவாகி இருக்கிறது. ஆம் புதுக்கோட்டையில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் நடத்தும் புத்தகக் கண்காட்சி இனிதே நடந்து வருகிறது. அதற்காக சான்றோர்கள் பலரும் அயராது இரவு பகல் பாராது உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதோ நம்மை அனைவரையும் கவிஞர் முத்துநிலவன் அய்யா அழைக்கிறார். வாருங்கள் சென்று வாசிப்போம்  http://valarumkavithai.blogspot.com/2016/11/2016.html

வாசிப்பைச் சுவாசிப்பாய் கொண்டவர்கள் அனைவரையும் புதுபுது புத்தக ஆக்‌சிஜன் சிலிண்டர்களால் நிரம்பி நிற்கும் புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவிற்கு சென்று (சு)வாசித்து மகிழ அன்போடு நானும் அழைக்கிறேன். வாருங்கள் அனைவரும் குடும்பம் சகிதமாக. புதுக்கோட்டை படைப்பாளர்களுக்கெனத் தனியாக அரங்கு அமைத்திருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி. நான் சென்று வர ஆவலோடு காத்திருக்கிறேன். என்னோடு அனைவரும் இத்திருவிழாவைப் பயன்படுத்திக் கொள்ள அன்போடு வேண்டுகிறேன். நன்றி.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

5 comments:

  1. நல்ல வாய்ப்பு.பகிர்ந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  2. இனி நடப்பவை நன்மைகளாகும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !

    எனது புத்தாண்டு பதிவு : நடப்பவை நன்மைகளாகட்டும் !
    http://saamaaniyan.blogspot.fr/2017/01/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
  3. பாண்டியன் நலமாக இருக்கிறீங்களோ? புதுவருட வாழ்த்துக்கள். உண்மைதான் வாசிப்பு என்பது மிகச் சிறந்த ஒன்று, ஆனா இப்போ எல்லாமே இண்டநெட் என்றாகிவிட்டதால் பொழுதுபோக்குக் கூடிவிட்டது, வாசிப்புக்கு நேரம் ஒதுக்க முடிவதில்லை என்பதுதான் வருத்தமான உண்மை.

    ReplyDelete
  4. அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்

    எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
    http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்

    நன்றியுடன்
    சாமானியன்

    ReplyDelete
  5. தம்பி
    இரண்டாம் ஆண்டுத் திருவிழா வெற்றிகரமாக நடந்து முடிந்துவிட்டது


    இன்னும் பரோல் கிடைக்கவில்லையா என்ன ?

    ReplyDelete