அரும்புகள் மலரட்டும்: மூன்றாம் வகுப்பு படித்தவர்க்கு பத்மஸ்ரீ விருது- ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்

Friday, 8 April 2016

மூன்றாம் வகுப்பு படித்தவர்க்கு பத்மஸ்ரீ விருது- ஒடிசா கவிஞர் ஹால்டர் நாக்





இனிப்பு கடை ஒன்றில் பாத்திரம் கழுவுபவர்க்கு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது சாத்தியமானதா! மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்த ஒருவர் ஏராளமான கவிதைகளும் காவியங்களையும் படைத்து அரசின் கவனத்தை ஈர்க்கும் முடியும் என்பதை நம்ப முடிகிறதா? இவரைப் பற்றி ஐந்து மாணவர்கள் ஆய்வு கட்டுரைகள் சமர்பித்து முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்கள் என்றால் வியப்படையாமல் இருக்க முடியவில்லை. அவர் ஒடிசாவைச் சேர்ந்த பிரபலக் கவிஞர் ஹால்டர் நாக். ஒடிசா இலக்கியத்தில் இவரது பங்களிப்பு அதிகம்.


இவரைப் பற்றியும், இவரது வாழ்க்கையைப் பற்றியும் பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது. சம்பால்பூர் பல்கலைக்கழகம் இவரது படைப்புகளை பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வைத்துள்ளது. இவ்வளவு பெருமைகளுக்குச் சொந்தக்காரரான ஹால்டர் படித்தது மூன்றாம் வகுப்பு தான் என்றால் நம்புவதற்கு கொஞ்சம் ஆச்சர்யமானத் தான் இருக்கும். பார்ப்பதற்கும் பழகுவதற்கும் கூட மிகவும் எளிமையானவர் ஹால்டர்.

எப்போதும் வேட்டியும் பனியனும் மட்டுமே அணிந்து, கழுத்தில் துண்டுடன் காட்சி தரும் ஹால்டர், இதுவரை காலில் செருப்பு அணிந்ததே இல்லை. ஆனால் தினந்தோறும் மூன்று அல்லது நான்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கவிதை பாடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் இவர்.

கடந்த 1950 ம் ஆண்டு ஒடிசாவில் உள்ள பர்கார் மாவட்டத்திலுள்ள கென்ஸ் பகுதியில் வாழ்ந்து வந்த ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர் தான் ஹால்டர். தந்தையை இழந்ததால், மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது படிப்பைப் பாதியில் நிறுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து இனிப்புக் கடை ஒன்றில் பாத்திரம் கழுவும் பணியில் சேர்ந்தார் அவர். அதனைத் தொடர்ந்து மேல்நிலைப்பள்ளி ஒன்றில் 16 ஆண்டுகள் சமையல்காரராக பணிபுரிந்தார். வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்த ஹால்டர் பின்னர், பள்ளிக் குழந்தைகளுக்குஹ்ட் தேவையான பொருட்களை விற்கும் கடை ஒன்றை சொந்தமாகத் தொடங்கினார்.

கடந்த 1990ம் ஆண்டு தான், இவர் தனது முதல் கவிதையான “தோடோ பர்காச்” என்ற கவிதையை இயற்றினார். அதற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, கவிதைகள் இயற்றுவதில் ஹால்டருக்கு ஆர்வம் ஏற்பட்டது. தற்போது உலகம் முழுவதும் இவரது கவிதைகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இவரது கவிதையின் கருப்பொருள் சமூகம், அரசியல், அறிவியல் என கலவையாக இருக்கும்.

இந்நிலையில், கடந்த திங்களன்று குடியரசுத் தலைவர் கையால், நாட்டின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். இவரைப் பிரபல ஒடிசா கவிஞர் கங்காதஎ மெஹருக்கு இணையாகப் புகழ்பவர்களும் உண்டு. பத்ம விருது அம்பானி போன்ற பண முதலைகளுக்கு மத்தியில் இந்த சாமானியனை வாழ்த்துவோம். நன்றி நண்பர்களே!

நன்றி : ஒன் இந்தியா செய்தி தளம்


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

3 comments:

  1. நல்ல செய்தி...
    நம்ம மேலாண்மை பொன்னுச்சாமி கூட படிக்காதவர்தானே...

    ReplyDelete
  2. பள்ளி படிப்புக்கும் திறமைக்கும் சம்மந்தம் கிடையாது என்பதை மீன்டும் நிருபித்த செய்தி என்பதுடன் அவரது அறிவு தாமதப்படுத்தப்படாமல் அங்கீகரிக்கப்பட்டதும் ஆச்சரியம்.

    இதை படித்தபோது நம் மாநில விருதுகளில் நடக்கும் கேலிக்கூத்துகள் ஞாபகம் வருகிறது !

    நன்றி
    சாமானியன்

    எனது புதிய பதிவு " முடிவில்லாத பாதைகளும் முற்றுப்பெறாத பயணங்களும் - 1 "
    http://saamaaniyan.blogspot.fr/2016/04/1.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடுங்கள். நன்றி

    ReplyDelete
  3. இவரைப் பற்றி நாளிதழ்களில் படித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete