அரும்புகள் மலரட்டும்: விழிமின்

Tuesday 22 October 2019

விழிமின்

Wakeup
நன்றி: கூகுள்
வனம் அழித்து வான்மழை இழந்தாச்சு
புல் பூண்டையெல்லாம் காயும்
வெயிலுக்குக் காவு கொடுத்தாச்சு!

ஆறு ஏரி குளம் குட்டைகளையெல்லாம்
ஆரறிவு அலப்பறையால் அழித்தாச்சு
கொஞ்சமிருந்த நீரையும் குடுவைக்குள் அடைத்து விலைபேசி வித்தாச்சு!

கல்நிரப்பி தாகம் தீர்த்த
கதையெல்லாம் மலையேறி போயாச்சு
என்கதையோ கற்களும் கண்ணீர் சிந்தும் நிலையாச்சு!

உன் இனம் படும்துயரை அறியாத
உன் புத்திக்கு புள்ளினம் படும்பாடு
புரியவா போகிறது ?

போதும் நிறுத்திவிடு -குடிக்கும்
நீருக்கு போர்வந்து சூழும்முன்னே
கொஞ்சம் விழித்து சுயநலத்துக்கு விடைகொடு!

என் கடைசி தலைமுறையின் கதறல் சத்தம் கேட்குமானால் உன் அடுத்த தலைமுறை வாழ வழிவகை செய்திடு விருட்சம் வளர்த்திட முனைந்திடு!

மழைநீர் உயிர் நீர் என்பதை உயிர் பிரியும் வேளையிலே நான் உணர்ந்து விட்டேன் -குருட்டு மானுடா நீ உணர்வது எப்போது?


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

12 comments:

 1. ஒவ்வொருவரும் உணர வேண்டிய வரிகள்...
  தொடர வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க அண்ணா. தொடர்ந்து எழுத முனைகிறேன்.

   Delete
 2. Replies
  1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க தோழரே

   Delete
 3. Replies
  1. தங்களது பதிவைப் படித்தேன். சிறப்பு.

   Delete
 4. அருமையான பதிவு.
  வெட்டபட்ட மரங்கள் அதில் உள்ள கூடுகள் அழிந்தது கண்டு மனம் கனத்து போகிறது நாளும்.

  ReplyDelete
  Replies
  1. நலமறிய ஆவல். கருத்துரைக்கு நன்றிங்க அம்மா.

   Delete
 5. அருமையான பதிவு தோழரே... சுயநலம் இஞ்ஞாலம் முழுவதும் சுடுகாடாகும் வரை ஓயாது ... பொதுநலச் சிந்தனைகளை நம் பிள்ளைகளின் மனங்களில் விதைப்போம்.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கு நன்றி.இணைந்தே பயணிப்போம் நண்பரே.

   Delete