சான்றோர் அருகில் வந்து நில் என்றார்கள்
தன் தகுதி அறிந்து
கால்களிரண்டும் தந்தி அடித்தது!
பொதுமேடை பேசு என்றார்கள்
உனக்கேன் இந்த வேலையென்று
ஒலிவாங்கி ஓங்கி அறைந்தது!
நல்ல கவிதை எழுது என்றார்கள்
எழுத முனைந்தேன் வெள்ளைத்தாள்
கோபத்தில் சிவந்து போனது!
வெகுமானம் தேவையில்லை
அவமானம் துரத்தாமல்
பார்த்துக்கொள் என்றார்கள்!
அழுதுபுரண்டேன் ஆனாலும் அடங்கவில்லை
புத்தகக்காட்டுக்குள் தொலைந்து போனேன்
விழும்போதெல்லாம் அதன் விரல்பிடித்தேன்!
நான் விரல்பிடித்த புத்தகங்கள்
எனக்கொரு சிறகு தந்து
புதிய மனிதனாய் புறப்படு என்றது!
தன்னம்பிக்கையோடு தலைநிமிர்ந்து பார்க்கிறேன்
வானம் வெகுதொலைவில் எனக்கில்லை
விரைவில் வசப்படும்!
எழுதுங்கள் நண்பரே! மேலும் மேலும் எழுதினால் அல்லவா புதிய சிறகுகள் முளைக்கும்? 2019 இல் இப்போதுதான் எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள். இது போதுமா? உங்களைப் போன்ற இளைஞர்கள் மாதம் ஒன்றுக்கு ஐந்து பதிவுகளாவது எழுதவேண்டும் என்று இலக்கு வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அடுத்த மூன்றாண்டுகளில் மிகச் சிறந்த நூலை உங்களால் படைக்க முடியும்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களின் ஆசிர்வாதத்தோடு தொடர்ந்து எழுதுகிறேன். இதுவரை எழுதாமைக்கு பொருத்தருளவும்..
Deleteவாங்க வாங்க நண்பரே... விரைவில் சந்திப்போம்...
ReplyDeleteநிச்சயம் சந்திப்போம் சகோதரரே.
Deleteஇடைவெளிக்குப் பின் உங்கள் பதிவு. மகிழ்ச்சி. தொடர்ந்து எழுதுங்கள்...
ReplyDeleteதொடர்ந்து எழுதுகிறேன். நட்புக்கு நன்றி சகோ.
Deleteவசப்படட்டும்
ReplyDeleteவலையில் சந்தித்து நீண்டு காலமாகிவிட்டதே
நீண்ட நாள்கள் ஆகியும் மறவாமைக்கு நன்றிகள் அய்யா. இனி தொடர்ந்து எழுகிறேன்.
Deleteஆம் நம்பிக்கை கொள்வோம் விரைவில் வசப்படும்.
ReplyDelete- கில்லர்ஜி
நம்பிக்கையே நம் பலம். கருத்துக்கும் தோழமைக்கும் நன்றிங்க சகோ.
Deleteஅடேயப்பா
ReplyDeleteநிறைய படித்திருக்கிறீர்
வாழ்த்துகள்
வாங்க வாங்க...
வாழ்த்துகள்
கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க அண்ணா.பயிற்சியில் சந்திப்போம்.
Delete