அரும்புகள் மலரட்டும்: விவேகானந்தரின் பொன்மொழிகள் (பகுதி 2)

Thursday, 18 February 2016

விவேகானந்தரின் பொன்மொழிகள் (பகுதி 2)


கண்ணுக்கு புலப்படும் கடவுளாக விளங்கும் உன் சகோதரனையே நீ வழிபட முடியாவிட்டால், கண்ணுக்கு புலப்படாமல் மறைந்திருக்கும் கடவுளை எப்படி நீ வழிபட முடியும்?  இதுவே வேதாந்தம்.

தவறே செய்ததில்லை என்பவர் புதியதாய் எதையும் முயற்சி செய்திராதவர்.

நேரத்தை வீணாக்கும் போது கடிகாரத்தைப் பார்! ஓடுவது முள் அல்ல உனது வாழ்க்கை.

விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு அல்ல.

பிறர் முதுகுக்கு பின்னால் நாம் செய்ய வேண்டிய வேலை தட்டிக் கொடுப்பது மட்டும் தான்.

தாய், தந்தையின் அருமை நீ வளரும் போது தெரியாது. உன் பிள்ளையை வளர்க்கும் போது தான் தெரியும்.

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒரு வேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்காவும் நீ மாற வேண்டி வரும்.

யார் ஒருவன் தனக்கு உள்ள கௌரவமும், மரியாதையும் போய் விடுமோ என்று பயந்தபடி இருக்கிறானோ அத்தகையவன் அவமானத்தைத் தான் அடைகிறான்.

தற்கொலை செய்து கொள்ள தேவைப்படும் தைரியத்தில், பத்தில் ஒரு மடங்கு போதும் – வாழ்க்கையை எதிர் கொள்வதற்கு.

நீங்கள் செய்வினை செய்யாதீர்கள் மாறாக கைவினை செய்யுங்கள்.

அன்பின் மூலமாக செய்யப்படும் ஒவ்வொரு காரியம் ஆனந்தத்தைக் கொண்டு வந்தே தீரும்.

நீ யோசிக்காமல் பேசும் ஒவ்வொரு சொல்லும் உன்னை ஒவ்வொரு நிமிடமும் யோசிக்க வைக்கும்.

குறை இல்லாதவன் மனிதன் இல்லை. அதை குறைக்க தெரியாதவன் மனிதனே இல்லை.

விதிப்படி விதி நடக்கட்டும். விதிமுறைப்படி தான் நடப்பேன் என்று சூளுரையுங்கள்.

சிலருக்கு புத்தகம் படித்தால் தூக்கம் வரும். நீங்கள், ”எனக்கு புத்தகம் படித்தால் தான் தூக்கம் வரும்” என்று சொல்லுங்கள்.

நீங்கள் சாதனையாளராக இருந்தால் எதை ஏற்றாலும்- இழந்தாலும் வாழ்ந்தாலும் அழிந்தாலும் உங்களுக்கென்று ஒன்று நிச்சயம் உண்டு. அது வரலாறு.

முடியாது என்று நீ சொல்வதையெல்லாம், யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டு தான் இருக்கிறான்.

உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால், கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை.

அன்பாயிரு! எல்லாரிடமும் அன்பாயிரு, துன்பப்படுபவர்களிடம் பரிவு கொள். எல்லா உயிர்களையும் நேசி, யார் மீதும் பொறாமை கொள்ளாதே. பிறரிடம் குற்றங்களைக் காணாதே.

கண்டனச்சொல் எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்.


சிந்தனைகள் தொடரும்.
நன்றி.


கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

7 comments:

  1. // விதிமுறைப்படி தான் நடப்பேன் என்று சூளுரையுங்கள்.
    // முக்கால்வாசி பிரச்சினை தீர்ந்துவிடுமே

    ReplyDelete
    Replies
    1. விதிமீறல் தானே பிரதானமாக உள்ளது. தனி மனித ஒழுங்கு தளிர்க்க வேண்டும்.

      Delete
  2. //உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்.// மிகவும் பிடித்தது...

    தொடர்ந்து பகிருங்கள். நன்றி பாண்டியன்.

    ReplyDelete
    Replies
    1. என்னையும் கவர்ந்த வரிகள் அவை. கருத்துக்கு நன்றிங்க சகோதரர்.

      Delete
  3. விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்கு அல்ல.

    பிடித்தது நிறைய...
    அதில் மேலே சொன்னது ரொம்ப...

    ReplyDelete
  4. மூளையைக் காட்டி “நான்இதைக் கேட்டு முடிவெடுப்பதில்லை, இதயத்தைக் காட்டி “இதைக்கேட்டுதான் முடிவெடுக்கிறேன்“ என்ற சினிமா நடிகர் ரஜினியின் பஞ்ச் டயலாக் எங்கிருந்து சுட்டதென்று இப்போதுதான் தெரிகிறது பாண்டியன்..(கண்டனச்சொல் எதையும் சொல்ல வேண்டாம். உதடுகளை மூடிக் கொண்டு உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்) நல்லது அருமை! ஆனா என்னாச்சு ஒருவாரமாச்சு திரும்பவும் காணாம போயிட்டீங்க? சீக்கிரமாக வாங்கய்ா நிறைய வேலையிருக்கு..

    ReplyDelete
  5. எனக்கு இட்டிருக்கும் பின்னூட்டத்தில் உங்கள் பெயர் அபாண்டியன் என்றல்லவா இருக்கிறது?
    நீதி -அநீதி, சத்தியம் -அசத்தியம்,(அப்படியே திமுக -அதிமுக) மாதிரி.. இது என்ன பாண்டியன் -அபாண்டியனா? என்பதிவின் பின்னூட்டத்தில் மட்டும்தான் இப்படி இருக்கிறதா? அல்லது மற்ற நம் நண்பர்களின் பதிவிலும் இப்படித்தானா? இங்கு உங்கள் பதிவின் முகப்பில் சரியாகவே இருக்கிறது...சரிசெய்ய வேண்டுகிறேன்.நன்றி

    ReplyDelete