நண்பர்களுக்கு வணக்கம். கடந்த வாரம் நண்பர் ஒருவர் அழைத்ததன் காரணமாக சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் திரைப்படம் பார்க்க நேர்ந்தது. படத்தின் கருத்து என்னைக் கொஞ்சம் புருவம் உயர்த்தி பார்க்க வைத்தது. வழக்கமான படம் போல் இல்லாமல் மாறுபட்டதாய் இருந்தது. ப்டத்தின் கதையைச் சொல்லி விமர்சனம் செய்வதற்காக இல்லை இந்த பதிவு, நல்ல கருத்துக்களைச் சொன்னால் ஓடாத படங்கள் வரிசையில் இந்த படமும் இடம் பிடுத்து விட்டதோ என்ற ஆதங்கத்தில் படத்தின் கருத்தைப் பகிர்கிறேன். நல்ல படமா? இல்லையா? என்பதை நீங்களே சொல்லுங்கள்..
சிலையும் நீயே சிற்பியும் நீயே உன்னை நீ சரி செய்து கொள் உலகம் தானாக சரியாகி விடும்
எனும் வாசகத்தோடு படம் ஆரம்பமாகிறது.
நீங்க சொல்லிக் கொடுத்த அன்புடைமை , அறிவுடைமை, இன்னா செய்யாமை, வாய்மை, தீவினை,அச்சம் இது எல்லாமே வேலைக்கு ஆகல சார்னு கதாநாயகன் நாசரிட்ம் கேட்கும் போது படிச்சதையெல்லாம் வாழ்க்கையில பயன்படுத்தி பார்க்கலாமா? என்று கூறும் போது அப்படினா 17 வருடம் படிச்சதும் எல்லாம் வீணா? அப்பறம் ஏன் சார் இதைக் கற்றுக் கொடுக்கலனு அப்பாவியாய் கதாநாயகன் கேட்கும் போது நமது கல்விமுறைக்கு சாட்டையடியாகத் தான் எனக்கு பட்டது. வாழ்க்கைங்கிறது வேற, அதுக்கு நிறைய நெகிழ்ந்து கொடுத்து போகனும் சிரிக்கிற இடத்துல சிரிக்கனும், கொடுக்குற இடத்துல கொடுக்கனும்னு சொல்வார் அப்போது ஜெயம்ரவி விபச்சாரம் பண்ணச் சொல்றீங்களா சார்னு கண்ணீர் விடும் காட்சியில் இது வேற படம் என்று நிமிர்ந்து உட்கார வைத்தது.
ஓட்டுநர் உரிமம் இல்லாமலே காசு கொடுத்துட்டு நகர்ந்து போகும் போது கதாநாயகன் மட்டும் எல்லா பேப்பரும் சரியாக இருக்குதுனு சொல்லியும் ஓரமா நிக்கச் சொல்றது அன்றாடம் அரங்கேறும் எதார்த்தத்தை நினைவு படுத்தியது. பேச மாட்டியாலே என்பதற்கு லஞ்சம் கொடுக்க மாட்டியாங்கிறது குறிப்புச் சொல்னு எனக்கும் அன்றைக்கு தான் தெரிஞ்சது.
ஏட்டு தம்பி ராமையா காவல் நிலையத்திலேயே இந்தாப்பா உன் பொருளையெல்லாம் எடுத்துக்க எவனாவது கை வச்சுட போறாங்கேனு! சொல்லும் போதும்
அதே காவல் நிலையத்தில் அவரது இரண்டு சக்கர வாகனத்தை ஒரு நாள் பிடித்து வைத்து திரும்பக் கொடுக்கும் போது இஞ்சினைக் காணவில்லை என்று சொல்லும் போது 1 நாளுல வந்ததால இஞ்சின் மட்டும் போனது ஒரு மாதம் கழித்து வந்திருந்தால் டயர் கூட மிஞ்சியிருக்காது என்று சொல்லி அங்கே இருக்கிற வண்டிகளைப் பார்த்து காமெடி நடிகர் சூரி எலும்புக் கூடா எத்தனை வண்டிகள், மாட்டினா வண்டியை எடுக்க முடியாது சட்டம் அவ்ளோ ஸ்ட்ராங், ஆனா வண்டிக்குள்ள இருக்கிறது எல்லாம் எடுத்துக்கலாம் சட்டம் கண்டுக்காது, இங்க இருக்கிறது எல்லாம் எவனோ ஒருத்தனோட கனவு தானேய்யா!னு சொல்லும் போதும் அதை நாம ஒப்புக்கொள்ளும் வண்ணம் தானே இன்றைய நிலை உள்ளது..
இந்த நாட்டை ஆளுறவங்க அரசியல்வாதிகள் இல்லை அரசு அதிகாரங்க தான் உண்மையில் இவங்களுக்கு தான் அதிக பொறுப்பு இருக்கனும் என்று சொல்லும் போதும், படிப்பறிவு, பொது அறிவு ஏன் முன் அனுபவம் கூட இல்லாத ஒருத்தனுக்கு ஓட்டு போட்டு எம்.பி, எம்.எல்.ஏ ஆக்கிடுறோம் என்று நமது உண்மை நிலையை உரக்க சொல்லும் போதும்
ஜனநாயகம் உலக நாடுகள் இந்தியா மீது வைத்திருக்கும் மதிப்பீட்டின் அடையாளம். ஆனால் இந்த ஜனநாயக நாட்டில் பணம் இருந்தால் எதுவானும் சட்டப்படி செய்யலாம் என்று மலிந்து கிடக்கும் லஞ்சம், ஊழல் பற்றி சொல்லும் போதும்
பரபரப்பா ஒன்னு சொல்வாங்க, நாளைக்கு இதை விட பரபரப்பா ஒன்னு சொல்லி இதை மறைச்சுடுவாங்க ஆனால் நம்மள மட்டும், பதட்டமாவே வச்சிருப்பாங்க என்று இன்றைய மீடியாக்கள் பற்றி ஒரு சாமானியன் எள்ளி நகையாடும் போதும்
அவன் தப்பு, இவன் தப்புனு சொல்லிக்கிட்டே நாம பண்ணுற தப்பை ஞாயப்படுத்திக்கிட்டு இருக்கோம் சுய ஊழல்வாதியா ஆகிட்டு இருக்கோம் என்று சொல்லும் போது ஒரு சிறு குத்தல் இதயக்கூட்டைத் தாக்கிய போதும் இந்த படம் நிமிர்ந்து நிற்கிறது.
அரசாங்கம் நிர்ணயம் பண்றது ஒரு கட்டணம் வசூலிக்கிறது கூடுதல் கட்டணம் கல்விக் கட்டணத்துக்கு பணம் இருந்தது கூடுதல் கட்டணத்திற்கு பணம் இல்லை அதுக்காக ஒருமுறை மட்டும் லஞ்சம் வாங்கினேன் என்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ளும் கதாபாத்திரம் நல்லவனை கை நீட்ட வைத்த இந்த சமூகத்தைப் பற்றி சிந்திக்க வைக்கிறது.
நம்முடைய சோம்பேறித்தனம், அதிபுத்திசாலித்தனம், சுயநலம் இவைகள் தான் ஊழலின் ஆரம்பம். அரசு அலுவலங்களுக்கு கடைசியாய் போய் குறுக்கு வழியில் காசு கொடுத்து காரியம் சாதிக்க ஆள் தேடுவது, ரயில் டிக்கெட்க்கு ஏஜெண்ட் தேடுவது, காவல்நிலையத்திற்கு செல்ல வார்டு, வட்டம், மாவட்டம் என ஆள் தேடுவது இந்த தேடல் தான் ஊழல் என்று அழுத்தமாக இந்தப் படம் சொல்லிச் செல்லும் கருத்து என்னை வெகுவாக கவர்ந்தது. உங்களுக்கும் பிடிக்கும் எனும் நம்பிக்கையில் பகிர்ந்துள்ளேன். நன்றி..
நண்பரே படிக்கப் படிக்க படம் பார்த்தே ஆக வேண்டுமென்று மனது தூண்டுகிறது. அவசியம் பார்க்கிறேன் நண்பரே, நன்றி
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் இந்தக் கருத்து பதிவைச் சரியாக தான் இட்டுள்ளேன் எனும் நம்பிக்கை பிறந்துள்ளது. மிக்க நன்றி ஐயா தங்களின் வருகைக்கும் கருத்துக்கும். தொடர்ந்து இணைந்திருப்போம்.
அருமையான படம்! பலரும் போற்றிய படம்! அதாவது வித்தியாசமான படங்களை விரும்பிப் பாரிக்கும் கூட்டம்! ஆனால் மாஸ் எனப்படும் கூட்டம் இந்த நல்லப் படத்தைப் புறக்கணித்துவிட்டது எனன்றே சொல்ல வேண்டும்! மாசிற்கு குத்தாட்டமும், அரதல் புரதல் காமடியும் இருந்தால்தானே பார்க்கவே வருவாங்க! பன்ச் டயலாக் வேணும்!
ReplyDeleteஇதெல்லாம் இல்லாம நம்ம சமுத்திர கனி இப்படியெல்லாம் சிந்திச்சு படம் எடுத்தா எப்படி ஓடும்!!!?? பரிதாபமான ஒரு நிலை திரையுலகில்!
மிகவும் ரசித்தோம்!
பகிர்வுக்கு மிக்க நன்றி
வணக்கம் ஐயா
Deleteதங்களது கருத்து மிகவும் உண்மையானது. படம் வெற்றிப்படம் ஆனதில் எனக்கும் மகிழ்ச்சியே. எந்த பதிவிற்கும் விடாம கருத்துரைக்கும் உங்களுக்கு எனது அன்பான நன்றிகள். வருகையும் நட்பும் தொடரட்டும். மிக்க நன்றீங்க ஐயா..
நன்றீங்க ஐயா
ReplyDeleteஎல்லா அவலங்களையும் ஒப்புக்கொள்ளும் வண்ணம் தான் இன்றைய நிலை உள்ளது..
ReplyDeleteஆயிரம் குறைகளை வைத்துக் கொண்டு -
திருந்த வேண்டியது மற்றவர்கள் - அவர்கள் திருந்துவார்கள்
என்றே எதிர்பார்க்கின்றோம்!?..
நிலைகெட்ட மனிதரை நினைந்து விட்டால் - நெஞ்சு பொறுக்குதில்லை!...
வணக்கம் ஐயா
Deleteநம்மை நாமே சீர்தூக்கிப் பார்க்க இந்த படத்தின் கருத்துகள் உதவும் என்பதால் பகிர்ந்தேன். வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு நன்றீங்க ஐயா..
இப்போதெல்லாம் நல்லபடம் வந்தவுடன் யாரும் போய்ப் பார்ப்பதில்லை. உங்களை மாதிரி அறிமுகப்படுத்துவோர்தான் அவற்றுக்கு விளம்பரம். சமுத்திரகனியின் -இன்றைய கல்வியைச் சாடும்- சாட்டை படமும் அப்படித்தான் இந்த நிமிர்ந்து நில் படமும் அப்படித்தான் அய்யா. நல்ல வேளை பார்த்தீர்கள். பகிர்ந்தீர்கள் நன்றி
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteசமுத்திரகனி அவர்களின் படங்களில் சமூகப்பார்வை இருக்கும். ஆனாலும் அதை மற்ற படங்களுக்கான பார்முலாக்குள்ளே தானே சொல்ல வேண்டி இருக்கிறது! படம் பண்ணி நட்டம் அடைந்து விட கூடாது என்ற அச்சம் ஏற்படும் சூழல் இன்றைய நல்ல படங்களை எடுப்போர்க்கு ஏற்படும் நிலை தான் வருந்த வைக்கிறது. தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றீங்க ஐயா..
நொந்து நூலாகி கிடக்கும் மக்களுக்கு இந்த படத்திலே இந்த ஹீரோ கேட்டுத்தான் சமூக விரோதிகள் திருந்தி விடப் போகிறார்களா என்கிற சுய விரக்தி தான் இப்படி படங்கள் வரவேற்பு பெறாததற்கு காரணம் என நினைக்கிறேன் !
ReplyDeleteத ம +1
வணக்கம் சகோதரர்
Deleteநீங்கள் கூறுவதும் ஒரு காரணமாக இருந்தாலும் கூட நம்ம மக்கள் படங்களில் எதிர்பார்க்கும் விடயமே வேறனு சொல்ற மாதிரி தானே இருக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் அன்பான நன்றிகள் சகோதரர்..
நான் நேற்றுதான் பார்த்தேன்.அருமையான சிந்தனைகளை ஊட்டும் படம்.மனதிற்கு நிறைவாய் இருந்தது.சாட்டையடியாய் கேள்விகள்.சமுத்திரகனிக்கு பாராட்டுக்கள்,உங்களுக்கும் சகோ
ReplyDeleteநன்றி சகோதரி. உங்களுக்கும் இந்த இப்படத்தின் கருத்துகள் பிடித்திருப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருப்போம். கருத்துக்கு நன்றீங்க.
Deleteஅழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.,.. இடைவேளை வரை மிகச் சரியாக கொண்டு சென்ற சமுத்திரக் கனி இடைவேளைக்குப் பிறகு சறுக்கியிருக்கிறார். அதுதான் படத்தின் வெற்றியை பாதித்துவிட்டது....
ReplyDeleteவசனங்கள் சாட்டையடி...
படம் சரியான பாதையில் பயணிக்கவில்லை என்பது உண்மை தான். படம் பார்க்க மக்களை வரவழைக்க வேண்டுமென்றால் வழக்கமான பட பாணியும் தேவைப்படுகிறதே சகோ. பாவம் சமுத்திரகனி மட்டும் என்ன செய்வார். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரர்
Deleteசகோ ,அருமையான விமர்சனம், ஆனால் என்னை கேட்டால் வசனங்களில் எடுக்கிட மேனகேடல் கதையில் இல்லை என்றே தோன்றுகிறது! வசனங்கள் அருமை என்பதற்கு மாற்று கருத்து இல்லை, ஆனா பின் பாதில லாஜிக் சுத்தமா இல்லை ,ஒரே fantasy. எனக்கு தோணினதை சொன்னேன் சகோ, தப்பா எடுத்துக்காதிங்க.
ReplyDeleteசகோதரிக்கு வணக்கம்
Deleteஉங்களின் நேர்மையான கருத்துரை தான் எனக்கு வேண்டும். இதில் நான் தப்பா எடுத்துக்கும் படி நீங்கள் எதும் சொல்லவில்லை சகோதரி. ஆம் முதல் பாதியின் வேகம் பின் பாதியில் இல்லை. சின்னதாய் கிடைத்த விடயத்தையே பெரிதாக படம் எடுப்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் சமுத்திரகனி கனமான கதையைக் கருவாக வைத்து கதையோட்டத்தில் சருக்கி விட்டார் எனினும் நான் பதிவாக குறிப்பிட்டது வ்சனங்களுக்காக தான். மாற்றுப் பார்வையில் சமூகத்தின் தலையாய பிரச்சனையைக் கருவாக வைத்தத்தற்கே பாராட்டலாம் என்பதே எனது கருத்து. தங்கள் வருகைக்கும் மேலான கருத்துக்கும் எனது நன்றிகள் சகோதரி..
அருமையான படம், சாமானியனுக்கு கிடைத்த யதார்த்த வெற்றி
ReplyDeleteசமுத்திரகனியின் வெற்றி நம்மையும் மகிழ்வடையச் செய்திருக்கிறது. இந்த உணர்வு தான் ஒரு நல்ல படம் ஏற்படுத்த வேண்டும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரர். நலம் தானே! கல்லூரி படிப்பு முடிந்து விட்டதா?
Deleteஉங்களின் ஆதங்கம் சரியே... எனக்குப் பிடித்திருந்தது, அவ்வளவே... அடுத்து அவரின் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் படத்தை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...
ReplyDeleteவணக்கம் சகோதரர்.
Deleteஅப்படியா அவரின் அடுத்த படமும் வெற்றி பெற நமது வாழ்த்துகள். தங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றீங்க அண்ணா!
சமுத்திரக்கனி படங்களைத் தைரியமாய் குடுமத்தோடு பார்க்கலாம். எதற்கும் வளைஞ்சுக்கொடுக்காம நல்லக் கருத்துக்களை சதையம்சம் இல்லாம கதையம்சத்தோடு சொல்வார். படத்தின் வசனம் படம் பார்க்கும் ஆவலைத் தூண்டுது. பசங்க பரிட்சை முடியட்டும் வாய்ப்பிருந்தா பார்க்குறேன். இல்லாட்டி டீவியில் போடும்போது பார்த்துக்குறேன்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteசமுத்திரகனியின் படம் மீதான உங்கள் நம்பிக்கை அவருக்கு கிடைத்த வெற்றி. முதல் பாதியின் வேகம் மறுபாதியில் இல்லை என்பதும் உண்மை. இருப்பினும் பார்க்க வேண்டிய மாறுபட்ட கதையம்சம் கொண்ட படம். டிவியில் போடும் பார்த்துக் கொள்கிறேன் உங்கள் எதார்த்தம் சகோதரி. ரசிக்க வைக்கிறது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்..
இன்னும் இப்படம் பார்க்கலை. சமுத்திரக்கனி எடுத்த முதல் படங்கள் பார்த்திருக்கேன். நீங்க எழுதியிருப்பது படம் பார்க்க(உடனே)ஆவலை ஏற்படுத்திவிட்டது.
ReplyDeleteவணக்கம் சகோதரி.
Deleteஉங்களின் வருகை மிகுந்த மகிழ்வைத் தருகிறது. முடியும் போது சென்று பாருங்கள். மிகுந்த எதிர்பார்ப்போடு வேண்டும் சாதாரணமான படம் என்றே செல்லுங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால் மகிழ்ச்சியே!. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரி..
நல்லா இருக்குனு நிறைய பேரு சொல்லிட்டாங்க..நீங்களும் அருமையாப் பதிவு போட்டுட்டீங்க..கண்டிப்பா பாக்கணும்..நன்றி சகோ.
ReplyDeleteஎதிர்பார்ப்புகள் நிறைய இன்றி நேரம் கிடைக்கும் போது பாருங்கள் சகோதரி. தங்கள் பார்வையில் மற்ற படங்களிலிருந்து மாறுபட்டு இருந்தாலே அப்படம் வெற்றி தான். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரி..
Deleteதங்கள் திரைத் திறனாய்வை வரவேற்கிறேன்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களைப் போன்ற அறிஞர்களின் கருத்தூட்டம் மிகவும் மகிழ்ச்சியையும், நெகிழ்ச்சியையும் கொடுக்கிறது. மிக்க நன்றீங்க ஐயா..
பல கருத்துக்களை முன் வைத்து விவரித்த விதம் வெகுவாக என்னை கவர்ந்தது தங்கள் உள்ளப் போக்கையும் அறிந்து மகிழ்ந்தேன். படம் பார்க்கிறேன் சகோதரா நன்றி !
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களின் கருத்து மகிழ்வளிக்கிறது. நீங்கள் என் மீது வைத்துள்ள நம்பிக்கை என்னை இன்னும் நெறிப்படுத்தும் என்று நம்புகிறேன். உங்கள் நட்புக்கும் இறைவனுக்கும் வலைப்பூவிற்கு நன்றிகள். வருகை தந்து கருத்திட்டமைக்கு நன்றி சகோதரி. நலமாக உள்ளீர்கள் தானே சகோதரி! வழக்கமான உற்சாகம் தவறுவதாக உணர்ந்ததால் கேட்கிறேன். மிக்க நன்றி சகோதரி.
அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை சகோதரா சில சமயங்களில்
Deleteவேலைக்கு இறங்கு முன் சில நிமிடங்கள் இருந்தால் அவசரமாக கருத்திட வேண்டி இருக்கும். மெய் மறந்து இருப்பேன் திரும்பி பார்த்தால் நேரம் போய் இருக்கும். பாதியில் விட்டு செல்ல மனம் இல்லாமையால் சுருக்கமாக இட்டு விடுவேன். சகோதரா மன்னிக்கவும். அப்பாடா பொல்லாத கண்ணு கண்டு பிடித்து விட்டீர்களே.
மன்னிக்கவும் இது ரொம்ப பெரிய வார்த்தை சகோதரி. தாங்கள் நலமாக இருக்கிறீர்களா என்பதற்காக தான் கேட்டேன். தங்கள் மறுமொழி கிடைத்ததில் மகிழ்ச்சி. தொடர்ந்து இணைந்திருப்போம். நன்றீங்க.
Deleteஅருமையான படம் ஏனோ பலர் பேசவில்லை சகோ!
ReplyDeleteஅதே ஆதங்கத்தினால் நான் சகோதரரே நானும் பதிவாக இட்டேன். எனது கருத்தோடு தங்கள் கருத்தும் ஒத்துப்போகியிருப்பது மகிழ்வைத் தருகிறது. நன்றீங்க சகோதரர்..
Deleteநண்பரே படிக்கப் படிக்க படம் பார்த்தே ஆக வேண்டுமென்று மனது தூண்டுகிறது. அவசியம் பார்க்கிறேன் நண்பரே, நன்றி
ReplyDeleteஇது தான் சரியா இருக்கு.
வணக்கம் சகோதரர்
Deleteதங்களின் வருகை மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தங்களின் எழுத்துக் கூர்மை கண்டு பல நேரம் வியப்பதுண்டு. தொடர்ந்து பல ஆக்கங்களைத் தாருங்கள். வருகை தந்ததோடு கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்.
பார்க்க வேண்டிய படம் என்பதை உணர்கிறேன். சமுஹிரகினயின் படங்களில் சற்று மிகைப் படுத்துதல் இருந்தாலும் அவரது சமூகப் பார்வை பாராட்டுக்குரியது.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteசமுத்திரகனியின் படங்களில் இருக்கும் சமூகப்பார்வை மீது நம்மைப் போன்றோர்களின் கண்களிலும் பட்டுள்ளது அவர் இன்னும் சாதிக்க கை கொடுக்கும். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா..
வணக்கம் சகோ.
ReplyDeleteமூன்று நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக இந்த படத்தைப் பார்த்து, நேற்று தான் இந்த படம் முடிவடைந்தது. அதனால் தான் இந்த பதிவிற்கு தாமதமாக வந்தேன்.
நீங்கள் கூறியிருப்பது போல், வசனங்கள் அனைத்தும் மிக அருமை. ஆனால் சகோதரி மைதிலி அவர்கள் சொன்னது போல, இரண்டாம் பாதியில் இயக்குனர் சறுக்கிவிட்டார் தான். அதுவும் எப்படா முடியும் என்றாகிவிட்டது.
ஆனால் உங்களை பாராட்டியே ஆக வேண்டும். எவ்வளவு உன்னிப்பாக அந்த வசனங்களை கவனித்திருக்கிறீர்கள். படத்தில் வரும் அத்தனை நல்ல வசனங்களையும் ஒன்று விடாமல் சொல்லிவிட்டீர்கள்.
நன்றி சகோ.
படம் குறித்து பேசினோம்..
ReplyDeleteஉங்கள் பதிவில் எதிர்பார்க்கவில்லை ...
வாழ்த்துக்கள்
இரண்டு மாதங்களுக்கு பின் வந்து தொந்தரவு செய்கிறேன்..தவறென்று கருதினால் மன்னிக்கவும்.
ReplyDeleteபடத்தின் மீதான உங்கள் நன்மதிப்பும் கவனமும் இந்த விமர்சனத்தில் தெரிகிறது. வாழ்த்துக்கள்...
ஒரு சின்ன சந்தேகம்.... இங்கே (மொத்த இந்தியாவில் ) படம் எடுக்கும் வேளைகளில் இவர்கள் சட்டத்தை மீறி கையூடல் செய்வார்கள் என்று தான் தோன்றுகிறது. ஏன் இப்படி தோன்றுகிறது என்றால் சாமானியனுக்கு உரிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றி கொள்வதற்கு கூட இங்கே பணம் வசூலிக்கப் படும்போது, பணம் கொழிக்கும் சினிமாத் துறையில் கையூடல் நடைபெறாமல் இருக்குமா.. ?? # யோசிக்க வேண்டிய ஒன்று அல்லவா?
நானும் இந்த படத்தை பார்த்தேன் , அருமையான கருத்து. பகிர்தமைக்கு நன்றி ஐயா..
ReplyDelete