வாழ்க்கையெனும் வனத்திலே
பயணத்தைத் தொடர்கிறேன்!
வழிதெரியா குழந்தை போல்
விழி பிதுங்கி நிற்கிறேன்!
கால்முளைத்த நச்சுகள்
விடத்தைத் தானே கக்குது!
வனத்திலுள்ள நரிகளெல்லாம்
சூழ்ச்சி வலை பின்னுது!
வழியிடையே பச்சோந்திகள்
நிறத்தைத் தானே மாற்றுது!
பலம் கொண்ட யானைகள்
இறுமாப்பு காட்டுது!
பணம் படைத்த முதலைகள்
என் வாய்ப்பையெல்லாம் பறிக்குது!
அதிகாரம் படைத்த ஆமைகள்
முயலைத் தானே மிஞ்சுது!
தடைகள் பல கடந்து தான்
கால் கடுக்க நடக்கிறேன்!
அச்சுறுத்தல் அதிகமாக கண்ணை
மூடியே கடக்கிறேன்!
கண்விழித்து பார்த்ததும் -தொடங்கிய
இடத்தில் நிற்கிறேன்!
முயன்று முயன்று தோற்கினும்- இலக்கு
நோக்கிய பயணத்தை இறுதிவரை தொடருவேன்!
அன்புடன்,
அ.பாண்டியன்.
வணக்கம் நண்பரே!
ReplyDeleteஎல்லாம் கடந்து அரும்புகள் மலரட்டும்.
த ம 2
நன்றி சகோ. அரும்புகள் மலரும் போது தான் வாசம் என்பதை அறிவேன் தொடர்ந்து மலர முயல்கிறேன் சகோ.
DeleteBE POSITIVE
ReplyDeleteBE OPTIMISTIC
YOU WILL SUCCEED...
நல்ல கவிதை...
ReplyDeleteவிரைவில் மலரட்டும் நல்லரும்புகள்...
சற்றொப்ப நாம் இருவரும் ஒரே நிலையில் சிந்தித்துள்ளோமோ என நினைக்கத் தோன்றுகிறது. இலக்கு நோக்கிய பயணம் என்ற தலைப்பில் எனது அனுபவம் திருமதி தேனம்மை லட்சுமணன் அவர்களது தளத்தில் காணலாம். தொடர்ந்து பயணிப்போம்.
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteசகோ.
கவிதை மிக அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள்
நன்றி
அன்புடன்
ரூபன்
கவிதை அருமை.
ReplyDeleteநெவெர் கிவ் அப்...
ReplyDeleteசூழ்ச்சியின் வலைகளை அறுத்திடும் வித்தைகள் இல்லாவிட்டால் தோற்றுவிடுவோம்..
டோன்ட் வொரி மேன்
லெட்ஸ் வெயிட்..
தம +
ReplyDelete