வணக்கம் வலை உறவுகளே!
நீண்ட நாட்கள் அரும்புகள் மலரவில்லை. அடுத்தடுத்த வேலைப்பளுவே காரணம். இப்போது மீண்டும் அரும்புகள் மலர ஆரம்பித்து விட்டது. மலரும் அரும்புகள் உங்கள் மனம் கவரும் மணம் வீசும் நம்பிக்கை இருக்கிறது. என் நலம் விசாரித்த நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய அன்பான நன்றிகள்.
29.04.2013 அன்று கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களோடு நான் அலைபேசியில் பேசும் போது நிலவன் ஐயா இன்று மணப்பாறைக்கு வருகிறேன். மணப்பாறை அருகில் லியோனி அவர்களின் தலைமையில் பட்டிமன்றம் என்று சொன்னார்கள். உடனே அப்படியென்றால் வீட்டிற்கு வர வேண்டும் உங்களோடு நானும் பட்டிமன்றத்திற்கு வருகிறேன் என்று சொன்னேன் ஐயாவும் வருகிறேன் பாண்டியன் என்று இசைவு தந்தார்கள். அன்று இரவு 9 மணிக்கு மணப்பாறைக்கு ஐயா வந்து இறங்கினார்கள் நேரம் கருதி வீட்டிற்கு இன்னொரு நாள் வருகிறேன் நேராக பட்டிமன்றம் நடக்கும் இடத்திற்கு செல்வோம் என்று ஐயா கூறவும் இருசக்கர வாகனத்தில் இருவரும் கிளம்பினோம்.
சிறிது தொலைவு கடந்ததும் ஐயாவிடம் பட்டிமன்ற தலைப்பு என்னாங்க என்று கேட்டேன் அதற்கு ஐயா தெரியாது பதிலளித்தார்கள். நான் சற்று அதிர்ந்து இன்னும் கொஞ்ச நேரத்தில் நீங்கள் பேச வேண்டுமே ஐயா தலைப்பு தெரியவில்லை என்கிறீர்களே வியப்பாக இருக்கிறது என்று நான் வினவிய போது ஐயா அவர்கள் நான் எப்பவும் தலைப்பு கேட்பதில்லை அங்கு சென்று என்ன தலைப்பு சொல்கிறார்களோ அதற்கேற்ப என்னை தயார் செய்து கொள்வேன் என்று ஐயா சொன்ன போது மேலும் வியப்பாக இருந்தது. பட்டிமன்றம் என்றால் ஏற்கனவே பேசி வைத்துக் கொண்டு மேடையில் பேசுவார்கள் என்ற எல்லோருக்கும் இருப்பது போல் எனக்கும் இருந்த பொதுபுத்தி அப்போதே உடைந்து போனது.
எங்களுக்கு முன்பே வந்து காத்திருந்த திரு. திண்டுக்கல் லியோனி ஐயாவை ஓர் உணவகத்தில் சந்தித்தோம். லியோனி ஐயா அவர்களோடு அவரது மனைவி திருமதி அமுதா அவர்களும், பேச்சாளர்கள் திரு. மதுக்கூர் இராமலிங்கம் ஐயா, திரு. கோவை தனபாலன் ஐயா, திரு. கும்பகோணம் கண்ணன் ராவ் அவர்களும் இருந்தார்கள். அனைவரும் இரவு உணவு உண்டோம். அவர்கள் அனைவரும் இனிமையாக பேசி பழகியது மிகவும் மகிழ்ச்சியாகவும், நெகிழ்ச்சியாகவும் இருந்தது. பட்டிமன்ற மேடைக்கு சென்றோம். தலைப்பு கவிஞர் முத்துநிலவன் ஐயா அறிந்து கொண்டார்கள்.
அந்த தலைப்பு : அதிகம் சந்தோசமாக இருப்பது திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்கு பின்பா?
ஜுலையில் திருமணமாக போகும் எனக்காக வைத்த தலைப்பு போலவே உணர்ந்தேன். என்னையும் அவர்களோடு மேடையேற்றி உட்கார வைத்து விட்டார்கள் சற்று தயங்கியே அவர்களோடு அமர்ந்தேன்.
அதிகம் சந்தோசமாக இருப்பது திருமணத்திற்கு பின்பே எனும் அணியில் கவிஞர் திரு. முத்துநிலவன் ஐயா அவர்களும், பேச்சாளர் திரு. கண்ணன் ராவ் அவர்களும் பேசினார்கள்.
அதிகம் சந்தோசமாக இருப்பது திருமணத்திற்கு முன்பு தான் எனும் அணியில் பேச்சாளரும் இலக்கியவாதியுமான திரு. மதுக்கூர் ராமலிங்கம் ஐயா அவர்களும், பேச்சாளர் திரு. கோவை தனபாலன் ஐயா அவர்களும் பேசினார்கள்.
(அவர்கள் பேசியவற்றை இங்கு கூறினால் பதிவு நீளும் உங்கள் பொறுமையைச் சோதிக்கும் என்பதால் நிக்ழ்வை மட்டும் பதிவிடுகிறேன் நண்பர்கள் மன்னிக்கவும்)இதுவரை அனைவரின் பேச்சையும் தொலைக்காட்சியில் கேட்ட எனக்கு அவர்களின் மத்தியில் அமர்ந்து கேட்டது புதிய அனுபவத்தையும் பேச்சுக்கலையில் தேர்ந்தவர்களின் சு(வாசம்) நமக்கு ஒட்டிக்கொள்ளட்டமே என்ற மகிழ்ச்சியும் தலைதூக்கி நின்றது. பல கூட்டங்களில் கவிஞர் திரு.முத்துநிலவன் ஐயா அவர்களின் பேச்சை நான் கேட்டிருக்கிறேன். முதல் முறையாக பொதுமேடையில் அவர்களின் பேச்சைக் கேட்கும் வாய்ப்பு மிகவும் சிறப்பானது.
திரு. லியோனி ஐயா அவர்களோடு கவிஞர் திரு. முத்துநிலவன் ஐயாவின் நட்பும், எந்த பட்டிமன்றமானலும் முதலில் பேச ஐயாவைத் தான் அழைப்பார் எனும் செய்தியும், பேச்சாளர்களை மிகவும் சுதந்திரமாக பேச அனுமதிக்கும் லியோனி ஐயா அவர்களின் பண்பும், பேச்சாளர்கள் என்ன பேசினாலும் சமாளித்து நகைச்சுவையில் கலக்கி நிகழ்ச்சியின் தலைவர் நான் தான் என்பதை நிமிடத்திற்கு ஒருமுறை நிருபிக்கும் அவரது சமயோசித புத்தியும் என்னை மிகவும் கவர்ந்தன. இப்படி புகழ் பெற்ற பேச்சாளர்களிடம் என்னை அறிமுகப்படுத்தி ஒரே மேடையில் நான் அமரவும் காரணமாக இருந்த திரு.கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கு தான் நான் நன்றி சொல்ல வேண்டும். இந்த பதிவின் மூலம் எனது நன்றிகள் ஐயாவிடம் சென்றடையட்டும். அனைவருக்கும் நன்றி. சந்திப்போம்.
வணக்கம் பாண்டியரே!
ReplyDeleteகல்யாண busy ல் காணவில்லை என்றல்லவா எண்ணினேன். வேலை பளு தானா. இருந்தாலும் வரும்போது நல்ல விடயத்தோடு தான் வந்துள்ளீர்கள் உங்கள் சந்தோஷம் தொற்றிக் கொண்டது எனக்கும். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது சகோதரர் நிலவன் லியோனி அவர்களோடும் நேரடியாக உரையாடும் வாய்ப்பு .கிட்டியதை யிட்டு. எத்தனை பேருக்கு கிட்டும் இது. அடுத்த பதிவில் எப்படி பட்டிமன்றம் அமைந்தது என்று விபரமாக போட்டால் நல்லது. கேட்க ஆவலாக உள்ளது. அல்லது விபரம் or link ஐ தந்தால் உதவியாக இருக்கும். சகோதரா இது ஒரு நல்ல அனுபவமும் ஆரம்பமும் வாழ்த்துக்கள்....!
அடுத்த லெவலுக்கு போவதற்கு. வாழ்க வளமுடன்...!
வணக்கம் சகோதரி
Deleteவாங்க உங்கள் அன்பும் நட்பும் கிடைத்தது எனக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருகிறது. சகோதரரின் மகிழ்ச்சி தங்களுக்கும் தொற்றிக்கொண்டது பூரிப்படைகிறேன் சகோதரி. பட்டிமன்றம் ஒரு கிராமத்து கோவில் திருவிழாவை முன்னிட்டு நடந்தது யாரும் ஒலி ஒளிப்பதிவு செய்யவில்லை. நான் ஒலிப்பதிவு செய்தேன் ஏதோ காரணமாக 2 நிமிடம் மட்டும் பதிவாகி வேறு ஏதும் பதிவாகவில்லை. முடிந்தவரை பட்டிமன்ற நிகழ்வை மீள்பார்வை செய்து பதிவிடுகிறேன் சகோதரி. முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றிகள்..
ஜுலையில் திருமணமா வாழ்த்துக்கள் நண்பரே வாழ்த்துக்கள்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் வாழ்த்து மிகுந்த மகிழ்வைத் தருகிறது. தாங்கள் கண்டிப்பாக திருமணத்திற்கு வர வேண்டும் முறையாக நேரில் வந்து அழைப்பு விடுக்கிறேன். அதற்கு முன்பு 17. 18 ல் புதுக்கோட்டை கணினிப் பயிற்சி பட்டறையில் சந்திப்போம் ஐயா. மிக்க நன்றி.
தம 2
ReplyDeleteமிக்க நன்றீங்க ஐயா
Deleteபொதுவாக பட்டிமன்றத்தில் பேசுபவர்கள் ஒரு வாரம் முன்பிருந்தே குறிப்புகள் எடுத்துக்கொண்டு தங்களைத் தயார் படுத்திக்கொள்வார்கள். ஆனால் முத்துநிலவன் அவர்கள் மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார். அவரது திறமைக்குப் பாராட்டுக்கள்.
ReplyDeleteவணக்கம் சகோதரர்
Deleteகவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்கள் சுமார் 5000 பட்டிமன்றங்களைக் கடந்தவர். அவரது அனுபவம் மிகப் பெரியது. சிறு குறிப்பு கூட இல்லாத அவர்களின் பேச்சு எனக்கும் வியப்பளித்தது சகோதரர். தங்களின் கருத்துக்கும் ஐயா அவர்களைப் பாராட்டியமைக்கும் மிக்க நன்றி.
இப்போதே அய்யா முத்துநிலவன் உங்களைத் திருமணத்திற்கு தயார்படுத்துகிறாரா? அல்லது பட்டி மன்ற பேச்சாளராக தயார் படுத்துகிறாரா? எப்படியும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் கேள்வியே வித்தியாசமாக இருக்கிறதே! எதற்கும் என்னை ஐயா தயார் படுத்தவில்லை நல்வழிப்படுத்துகிறார் என்பதே உண்மை. வலைப்பக்கம் ஆரம்பித்த எங்கள் நட்பு குடும்ப உறவாக மாறியது தான் இதில் சிறப்பாக சொல்ல வேண்டியது. நல்லோர்கள் நட்பும், திறமையான அனுபவமிக்கவர்களின் நட்பும் என்னை வழிநடத்தும் பாக்கியம் எனக்கு கிடைத்திருப்பது தான் மகிழ்ச்சி. சந்திப்போம் ஐயா. நன்றி.
அன்பு நண்பர் பாண்டியன் அவர்களுக்கு நல்வாழ்த்துக்கள்!..
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களைப் போன்றோரின் நட்பு நான் செய்த ஏதோ ஒரு நல்வினையால் நடந்தது என்று நம்புபவன் நான். நீங்கள் அடுத்த முறை இந்தியா வரும் போது தெரியப்படுத்துங்கள் அவசியம் சந்திப்போம். மிக்க நன்றிகள் ஐயா.
இரட்டை வாழ்த்துக்கள், லியோனி அவர்களுடன் மேடை ஏறியதற்கும், உங்கள் திருமணத்திற்கும்.
ReplyDelete. புதுக்கோட்டையில் சந்திப்போம்.
வாழ்த்துகளுக்கு மிக்க நன்றீங்க ஐயா. தங்களைக் காண மிகுந்த ஆவலோடு நான் காத்திருக்கிறேன். நேரில் சந்திப்போம். மிக்க நன்றீங்க ஐயா.
Deleteமனம் நிறைந்த பாராட்டுக்கள் + அன்பான இனிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் ஆசியும் வாழ்த்தும் மிகுந்த மகிழ்வளிக்கிறது. பாராட்டியமைக்கும் நன்றிங்க ஐயா. நாம் ஒரே மாவட்டம் என்பதால் விரைவில் சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்துவோம் நன்றீங்க ஐயா..
வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிரைவில் சந்திப்போம்...
வணக்கம் சகோதரரே
Deleteதங்கள் அன்பு கண்டு பலமுறை வியந்திருக்கிறேன். வாருங்கள் நேரில் சந்திப்போம். இம்முறை இரு நாள்களும் எங்களோடு தான் நீங்கள் இருக்க வேண்டும். மிக்க நன்றீங்க சகோதரர்.
திருமணத்திற்கு முன்கூட்டிய வாழ்த்துக்கள், பாண்டியன்.
ReplyDeleteநீங்கள் என்ன பேசினீர்கள் என்று கூறவில்லையே. (பேசவில்லையா?)
வணக்கம் அம்மா
Deleteதங்கள் வருகை மகிழ்வளிக்கிறது. நான் அவர்களிடம் பேசி மகிழ்ந்ததோடு சரி. மேடையில் பேசவில்லை. எனக்கே மேடையில் உட்காந்திருக்கும் போது ஒன்னுமே பேசாம நாம மேல உட்கார்ந்திருக்கிறோம் தோணியது. முத்துநிலவன் ஐயா அவர்களின் அன்பின் காரணமாக மேடை ஏற்றப்பட்டேன். இந்த அனுபவம் வருங்காலங்களுக்கு வழிகாட்டும் என்பது நிச்சயம். கருத்துரைக்கு நன்றீங்க அம்மா.
இப்படி பல்பு கொடுக்கிற மாதிரி தலைப்பு வைக்கிற எனக்கே பல்பு கொடுத்து விட்டீர்களே !
ReplyDeleteபாண்டியனின் ராஜ்ஜியத்தில் இனிமேல் உய்யலாலாதானா ?வாழ்த்துக்கள் !
த ம 7
வணக்கம் ஐயா
Deleteஎப்படி பல்பு! வருக ஐயா தங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் அன்பான நன்றிகள்.
பகிர்வுக்கும் திருமணத்திற்கும் வாழ்த்துக்கள் சகோ...
ReplyDeleteவணக்கம் சகோதரர்
Deleteதங்கள் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். நட்பு தொடரட்டும். நன்றி.
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கும் எனது இதயப்பூர்வமான நன்றிகள் ஐயா.
வணக்கம் சகோ! அரும்புகள் மலரவில்லையே என எண்ணினேன் வாழ்த்துக்கள்,ஐயா! நிறைகுடம் அதில் மேலும் நீர் ஊற்றத்தேவை இல்லையே? தப்புஉங்கமேல கேள்விகேட்டது உங்கதப்பு வாய்ப்புகளை
ReplyDeleteபயன் படுத்திக்கொள்வது புத்திசாலித்தனம் அதை நீங்கள் செய்திருக்கிறீர்கள், நன்றி சகோ.
வணக்கம் சகோதரி
Deleteநலம் தானே! ஐயா அவர்களிடம் தலைப்பைத் தெரிந்து கொள்ளும் ஆவலில் கேட்டேன். ஐயாவோடு நெருங்கி பழகும் வாய்ப்பு எல்லாருக்கும் அமையாது எனக்கு அமைந்ததில் மிகுந்த மகிழ்ச்சி சகோதரி. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பட்டிமன்றம் பற்றிய என் நினைப்பும் தகர்ந்துபோனது. முன்கூட்டிய முறையான பயிற்சி இல்லாமல் கொடுக்கப்படும் தலைப்பில் உடனடியாகப் பேசவேண்டுமானால் எவ்வளவு அனுபவமும் அறிவும் இருக்கவேண்டும்... கவிஞர் முத்துநிலவன் ஐயா அவர்களுக்கும் ஏனைய பட்டிமன்றப் பேச்சாளர்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுகள். தங்களுக்கு உடனிருந்து நிகழ்ச்சியை ரசிக்கும் பேறு கிடைத்தமைக்கும் வாழ்த்துக்கள். இனிய இல்லறம் அமைய முன்கூட்டிய நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவணக்கம் சகோதரி
Deleteதங்களின் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள். எல்லா பட்டிமன்றமும் இப்படி இல்லை சகோதரி. திரு.லியோனி ஐயா அவர்களின் குழு பல தலைப்புகளில் எண்ணற்ற மேடைகளைக் கண்டதின் விளைவாக இவ்வாறு பேச முடிகிறது. அனைவரையும் வாழ்த்தியமைக்கும் வருகைக்கும் எனது அன்பு நன்றிகள் சகோதரி.
சிறப்பானவர்களின் நட்பும் அருகில் இருக்கும் பாக்கியமும் கிடைக்கப்பெற்றமைக்கு வாழ்த்துக்கள்! ஜூலையில் திருமணமா? வாழ்த்துக்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரர்
Deleteதங்களின் தொடர் வருகைக்கும் அன்புக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் சகோதரர். திருமணத்திற்கு அவசியம் வர வேண்டும்.
இனிய திருமண வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கு எனது அன்பார்ந்த நன்றிகள் சகோதரர். தொடர்வோம் நட்பை. நன்றி..
Deleteதிண்டுக்கல் லியோனி ஐயா அவர்களின் பல பட்டிமன்ற நிகழ்வுகளை
ReplyDeleteநாங்களும் தொலைக் காட்சியில் கண்டு மகிழ்ந்ததுண்டு ஆனாலும்
இவர்களைப் போன்றவர்களுடன் ஏற்பட்டுள்ள நட்பானது மிகவும்
மகிழ்ச்சி தரக் கூடிய ஒன்றே வாழ்த்துக்கள் சகோதரா இந்த நட்பு மட்டும் அல்ல தங்கள் வாழ்வினைப் பங்கு போட வரவிருக்கும் அந்த ஆயுட்கால நட்பும் என்றென்றும் மகிழ்வினை அள்ளித் தர .
வணக்கம் அம்மா
Deleteதங்களின் ஆசியும் நட்பும் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் அம்மா. வலையுலகம் மதிப்பிட முடியாத நட்பை வழங்கியுள்ளது நினைத்து நாளும் மகிழ்ச்சியாய் உள்ளது. நன்றிகள் அம்மா.
பட்டிமன்ற ரிகர்சல் இருக்கும் என்றே நினைத்திருந்தேன், வலையுலகம் எவ்வளவு ,அற்புதமான உறவுகளை ஏற்படுத்திக் கொடுக்கிறது.. உங்களுக்கு வாழ்த்துகள், அய்யா முத்துநிலவனுக்கு நன்றிகள்
ReplyDeleteவணக்கம் சகோதரரே
Deleteதங்களின் இயல்பான குணம் என்னை வெகுவாக கவர்கிறது. நாம் நேரில் சந்திக்கும் வாய்ப்பிற்காக காத்திருக்கிறேன். அந்த நாள் எனது திருமண நாளாக இருந்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன். முறையாக அழைக்கிறேன். கண்டிப்பாக வர வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோதரரே..
நிச்சயமாக... நானும் ஆவலுடன் :-)
Deleteமேலும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் உங்கள் திருமணதிற்கு வாழ்த்துகள்
ReplyDeleteமிக்க நன்றி சகோதரர் உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும். தொடர்ந்து இணைந்திருப்போம்.
Deleteகலக்கல் கலக்கல். டபுள் தமாகா.
ReplyDeleteஇருமனமும் ஒன்றாகி திருமணம் என்ற பூ தங்களிருவரின் வாழ்வில் நறுமணம் பரப்பிட எனது அன்பான வாழ்த்துக்கள் தோழரே ! :)
ஆஹா! தங்களின் வாழ்த்து மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தங்களின் வருகைக்கும் அன்பிற்கும் மிக்க நன்றிகள்.
Deleteஇனிய நண்பர் பாண்டியன் அவர்களுக்கு வணக்கம். அன்று உங்களுடன் வீட்டுக்கு வரஇயலாத நேர நெருக்கடிக்காக மீண்டும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் (திருமணத்திற்கு முதல்நாளே வந்து காய்ச்சிவிட்டால் போச்சு - நம் வலை நண்பர்களின் மினி மாநாட்டை உங்கள் திருமணத்தில் நடத்திவிடுவோம்?) அப்புறம் உங்களன்பின் காரணமாக எனது “தலைப்புக்கேற்ப உடனடியாக - முன்தயாரிப்பின்றி-பேசும் திறமை(?)யைப் புகழ்ந்திருந்தீர்கள். அதில் ஒன்றும் பெரிய ரகசியமில்லை நண்பா. ஏற்கெனவே சிலஆயிரம் பட்டிமன்றங்களில் பேசிய அனுபவம் ஒன்று என்றால், -கோவில் திருவிழாக்களில் பெரும்பாலும் புத்தம் புதிய தலைப்புகளை விரும்ப மாட்டார்கள் (சினிமாத்தயாரிப்பாளர்களிடம் உள்ள “ப்ரூவ்ட் சப்ஜெக்ட்“ மாதிரி ) ஒரு சில பட்டிமன்றத் தலைப்புகள்தாம் இப்போது ஓடுகின்றன. அவற்றில் நாங்கள் எப்படியும் 50,60முறை பேசியிருப்போம். அந்த “தில்“ தான்! வேறுஒன்றும் பெரிய அறிவு அது இது எல்லாம் இல்லை. என்னைவிட தமிழறிவும், தத்துவஞானமும் கொண்டவர்களுக்குக் கிடைக்காத விளம்பர வெளிச்சம் எனக்குக் கிடைத்திருக்கக் காரணம் என் பெரிய அறிவல்ல, ஊடகவெளிச்சம்தான் என்பதை நானறிவேன். மற்றபடி உங்களன்பின் காரணமாகவே என்னைப் புகழந்திருக்கிறீர்கள். “கண்ணிலே அன்பிருந்தால் கல்லிலே தெய்வம் வரும்”. பட்டிமன்ற உலகின் இந்தப் போக்கை அறிந்திருப்பதால்தான் நான் அதை எனது தொழிலாக்கிக் கொள்ளவில்லை. ஓசி விளம்பரம் ப்ளஸ் காசு! ஆனால் அதற்காக நிறையப் பேர் செய்வதைப்போல எந்தத் தலைப்பிலும் பேசும் வழக்கம் எனக்கில்லை. என் கருத்திற்கியைந்த தலைப்பில்தான் பேசுவேன். நான் எதில் பேசுவேன், பேசமாட்டேன் என்று திரு லியோனி அவர்களுக்கும் தெரியும். அதனால்தான் அவருடன் 15ஆண்டுகளாகத் தொடர்ந்து நட்புடன் இருக்கிறேன். அதே நேரம் என் தகுதியை (லெவல்) நானறிவேன். என் கருத்துகளைச் சொல்லமுடியாத இடத்தில் நான் இருக்கமாட்டேன். என் தாகம் பெரிது... பார்க்கலாம். மீண்டும் நன்றி
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteமன்னிப்பு என்பதெல்லாம் பெரிய வார்த்தை ஐயா. நான் தான் தங்களுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். வயதில் சிறியவனாக இருந்தாலும் என்னை நண்பர் என்று அழைக்கும் தங்கள் குணம் கண்டு பலமுறை மகிழ்ந்திருக்கிறேன். உண்மையில் உங்களைப் பற்றிக் கூற நிறைய இருக்கிறது அது தங்களைப் புகழ்வதை போல் அமைந்து விட்டால் நீங்கள் அன்பாக கோபித்துக் கொள்வீர்கள் என்பதால் பயந்து கொண்டே பதிந்த பதிவு. தங்களின் வேட்கையும் தாகமும் நான் நன்கு அறிவேன் ஐயா. தங்களின் அனைத்து நிகழ்வுகளிலும் தங்களோடு இணைந்து செயல்பட எனது கரம் என்றென்றும் துடிக்கும் ஐயா. வருகை தந்து கருத்திட்டமைக்கு அன்பான நன்றிகள். சந்திப்போம் ஐயா. தொடர்ந்து இணைந்திருப்போம்.
பின்னரும் 3நாள் தொடர்ச்சியாக வேறுவேறு நிகழ்ச்சிகள்... எனவேதான் உங்கள் வலைப்பக்கத்தில் என்னைப் பற்றி எழுதியதற்கே தாமதமாகப் பின்னூட்டமிடுகிறேன். மன்னியுங்கள்.
ReplyDeleteஐயா நீங்கள் மன்னிக்க என்று சொல்லும் போது மனம் கணக்கிறது ஐயா. வேண்டாம் அந்த வார்த்தை. தங்கள் அன்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். நிகழ்ச்சிகளுக்கான பயணங்களில் கவனமாக இருக்கவும் ஐயா.
Deleteமுன்னோட்டமா?
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteஅப்படி ஒன்றும் இல்லை ஐயா. எல்லாம் ஒரு அனுபவம் தான். ஐயா அவர்களின் நட்பு என்னை செம்மைப்படுத்தி வழிநடத்தினாலே போதும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் ஐயா.
"தலைப்பு: அதிகம் சந்தோசமாக இருப்பது திருமணத்திற்கு முன்பா? திருமணத்திற்கு பின்பா?
ReplyDeleteஜுலையில் திருமணமாக போகும் எனக்காக வைத்த தலைப்பு போலவே உணர்ந்தேன்." என்பதில் உண்மை இருக்கிறது.
தம்பிக்கு எனது திருமண வாழ்த்துகள்.
வணக்கம் ஐயா
Deleteதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் அன்பான வாழ்த்துக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா.
நன்றீங்க ஐயா
ReplyDeleteதகவலுக்கு நன்றீங்க ஐயா. நான் இப்போது முயற்சித்தப்போது கூட பதிவிடுவதில் பிரச்சனை இருக்கிறதே! அன்பு கூர்ந்து கவனியுங்கள். நன்றி.
ReplyDeleteஜூலையில் திருமணமா!!!! வாழ்த்துக்கள் சகோ.
ReplyDeleteமுத்து நிலவன் ஐயாவைப் பற்றி இதில் படித்தவுடன் எனக்கும் ஆச்சிரியமாகிவிட்டது. தலைப்பே தெரியாமல், நிகழ்ச்சிக்குவ ந்து தெரிந்த பிறகு அதற்கேற்ப தயார் செய்துக்கொள்வேன் என்று சொல்பவரிடம் தமிழ் எவ்வளவு அவரோடு விளையாடுகிறது என்பது விளங்குகிறது.
வணக்கம் சகோதரரே
Deleteமிக சரியாக சொன்னீர்கள். தீவிர வாசிப்பும். பல மேடைகளை அலங்கரித்த அவரது அனுபவமும் இது போன்ற சிறப்புகளைத் தந்திருக்கிறது. அவரது அன்பான குணமும் வெகுவாக பாராட்ட வேண்டியது. படித்து கருத்திட்டு திருமணத்திற்கு வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் சகோதரர்.
நல்ல பதிவு பாண்டியன்
ReplyDeleteதாமதமாக படிப்பதில் ஒரு நல்லது இருக்கிறது
மக்கள் கருத்தையும் சேர்த்து படிக்கும் வாய்ப்பு ...
நன்றி பாண்டியன்
அன்பின் பாண்டியன் - அருமையான பதிவு - பட்டி மன்ற நிகழ்வு பற்றிய பதிவு - முத்து நிலவனின் மேடை ஏறிய பின்னர் தலைப்பு என்ன என்று கேட்கும் தன்னம்பிக்கையும் - எத்தலைப்பானாலும் குறிப்புகளோ முன்னேற்பாடோ இல்லாமல் பேசக் கூடிய ஆற்றலுடையவர் என நிரூபிக்கும் பேச்சாளர் என்பதும் பிரமிக்க வைக்கிறது.
ReplyDeleteவருகிற ஜூலை திருமணமா ? சிறப்புடன் நடைபெற நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா