அரசு உயர்நிலைப்பள்ளி கல்குடி. புதுக்கோட்டை மாவட்டம்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சிகல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில் 96 விழுக்காடு தேர்ச்சி பெற்றுள்ளது. தேர்வெழுதிய நாற்பதெட்டு மாணவர்களில் நாற்பத்தாறு மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்கள்
ரெ.கௌசல்யா - 462/500 - முதலிடம்
வெ.வின்சென்ட்மேரி - 458/500 - இரண்டாமிடம்
க.மோகனப்பிரியா - 445/500 - மூன்றாமிடம்
(பசங்கள ஒருத்தன் கூட முதல் மூன்று இடங்களுக்குள் வரவில்லையே! இருப்பினும் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த பத்து மாணவர்களில் பையன்கள் 2 பேர் அடக்கம்)
பாட வாரியான தேர்ச்சி விகிதம்
தமிழ் - 96%
ஆங்கிலம் - 98%
கணிதம் - 96%
அறிவியல் - 100%
சமூக அறிவியல் – 98%
நூற்றுக்கு நூறு
அறிவியல் பாடம்- ரெ. கௌசல்யா
நன்றிகள்பத்தாம் வகுப்புத் தேர்ச்சிக்கு உழைத்த ஆசிரியர்களையும் மாணவர்களையும் தலைமையாசிரியர் திருமதி. சாந்தி அவர்கள் மனதார வாழ்த்தினார். இந்த தேர்ச்சி விகிதத்திற்காக உழைத்த அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும் உரித்தாகட்டும். அனைவருக்கும் நன்றி.
பின்குறிப்பு
இந்த பதிவு வெறும் செய்திக்காக மட்டும் தான். அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தயங்கும் பெற்றோர்களின் மனநிலையை மாற்ற ஒரு விழிப்புணர்வாக இந்த பதிவு இருக்கட்டும். அதே சமயம் மதிப்பெண்கள் மட்டும் ஒருவனின் வாழ்க்கையை உயர்த்துகிறதா என்றால் நிச்சயமாக என்று சொல்லி விட முடியாது.
ஆர்வமும் முனைப்பும் ஒருவனை உயர்த்துமென்பதால் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் வெற்றியைத் தள்ளிப் போட்டவர்களும் தாங்கள் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அதில் ஆர்வமும் தன்முனைப்பும் இருந்தால் போதும் நிச்சயம் அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
பாட வாரியான தேர்ச்சி விகிதம்
தமிழ் - 96%
ஆங்கிலம் - 98%
கணிதம் - 96%
அறிவியல் - 100%
சமூக அறிவியல் – 98%
நூற்றுக்கு நூறு
அறிவியல் பாடம்- ரெ. கௌசல்யா
பின்குறிப்பு
இந்த பதிவு வெறும் செய்திக்காக மட்டும் தான். அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தயங்கும் பெற்றோர்களின் மனநிலையை மாற்ற ஒரு விழிப்புணர்வாக இந்த பதிவு இருக்கட்டும். அதே சமயம் மதிப்பெண்கள் மட்டும் ஒருவனின் வாழ்க்கையை உயர்த்துகிறதா என்றால் நிச்சயமாக என்று சொல்லி விட முடியாது.
ஆர்வமும் முனைப்பும் ஒருவனை உயர்த்துமென்பதால் தேர்வில் வெற்றி பெற்றவர்களும் வெற்றியைத் தள்ளிப் போட்டவர்களும் தாங்கள் செய்யும் எந்த செயலாக இருந்தாலும் அதில் ஆர்வமும் தன்முனைப்பும் இருந்தால் போதும் நிச்சயம் அவர்கள் வாழ்வில் வெற்றி பெறுவார்கள். வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.
இந்தியாவின் வரும்கால தூண்களான மாணவ, மாணவிகள் அணைவருக்கும் எமது வாழ்த்துக்கள்.
ReplyDeleteKillergee
www.killergee.blogspot.com
வணக்கம் ஜி
Deleteதங்கள் கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றீங்க
இப்போதெல்லாம் தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பாடங்களில் நல்ல மதிப்பெண் எடுப்பவர்களாகவும் திறமைசாலிகளாகவும் இருக்கிறார்கள். இதற்கு காரணம் அந்த பள்ளி ஆசிரியர்களின் உழைப்பே காரணம் ஆகும்.
ReplyDelete// இந்த பதிவு வெறும் செய்திக்காக மட்டும் தான். அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க தயங்கும் பெற்றோர்களின் மனநிலையை மாற்ற ஒரு விழிப்புணர்வாக இந்த பதிவு இருக்கட்டும். அதே சமயம் மதிப்பெண்கள் மட்டும் ஒருவனின் வாழ்க்கையை உயர்த்துகிறதா என்றால் நிச்சயமாக என்று சொல்லி விட முடியாது. //
நன்றாகவே சொன்னீர்கள். உங்களுக்கும், உங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள்!
த.ம.2
வணக்கம் ஐயா
Deleteவருகை தந்து ஊக்குவிக்கும் கருத்தளித்து மகிழ்ந்தமைக்கும் மிக்க நன்றீங்க ஐயா
சகோ
ReplyDeleteவாழ்த்துக்கள்
நான் ஒரு தனிப்ப் பதிவினைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன்..
மிக்க நன்றீங்க சகோ. விரைவில் வெளியிடுங்கள்.
Deletetama 3
ReplyDeleteமிக்க நன்றீங்க சகோ
Deleteவாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDeleteமக்கள் புரிந்துக்கொண்டால் நல்லது.
மிக்க நன்றீங்க சகோதரர்
DeleteHow about your kid in govt school or private.expecting honest reply. seshan
ReplyDeleteநிச்சயம் எனது குழந்தையை அரசுப்பள்ளியில் தான் சேர்ப்பேன். எனது குழந்தையின் வளர்ச்சியை மதிப்பெண் மட்டும் நிர்ணயித்து விட முடியாது. புறச்சூழல்களைப் புரிந்து கொண்டு தீர்க்கமான முடிவு எடுக்கும் மனநிலையும் வேண்டும். மதிப்பெண் சார்ந்து வேலை வாய்ப்புகள் வழங்குற நடைமுறை எனது மகன்/மகள் காலத்தில் மாறிவிடும் என்று நம்புகிறேன். அரசு பள்ளிகள் படித்தவர்கள் இன்று பல்வேறு துறைகளில் சாதித்திருக்கிறார்களே! கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றீங்க சகோதரரே.
Deleteஉங்களைப் போன்ற ஆசிரியர்கள் பணியாற்றும் பள்ளிகள் பயிலும் மாணவர்கள் முன்னணிக்கு வருவதில் ஆச்சரியம் இல்லை !
ReplyDeleteத ம +1
என் மீதான உங்கள் மதிப்பீட்டிற்கு நன்றிகள் சகோதரர். உங்கள் நம்பிக்கை போல் தொடர்ந்து பணியாற்ற வேண்டுமென்பதே எனது ஆவலும் ஆசையும். கருத்துக்கு மிக்க நன்றீங்க சகோதரர்..
Deleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteமிக்க நன்றீங்க சகோதரர்
Deleteவணக்கம்
ReplyDeleteசகோதரன்.
தேர்வில்வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.
மாணவர்கள் பாடசாலைக்கு சென்று அன்றாடம் ஆசிரிகள் கற்றல் கற்பித்தல் விடயங்களை செய்கிறார்கள். இருந்து பாடசலை விட்டு வீட்டுக்கு வந்தவுடன் படிக்க வேண்டும் என்ற உந்து சக்தியை கொடுப்பது பெற்றோர்கள்.(மீள் பார்வை) பெற்றோர்கள் தன் பிள்ளையின் மீது அக்கறை உணர்வு எடுக்கவேண்டும் எடுக்கும் போது அந்த பிள்ளைகள் தேர்வில் சித்தியடைய முடியும்.
உதாரணமாக-
மாடுகள் பகலில் மேய்ந்த பின் தன்னுடைய வயிறு நிறைந் பின் அமைதியாக தூங்கிக் கொடு அசை போடுவது போல மாணவர்கள் பகலில் படித்ததை இரவில் அன்றாடம் மீட்டுப்பார்க வேண்டும.
மாணவ்கள் வீட்டில் படிக்கும் காலத்தில் இரவுநேர படிப்புக்காக (நேர சூசி) தங்களின் வசிக்கு ஏற்ற மாதிரி வடிவமைக்க வேண்டும் இப்படியான வழி வகைகளை செய்யும் போது மாணவர்கள் தங்களை தாங்கள் தயார் படுத்திக் கொள்ள முடியும்
ஒரு பாடசாலையில் 100 மாணவர்கள் தேர்வு எழுதுபவர்கள் என்றால் அதில் 10 மாணவர்கள் தான் தேர்வில் சித்தியடைந்துள்ளார்கள் ஏனைய 90 மாணவர்கள் ஏன் தேர்வு பெறவில்லைஎன்ற மீளய்வு செய்ய வேண்டும் அப்போது தேல்விக்கான விடை கிடைக்கும்.
ஆசிரியரக்ள் கற்பிக்கின்றார்கள் நன்றாக பாடசாலை நேரம் கழித்து பின் மலை நேர வகுப்புக்கள் கடந்தகால வினாத்தாள்கள்(பாஸ்பேப்பர்) செய்து பார்த்தல். பேன்ற விடயங்கள் ஆசிரியர்கள் செய்கிறார்கள். எவ்வளவு ( INPUT)கொடுக்க முடியுமோ கொடுக்கிறாரகள் ஆசிரியர்கள்... (OUTPUT) என்ற இறுதி முடிவை மாணவர்கள் கொடுக்கவேண்டும் அதுதான் தேர்வில் சித்தியடைதல்....
நல்ல விடயத்தை பகிர்ந்துள்ளீரக்ள் வாழ்த்துக்கள் சகோதரன்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மிக நுணுக்கமான கருத்துரை தங்களிடமிருந்து கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ. அரசு பள்ளிகளின் இடர்பாடுகளைப் புரிந்து கொண்டமைக்கு நன்றி.
Deleteநல்லது இந்தப் பதிவு ஆசிரியர்கள் மீதும் பாடசாலைகள் மீதும் நம்பிக்கை வைக்க ஏதுவாக இருக்கும் என நம்புகின்றேன். வாழ்த்துக்கள் ...! தங்களை ப் போல் ஆசிரியர் பெருக வேண்டும் என வாழ்த்துகிறேன்.....!
ReplyDeleteமிக்க நன்றீங்க சகோதரி
Deleteஉங்கள் வருகையும் கருத்தும் மிகுந்த மகிழ்வளிக்கிறது. தொடர்வோம். நன்றி..
தேர்ச்சி பெற்ற எல்லோருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteதமிழ்நாட்டில் மாணவர்களை விட மாணவிகள் தான் முன்னிலை வகிப்பதால்
ஆண்கள் அடுப்பு ஊதலாம் போல...
http://eluththugal.blogspot.com/2013/11/blog-post_687.html
என்ற பதிவைச் சமர்ப்பணம் செய்கிறேன்.
வணக்கம் ஐயா.
Deleteதங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றீங்க
உங்களைப்போன்ற துடிப்பான இளைஞர்களால் இன்னும் சாதிக்க முடியும்....நீங்கள் செல்லும் பயணமெல்லாம் வெல்லும் பயணமாக வாழ்த்துகள்.......!
ReplyDeleteவணக்கம் ஐயா
Deleteதங்களின் ஊக்குவிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. உங்கள் நம்பிக்கை போல் சாதிக்க இன்னும் இருக்கிறது அதை நோக்கிய பயணம் தொடரும். வாழ்த்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா.