அரும்புகள் மலரட்டும்: உண்மையில் உலகம் மட்டும் தான் சுருங்கி விட்டதா?

Thursday 29 May 2014

உண்மையில் உலகம் மட்டும் தான் சுருங்கி விட்டதா?


இருபது, முப்பது வருடங்களுக்கு முன்பு ஒரு கற்பிணி பெண்ணுக்கு இடுப்புவலி வந்து விட்டால் வண்டியைக் கட்டுங்கடா பிள்ளையை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லனும் எனும் குரலை கேட்டிருக்கலாம். மாட்டு வண்டி கட்டிகிட்டு நெடுதூரம் பயணம் செய்து தனக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி திரும்பும் கிராமத்துவாசிகளைப் பார்த்திருக்கிலாம். ஆனால் இன்று தெருவின் அடுத்த முனைக்கு செல்வதனாலும் இருசக்கர வாகனம் இல்லாமல் எழுந்திருப்பது இல்லை.

அது போலவே தன் வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி துக்க நிகழ்வாக இருந்தாலும் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமானால் ஒரு ஆளைப் பிடித்து அவர் கையில் குறிப்பிட்ட ஒரு தொகையைக் கொடுத்து ஒவ்வொரு ஊராக சொல்லி வர சொல்வார்கள்.

இன்று அப்படியில்லை மாப்ள நான் மச்சான் பேசுகிறேன். பெரிசு இப்பவோ அப்பவோனு இழுத்துக் கிட்டு கிடக்குது முடிஞ்சதும் போன் பண்றேன் என்று முன் தகவல் தெரிவிக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன காரணம்! புதிய கண்டுபிடிப்புகளும் தொலைதொடர்பு சாதனங்களின் வளர்ச்சியே!

தொலைத்தொடர்பு, பயணநேரம் இவற்றை மட்டும் எடுத்துக் கொண்டால் உலகம் சுருங்கி விட்டது என்பது உண்மை. ஆனால் கணவனும் மனைவியும் அருகருகே நடந்து போகிறார்கள் அவன் யாருடனோ தன் செல்பேசியில் பேசிக்கொண்டு; அவள் வேறு யாரிடமோ பேசிக்கொண்டு! கை தொடும் தூரத்தில் இருந்தாலும் அவர்கள் நெருக்கமாக இல்லையே!

வீட்டுக்கு விருந்தாளி வருகிறார். அவருடன் இன்முகத்துடன் பேச எங்கே நேரம் இருக்கிறது தொலைக்காட்சியில் கிரிக்கெட்டைப் பார்த்துக் கொண்டு நாம் ஆஸ்திரேலியாவில் இருக்கிறோம். பூகோள ரீதியாக ஒருவருக்கொருவர் நெருக்கமாக வந்து விட்டாலும் அனுபவ ரீதியாக மனிதர்களுக்கு இடையிலான தொலைவு கூடி விட்டது. இப்படியே சென்றால் திருமணங்கள் கூட கீழ்கண்டவாறு நடக்கலாம்.

சார்பதிவாளர் முன் அந்த காதலர்கள் நிற்கிறார்கள். வரும் 17ந் தேதி பதிவுத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறோம் என்கிறார்கள்! சார்பதிவாளர் அவர்களைப் பற்றிய விவரங்களைப் பதிவு செய்து கொண்டார். 17ந் தேதி மின்னஞ்சலில் நிரப்பட்ட விண்ணப்பம் அனுப்புகிறேன். ஆளுக்கொரு சங்கேத எண் தருகிறேன். உங்கள் இருப்பிடத்திலிருந்து அந்த எண்ணை நிரப்பி எனக்கு திருப்பி அனுப்பினால் போதும், நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் பதிவாகி விடும்.

திருமணநாள் அவன் அவளுக்கு போன் செய்தான். விண்ணப்பம் வந்தது. நான் பூர்த்தி செய்து உன் மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளேன். முகூர்த்த நேரம் முடிவதற்குள் உன் எண்ணையும் நிரப்பி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி விடு! நினைப்பதற்கு கற்பனையாக வேண்டுமானால் இருக்கலாம். ஆனால் இப்படி நடந்தாலும் ஆச்சரியம் இல்லை.

தகவல் தொடர்பு சாதனங்களைக் குறை சொல்லவில்லை. ஆனாலும் முன்னெப்பொழுதும் இல்லாத தனிமை உணர்வு நம்மை ஆட்கொண்டிருக்கிறதே. வீட்டில் எல்லோரும் சுப நிகழ்ச்சிகளுக்கு ஒரு வாரம் சென்று வருவதாக கூறினால் கூட நான் வரவில்லை இணையம் முன்பு உட்கார்ந்தால் எனக்கும் எதுவும் தேவையில்லை எனும் உணர்வு இளைய தலைமுறைகளிடம் ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியவில்லை.

முன்பெல்லாம் வக்கிர புத்திக்காரர்கள், வஞ்சக எண்ணம் கொண்டவர்கள், கொலைக்காரர்கள், தீயதையே நினைப்பவர்கள் இவர்களையெல்லாம் நான் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். வளரும் குழந்தைகள் கண்களில் அவர்கள் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இன்று தொலைக்காட்சி பெட்டியின் வழியாக அவர்கள் அத்தனை பேரும் நம் வீட்டு நடு அறையில் குழந்தைகள் மத்தியில் எந்நேரமும் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை விஞ்ஞான தந்த வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள மனம் அனுமதிக்கவில்லை.

உலகம் சுருங்கியதால் மற்ற தேசத்து கலாச்சாரங்களை அவசரமாக இறக்குமதி செய்து விட்டு திணறிக் கொண்டிருக்கும் இளைஞர்களையும் இந்திய பொருளாதாரத்தையும் காண முடிகிறதல்லாவா!

தன் பக்கத்து வீட்டுடன் பரிவோடு நடந்து கொள்ளாதவனுக்கு பேஸ்புக்கில் ஆயிரம் நண்பர்கள் இருந்து என்ன பயன்! முன்பெல்லாம் தனிமையில் இருக்கும் போது தன்னைப் பற்றிய சிந்தனையும், தனது வருங்கால திட்டம் பற்றிய எண்ணங்கள் ஓடும். அப்படிபட்ட தருணங்களில் கற்பனை திறனும் சிந்திக்கும் ஆற்றலும் நிறைந்து இருப்பதை காணமுடியும்.

ஆனால் இன்று ஒரு நிமிடம் தனியாக இருந்தாலும் எடுடா செல்போனை எனும் நிலை தான். இப்போது ஒரு தனியார் செல்போன் நிறுவனம் விளம்பரம் ஒன்று வருகிறது பார்த்திருப்பீர்கள்.

அவன் என்னிடம் பேச மாட்டியா என்று கேட்பான்? என்ன பேசுறது என்று அவள் கேட்பாள் இப்படியே காலம் கடந்து விடும் அவன் இரவு வணக்கம் சொல்லி விடைக்கொடுக்க முயல்வான். அவளோ கொட்டாவி விட்டுக்கொண்டே காலை வணக்கம் தெரிவிப்பாள். உண்மையான உறவுகளுக்கு நேரம் போவதே தெரியவில்லை என்று குரல் கேட்கும்! இப்படி நேரம் காலம் தெரியாம பேசி தான் புதுபுது உறவுகள் முளைக்கின்றன என்பதை நம்மால் மறுக்க முடியுமா!

எது எப்படியாகினும் இன்றைய தொலைத்தொடர்பு சாதங்களால் பல்வேறு நன்மைகளைப் பெற்றிருக்கிறோம் என்பது மறுக்க முடியாத உண்மை. அதே சமயம் அருகில் இருக்கும் அன்பான உறவுகளை மறந்திருக்கிறோம் என்பதும் உண்மை. உலகம் சுருங்கிய போதே நமது அண்டை வீட்டாருடன் நெருங்கி பழகும் அன்பான மனமும் சுருங்கி விட்டதோ என்ற ஐயமும் எழுந்துள்ளது.

மொத்தத்தில் தொலைதூரத்தில் இருப்பவர்கள் அருகில் வந்து விட்டார்கள் அருகில் இருப்பவர்கள் தொலைதூரத்திற்கு சென்று விட்டார்கள். இது பற்றிய கொஞ்சம் விழிப்போடு செயல்பட்டால் எல்லாம் நலமாகும். நன்றி.

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

49 comments:

 1. உண்மைதான் பாண்டியன். தொழில்நுட்ப சாதனங்கள் தூரத்தை குறைத்துவிட்டன. ஆனால் நம்மை அடிமையாகி மன பாரத்தை அதிகரித்துவிட்டது. சிந்திக்க வேண்டிய விஷயம்தான்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா. நாம் விழிப்போடு இருப்பது அவசியம் என்பதற்காக எனது எண்ணங்களைத் தெரிவித்திருக்கிறேன். தங்களின் முதல் வருகைக்கும் முத்தான கருத்துக்கும் நன்றி

   Delete
 2. //தொலைதூரத்தில் இருப்பவர்கள் அருகில் வந்து விட்டார்கள் அருகில் இருப்பவர்கள் தொலைதூரத்திற்கு சென்று விட்டார்கள்.//

  நிஜமான சந்தோஷத்துக்கும் நமக்கும் தூரம் அதிகமாகி விட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஆம் ஐயா தொலை தொடர்பு சாதனங்கள் பயன்படுத்துவது கத்தி மேல் நடப்பது போன்றது. நாம் முறையாக கையாள வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்

   Delete
 3. #நேரில் வர வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் பதிவாகி விடும். #ஒரு காலத்தில் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுவதாக கருதப்பட்டது,இப்போது மின் அஞ்சலில் !
  த ம +1

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஜி
   தங்கள் பாணியில் கருத்துரை வழங்கியமைக்கு நன்றிகள். மதுரையில் நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பிற்கான முன்னேற்பாடுகள் பற்றிய சிந்தனையில் இருப்பதாக அறிந்தேன். திறம்பட செயலாற்றி சிறப்பான சந்திப்பாக அமைத்து விடுவோம். கருத்துக்கு நன்றிஜி.

   Delete
 4. "எதை நோக்கி பயணம்...?" என்பது தெரியாமலே தொடர்கிறது என்பது உண்மை...

  மனமே சுருங்கி விட்ட பின்...?

  ReplyDelete
  Replies
  1. தங்கள் இரண்டு கேள்விக்கும் காலம் தான் பதில் சொல்ல வேண்டும் சகோதரர். பதிவை ஆழப்படித்துக் கருத்திட்டமைக்கு நன்றிகள்..

   Delete
 5. தொலை நுட்பங்களால் நாடுகளுக்கிடையே ஊர்களுக்கு இடையே தூரம் குறைந்து விட்டது ஆனால் உறவுகளுக்கிடையே தூரம் அதிகரித்து கொண்டே இருக்கிறது என்பது உண்மைதாம். இது ஒரு விழிப்புணர்வு பதிவு என்றாலும் இதைப் படித்தும் மக்கள் விழிப்புணர்வு கொள்ளமாட்டார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்.
   நம்மைப் போன்றவர்களே நம்மை உற்று நோக்கிப் பார்த்துக் கொள்ள பதிவாக இருந்தாலே போதுமானது. அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரர்..

   Delete
 6. நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மைதான் பாண்டியன்.

  இதெற்கெல்லாம் கரெண்ட் கட் தான் நல்ல பலன் தரும்))))

  ReplyDelete
  Replies
  1. மிகச் சரியாக சொன்னீர்கள் சகோதரி. நாம் சிறிய அளவேனும் விழித்துக் கொள்ள வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரி.

   Delete
 7. விஞ்ஞானம் தந்த கொடைஇது.சௌகரியங்களும், விஞ்ஞானவலர்ச்சியும் அதிகரிக்கிரித்திருக்கிற
  இந்நேரத்தில் மனித மனம் ,,,,,,,,,,,,,,,,,,,,?

  ReplyDelete
  Replies
  1. மனித மனம் காலம் தான் பதில் சொல்ல வேண்டும். மிக்க நன்றீங்க ஐயா..

   Delete
 8. உண்மைதான் நண்பரே
  உலகம் சுருங்கிவிட்டாலும்
  மனிதர்கள் இணைப்பில்லாத தனித் தனித் தீவுகளாகத்தான் இருக்கிறார்கள்
  இந்நிலை என்று மாறுமோ?

  ReplyDelete
  Replies
  1. தனித் தீவுகளாக மாறியுள்ளதால் மனித மனங்களும் மாறி உள்ளது ஐயா. அவை தான் மாற வேண்டும். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க ஐயா

   Delete
 9. இணைதிருந்தாலும் இடைவெளி அதிகமாகி கொண்டு தான், தொலைவில் உள்ளவர்கள் அருகில் இருப்பது போலவும் உண்மைதான் சகோ இதை எப்படி நிவர்த்தி செய்யப் போகிறோம். என்பதும் கேள்விக்குறி தான். விழிப்புணர்வு தரும் நல்ல பதிவு சகோ நன்றி வாழ்த்துக்கள் ....!

  ReplyDelete
  Replies
  1. அன்பின் சகோதரிக்கு வணக்கம்
   தங்கள் வருகைக்கும் அழகிய கருத்துக்கும் மிக்க நன்றி. தொடர்ந்து உற்சாகப்படுத்தும் கருத்தை உற்சாகமுள்ள ஒரு மனத்தினால் அளிக்க முடியும். என்றும் நீங்கள் நல்ல நலமுடனும் வளமுடனும் இருக்க வேண்டுமென்று வேண்டுகிறேன்.
   ---------------
   என்ன ஆயிற்று சகோதரி சமீபத்தில் பதிவும் இடவில்லை. மனமும் உற்சாகம் இழந்து காணப்படுகிறதோ என்று எனக்கு தோணுகிறது. எதுவாகினும் கடந்து போகும். தவறாக ஊகித்திருந்தால் மன்னிக்க. இதற்கு இங்கே நீங்கள் பதில் தர வேண்டுமென்ற அவசியமும் இல்லை. எனது மனதிற்உ பட்டதைக் கேட்டு விட்டேன். நன்றீங்க சகோதரி.

   Delete
  2. சரியான இடத்தில் சரியான கேள்விகள் தான் கேட்டுள்ளீர்கள்.. உண்மை தான் அது எனக்கே தோன்றுகிறது. வேலைப்பளுவும் நேரம் இன்மையும் தான் காரணம் வேலைக்கு சென்று வந்து கணினியோடு இருப்பதால் அருகில் இருப்பவர்களிடம் தூரம் குறைவது போல் அல்லவா ....அத்துடன் வீட்டு வேலைகளும் தான்
   ஏனெனில் கல்வி முடித்த பிள்ளைகள் வீடு திரும்பியதால் அதில் நேரத்தை செலுத்த முடியவில்லை அப்பனே அதுவும் இல்லாமல் நோய்கள் வேறு குடி கொள்ள வசதியா இடம் தேடிக்கொண்டு திரிகிறார்கள். இப்படி இருப்பதால் நோய்கள் தலை காட்டுவதை உணர்கிறேன். அதனால் தான்
   ( வாழ்கையில் சோகம் என்று ஒன்றும் சொல்வதிற்கில்லை வளர்ச்சிகளை காண சகிக்காதவர்கள் எதையவாது இங்கிதம் இல்லாமல் சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள் சோகம் உள்ளவர்களை தினமும் தான் சந்திக்கிறோமே அவர்களையும் தேற்றும் வகையில் .) தங்கள் அன்புக்கும் அக்கறை கொண்டு ஊக்கப் படுத்தும் அன்பு மகனுக்கு ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் ....! முடிந்த வரை முயற்சிக்கிறேன்.

   Delete
  3. எனது கேள்விக்கு மதிப்பளித்து மறுமொழியளித்த தங்கள் அன்பு குணத்திற்கு நன்றிகள் அம்மா.

   Delete
 10. எனக்கு ரொம்ப பிடித்திருகிறது கட்டுரை...
  ஈ.எம். பாஸ்டர் ரேஞ்சுக்கு எழுத ஆரம்பித்து விட்டீர்கள். இன்னும் கொஞ்சம் நகைப்பை சேர்த்தால் தமிழில் சொல்லக் கூடிய இடத்திற்கு வந்துவிடலாம்..
  அடியேன் ஆசியில் இருந்து ... ?
  த.ம. எட்டு..

  ReplyDelete
  Replies
  1. அன்பு சகோதரரின் கருத்துக்கும் ஆலோசனைக்கும் மிக்க நன்றிகள். தொடர்ந்து உரிமையோடு தவறுகளைச் சுட்டிக்காட்டவும் தயங்க வேண்டாம். வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோ.

   Delete
 11. உண்மைதான் நண்பரே... விஞ்ஞான வளர்ச்சி, மனிதவாழ்வுக்கு வீழ்ச்சியே என்பதை சரியாக சொல்லிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் பாண்டியரே.....
  Killergee
  www.killergee.blogspot.com

  ReplyDelete
  Replies
  1. வருகை தந்து கருத்திட்டு மகிழ்ந்தமைக்கு மிக்க நன்றீங்க சகோதரரே.

   Delete
 12. "//தொலைதூரத்தில் இருப்பவர்கள் அருகில் வந்து விட்டார்கள் அருகில் இருப்பவர்கள் தொலைதூரத்திற்கு சென்று விட்டார்கள்.//"

  - சுடும் உண்மை.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோ.
   சிறு இடைவேளைக்கு அப்புறம் உங்கள் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. எனக்கும் நேரமின்மையால் தான் தங்கள் தளங்களுக்கு வர இயலவில்லை. மன்னிக்க. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோ

   Delete
  2. நீங்கள் புது மாப்பிள்ளை ஆகப் போகிறவர்கள். உங்களை போய் நான் தவறாக எண்ணுவேனா!!!!.
   உங்களுடைய பதிவுகளை கொஞ்சம் நிதானமாக படிக்க வேண்டும். அதனால் பிறகு படிக்கலாம் என்று வைத்து விடுவேன். அது கடைசியில் மறந்து விடுகிறது. அதனால் தான் இடைவெளி. மற்றபடி வேறு ஒன்றும் இல்லை.

   புது மாப்பிள்ளை ஆகப் போகிறவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

   Delete
 13. " மொத்தத்தில் தொலைதூரத்தில் இருப்பவர்கள் அருகில் வந்து விட்டார்கள் அருகில் இருப்பவர்கள் தொலைதூரத்திற்கு சென்று விட்டார்கள். "

  அதிகம் சிந்திக்கவைத்துவிட்ட வரிகள் ! இன்றைய சமூகத்துக்கு ஏற்ற பயனுள்ள கட்டுரை.

  தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகை தந்து தங்களின் கருத்துகளை பதியுங்கள்.

  நன்றி
  சாமானியன்

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   அவசியம் தங்கள் தளத்திற்கு வருகை இருக்கும். வருகைக்கும் ஊக்குவிக்கும் கருத்துக்கும் மிக்க நன்றீங்க சகோதரரே.

   Delete
 14. அதிகம் சிந்திக்கவைத்துவிட்ட வரிகள் ! இன்றைய சமூகத்துக்கு ஏற்ற பயனுள்ள கட்டுரை.

  தங்களுக்கு நேரமிருப்பின் எனது வலைப்பூவுக்கு வருகை தந்து தங்களின் கருத்துகளை பதியுங்கள்.

  நன்றி
  சாமானியன்
  saamaaniyan.blogspot.fr

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றீங்க சகோதரரே

   Delete
 15. தொழில்நுட்ப முன்னேற்றம்
  உறவுகளைப் பேணும் நிலையை
  மாற்றியது உண்மை தான்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் ஐயா
   தங்கள் வருகையும் கருத்தும் எனக்கு உவகையளிக்கிறது. தொடர்ந்து இணைந்திருப்போம். மிக்க நன்றீங்க ஐயா.

   Delete
 16. We have five thousand faceless friends and call it Facebook. The height of irony..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   முகநூல் எத்தனையோ நண்பர்களைப் பலருக்கு கொடுத்திருக்கிறது. எத்தனையோ உதவிகள் முகநூல் மூலம் பலர் பெற்றிருக்கிறார்கள். எத்தனையோ நன்மைகள். அதுவல்ல நமது விவாதம். அண்டை வீட்டாரிடம் பேச மாட்டோம் பகையாக இருப்போம். ஆனால் முகநூல் ஆயிரம் நண்பர்கள் இருப்பார்கள் அதில் என்ன அர்த்தம் இருக்க முடியும் என்பதே நமது விவாதம். அன்பான வருகைக்கு மிக்க நன்றி சகோதரர்..

   Delete
 17. "முன்பெல்லாம் வக்கிர புத்திக்காரர்கள், வஞ்சக எண்ணம் கொண்டவர்கள், கொலைக்காரர்கள், தீயதையே நினைப்பவர்கள் இவர்களையெல்லாம் நான் வீட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம். வளரும் குழந்தைகள் கண்களில் அவர்கள் பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தோம். இன்று தொலைக்காட்சி பெட்டியின் வழியாக அவர்கள் அத்தனை பேரும் நம் வீட்டு நடு அறையில் குழந்தைகள் மத்தியில் எந்நேரமும் குடித்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை விஞ்ஞான தந்த வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ள மனம் அனுமதிக்கவில்லை".100 க்கு 100 சரி. நாம் தான் உஷாராக இருக்க வேண்டும்.அனைவரும் சிந்திக்க வேண்டிய கட்டுரை

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரி
   தங்களின் முதல் வருகை கண்டு மிக்க மகிழ்ச்சி. தொடர்ந்த நட்பில் இணைந்திருப்போம். எமது கருத்தோடு தங்கள் கருத்தும் ஒன்றியிருப்பதில் மகிழ்ச்சி. கருத்துரைக்கு மிக்க நன்றீங்க சகோதரி.

   Delete
 18. மொத்தத்தில் தொலைதூரத்தில் இருப்பவர்கள் அருகில் வந்து விட்டார்கள் அருகில் இருப்பவர்கள் தொலைதூரத்திற்கு சென்று விட்டார்கள்

  சொல்லவந்த கருத்தை மிகவும் அழகாகச் சொன்னீர்கள் நண்பரே.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   ஊக்கப்படுத்தும் விதமாக கருத்திட்டமைக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் சகோதரர்.

   Delete
 19. மிக அருமையான கருத்தினை தெளிவாக பதிந்தமை சிறப்பு! உலகம் சுருங்கியதில் உறவுகளும் சுருங்கிவிட்டன போலும்! வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. வணக்கம் சகோதரர்
   தங்கள் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

   Delete
 20. வணக்கம் சகோதரரே. நலமா?
  அருமையான கட்டுரை . அருகிருக்கும் மனிதரோடு பேச்சு குறைந்துகொண்டே வருகிறது...இதை ஒட்டியே என்னுடைய ஒரு பதிவு நினைவில் வந்தது, நேரமிருக்கும்பொழுது பாருங்கள்.
  http://thaenmaduratamil.blogspot.com/2012/11/tholaithodarbumuravugalinthodarbum.html

  ReplyDelete
 21. வலைச்சரத்தில் கண்டேன். மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்.

  ReplyDelete