அரசியல் கட்சி உருவாக பல காரணங்கள் இருக்கலாம் அல்லது தேவைப்படலாம். ஆனால், கட்சி உடைவதற்கு ஒரு சில காரணங்கள் போதும். பெரும்பாலான சமயங்களில் ஒரே ஒரு காரணமே கட்சி உடைவதற்கு காரணமாக இருந்து விடுகிறது. எதிலும், சமரசம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற தலைவர்களின் முனைப்புதான் கட்சிகள் பிளவை சந்திக்க காரணமாக அமைகிறது. தமிழக அரசியல் களத்தை உற்று நோக்கினால் இதனை நாம் உறுதி செய்துகொள்ள முடியும்.
Saturday, 19 September 2015
Sunday, 13 September 2015
புதுக்கோட்டை வலைப்பதிவர்கள் திருவிழா 2015 - கையேடு வழங்கும் திட்டம் படைப்பாளிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிக்கான அச்சாரம்.
வலை உறவுகளுக்கான வணக்கம். அனைவரும் நலம் தானே? அதான் நேரிலே சந்திக்க இருக்கோமே அதுக்குள்ள என்ன நலம் விசாரிப்பு என்று தானே கேட்கிறீர்கள்? அதுவும் சரி தான். இன்னும் 27 நாட்களில் நாமெல்லாம் புதுக்கோட்டையில் சங்கமிக்க இருக்கிறோம். அந்த நாளை நினைக்கையில் இதுவரைக் காணாத தூரத்துச் சொந்தங்களை எல்லாம் ஒரே இடத்திம் ஒரே நாளில் சந்திக்க இருக்கிறோம் எனும் உவகை மரத்தில் கட்டிய தொட்டிலென அங்கும் இங்கும் மனதில் ஊஞ்சலாடுகிறது. அனைவரும் வர வேண்டுமென்பதே என் அவா.
புதுக்கோட்டை நண்பர்கள் விழா சிறப்பாக நடைபெற கவிஞர். முத்துநிலவன் அவர்களின் தலைமையில் அனைத்து ஆயத்தப் பணிகளைச் செய்து கொண்டு காலில் சக்கரம் கட்டியது போல சுழன்றுக் கொண்டிருக்கிறார்கள். விழாவின் சிறப்பம்சமாக பதிவர் கையேடு தர இருப்பது கவிஞர் முத்துநிலவன் அய்யா அவர்களின் சிந்தையில் தோன்றிய சிறப்புமிக்க திட்டம். முதலில் அவருக்கு நமது நன்றிகள்.
Saturday, 12 September 2015
தமிழ் இலக்கியத்தில் அறிவியல் சிந்தனைகள்
Saturday, 5 September 2015
சபாஷ்! குஷ்பு அவர்களே! சபாஷ்!
Sunday, 30 August 2015
Monday, 17 August 2015
வலைப்பதிவர்கள் சந்திப்பு திருவிழா 2015 - புதுக்கோட்டை- அனைவரும் வருக!
புதுக்கோட்டை வரலாறு:
புதுக்கோட்டை என்பது புதியக் கோட்டை எனப் பொருள்படும். 17ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொண்டைமான் ரகுநாதா என்பவரால் ஒரு புதிய கோட்டை கட்டப்பட்டு, புதுக்கோட்டை எனப் பெயரிடப்பட்டது. இம்மாவட்டம் பரப்பளவில் சிறிது என்றாலும், வரலாறு, சிற்பம், ஓவியம், ஏனைய கலைகள் மற்றும் கனிம வளம் போன்ற சிறப்புக்களால் பெருமைப் பெற்ற மாவட்டமாகத் திகழ்கிறது.Sunday, 16 August 2015
அப்துல் கலாமின் நினைவுகள் -ஊக்கமளிக்கும் 15 டுவிட்டர் பொன்மொழிகள் -
முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மறைவு நமது நாட்டுக்கு ஈடுசெய்யமுடியாத பேரழிப்பாகும். அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவரது வார்த்தைகள் நம்மை வழி நடத்தி செல்லும். டாக்டர் அப்துல் கலாம் தனது வாழ்நாளில் பல உயரிய விஷயங்களை கூறியிருக்கிறார். அவரது டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களே அதற்கு சாட்சியாக உள்ளன. அவரது டுவிட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள 15 அற்புதமான கருத்துக்கள் பின்வருமாறு:
Subscribe to:
Posts (Atom)






