முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாமின் மறைவு நமது நாட்டுக்கு ஈடுசெய்யமுடியாத பேரழிப்பாகும். அவர் நம்மிடையே இல்லை என்றாலும் அவரது வார்த்தைகள் நம்மை வழி நடத்தி செல்லும். டாக்டர் அப்துல் கலாம் தனது வாழ்நாளில் பல உயரிய விஷயங்களை கூறியிருக்கிறார். அவரது டுவிட்டர் கணக்கில் அவர் வெளியிட்டுள்ள கருத்துக்களே அதற்கு சாட்சியாக உள்ளன. அவரது டுவிட்டர் பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டுள்ள 15 அற்புதமான கருத்துக்கள் பின்வருமாறு:
* வாழ்க்கையில் முன்னேற மிகப்பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என காத்திருக்கக்கூடாது. தற்போது என்ன இருக்கிறதோ அதை வைத்து வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும்.
* கடலில் பயணத்தை தொடங்கும் போது கரைகள் மறைகிறதே என அச்சப்படக்கூடாது. கரைகளை கடக்கும் துணிவிருந்தால் தான் பல கடல்களை உங்களால் கண்டுபிடிக்க முடியும்.
* எளிமை, நேர்மை, உண்மை ஆகியவை இல்லாமல் எந்த காலத்திலும் உயர்வு இல்லை
* என்னால் முடியும், நம்மால் முடியும், இந்தியாவால் முடியும் இந்த வாசகத்தை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள்
* தவறான காரியங்களை ஒரு போதும் செய்யக்கூடாது. இரு இலக்கை நோக்கி செல்ல பலவழிகள் இருந்தாலும் நேர்மையான வழியே மிகச்சிறந்த வழி என்பதுடன் அது மட்டுமே வழியாக இருக்க வேண்டும்.
* உயரிய நோக்கம் இருந்தால் மனித ஆற்றலின் உச்ச எல்லை என்ற சுவர்கள் தவிடுபொடியாகிவிடும்
* சரியான காரியத்தை செய் எளிமையான வழி என என்னிடம் கேட்கிறார்கள். தாயின் முகத்தில் புன்னகை அரும்ப செய்யும் காரியத்தை செய்யுங்கள். அதனை நேர்மையாகவும், கடின உழைப்புடனும் செய்யுங்கள்.
* உங்களுக்குள் இறக்கைகள் உள்ளன. தவழ முயற்சிக்காதீர்கள். பறக்க கற்றுக் கொள்ளுங்கள். உச்சத்திற்கு பறந்து செல்லுங்கள்.
* கடின உழைப்பு மற்றும் நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை. நிச்சயமாக இல்லை.
* புதிய விஷயங்களை படைக்க வேண்டும் என இலட்சியம் உள்ளவர்களுக்கு அவர்களது வேட்கையே ஊக்கமாக அமையும். மற்றவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணம் தேவையில்லை.
* வாரிசு அடிப்படையில் ஒருவர் தலைமை இடத்துக்கு வரலாம். ஆனால் தலைவருக்கான தகுதிகளை ஒருவர் சொந்தமாக மட்டுமே உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
* எப்போதும் வித்தியாசமாக சிந்திக்க துணிவு வேண்டும். தனித்துவமாக இருக்க வேண்டும்.
* கனவு காணுங்கள், கனவுகளிலிருந்து சிந்தனைகள் பிறக்கும். சிந்தனைகள் செயல்களாகும்.
* தனித்துவமாக இருக்க வேண்டும் என்பதே இளைஞர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
* தனித்துவமாக இருக்க இதற்கு முன் எவரும் சந்தித்திராக கடினமாக யுத்தத்தை சந்திக்க வேண்டியதிருக்கும். அந்த யுத்தத்தில் வெற்றி பெற்றால் பலன் நிச்சயம். இதற்கு நான் உத்தரவாதம்.
அருமை...
ReplyDeleteநன்றிங்க அண்ணா!
Deleteநேரம் கிடைப்பின் : வாசிக்க... ரசிக்க... கேட்க...
ReplyDeletehttp://dindiguldhanabalan.blogspot.com/2015/08/Kalam.html
அவசியம் படிக்கிறேன். பகிர்வுக்கு நன்றிங்க அண்ணா
Deleteஅருமையான, பயனுள்ள தொகுப்பு. பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteகருத்துக்கு நன்றிங்க அய்யா. விரைவில் நேரில் சந்திக்க உள்ளதில் மகிழ்ச்சி..
Deleteகலக்குங்க பாஸ் நீங்க ...
ReplyDeleteதம +
கலாம் வழி நடப்போம் சகோ. கருத்துக்கு நன்றி.
Deleteஅன்புள்ள அய்யா,
ReplyDeleteகாலமெல்லாம் வாழும் கலாமின் பொன்மொழியைப் போற்றி வாழ்வோம்.
நன்றி.
த.ம. 5
போற்றியும் கடைபிடித்தும் வாழ்ந்தால் இந்தியா ஏற்றமுறும். கருத்துக்கு நன்றிங்க அய்யா.
Deleteகலாம்அவர்களின் வழி நடப்போம்
ReplyDeleteநன்றி நண்பரே
தம +1
கடைபிடிப்போம் அய்யா. வருகை மகிழ்ச்சியளிக்கிறது. தொடர்வோம். நன்றி..
Deleteஅருமையான தொகுப்பு. பகிர்ந்து கொண்டதறகு நன்றி.
ReplyDelete