அரும்புகள் மலரட்டும்: சபாஷ்! குஷ்பு அவர்களே! சபாஷ்!

Saturday, 5 September 2015

சபாஷ்! குஷ்பு அவர்களே! சபாஷ்!


தம்மை பெரியாரிஸ்ட் என்று பிரகடனப்படுத்தி வரும் நடிகை குஷ்பு டுபாக்கூர் கார்ப்பரேட் சாமியார்களைப் பற்றி உண்மை முகங்களை தோலுரித்துக் காட்டியுள்ளார். நக்கீரன் வாரமிருறை இதழில் நடிகை குஷ்பு 'லாபம் கொழிக்கும் காவி உடை' என்ற தலைப்பில் எழுதியுள்ளதாவது:
கட்சியின் தலைமை அழைத்ததன் பேரில் அண்மை யில் டெல்லி செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு சென்றபோது வழக்கமாக நடக்கும் சோதனைகளை செய்தனர் ஏர்போர்ட் அதிகாரிகள். அப்போது, என்னுடைய கீ செயினைக் கூட விட்டு வைக்க வில்லை. சின்ன நெயில் கட்டரைக் கூட எடுத்துச்செல்ல அனுமதிக்க வில்லை.

""கீ செயினில் என்ன இருக்கப்போகிறது?'' என கேட்ட போது, ""மன்னிக்கவும்... இது, எங்களுடைய டூட்டி மேடம்'' என்றனர். அந்தசமயத்தில், மும்பையின் சர்ச்சைக்குரிய பெண் சாமியார் ராதேமா விமானத்தில் செல்லும்போது தனது திரிசூலத் தையும் எடுத்துச் செல்கிறார் என்பது எனக்கு நினைவுக்கு வந்தது. அதைப்பற்றி, ஏர்போர்ட் அதிகாரிகளிடம், ""ஒருபெண் சாமியார் திரிசூலத்தையே விமானத்தில் எடுத்துச் செல் கிறார். ஆனால், எங்களிடம் கீ செயினைக் கூட விட்டு வைப்ப தில்லை. சாமியார்கள் என்றால் அவ்வளவு பக்தியும் பரவசமும் உங்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது'' என்று சொல்லிவிட்டுச் சென்றேன்.

சென்னையிலிருந்து டெல்லி செல்லும்வரை சாமியார் களைப் பற்றிய சிந்தனையே எனக்குள் வட்டமடித்தது. ராதேமா, அஸ்ராம்பாபு, சாரதி பாபா, நாராயண்சாய் உள்ளிட்ட பல சாமியார்களும் சாமியாரினி களும் அடிக்கடி ஊடகங்களில் அடிபடுகிறார்கள். இவர்களைச் சுற்றி மோசடிகள், ஆபாசம், கொலை, கொள்ளை, வரதட்ச ணை, கற்பழிப்பு என பல்வேறு சமூகவிரோத செயல்களாகவே செய்திகள் வலம்வந்தபடி இருக் கின்றன. இப்படிப்பட்ட சாமியார்கள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர்களை ஆதரிக்கும் மக்கள் கூட்டம் மட்டும் குறைந்த பாடில்லை.

இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேக ரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல.

ஆன்மிகவாதிகளிடம் தங்கள் குறைகளைச் சொல்லி அதற்கு நிவாரணம் தேடும் முகமாகத் தான் அவர்களைத் தேடி மக்கள் ஓடுகிறார்கள். மக்களிடம் பக்தி அதிகரிக்கும்போது அந்த சாமியார்களே அவர்களுக்கு கடவுளாகத் தெரிகிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கடவுள் நம்பிக்கை இருக்கிறது. அந்த கடவுளைத் தேடி கோயில்களுக்குச் செல்கிறார்கள். போக முடியாதவர்கள் அவரவர் வீடுகளிலேயே பூஜிக்கிறார்கள்.

அப்போது கடவுளிடம் நேரடியாகவே குறைகளைச் சொல்லும் வாய்ப்பு கிடைப்பதாக அவர்களுக்கு ஒரு நம்பிக்கை. அப்படி நேரடியாகவே முறையிட்டும், தனது பக்தர்களின் குறைகளை தீர்க்க முன்வராத கடவுள், இடைத்தரகர்கள் போல தங்களைக் காட்டிக்கொள் ளும் சாமியார்கள் வழியாகவா வந்துவிடப் போகிறார்? கடவுளை காணுவதற்கு சாமியார் என்கிற மீடியேட்டர் எதற்கு? இதை ஏன் மக்கள் புரிந்து கொள்வதில்லை?

மக்களிடம் இருக்கும் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் சாமியார்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் .இதனை மக்கள் புரிந்து கொள்ளாததால்தான் அத்தனை கிரிமினல் வேலைகளையும் செய்து வருகிறார்கள் சாமியார்கள். ஒவ்வொருவரின் சொந்த புத்தியும் சொல் லாத எந்த ஒரு விசயத்தையும் சாமியார்கள் சொல்லி விடுவதில்லை. சாமியார்களின் தோற்றம் தருகிற ஒரு வித மாயைதான், மக்களை மதிமயங்க வைத்து விடுகிறது. இதை மக்கள் புரிந்துகொள்ளாத வரைக்கும் சாமியார்களுக்குக் கொண்டாட்டம் தான்.

சிலமாதங்களுக்கு முன்பு, மூடநம்பிக்கை ஒழிப்புச்சட்டம் என்கிற சட்டத்தை அறிமுகப்படுத் தியது கர்நாடக அரசு. ஆனால், இதை எதிர்த்து சாமியார்கள் கூட்டம் கொந்தளித்ததும் அந்தச் சட்டத்தை கிடப்பில் போட்டு விட்டனர். கடவுளின் பெயரால் மூடநம்பிக் கைகளை சாமியார்கள் தொடர்ந்து பாதுகாப் பதன் பின்னணியில் அவர்களிடம் இருக்கும் பணவெறி, காம இச்சை, சுயநலம் போன்றவைகள்தான் காரணங்களாக இருக்கின்றன. "எளிமையும் தூய்மையும் நேர்மையும் இருக்க வேண்டிய மடங்கள் இன்றைக்கு ஆடம்பர பங்க ளாக்களாக உருமாறி நிற்கிறது.

கோடிக்கணக்கில் பணத்தை வாங்கிக் கொண்டு ஆன்மிகத்தைப் போதிக்கும் கார்பரேட் சாமியார்களால் தான் மூடநம்பிக்கைகள் தழைத்தோங்குன்றன' என்கிறார் என்னுடைய பகுத்தறிவு தோழர். அவரது கருத்தில் எனக்கு எந்தவித மாறுபாடும் தோன்றவில்லை. ஏனெனில், நமது தேசத்தில் கடந்த 20 ஆண்டு களில் கார்பரேட் முதலாளிகள் மட்டுமல்ல பல பணக்கார சாமியார்களும் வளமையாக வளர்ந்தே இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட சாமியார்களின் வரவு செலவுகள், வர்த்தக விளம்பரங்கள், சொத்துக்களைப் படித்தால் தலைச் சுற்றுகிறது. டெல்லியில் ஆசிரமம் வைத்துக் கொண்டு அத்தனை தகிடுத்தத்தங்களையும் செய்த அஸ்ராம்பாபுவின் ஆண்டு வருமானம் 350 கோடி, பள்ளிகள், கல்லூரிகள், மருத்துவ மனைகள் வைத்திருக்கும் அமிர்தானந்தமயின் ஓராண்டு வர்த்தகம் 500 கோடி, வாழும் கலையை காசு வாங்கிக்கொண்டு மக்களுக்கு போதிக்கும் ரவி சங்கரின் வருட வருமானம் 450 கோடி, யோக சிகிச்சைகளை செய்து வரும் பாபாராம்தேவின் வரவு -செலவு 350 கோடி என்று ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.

இதில் ஒவ்வொரு சாமியாரின் சொத்துக்களை கணக்கிட் டால் ஒவ்வொருவரும் சுமார் 1000 கோடிக்கு அதிபதிகளாகவே இருக்கிறார்கள் என்றும் அந்த புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டு கின்றன. இதில் கொடுமை என்னன்னா, இவர்களின் வரி ஏய்ப்புக்கு அரசாங்கமே துணை நிற்பதுதான்.

ஒரு சாமானியன் தனது வருமானவரிக்கணக்கில் 1 ரூபாயை மறைத்து விட்டால் அவனுக்கு எதிராக எத்தனை சட்டங்கள் பாய்கின்றன? அதில் ஒரு சட்டமாவது கோடிக்கணக் கில் வரி ஏய்ப்பு செய்யும் சாமியார்கள் மீது பாய்ந்திருக் கின்றனவா? இல்லையே ! மதங்களைக் கடந்த ஆன் மிகம் என சொல்லிக் கொண்டு அத்தனை சாமியார்களும் அரசியலை தங்கள் கைப் பிடிக்குள் வைத்திருப்பதுதான் இதற்குக் காரணம் என சொல்லலாம். நேரடியான தங்களது அரசியல் நடவடிக்கைகள் மூலமாகவே இதனை பல சாமியார்களும் உணர்த்திக் கொண்டு தானிருக்கிறார்கள்.

அபரிமிதமான நிதிக் குவியல்களால் தங்களின் மடங்களை கார்பரேட் நிறுவனமயப்படுத்தி விடுவதால் இவர்களுக்கு அரசியல் செல்வாக்கு எளிதில் கைக்கூடி விடுகிறது. கார்பரேட் சாமியார்களுக்கு மத்தியில் நிர்வாண சாமியார்களின் அட்டகாசங் களுக்கும் நம் நாட்டில் பஞ்ச மிருப்பதில்லை. குஜராத் மாநிலம் ஜூனாகாத் மலைப் பகுதியை சிவபெருமானின் முகமாக பாவித்து வழிபாடு நடத்துகிறார்கள் நிர்வாண சாமியார்கள். இதே மலைப்பகுதியை ஜைன மதத் தினரும் வழிபடுகின்றனர். இம்மலை அடிவாரங்களில் நிர்வாண சாமியார்களின் மடங்கள் ஏராளமாக இருக்கின்றன.

கும்பமேளா காலங்களில் ஹரித்துவார், அலகாபாத் இடங்களில் ஒன்று திரண்டு வழிபாடு நடத்துவது பொதுவான நிலையாக இருந்தா லும் ஒவ்வொரு வருசமும் மகா சிவராத்திரி நாளில் ஜூனாகாத் மலை அடிவாரத்தில் இவர்கள் ஒன்றுதிரண்டு நிர்வாணக் குளியல் நடத்தி வழிபடு வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். நிர்வாண சாமியார் களில் எந்த பிரிவினர் முதலில் குளிக்கிறார்களோ அவர்களுக்குத் தான் சிவபெருமானின் அருள் நேரடியாக கிடைக்குமாம். அதனால் நிர்வாண சாமியார் களிடையே பலத்த போட்டி ஏற்பட்டு வெட்டுக் குத்து எல்லாம் நடக்குமாம்.
சிவபெருமானின் அருள் கிடைக்க இப்படி ஒரு மூடநம்பிக்கை, நிர்வாண சாமியார்களிடத்தில் காலகாலமாக இருக்கிறதாம்.

போலிசாமியார்கள், கார்பரேட் சாமியார்கள், நிர்வாணச் சாமியார்கள் என சாமியார்கள் எவ்வளவுதான் அம்பலப்பட்டுப் போனாலும் அரசியல்வாதிகள் அவர்களை கைவிடுவதில்லை. அதனால் சாமியார்களின் செல்வாக்கும் குறைவதில்லை. ஒரு வேளை சாமியார்களின் செல்வாக்கு குறைந்துபோனால், புதுப்புது சாமியார்கள், அரசியல்வாதிகளால் அடையாளப்படுத்தப் பட்டுக் கொண்டேயிருப்பார்கள்.

ஆன்மிகத்தில் மதிமயங்கும் நம் மக்களும் சாமியார்களின் அருளாசியை பெறுவதற்கு அடிமையாகிக் கொண்டே இருப்பதால் வஞ்சகச் சிரிப்புடனே காத்துக் கிடக்கிறார்கள் நம் தேசத்து நவீன சாமியார்கள். என்னைப் பொறுத்தவரை, கடவுள் நம்பிக்கை எனக்கு இல்லை. அதே சமயம் கடவுளை நம்புபவர்களை நான் நிந்திப் பதும் கிடையாது. அவர்களு டைய நம்பிக்கை அவர்களுக்கு. என்னுடைய நம்பிக்கை எனக்கு. நான் ஒரு பெரியாரிஸ்ட் என்பதில் எனக்கு கர்வமும் உண்டு; திமிரும் உண்டு! இவ்வாறு நடிகை குஷ்பு எழுதியுள்ளார்

கீழுள்ள திரட்டிகளில் ஓட்டளித்தும், சமூக தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்... நன்றி...!

21 comments:

 1. அன்புள்ள அய்யா,

  நக்கீரன் இதழில் நடிகை குஷ்பு 'லாபம் கொழிக்கும் காவி உடை' என்ற தலைப்பில் சாமியார்களைப்பற்றி...அவர்கள் கோடி கோடியாக அடிக்கும் கொள்ளை... மற்றும் கூத்துகள், நிர்வாண சாமியார்கள் பற்றியும் நன்றாக அவர்களின் முகத்திரையை கிழித்திருக்கிறார்.

  இஸ்லாம மதத்திலிருந்து வந்த இவர்...முகத்தைக்கூட வெளியில் காட்டாமல் இவர்கள் மறைக்கும் மதத்தில்... சபாஷ் ... நல்ல கருத்துகள் வெளிவருவது பாராட்டுக்குரியது.

  நன்றி.
  த.ம.1.

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வருகைக்கும் அன்பான நன்றிகள் அய்யா. தங்களை இன்னும் வந்து நான் பார்க்கவில்லை அதற்காக என்னை மன்னிக்கவும். விரைவில் சந்திப்போம்.

   Delete
 2. போலிச் சாமிகளுக்கு இருக்கும் மரியாதை வேறு யாருக்கும் இல்லைதான்...

  அப்ப அப்ப பிரச்சினைகளைக் கிளப்பினாலும் குஷ்... நல்லாத்தான் சொல்லியிருக்கு...

  ReplyDelete
  Replies
  1. குஷ்பு தான் எழுதினாரா என்பது தான் என்னுடைய முதல் பார்வையாக இருந்தது. மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராகவும் இக்கட்டுரை அமைந்திருப்பதும் உண்மை.

   Delete
 3. குஷ்புவை பற்றி நல்ல விதமாக எழுதியிருகிறீர்கள்!!! மிக்க மகிழ்ச்சி ஆதிகாலத்தில் கொஞ்சம் சிந்திக்கும் பெண்ணாக இருந்தால் மேலைநாடுகளில் அவள் சூனியக்காரி என பழி சுமத்தி கொளுத்திவிடுவார்களாம். டாவின்சி கோட் புத்தகத்தில் படித்தேன். இன்றும் அப்படிப்பட்ட பெண்களை பொசுக்கவே செய்கிறது சமுதாயம். பெண் சத்தமா பேசினா "என்ன பெண்ணியமா?" என லேபில் பண்ணிவிடுகிறார்கள்:(( அதையும் மீறி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள போராடும் குஷ்பு போலும் பெண்கள் சார்பாக என் நன்றிகள் சகோ:) நாத்திகம் பேசும் குஷ்பு ஏன் விபூதி வைத்திருக்கிறார் என கேள்வி கேட்டு சிலர் பதிவின் மையக்கருவை திசைதிருப்பக்கூடும் என்பது என் ஊகம். நாளை வந்து பார்க்கிறேன்:)

  ReplyDelete
  Replies
  1. கருத்தைத் திசை திருப்பவதற்கான விசயங்கள் நிறைய இருக்கிறது. இந்து சாமியார்களைப் பற்றி மட்டும் குறிப்பிட்டு இருப்பது உள்நோக்கம் இருக்கிறது. மதத்தின் பெயராலும் ஆன்மீகத்தின் பெயராலும் கொள்ளையடிப்பவர்கள் எல்லா மதத்திலும் இருக்கிறார்கள். குறிப்பாக குஜராத் என்று சொல்லியிருப்பதெல்லாம் தான் சார்ந்திருக்கும் இயக்கத்தை திருப்தி படுத்தவதாக கூட எடுத்துக் கொள்ளலாம். எது எப்படியிருப்பினும் நல்ல கருத்துகள் தாங்கிய தைரியமான கட்டுரை என்பது தான் என்னை ஈர்க்கக் காரணம்.

   Delete
 4. குஷ்பு அவர்களின் பதிவு சூப்பர்! நல்ல கருத்துகள்...

  ஒன்றே ஒன்று ஆன்மீகம் என்பது வேறு...போலிச் சாமியார்களோ அவர்கள் சொல்லும் மாயாஜாலங்களோ, இல்லை தொலைக்காட்சியில் காலையில் வந்து ஏதேதோ சொல்லுவதோ ஆன்மீகம் அல்ல....கடவுள் நம்பிக்கை, ஆன்மீகம் என்பது வேறு அது எந்த சடங்குகளோ, சாஸ்திரங்களோ சார்ந்தது அல்ல.... எனவே "ஆன்மீகத்தில் மதி மயங்கும் மக்களும்" என்பதைத் தவிர்த்து அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய ஒன்றே...ஏனென்றால் அவர்கள் பின்பற்றுவது ஆன்மீகம் அல்ல. இந்தப் போலிச் சாமியார்களால் ஆன்மீகம் என்பது மிகவும் கேவலமாக்கப்பட்டுள்ளது....
  நம் நாட்டில் அரசியலிலும் இந்த போலிச் சாமியார்கள் நுழைந்துள்ளது படு கேவலம்....அதனால் தான் நம் நாடு முன்னேற வழியில்லாமல் தத்தளிக்கின்றது...

  ReplyDelete
  Replies
  1. மிகச்சரியாக கோடிட்டு காண்பித்தமைக்கு நன்றிங்க அய்யா.

   Delete
 5. உண்மையில் இது குஷ்புவின் கருத்தா,கோஸ்ட் ரைட்டரின் கருத்தா:)

  ReplyDelete
  Replies
  1. எனக்கு அதே சந்தேகம் தான் சகோ. இருப்பினும் அனைத்து அரசியல்வாதிகளையும் சாடியிருப்பது நல்ல கவனிக்கத் தக்கது.

   Delete
 6. வணக்கம்

  இப்படியான சாமிமார்களை என்ன செய்யலாம்... போலிச் சாமிமார்களுக்கு ஒரு வித மவுசுதான்.த.4

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஒருவர் போனால் இன்னொருவர் என வந்து கொண்டே இருக்கிறார்கள்> நம்மவர்களூம் அவர்களிடம் படையெடுத்துக் கொண்டே தான் இருக்கிறார்கள்>

   Delete
 7. அருமையான பதிவு சார்... மலரட்டும்

  ReplyDelete
  Replies
  1. கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள் சகோதரர்.

   Delete
 8. //இன்று தேசத்தில் வலம் வரும் எல்லா சாமியார்கள் மீதும் ஏதேனும் ஒரு சந்தேக ரேகைப் படரவே செய்கிறது. இதில் எந்த ஒரு சாமியாரும் விதிவிலக்கல்ல.//-இதில் சங்கராச்சாரிகளும், ஆதீனகர்த்தர்களும் அடக்கம்.
  இந்த குஷ்புவின் கருத்துக்கள் அத்தனையும் ஏற்றுக்கொள்ளக் கூடியதே!
  ஆனால் நம் மக்கள் திருந்தார்.

  ReplyDelete
  Replies
  1. நன்றாகவே சொன்னீர்கள் சகோ. தங்களின் கருத்துக்கும் வருகைக்கும் அன்பு நன்றிகள்.

   Delete
 9. எல்லாம் விளம்பரம்...

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான் சகோதரர். சமூகக் கருத்துகள் இருப்பது கவனிக்கத்தக்கது.

   Delete
 10. //உண்மையில் இது குஷ்புவின் கருத்தா,கோஸ்ட் ரைட்டரின் கருத்தா:)//
  இந்த ஐயம் எனக்கும் வந்தாலும் கருத்து மட்டும் குஷ்புவினுடையதாக இருக்கும்.
  யார் எழுதி இருந்தாலும் நேர்த்தியான எழுத்தாக்கம்

  ReplyDelete
  Replies
  1. கருத்து குஷ்பு அவர்களுடையது என்பதே எனது கருத்தும் அய்யா. கருத்துக்கு நன்றிங்க அய்யா. நலமாக உள்ளீர்களா?

   Delete
  2. கருத்து குஷ்பு அவர்களுடையது என்பதே எனது கருத்தும் அய்யா. கருத்துக்கு நன்றிங்க அய்யா. நலமாக உள்ளீர்களா?

   Delete