நடிகர்கள் : ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி, தம்பி ராமையா, கணேஷ் வெங்கட்ராமன், நாசர், சஞ்சனாசிங், வம்சிகிருஷ்ணா
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா’ ஆதி
ஒளிப்பதிவு : ராம்ஜி
இயக்கம் : மோகன் ராஜா
தயாரிப்பாளர் : ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட்
கதைக்களம்…
ஐ.பி.எஸ். பயிற்சியில் இருக்கின்றனர் மித்ரன் (ஜெயம் ரவி), கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் இவர்களது மூன்று ஐந்து நண்பர்கள். இவர்கள் பதவியேற்கும் முன்பே நடக்கும் குற்றங்களை கண்டுபிடித்து காவல் துறையினரிடம் (அவர்களுக்கே தெரியாமல்) ஒப்படைகின்றனர். ஆனால் அந்த குற்றவாளிகளோ ஒரு மிகப்பெரிய பெரும் புள்ளி சித்தார்த் (அர்விந்த் சாமி) உதவியால் உடனே விடுதலையாகின்றனர்.
எனவே, மற்றவர்களில் இருந்து மாறுபடும் மித்ரன் இவர்களை ஆட்டுவிக்கும் அந்த பெரிய மனிதரை கண்டு தன் வெறி தீர கொல்ல நினைக்கிறார். இவரின் திட்டங்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளும் சித்தார்த் இதனை முறியடிக்கிறார். அதன்பின்னர் தனி ஒருவனாக நின்று வில்லன் சாம்ராஜ்யத்தை அழிப்பதே படத்தின் மீதிக் கதை.
கதாபாத்திரங்கள்…
நாம் இதற்கு முன்பு ரசித்த ‘பேராண்மை’,’ நிமிர்ந்து நில்’ கேரக்டர்களை மீண்டும் கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஜெயம் ரவி. மித்ரன் ஐபிஎஸ் கேரக்டரில் வாழ்ந்து இருக்கிறார். வில்லனை நெருங்க இவர் ஒவ்வொரு திட்டம் தீட்டுவது.. குற்றவாளிகளை பிடிக்க போடும் திட்டங்கள் என தியேட்டர் கரகோஷத்தில் அலறுகிறது. மித்ரன் சாருக்கு ஒரு சல்யூட்.
நயன்தாரா.. அவருடைய அழகுக்கும் திறமைக்கும் ஏற்ற கேரக்டர். விடுவாரா? ஒவ்வொரு காட்சியிலும் சபாஷ் பெறுகிறார். காதலன் மீது உரிமை கொண்டாடுவதும்… காதல் கொள்வதும்… என்னை ஏதாச்சும் பண்ணுணுணு…. என இளம் உள்ளங்களைக் கவர்ந்திழுக்கிறார்.
தம்பி ராமையா.. சீரியஸ் படத்தில் சிரிப்பலையை உருவாக்கி தன் இடத்தை அருமையாக நிரப்பி இருக்கிறார். நாசர், கணேஷ் வெங்கட்ராமன், சஞ்சனா சிங், ஸ்ரீ ரஞ்சனி, ஜெயப்பிரகாஷ், வம்சி கிருஷ்ணா, அபிநயா, ஹரீஷ் உத்தமன், ஸ்ரீசரண் என ஒவ்வொருவரும் தங்கள் நடிப்பால் ஒவ்வொரு ப்ரேமையும் அழகாய் உருவாக்கியுள்ளனர்.
ரசிகர்களை மொத்தமாக தன் வசீகர நடிப்பால் அள்ளி செல்கிறார் அர்விந்த் சாமி. இவர் பிறக்கும் காட்சி…. எந்தவொரு வில்லனுக்கும் கிடைக்காத அறிமுக காட்சி. பின்னர் வளர்வதும்.. தந்தை தம்பி ராமையாவை இவர் வளர்ப்பதும்…. ஹீரோ நினைத்தாலே இவர் அறிவதும்… சபாஷ் சார். இனி ஹீரோவுக்கு இணையா ஒரு ஸ்மார்ட்டான வில்லன் கிடைத்து விட்டார்.
தொழில்நுட்ப கலைஞர்கள்…
ராம்ஜியின் ஒளிப்பதிவில் குற்றம் நடக்கும் இரவு காட்சிகள்… வெளிநாட்டு காட்சிகள்… அழகிப் போட்டி… போலீஸ் பயிற்சி… நயன்தாராவின் ரொமான்ஸ் என ஒவ்வொன்றையும் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார். கோபி கிருஷ்ணாவின் எடிட்டிங் பாராட்டும் படியாக உள்ளது.
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் ‘காதல் கிரிக்கெட்…’ பாடல் சிக்ஸர் அடிக்கும் ரகம் என்றால்… ‘தீமைதான் வெல்லும்…’ ‘தனி ஒருவன்…’ பாடல்கள் வீர உணர்வை உருவாக்கும்.
இயக்குனர் மோகன் ராஜா (ஜெயம் ராஜா)… தன் தம்பியை காக்கி சட்டை அணியவிட்டு அதற்கு கம்பீரம் சேர்த்திருக்கிறார். தன்னால் ரீமேக் செய்யாமல் ஒரு ஒரிஜினல் படத்தை அக்மார்க் தரத்தில் கொடுக்க முடியும் என நிரூபித்து இருக்கிறார். படத்திற்கான கேரக்டர்களை அழகாக தேர்வு செய்திருக்கிறார். எடுத்துக்கொண்ட கதையும் சொல்லப்பட்ட விதங்களும் அருமை. ஹீரோவுக்கு ஏற்ற வில்லனை கொடுத்து ரசிகர்களுக்கு தனி ஒருவனாக விருந்து வைத்துள்ளார். ஹீரோ + வில்லன் பன்ச் வசனங்கள்.. பின்னிடீங்க பாஸ்… ஹேட்ஸ் ஆஃப் மோகன் ராஜா…
தனி ஒருவனின் ப்ளஸ்…
ஜெயம் ரவி + ராஜாவின் வெற்றிக் கூட்டணி
குழந்தைகள் கடத்தல் + சைலன்சர் மீது தண்ணீர் ஊற்றுவது…
அர்விந்த் சாமியின் ஸ்மார்ட் + படு ஸ்டைலிஸான வில்லத்தனம்
படத்தின் கதையோடு ஒன்றிய அனைத்து கேரக்டர்கள்
படைச்ச கடவுளே எப்போதும் நல்லது பண்றதில்ல… (செம பன்ச்)
காதலை வெறுப்பதும்… காதலை வெளிப்படுத்தும் காட்சிகள்.
தம்பி ராமையாவின் அரசியல் + கழுத்தில் அரிவாள் கொசு காமெடி செம..
மொத்தத்தில் தனி ஒருவன்… நல்ல மனிதர்களின் உருவம் அவன்!

அருமையான விமர்சனம் சகோ!! அப்புறம் ஒரு டௌட்டு நீங்க ஜெயம் ரவி FAN னா??!!! :)
ReplyDeleteவணக்கம் அக்கா
Deleteரசிகர் என்றெல்லாம் இல்லை. நல்ல படம், நன்றாக நடிப்பவர் படம் என்றால் பார்த்து விடுவேன். தல படம்னா இன்னும் கொஞ்சம் ஆர்வம் மிகுதி. கருத்துக்கு நன்றிங்க அக்கா.
ரசித்தேன். நன்றி.
ReplyDeleteரசித்தமைக்கு நன்றிங்க அய்யா
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteதம +1
அட! அப்ப தனி ஒருவன் படம்...ரீமேக் ராஜாவின் "தனிஒருவன்" படமா! ஆச்சரியம்..அவரது படம் என்றால் சபாஷ்....பார்க்க வேண்டும்....
ReplyDeleteவிமர்சனம் சூப்பர்! பார்க்கத் தூண்டுகின்றது...
ReplyDeleteசிறப்பான விமர்சனம்...
ReplyDeleteவிமர்சனம் அருமை.
ReplyDeleteவிமர்சனம் அருமை .
ReplyDelete